“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள் ” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் எஸ்.வியாழேந்திரன் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது புதிய வடிவம் வந்துள்ளது. பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், வியாழேந்திரனைப் பாருங்கள் என்றும் வடக்கிலே அங்கஜனைப் பாருங்கள் என்றும் எங்களைப்பற்றிதான் குறைகூறிக்கொண்டிருக்கின்றனர்.
எனக்கொரு சந்தேகம் அபிவிருத்தியையும் உங்களால் பெற்றுக்கொடுக்க முடியாது. நீங்கள் என்ன சொல்லி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவோம், உரிமையைப் பெற்றுத்தருவோம் என்று அதைப் பெற்றுக்கொடுங்கள். நாம் அபிவிருத்தியை செய்கிறோம்.
ஆனால் நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை.! நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடித்து அரசாங்கம் தரும் வாகன அனுமதிப்பத்திரத்தை, மாத சம்பளத்தை பொலிஸ் பாதுகாப்பையும், அரசாங்கம் தரும் சிற்றூண்டிச் உணவையும் நன்றாகச் சாப்பிட்டு, அரசாங்க விடுதியில் நன்றாக படுத்து நித்திரை கொண்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கின்ற அரசியல் தலைவர்கள் எம் மக்களுக்குத் தேவை. உங்களால் தமிழ் மக்களுக்குரிய அடிப்படைப் பிரச்சினையை கூட பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் எதற்கு அரசியலில் இருக்கின்றீர்கள். நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும் எமது இனத்திற்கு எதிரான வேலைகளை ஒரு போதும் செய்ய மாட்டோம்.
மக்களின் எதிர்பார்ப்பை நாடி பிடித்து நிறைவேற்றுபவன்தான் உண்மையான மக்கள் தலைவனாக இருக்க வேண்டும். பத்திரிகைக்கும் நாடாளுமன்றில் சத்தமிடுவதாலோ பத்திரிகைகளில் அறிக்கை விடுவதாலோ தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுவதில்லை.
எதிர்க்கட்சியில் இருக்கின்ற இரா.சம்பந்தன் உட்பட அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் இரு கரம் கூப்பி அழைக்கிறேன் .வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை சார்பாக எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்றில்லாமல் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றாகப் பேசுவோம். நாங்கள் உங்களோடு வருகிறோம்.
உங்களுக்கு அது முக்கியமில்லை பிரச்சினையிருந்தால்தான் உங்களுக்கு அரசியல். எங்களுக்கு எவ்வாறாவது பிரச்சினையைத் தீர்த்துக்கொடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள்