2020 இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்

2020 இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்

வெளியானது., யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியினுடைய முடிவுகள் !

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மூன்றாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 7,634

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,642

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5,545

வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை – 3,846

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 35,216

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25,165

செல்லுபடியான வாக்குகள் – 23,136

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,029

இதனடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

 

ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள் வெளியானது!

காலி மாவட்டத்தினுடைய தேர்தல் முடிவுகளையடுத்து  2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. இது ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே ஆகும்.

அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6588
இலங்கை தமிழரசு கட்சி – 4412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1328

வெளியானது முதலாவது தேர்தல் முடிவு – காலியில் பெரமுன ஆதிக்கம்!

2020 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற பொது தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி இதிகளவிலான வாக்குகளை பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27,682
ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
தேசிய மக்கள் சக்தி – 3,135
ஐக்கிய தேசிய கட்சி -1,507