மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

தமிழகத்தின் 40 தொகுதிகளின் வெற்றி நிலவரம்: முழு விபரம்

indian-election.jpgதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது.  இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் அதிமுக 23 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,  இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை தலா 3 இடங்களிலும் போட்டியிட்டன.விஜயகாந்தின் தே.மு.தி.க. மற்ற தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலிலும் தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

பாரதீய ஜனதா கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து களத்தில் நின்றது.

இதில் பாரதீய ஜனதா கட்சி 13  இடங்களிலும், சமத்துவ மக்கள் கட்சி 5 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம், நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை தலா 2 இடங்களிலும் போட்டியிட்டன.

இவர்கள் தவிர மனிதநேய மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிட்டன.

திமுக கூட்டணி வெற்றி நிலவரம்

திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக

1. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் காந்தி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்

2.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கே.சிவக்குமார் என்ற ரித்திஷ் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

3. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தி.மு.க.) துரை. பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க.) டாக்டர் ப. ராமநாதன் (தே.மு.தி.க.), எஸ். சரவணன் (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம் 10 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில்37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

5.நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ஆ.ராசா (தி.மு.க.) டாக்டர் சி.கிருஷ்ணன் (ம.தி.மு.க.) குருமூர்த்தி (பா.ஜனதா) செல்வராஜ் தே.மு.தி.க.) எம்.கிருஷ்ணன் (பகுஜன் ஜமாஜ் கட்சி) பத்ரன் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஆ.ராசா 85 ஆயிரத்து 547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜே.ஹெலன்

டேவிட்சன் 65,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.), அருண்சுப்பிரமணியம் (தே.மு.தி.க.), ராஜப்பா (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 28 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 25, 544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுயில் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ஜெயதுரை 76, 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9.அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் மற்றூம், சிறு கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

10.தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. ஆர். தாமரை செல்வன் (தி.மு.க.)2. டாக்டர் இரா. செந்தில் (பா.ம.க.)3. வி.இளங்கோவன் (தே.மு.தி.க.)4. வே.புருசோத்தமன் (பகுஜன் சமாஜ் கட்சி)5. கோ.அசோகன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்).மற்றும் 16 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள் என்று போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் ஆர்.தாமரைச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

11.கிருஷ்ணகிரி தொகுதியில் மொத்தம் 16வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 1. இ.ஜி.சுகவனம் (தி.மு.க.)2. நஞ்சேகவுடு (அ.தி.மு.க.)3. ஜி.பாலகிருஷ்ணன் (பா.ஜனதா)4. அன்பரசன் (தே.மு.தி.க.)5. வி.வி.மூர்த்தி (பகுஜன்சமாஜ் கட்சி)6. பி.எஸ்.சந்திரன் (கொங்கு இளைஞர் பேரவை)7. செல்வராஜன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்)8. சக்திவேல் (லோக்ஜனசக்தி)9. கோவிந்தராஜன் (லட்சிய தி.மு.க.)மற்றும் 7 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 16 வேட்பாளர்களில், திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனம் வெற்றி பெற்றுள்ளார்.

12.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் து.நெப்போலியன் (தி.மு.க,)கே.கே.பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.) ,துரை.காமராஜ் (தே.மு.தி.க.),க.செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) வக்கீல் ஆர்.ஸ்டாலின் (லோக்ஜன சக்தி) இரா. சுந்தரவிஜயன் (சமாஜ்வாடி கட்சி) மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்றுள்ளார்.

13.நாகப்பட்டினம் பாராளுமனற தொகுதியில், ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.).எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு).மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 3 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் வெற்றி பெற்றுள்ளார்.

14, வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.) தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு) தமிழிசை சவுந்தரராஜன் (பாரதீய ஜனதா) யுவராஜ் (தே.மு.தி.க.) சாந்தா ஸ்ரீநி (பகுஜன்சமாஜ்)மற்றும் 24 சுயேச்சைகள் போட்டியிட்டனர்இதில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

15. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில த.வேணுகோபால் (தி.மு.க.) ஜெ.குரு (பா.ம.க.) எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.)எஸ்.ஏ.ராஜாராம் (புதிய நீதி கட்சி)பி.கோவிந்தசாமி (பகுஜன் சமாஜ் கட்சி) பி.செல்வராஜ் (சமாஜ்வாடி கட்சி)அப்ரோஸ் உஸ்னா (லோக்ஜனசக்தி)மற்றும் 23 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் த.வேணுகோபால் 1,38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

16. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் ஆதிசங்கர் (தி.மு.க.), தன்ராஜ் (பா.ம.க.), சுதீஷ் (தே.மு.தி.க.), விஜய டி.ராஜேந்தர் (லட்சிய தி.மு.க.), மற்றும் 25 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆதி.சங்கர் வெற்றி பெற்றுள்ளார்.

17. மதுரை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.க.அழகிரி 1,40,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை பாராளுமன்ற தொகுதியில் மு.க.அழகிரி (தி.மு.க.), பி.மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கவியரசு (தே.மு.தி.க.) தர்பார் ராஜா (பகுஜன் சமாஜ்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

1.வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியிலமற்றும் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ்

1.சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மொத்த 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.ப.சிதம்பரம் (காங்கிரஸ்)ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) பர்வத ரெஜினா பாப்பா (தே.மு.தி.க.).தூதை செல்வம்

(சிவசேனா கட்சி) எம்.ஜி.தேவர் (பகுஜன் சமாஜ்) ராமசாமி (புதிய தமிழகம்)மற்றும் 14 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 20 வேட்பாளர்களில் ப.சிதம்பரம் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2.ஆரணி பாராளுமன்ற தொகுதியில் எம்.கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) முக்கூர் என்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) ஆர்.மோகன் (தே.மு.தி.க.) கே.சரவணகுமார் (புதிய நீதி கட்சி)ஏ.சங்கர் (பகுஜன் சமாஜ் கட்சி வி.அரிராஜ் (சமாஜ்வாடி)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

3.தேனி பாராளுமன்ற தொகுதியில்ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்)தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)கவிதா (பகுஜன் சமாஜ்)பார்வதி (பா.ஜனதா)சந்தானம் (தே.மு.தி.க.)செல்வராஜன் (புதிய தமிழகம்)மற்றும் 16 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஆருண் ரஷீத் வெற்றி பெற்றுள்ளார்.

4.கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கே.எஸ்.அழகிரி (காங்.)எம்.சி.சம்பத் (அ.தி.மு.க)எம்.சி.தாமோதரன் (தே.மு.தி.க.)ஆரோக்கியதாஸ் (பகுஜன் சமாஜ்)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

5.விருதுநகர் பாராளுமன்ற தொகுதயில் மாணிக் தாகூர் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), பாண்டியராஜன் (தே.மு.தி.க.), நடிகர் கார்த்திக் (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ), கனகராஜ் (பகுஜன் சமாஜ்) மற்றும் 11 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6.புதுச்சேரி மாநில பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, ராமதாஸ் (பா.ம.க) விஸ்வேஸ்வரன் (பா.ஜனதா) அசனா (தே.மு.தி.க.)சோமசுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி) கோவிந்தசாமி (காமராஜர் தேசிய காங்கிரஸ்) மற்றும் 22 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 85, 612 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7.காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் வி.விஸ்வநாதன் (காங்), டாக்டர் இ.ராமகிருஷ்ணன் (அ.தி.மு.க.), டி.தமிழ்வேந்தன் (தே.மு.தி.க.), க.உத்திராபதி (பகுஜன் சமாஜ்) பக்கிரி அம்பேத்கர் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா)ஜவகர்லால் நேரு (லோக் ஜனசக்தி) மற்றும் 14 சுயேச்கைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் வி.விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.

8.திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்)பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)பி.முத்துவேல்ராஜ் (தே.மு.தி.க.)சீனிவாசபாபு (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்)கே.அண்ணாமலை (அ.தி.மு.க.) எஸ்.மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)கரு.நாகராஜன் (சமத்துவ மக்கள் கட்சி) ரமேஷ் பாண்டியன் (பகுஜன் சமாஜ்)எஸ்.செய்யது இமாம் (சமாஜ்வாடி)மற்றும் 15 சுயேச்சைகள்.21 வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராமசுப்பு வெற்றி பெற்றுள்ளார்.

விடுதலைசிறுத்தைகள்

1.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் பொன்னுசாமியும், தேமுதிக சார்பில் சபா. சசிக்குமாரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் என்.ஆர். ராஜேந்திரன் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் 99,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணி= 12 தொகுதிகளில் வெற்றி

அதிமுக

1.பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதயில் கு.சண்முக சுந்தரம் (தி.மு.க.), கே.சுகுமார் (அ.தி.மு.க.) பாபா ரமேஷ் (பாரதீய ஜனதா)கே.பி.தங்கவேல் (தே.மு.தி.க., தி.மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி)செ.கிருஷ்ணகுமார் (தமிழ் தேசிய கட்ச, சுரேஷ் (சமாஜ்வாடி கட்சி,இ.உம்மர் (மனிதநேய மக்கள் கட்சிஎஸ்.டி.ரமீஜா பேகம் (சமதா கட்சிபெஸ்ட் எஸ்.ராமசாமி (கொ.நா.மு.க.)

மற்றும் 12 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் கே.சுகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

2.தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.) இல.கணேசன் (பா.ஜ.க. வீ.கோபிநாத் (தே.மு.தி.க.)மற்றும் 40 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

3.விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியிலக.சாமிதுரை (விடுதலை சிறுத்தைகள்) எம்.ஆனந்தன் (அ.தி.மு.க.)பி.எம்.கணபதி (தே.மு.தி.க.) எஸ்.பொய்யாது (பகுஜன் சமாஜ் கட்சி)க.தேவராஜ் (லோக் ஜனசக்தி கட்சி)ஆர்.பஞ்சநாதன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) மற்றும் 13 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் எம்.ஆனந்தன் 2797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.காயத்ரி (தி.மு.க.) பி.வேணுகோபால் (அ.தி.மு.க.) சுரேஷ்

(தே.மு.தி.க.)எம்.எஸ்.சுதர்சன் (ஐக்கிய ஜனதாதளம்) ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார்.

5.மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க) கார்த்திகேயன் (பா.ஜ.க)) பாண்டியன் (தே.மு.தி.க) ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார்.

6.திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில்எஸ்.கே.கார்வேந்தன் (காங்கிரஸ்)சி.சிவசாமி (அ.தி.மு.க.)எம்.சிவக்குமார் (பா.ஜனதா)என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க.)கே.பாலசுப்பிரமணியன் (கொ.நா.மு.க.என்.சிவக்குமார் (உழைப்பாளி மக்கள் கட்சிஎம்.தங்கவேல் (லோக் ஜனசக்தி)மற்றும் 14 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சி.சிவசாமி வெற்றி பெற்றுள்ளார்.

7.திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சாருபாலா தொண்டைமான் (காங்கிரஸ்)குமார் (அ.தி.மு.க)லலிதா குமாரமங்கலம் (பாரதீய ஜனதா) ஏ.எம்.ஜி. விஜய்குமார் (தே.மு.தி.க)கல்யாண சுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி)நீலமேகம் (சமாஜ்வாடி கட்சி) மன்சூர் அலிகான் (லட்சிய தி.மு.க.மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் அதிமுக வேட்பாளர் குமார் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.கரூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 38வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. கே.சி.பழனிசாமி (தி.மு.க.2. தம்பிதுரை (அ.தி.மு.க.3. ஆர்.ராமநாதன் (தே.மு.தி.க.4. லோகநாதன் (சமதா கட்சி5. தர்மலிங்கம் (பகுஜன் சமாஜ் கட்சிமற்றும் 33 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.இவர்களில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வெற்றி பெற்றூள்ளார்.

9.சேலம் பாராளுமன்ற தொகுதியில கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)செம்மலை (அ.தி.மு.க.) பாலசுப்பிரமணி (பகுஜன் சமாஜ் கட்சி) அசோக் சாம்ராஜ் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக) மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் மாநில அமைச்சருமான செம்மலை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை விட 46252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மதிமுக

1.ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் அ.கணேச மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்

1தென்காசி பாராளுமன்ற தொகுதியில் ஜி.வெள்ளைப்பாண்டி (காங்கிரஸ்) பி.லிங்கம் (இந்திய கம்யூனிஸ்டு) கே.இன்பராஜ் (தே.மு.தி.க.)டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கே.கிருஷ்ணன் (பகுஜன் சமாஜ்)மற்றும் 4 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.  இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.லிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1.கோவை பாராளுமன்ற தொகுதியிலஆர்.பிரபு (காங்கிரஸ்) ஜி.கே.எஸ்.செல்வக்குமார் (பாரதீய ஜனதாபி).ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)ஆர்.பாண்டியன் (தே.மு.தி.க.)பி.கதிர்மணி (சமாஜ்வாடி கட்சி)கே.ராமசுப்பிரமணியம் (பகுஜன் சமாஜ் கட்சி)எம்.செல்வம் (சிவசேனா)ஈ.ஆர்.ஈசுவரன் (கொ.நா.மு.க.)மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 38664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

(நக்கீரன்)

படுத்து கொண்டே ஜெயித்துக் காட்டிய கருணாநிதி

karunanithi.jpg85 வயதாகும் முதல்வர் கருணாநிதிக்கு,  இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை மறக்கவே முடியாது. அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, திமுக கூட்டணிக்கு எதிர்பாராத வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன அவரது அரசியல் சாதுர்யமும், அட்டகாச காய் நகர்த்தல்களும். நேற்று வரைக்கும் இப்படிப்பட்ட ஒரு முடிவு வரும் என கருணாநிதி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

தனது உடல் நலிவையும் தாண்டி மிக அசாத்தியமான தன்னம்பிக்கையையும் தனது அரசின் சாதனைகளையும் மட்டுமே முன்நிறுத்தி தேர்தலை சந்தித்து வெற்றியை ஈட்டிக் காட்டியிருக்கிறார். ஈழத் தமிழர் பிரச்சனை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற ரீதியில் எழுந்த பேச்சுக்களும், எழுதப்பட்ட செய்திகளும், கணிக்கப்பட்ட கணிப்புகளும் பொய்யாகி திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி பலத்த அடி வாங்கியுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதி, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை. திருச்சி பிரசாரக் கூட்டத்தில் மட்டுமே அவர் பங்கேற்றார். ஆனால், இதனால் ஏற்பட்ட முதுகுவலி-காய்ச்சலால் மருத்துவமனையில் படுத்திருந்தபடி தன்னைச் சுற்றி நடந்து வந்த அரசியல் நிகழ்வுகளை மெளனமாக கவனித்த்தபடி, தனது தளகர்த்தர்களுக்கு செயல் திட்டங்களை மட்டும் போட்டுத் தந்துவிட்டு அமைதி காத்தார்.

இன்றைய முடிவுகள் முதல்வர் கருணாநிதிக்கு நிச்சயம் பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெரியார் முதல் ஜி.கே.வாசன் வரை எத்தனையோ தலைவர்களுடன் பழகியுள்ள முதல்வர் கருணாநிதிக்கு இன்றைய வெற்றி கடந்த தேர்தலில் கிடைத்த 40க்கு 40 வெற்றியைவிட மிக இனிப்பானது. இந்த வெற்றியின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் கருணாநிதி.

முதல் மாங்காய் – பாமகவின் உதவி இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தூள் தூளாக தகர்த்து எறிந்தது.

2வது மாங்காய் – ஈழத் தமிழர் பிரச்சினையால் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை பொய்யாக்கியது.

3வது மாங்காய் – அதிமுக வென்றால் அக்கட்சியின் பக்கம் காங்கிரஸ் போய் விடக் கூடும் என்ற சூழ்நிலையை இந்த வெற்றியின் மூலம் தடுத்து நிறுத்தியது.

4வது மாங்காய் – தனது மூத்த மகனும், தென் மாவட்ட திமுக அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு அரசியலில் அபாரமான இருக்கையைப் போட்டுக் கொடுத்தது.

இப்படி பல பலன்களை திமுகவுக்குக் கொடுத்துள்ளார் கருணாநிதி.

60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி பார்க்காத ஏற்ற, இறக்கங்கள் இல்லை. ஆனால் அத்தனையையும் அவர் ஒரே மனோபாவத்தில் எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.

சவால்களை சந்திப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. 1969ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டு, அதன் மூத்த தலைவர்கள் இந்திரா காந்தியை தனிமைப்படுத்தியபோது, தனது 25 எம்.பிக்களையும் இந்திராவுக்கு ஆதரவாக நிற்க வைத்தவர் கருணாநிதி.

1971ம் ஆண்டு லோக்சபாவை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டார் இந்திரா காந்தி. இதையடுதது துணிச்சலுடன் சட்டசபையைக் கலைத்து தேர்தலுக்கு தயாரானார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் கருணாநிதி கடைப்பிடித்த உத்தியால், திமுக வரலாறு காணாத வகையில், 182 சீட்களில் வெற்றி பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

பின்னர் இந்திரா காந்தி அவசர கால நிலையை அறிவித்தபோது அதை கடுமையாக எதிர்த்தார் கருணாநிதி. ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்களுக்கு அவர் புகலிடம் கொடுத்தார்.

இதேபோல கருணாநிதி எடுத்த முக்கியமான,அதிரடி முடிவுகளில் ஒன்றுதான் எம்.ஜி.ஆரை. கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால் அது அவருக்கு எதிராக திரும்பியது. அதிமுகவை உருவாக்கி கருணாநிதிக்கு பெரும் சவாலாக மாறினார் எம்.ஜி.ஆர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணி உருவானபோது, முதல் முறையாக சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்தனர் வட இந்திய தலைவர்கள். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதிதான். சென்னை மெரீனா கடற்கரையில் தனது நெருங்கிய நண்பரான வி.பி.சிங்கை முன் நிறுத்தி மிகப் பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார் கருணாநிதி.

அதுதான் இன்று வட இந்திய அரசியலை பிராந்தியக் கட்சிகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதற்காக போடப்பட்ட முக்கிய அடிக்கல்.

வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராக இடம் பிடித்த பின்னர் தேசிய அரசியலில் திமுகவின் பங்கு முக்கியமாக மாறியது.

1989ம் ஆண்டுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு (எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர்) 3வது முறையாக முதல்வரானார் கருணாநிதி.

இந்த அரசு சந்திரசேகர் புண்ணியத்தால் ஒன்றரை வருடமே நீடித்தது. பின்னர் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்தது. கருணாநிதி மட்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுக விஸ்வரூபம் எடுத்தது. 1996ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது திமுக. கருணாநிதி 4வது முறையாக முதல்வரானார்.

பின்னர் 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் திமுக தோல்வியைச் சந்தித்தது.

இருப்பினும் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும் தமிழ அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கூட்டணி ஆட்சியை மக்கள் கொடுத்தனர்.

போராட்டங்களையே தனது வாழ்க்கைக் களமாக மாற்றிக் கொண்டு விட்ட கருணாநிதி, இந்தத் தேர்தலையும் கூட ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் சந்தித்தார்.

கூட்டணி கட்சிகள் பிரிந்து போனது, பல முனைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது, விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி, ஈழத் தமிழர் பிரச்சினை, எல்லாவற்றுக்கும் உச்சமாக, உடல் நலிவு, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை என பல பிரச்சினைகளை திமுக கூட்டணி சந்தித்தபோதிலும், யாரும் எதிர்பாராத வகையில், சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் கருணாநிதி.

கடந்த முறை பெற்ற 40 சீட்களையும் திமுக கூட்டணி பெற முடியாவிட்டாலும் கூட, அதிமுக கூட்டணியை முந்த விடாமல் தடுத்து வென்றதே ஒரு சாதனைதான்.

அவ்வளவுதான் என்று எல்லோராலும் கருதப்பட்ட திமுக கூட்டணியின் அரசியல் எதிர்காலத்தை கருணாநிதியின் அணுகுமுறையும், அனுபவ அரசியலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழ வைத்துள்ளது.

நன்றி: தட்ஸ தமிழ்

378 பேர் கொல்லப்பட்டதாக செய்தி : தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்கிறது இலங்கை அரசு – பீபீஸி தமிழோசை பேட்டி

gotabaya-rajapakasa.jpgஇலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரை பீபீஸி தமிழோசை பேட்டி கண்டிருந்தது. பீபீஸி இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த அப்பேட்டியின் விபரம் வருமாறு:

பீபீஸி தமிழோசை: இன்று (நேற்று 10ஆம் திகதி) 106 சிறுவர்கள் உட்பட 378 கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது, வான்வழித் தாக்குதல்கள் இடம் பெறமாட்டாது என்று அரசாங்கம் கூறியிருந்தும் இத்தகைய செய்தி வந்துள்ளது, இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

கோத்தாபய ராஜபக்ஷ: புலிகளின் கடைசிக் கட்டம் இது. தாங்கள் தப்ப எந்தத் தில்லுமுல்லுகளையும் அவர்கள் இந்த நேரத்தில் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது உள்ள ஒரே வழி, அரசாங்கத்தின் மீது அவதூறைச் சுமத்துவது அல்லது சர்வதேச அழுத்தத்தைக் கொண்டு வருவது, அவ்வளவுதான். அதனால் தான் அவர்களின் பிரச்சார இயத்திரம் இப்படியான புரளிகளைக் கிளப்பி 350, 200, 2000 என்று கதை கட்டி விட்டுள்ளது. எனவே இது விடுதலைப் புலிகளின் ஒரு பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பீபீஸி தமிழோசை: 378 பேரின் சடலங்கள் வந்துள்ளன, அதில் 106 சிறுவர்கள், 1122 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசாங்க மருத்துவரே தெரிவித்துள்ளாரே?

கோத்தாபாய: அவர் அரசாங்க மருத்துவர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் இருப்பது புலிகளின் தலைமைப்பீடமும், போராளிகளும், ஆயுதங்களும் செறிந்துள்ள மூன்றரை சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய மிகச் சிறிய இடம். இதற்குள் இருந்து கொண்டு அவரால் முற்று முழுக்க உண்மையைப் பேசிவிட முடியும் என்று புத்தியுள்ள எவராலும் நம்ப முடியாது.

பீபீஸி தமிழோசை: நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். புலிகள் ஒன்று சொல்கிறார்கள். இருவரும் சொல்வதை விட, தனிப்பட்ட முறையில் அங்கு சென்று பார்த்து உண்மையைச் சொல்ல செய்தியாளர்களை நீங்கள் அங்கு அனுமதிப்பது தானே? ஏன் தடுக்கிறீர்கள்.

கோத்தாபாய: செய்தியாளர்கள் உண்மையைச் சொல்ல நாங்கள் ஒன்றும் தடுக்கவில்லை. புலிகள் பகுதியிலிருந்து தப்பி வந்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் முகாம்களுக்குப் போய்த் தனிப்பட்ட முறையில் செய்திகளை அறிய வழிவிட்டிருக்கிறோம். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிற இடத்தை விட்டு, சிறிதளவு பேர் இருக்கிற இடத்தில் போய் உண்மையை அறியப் போகிறேன் என்கிறார்கள்.

பீபீஸி தமிழோசை: அந்த முகாம்களுக்குக் கூடப் பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தின் மூலம் தானே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சுதந்திரமாகப் போக அனுமதிக்கப்படுவதில்லையே.

கோத்தாபய: ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அங்கே என்ன திருவிழாவா நடக்கிறது? வேடிக்கை பார்க்க? அங்கே முக்கியமான வேலைகள் நடந்து கொண்டுள்ளன. அவை பாதிப்படைய அனுமதிக்க முடியாது. அங்கு இயங்கும் சர்வதேச உதவி அமைப்புகள் கூட குழப்பம் வேண்டாம், அனைத்தையும் ஒழுங்கு செய்யுங்கள் என்கின்றன. அதனால் தான் நாங்கள் ஏற்பாடுகளைச் செய்கிறோம். முகாமுக்குப் போனவுடன் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கிறோம் என்று கூறியிருந்தார்.

நாம் நிலத்தை இழந்திருப்பினும் பலத்தை இழக்கவில்லை: புலிகளின் பேச்சாளர் இளந்திரையன்

ilanthirayan.jpgவலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (நேற்று) சனிக்கிழமை இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் விபரம் வருமாறு:

உங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகள் குறித்து முதலில் தெளிவுபடுத்த முடியுமா?

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போர்க்காலத்தில் மிகவும் முக்கியமான பணிகளில் நான் ஈடுபட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் உங்களுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தற்போதைய களநிலவரம் குறித்து கூற முடியுமா?

களத்தில் மிகவும் தீவிரமான சூழ்நிலைதான் காணப்படுகிறது.

களத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்பது என்பதைவிட, தருணம் கிடைக்கும்போது எல்லாம் பொதுமக்களை படுகொலை செய்வது என்ற கொலைவெறியோடு சிங்களப் படையினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சுதந்திரமான நிலத்தில் சிங்களவர்களுக்கு அடிமைப்படாத வாழ்க்கை வாழ்வதை விரும்பி எமது போராட்டத்தோடு இணைந்து நிற்கின்ற மக்கள், சாவிற்கும் பட்டினிக் கொடுமைக்கும் மத்தியில் தமிழினத்தின் தலையை நிமிரவைத்துக்கொண்டு இங்கு இருக்கின்றனர்.  இந்த மக்களை பாதுகாப்பதற்காக எமது போராளிகள் மிகவும் தீரமுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் தலைவரின் வழிகாட்டலில் மிகவும் திறமையாகப் போராடி வருகின்றனர்.

மிகவும் குறுகிய பகுதிக்குள் புலிகளையும் மக்களையும் படையினர் நெருக்கியிருப்பது எதனைக் காட்டுகிறது?

நிலம் குறுகிவிட்டதை வைத்துக்கொண்டு நாம் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம், பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அப்படி கூறுவது பொருத்தமற்றது. நாம் நிலத்தை இழந்திருப்பினும் பலத்தை இழக்கவில்லை.

சிங்களவர்கள் இன்னமும் வெற்றியீட்டவில்லை, தமிழர்கள் இன்னமும் தோல்வியடையவில்லை. அதனையும் நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

இப்போதுள்ள சூழ்நிலை நெருக்கடிமிக்கதுதான். போராளிகளைப் போன்றே மக்களும் இந்த போரை எதிர்கொண்டுள்ளனர். பசிக்கொடுமை என்ற கொடிய நிலையை முன்னிறுத்தி ராஜபக்சவும் அவரது படைகளும் கொடிய போரை திட்டமிடப்பட்ட வகையில் நடாத்திக் கொண்டிருக்கின்றன.

எனினும் நாம் போராடுவதற்கான மன உறுதியை இழக்கவில்லை.

கனரக ஆயுதங்களை களத்தில் படையினர் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பில் கூறப்படுவது உண்மையானதா?

இத்தகைய கருத்துக்களை சிங்களத்தரப்பில் இருந்துவரும் ஒரு கேலிக்கூத்தாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், சிறிலங்கா படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஐக்கிய நாடுகள் சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கூறியிருக்கிறார்.

இங்கே முழுமையான உச்ச ஆயுதவலுப் பயன்பாட்டுடன்கூடிய போரைத்தான் சிறிலங்கா அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது.

களத்தில் சிறிலங்கா படையினரின் பலம் குறித்து?

மாவிலாற்றில் இருந்து இன்றுவரை நாங்கள் போரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். சிங்களப் படைகள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் எமது தரப்பில் இன்னமும் போரிடும் ஆற்றல் நிற்கவில்லை. சிங்களப் படைகள் முன்னேறி வந்த ஒவ்வொரு அங்குலத்திற்கும் பலத்த இழப்புகளைச் சந்தித்தன. பல டிவிசன்கள் நொந்து நூலாகி பின்களத்தில் ஓய்வில் விடப்பட்டுள்ளன, பற்றாலியன் கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு படையணிகளை முன்னே வைத்தே சிறிலங்கா அரசாங்கம் போரை தற்போது முன்னெடுத்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தமது வலிந்த தாக்குதல் திறனை இழந்திருப்பதாக கூறப்படுகிறதே?

வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு தாக்குதலை செய்யவேண்டுமா, இல்லையா என்ற முடிவு தலைமையால் எடுக்கப்படுவது. எனவே அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து தற்போதைய நிலையில் அனைத்துலக ரீதியில் பரப்பப்படும் கருத்துக்கள் குறித்து?

அவசரப்பட்ட, பக்கச்சார்பான முடிவை அனைத்துலகம் பரப்புரை செய்வதாகவே தோன்றுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது இன்று உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஒரு பாரிய விடயம். எங்களின் விடுதலை சித்தாந்தம் என்பது இன்று உலகத் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற விடயம். பக்கச்சார்பான கருத்துக்களை சில ஊடகங்கள் தூக்கிப்பிடிப்பதால்தான் இத்தகையதொரு தோற்றப்பாட்டு நிலை ஏற்படுகிறது.

தரையால் மூன்று பக்கத்தால் படை நடவடிக்கைகள் இடம்பெறும்போது நான்காவது பக்கமான கடலில் கடற்புலிகளின் பலம் தற்போது எப்படியிருக்கிறது?

கடந்த வாரம் இண்டு தடவைகள் கடல்வழியாக தரையிறங்க சிறிலங்கா படை முயற்சி மேற்கொண்டது. கடற்புலிகள்தான் அந்த முயற்சியை வழிமறித்து நின்றார்கள். அந்த மோதல்களில் கடற்படையினர் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சிறப்பு படையணியைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு படையணியைச் சேர்ந்த இரண்டாவது நிலை கட்டளை அதிகாரியும் இதில் உயிரிழந்திருக்கிறார்.

கடல்பகுதியில் சிறிலங்கா கடற்படை அத்துமீறாத வகையில் கடற்புலிகள் இப்போதும் காவல் காத்து வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் புலிகள் பீரங்கிகளை வைத்திருந்து தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறதே?

சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ என்ற ஒன்றை தாங்களே அறிவித்து, அங்கே மக்களை வருமாறு கூறினர். அங்கு சென்ற மக்கள் மீது உலகில் மிக மோசமான ஆயுதங்கள் எனக்கூறப்படும் கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், இராசாயன விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஆனால், ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ என்று கூறப்படும் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களையோ அல்லது தமது சேனைகளையோ வைத்திருக்கவில்லை. மாறாக, மக்களை பாதுகாப்பதற்காக எல்லைகளில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பலத்தை அழித்திருப்பதாக, தளபதிகளை அழித்திருப்பதான பரப்புரைகளால் புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒருவித சோர்வு ஏற்பட்டுள்ளமை குறித்து?

“சத்தியத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் சத்தியமே வெல்லும்” என ஒரு பழமொழி இருக்கிறது. இழப்புக்கள் ஏற்படுவது உண்மை. ஆனால் இந்த போராட்டம் எத்தனை நாட்களானாலும், எத்தனை ஆண்டுகளானாலும், ஏன் தலைமுறைகளானாலும் தொடரும்.

நாம் அடிமை வாழ்வு வாழப் போவதும் இல்லை, அதனை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை, மண்டியிடப் போவதும் இல்லை.

உலகத் தமிழர்கள் அனைவரும் எம்முடன் நிற்கும்வரை –

வன்னி மக்கள் பசிக்கொடுமைக்கு மத்தியிலும் எம்முடன் நிற்கும்வரை – எமது போராட்டம் வீறுநடை போடும். தலைவர் அதனை வென்று முடிப்பார் என்ற நம்பிக்கையை நான் கூறுகிறேன்.

களத்தில் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்களை புலிகள் வெளியிடாமல் தவிர்த்து வருவதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு எறிகணைக்கும் பொதுமக்கள் செத்து மடிகின்ற கொடூரம் இங்கே நடக்கின்றபோது – பசியாலும் பஞ்சத்தாலும் இங்கே குழந்தைகள் வாடுகின்றபோது – நாங்கள் இறந்த சிங்களவர்களின் உடல்களை எண்ணிக்கொண்டிருப்பதைவிட வாழ வேண்டிய எமது மக்களின் நிலையில் கவனம் செலுத்த வேண்டிய காரணத்தினால்தான் மக்கள் குறித்த செய்திகளையே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

ஊடகங்கள் பெரும்பணியை இங்கே ஆற்ற வேண்டியுள்ளது. அவை பக்கச்சார்பின்றி உண்மையைச் சொல்ல வேண்டும், ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும், நியாயத்திற்கு குரல்கொடுக்க வேண்டும்.

உதாரணமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இங்குள்ள மக்கள் குறித்து தெரிவிக்கும்போது அவர்களை போரில் சிக்கியுள்ள மக்கள் என்றே கூறுகிறது. அது தவறு. அவர்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுகின்ற மக்கள். மக்கள் இங்கே படுகொலை செய்யப்படும்போது போரில் சிக்கி உயிரிழப்பதாகவே கூறுகிறார்கள். இது தவறு. சிங்களப் படைகளால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை ஊடகங்கள்தான் வெளிக்கொணர வேண்டும்.

சிறிலங்கா படைத்தரப்போடு மட்டும் மோதவில்லை என்று புலிகள் கூறி வருகின்றனர். இது குறித்து?

சிங்களப் படையினர் தனியே எம்முடன் மோதி இருப்பார்கள் ஆயின் சூழ்நிலை எப்போதோ வேறுவிதமாக அமைந்திருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்வதற்கு எங்களிடம் செய்திகள் இல்லை. ஆனால் எமது உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்தான் உள்ளன. வன்னியில் உள்ள சிறிய குழந்தைகளினதும் மனதை தளராமல் வைத்திருக்கும் முதியவர்களினதும் அன்பை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள்.

எமது மண் விடிய வேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் நடத்துகின்ற போராட்டம்தான் இங்கே எம்முடைய கால்களை உறுதிப்படுத்தி எம்மை நிமிர்ந்து நடக்க வைத்திருக்கின்றது என்றார் இளந்திரையன்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா அல்லது புலிகளைப் பாதுகாப்பதா? – நெஷனல் போஸ்ட்

canada.jpgகனடாவில் உள்ள பெரும்பாலான தமிழ் பேச்சாளர்கள் கனவுலகத்தில் வாழ்வதாகவே தெரிகிறது. இலங்கை தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாகப் பிடித்துவைத்திருக்கும் புலிகளே தமிழ் மக்களுக்கு எதிரான மிகப்பெரும் அச்சுறுத்தல் என்ற உண்மையை (ஐ.நா உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதன்படி) அவர்கள் அறியாதுள்ளனர் என கனடாவில் இருந்து வெளிவரும் நெஷனல் போஸ்ட் அதன் ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது. (ஏப்பிரல் 29)

புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக புரிந்திருக்கும் காட்டுமிராண்டித்தனம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிதுமே கவலைப்படாததாகத் தொகின்றது. அவர்களது உண்மையான நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது எஞ்சியிருக்கும் புலித்தலைமையைப் பாதுகாப்பதா? என்பது உண்மையிலேயே ஆச்சரியமாகவுள்ளது. என அந்த ஆசிரியர் தலையங்கம் தெரிவித்துள்ளது.

நாம் ஏற்கெனவே எமது ஆரியர் தலைப்புக்களின் குறிப்பிட்டதுபோன்று மனிதாபிமான நிலைமைகள் குறித்த விடயங்களில் நாம் அனுதாபமற்றவர்கள் அல்ல. இலங்கையின் வடக்கே மிகச் சிறியதொரு நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் நூற்றுக்கணக்கான தமிழ் தற்கொலை புலிப்பயங்கரவாதிகள் மத்தியில் அகப்பட்டிருக்கின்றனர்.

தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடியை ஏந்திச் செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்களின் மனிதாபிமான கோசங்களுக்குப் பின்னால் அவர்களிடம் ஒரு மறைமுகமான நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவே தெரிகின்றது. அவர்களது உண்மையான நோக்கம் தமிழ் பொதுமக்களைப் பாதுகாப்பதா? அல்லது எஞ்சியிருக்கும் புலித்தலைமையைப் பாதுகாப்பதா? என மேற்படி ஆசிரிய தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட லண்டன் ரைம்ஸ் பத்திரிகையாளர்

london-times.jpgகொழும்பிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் எனது கடவுச்சீட்டைப் பார்த்தவுடன் இலங்கை குடிவரவு அதிகாரியின் கண்கள் சுருங்கின. “இந்த வழியால் வாருங்கள்’ என்று அவர் கூறினார். பக்கத்து அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கணினியில் என்னைப்பற்றிய விபரத்தை அவரின் சகா ரைப் செய்தார்.

அவரின் திரையில் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என்று வந்தது. எனது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தடுப்பு அறைக்கு காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டேன்.

இரவு முழுதும் பூட்டி வைத்துவிட்டு மறுநாள் திருப்பி அனுப்பப்பட்டேன்.

நான் வியப்படைந்தேன் என்று என்னால் கூற முடியாது. சீனா, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் தெற்காசியாவில் 12 வருட செய்தி நிருபராக பணியில் ஈடுபட்ட நான் முதலாவதாக திருப்பி அனுப்பப்பட்ட போதும் நான் ஆச்சரியமடைந்தேன் என்றும் கூறமுடியாது என்று லண்டன் ரைம்ஸ் பத்திரிகையின் தெற்காசியாவுக்கான நிருபர் ஜெரமி பேஜ் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக “தமிழ்புலி மோதல் தொடர்பாக செய்தி சேகரிப்பதிலிருந்தும் எவ்வாறு நான் தடுக்கப்பட்டேன்’ என்ற தலைப்பில் “லண்டன் ரைம்ஸ்’ பத்திரிகை நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பல்வேறுபட்ட விண்ணப்பங்களின் மத்தியிலும் ஆகஸ்டின் பின்னர் இலங்கைக்கான பத்திரிகையாளர் விசா எனக்கு மறுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரு வருடங்களாக சுயாதீனமான பத்திரிகையாளர்கள் தமிழ்புலிகளுக்கு எதிரான இராணுவநடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பதை இலங்கை அரசாங்கம் தடுத்திருந்தது.

அதனால் உல்லாச பயணியாக செல்ல முயற்சித்தேன். மோதல் சூன்யப் பகுதியில் ஐ.நா. புள்ளி விபரத்தின் பிரகாரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் அகப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக எழுத முயற்சித்தேன்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உல்லாசப் பயணிகளாக செல்லும் ஏனைய நாடுகள் சிம்பாப்வே, துர்க்மெனிஸ்தான், வடகொரியா என்று நான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் பத்திரிகைகள் புலிகளுக்கு ஆதரவானவை எனவும் ஏனென்றால் அங்கு அதிகளவில் தமிழ் சமூகம் இருப்பதாகவும் அரசாங்கம் நினைப்பதால் நான் சந்தேகப்படுவோர் பட்டியலில் இருந்தேன்.

அது அபத்தம்.

இந்த 26 வருட உள்நாட்டுப் போரில் எந்தத் தரப்புடனும் நான் தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. புலிகள் அமைப்பானது ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுவென தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று “த ரைம்ஸ்’ திரும்பத் திரும்ப அறிக்கையிட்டு வந்துள்ளது. அத்துடன் அரசின் தந்திரோபாயம் மற்றும் தமிழர், சிங்களவர்களின் உபாயங்கள் தொடர்பாகவும் விமர்சன ரீதியான செய்திகளை “த ரைம்ஸ்’ வெளியிட்டுள்ளது.

இது ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் செய்யும் விடயமாகும். ஆப்கானிஸ்தானில் தலிபான் உறுப்பினர்களை நான் கிரமமாக பேட்டி கண்டுள்ளேன். ரஷ்யாவில் செச்னிய மோதல் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் செய்திகளை வெளியிட்டுள்ளேன். சீனாவில் மாற்றுக் கருத்துடையவர்களையும் திபெத் சுதந்திரத்திற்கான பணியாளர்களையும் நான் பேட்டி கண்டுள்ளேன். இதே விடயத்தை இலங்கையில் செய்வது தடுக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி மிகவும் அபாயகரமானதாகவும் உள்ளது.

கடந்த தடவை நான் இலங்கைக்கு சென்றது லசந்த விக்கிரமதுங்க பற்றி எழுதுவதற்கு. பத்திரிகை ஆசிரியரான அவர் கடந்த ஜனவரியில் கொலை செய்யப்பட்டார்.

மற்றொரு செய்தியானது மோதல் பகுதிகளிருந்து வெளியேறும் மக்களை அரசாங்கம் முகாம்களில் வைத்திருக்க திட்டமிடுகின்றது என்பது பற்றியே செய்தியாகும். முட்கம்பி வேலியடைத்த முகாம்களுக்குள் மூன்று வருடங்களுக்கு அவர்களை வைத்திருக்க போகும் திட்டம் பற்றியதாகும். செய்தியாளர் மாநாட்டில் என்னை அரசு கண்டித்திருந்தது. அதேசமயம் அரசாங்க சமாதான செயலகத் தலைவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. முகாம்களில் முட்கம்பி வேலியை பயன்படுத்துவதை நான் உணர்ச்சி வசப்பட்ட விடயமாக்கியிருந்ததாக அவர்குற்றம்சாட்டியிருந்தார்.

“துரதிர்ஷ்டவசமாக குளிரான காலநிலைப் பகுதியிலிருந்து வந்த ஒரு மனிதரால் உபகண்டத்தில் முட்கம்பியானது சாதாரணமான பொதுவான பொருள் என்பதையும் எல்லைகளைப் பாதுகாக்கவும் மற்றும் காற்றோட்டத்திற்கும் பார்க்கவும் இது இடமளிக்கின்றது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை’ என்று அவர் எழுதியுள்ளார்.

வவுனியா இடம்பெயர் மக்கள் நலன்புரி முகாம்களில், திட்டமிட்ட பாலியல் வன்முறைகள், கொலைகள் இடம்பெறுகின்றன: ஜேர்மனிய எழுத்தாளர்

thomas.jpgவவுனியாவில் வன்னியில் இருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மருத்துவ வசதியற்ற முகாம்களாக இருப்பதுடன்,  திட்டமிடப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், என்பனவும் இடம்பெறுவதாக பிரபல ஜெர்மனிய எழுத்தாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான தோமஸ் செய்பேட் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான சுற்றுலாவை மேற்கொண்டு விட்டு அண்மையில் அவர் நாடு திரும்பியுள்ளார். அத்துடன் அவர் வன்னியில் இருந்து வந்த மக்களிடம் தனிப்பட்ட கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மோதல் பிரதேசங்களில் இருந்து தப்பி வந்துள்ளனர். அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதும் சாதாரண நிகழ்வுகள் என தோமஸ் சேய்பேட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை படையினர் இந்த முகாம் பகுதிகளை பல ஆண்டுகளுக்கு நடத்தும் வகையில் விஸ்தரிக்க திட்டம் கொண்டுள்ளனர். அத்துடன், 15 சதுர கிலோமீற்றர் பகுதியில், வன்னியில் வசித்து வரும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், நாள்தோறும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி இதனை தடுக்காவிட்டால், வன்னியில் பாரிய படுகொலைகள் இடம்பெறும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தோமஸ் எச்சரித்துள்ளார்.

புலிகளின் இந்தப் பின்னடைவுக்கு நானே பிரதான காரணம் – அமைச்சர் கருணா அம்மான்

karuna_amman.jpgதேசிய இன ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சரான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  இணையத்தளம் ஒன்றிக்கு அவரது அமைச்சில் வைத்து அளித்த பேட்டியினை இங்கு தருகிறோம்.

கேள்வி: புலிகள் அமைப்பிலிருந்து விலகி அரசுடன் இணைவதற்கு முன்னர் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த நீங்கள், அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சரான பின்னர் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளீர்களே.. அத்துடன் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தவுடன் உடனடியாகவே நீங்கள் ஏன் அரசுடன் இணையவில்லை?

பதில்: இல்லை. அது தவறான செய்தி. நாம் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியவுடன் புலிகளால் எமக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் எம்மைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆயுதமேந்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதே உண்மை. இவ்வாறு நாம் தெரிவித்த கருத்தே திரிவுபடுத்தப்பட்டிருந்தது.

புலிகள் அமைப்பிலிருந்து நாம் பிரிந்து அரசுடன் உடனடியாகச் சேர்ந்திருந்தால் எம்மைத் துரோகிகள் என மக்கள் தெரிவித்திருப்பர். அவ்வாறான குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்படக் கூடாதென்பதற்காவே நாம் ரிஎம்விபி (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்) என்ற அமைப்பை உருவாக்கி புலிகள் அமைப்பிலிருந்து நாம் விலகியமைக்கான காரணங்களையும் பிரபாகரனின் துரோகத்தனங்களையும் மக்களுக்கு விளக்கிக் கூறினோம். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றியமை தொடர்பிலும் நாம் விளக்கமளித்தோம். இதனை மக்கள் ஏற்றுக் கொண்டனர். இதன் மூலம் எமது நோக்கமும் நிறைவேறியது. இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இரு தேர்தல்களின் போதும் மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தனர்.

கேள்வி: நீங்கள் ரீஎம்விபியிலிருந்து ஏன் வெளியேறினீர்கள்?

பதில்: இலங்கையைப் பொறுத்த வரையில் 15க்கும் மேற்பட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றன. ஆனால் தமிழ் மக்கள் தொடர்பிலோ தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பிலோ பெரும்பாலான கட்சிகளிடம் தெளிவான எந்தக் கொள்கையும் திட்டங்களும் இல்லையென்பது ஒரு கசப்பான விடயமாகும். அத்துடன் பிராந்திய ரீதியான கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டே தேசிய ரீதியான அல்லது பிரதேச ரீதியான அபிவிருத்தியை முழுமையாக அடைய முடியுமா என்பதும் கேள்விக்குரிய விடயம். இது கடந்த கால அனுபவத்தின் வெளிப்பாடுமாகும்.

வெறும் விளையாட்டுக் கழகங்கள் போன்று கட்சிகளை வைத்துக் கொள்வதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. தொடர்ந்தும் பிராந்தியக் கட்சிகளுக்கு ஊடாக நாம் அரசியலை நடத்திச் செல்வதால் தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையிலேயே நாம் ரிஎம்விபி கட்சியிலிருந்து வெளியேறி தேசிய அரசியலில் எம்மைச் சங்கமிக்கச் செய்தோம்.

கேள்வி: உங்களை நம்பி உங்கள் பினனால் வந்த போராளிகள் நிலை என்ன?

பதில்: நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்கு முன்னரே எமது அமைப்பைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகளின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தினேன். அவர்களுக்குத் தேவையான தொழில் வாய்ப்புகள், தொழில் பயிற்சிகள், வெளிநாட்டு வேளைவாய்ப்புப் போன்றனவற்றை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

எமது அமைப்பைச் சேர்ந்த ஆயிரம் பேர் இதுவரை இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 300 பேர் தற்போது தொப்பிகலைப் பிரதேசத்தில் கடமையாற்றி வருகின்றனர். மேலும் 1500 பேரை இராணுவத்தில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்துள்ளேன்.

இப்போது கிழக்கு மாகாணத்திலுள்ள எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியலங்களின் பாதுகாப்புக்குக்; கூட நாம் இலங்கைப் பொலிசாரின் உதவியையே கோரியுள்ளோம்.

கேள்வி: நீங்கள் இப்படிக் கூறுகிறீர்கள.; ஆனால் கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்னும் ரீஎம்விபி கட்சியை வழிநடத்தித்தானே செல்கிறார்?

பதில்: அவரின் கட்சியிலிருக்கும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கு மேற்படாது. அவர் தற்போது தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்.

கேள்வி: அவரிடம் உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்த்திருக்கலாமே?

பதில்: அவர் அதனை ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டார்.

கேள்வி: நீங்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னரும் பதவியை ஏற்ற பின்னரும் தமிழ் மக்கள் தொடர்பில் ஏதாவது செய்துள்ளீர்களா?

பதில்: ஆம், நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்னர் பல அமைச்சுகளின் இணைப்பாளரகவிருந்து நல்ல பல விடயங்களைச் செய்துள்ளேன். அதுபோன்று இப்போது எனக்குக் கிடைத்துள்ள அமைச்சு மூலம் தேசிய ரீதியிலேயே நல்ல பணிகளைச் செய்ய முடியுமென எதிர்பார்க்கிறேன். இப்போது கிடைத்துள்ள அமைச்சினை நான் மிகவும் விரும்புகிறேன். சுமார் 25 வருடங்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட வடக்கினையும் கிழக்கினையும் கட்டியெழுப்பக் கிடைத்துள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.

இந்த அமைச்சின் மூலம் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்து பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்க்கவும் முடியும். தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக் கொள்ளும் வகையில் புதியதொரு திட்டத்தினையும் நான் விரைவில் செயற்படுத்தவுள்ளேன். இந்த இரு இனங்களும் இரு மொழிகளையும் கற்பதன் மூலமும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கலாமென்பதே எனது நம்பிக்கை.

கேள்வி: நான்காவது ஈழப் போர் ஆரம்பித்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் படை பல ரீதியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதற்கான காரணம் என்னவாக இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: புலிகளின் இந்தப் பின்னடைவுக்கு நானே பிரதான காரணம். நானும் பெரும் எண்ணிக்கையிலான போராளிகளும் இந்த அமைப்பிலிருந்து வெளியேறியதன் மூலம் அவர்களின் பலம் குறைக்கப்பட்டு விட்டது.

மேலும் புலிகளின் தரப்பில் இப்போது யுத்தமொன்றுக்குத் தலைமை தாங்கிச் செல்லக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். புலிகள் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். இதற்குப் பின்னர் அவர்களால் யுத்தத்தில் வெல்ல முடியாதென்பது எனது திடமான நம்பிக்கை.

கேள்வி: கடந்த காலங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் சாதமான ஏதாவது விடயத்தை பிரபாகரன் தவற விட்டுள்ளாரா?

பதில்: நிச்சயமாக, இறுதியாக இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில் நானும் கலந்து கொண்டேன். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பெடரல் முறையிலான தீர்வுத் திட்ட ஆலோசனைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. இது தொடர்பான ஆவணங்களிலும் எமது தரப்பில் (புலிகள்) கையொப்பமிடப்பட்டது. அன்ரன் பாலசிங்கம் எனது அழுத்தத்தின் மத்தியில் இதில் கையொப்பமிட்டார்.

கேள்வி: உங்கள் அழுத்தமா?

பதில்: ஆம், இதில் தான் கையொப்பமிட்டால் பிரபாகரனால் தனக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அன்ரன் பாலசிங்கத்திடம் அன்று காணப்பட்டது. இந்த நிலையில் அவரை நான் தைரியப்படுத்தி கையொப்பமிடச் செய்தேன். பின்னர் இலங்கை திரும்பியதும் வன்னி சென்று பிரபாகரனைச் சந்தித்து கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன். அவர் அதனை மகிழ்ச்சியான மனநிலையுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான ஒப்பந்தமொன்றில் அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டமை தொடர்பாக என்னிடம் தனது அதிருப்தியை வெளியிட்டதுடன் அதனைக் கிழித்தெறிந்து விட்டார். இதுவே அவருக்கும் எனக்குமிடையிலான முரண்பாடுகள் ஏற்படக் காரணமுமானது.

அது மட்டுமன்றி தமிழ் மக்கள் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கபட்ட இந்த ஆலோசனையை அவர் நிராகரித்தமை இனப்பிரச்சினை தீர்வில் அவருக்கு அக்கறை இல்லையென்பதனையுமே காட்டியது. பல வருடகால யுதத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்படவேண்டுமென்ற நிலையிலிருந்த போது இவ்வாறு பிரபாகரன் நடந்து கொண்டது முட்டாள்தனமானது.

கேள்வி: நீங்கள் எவ்வாறு தெரிவித்தாலும்; தமிழ் மக்கள் தம்முடன் இருப்பதாகத்தானே புலிகள் கூறுகின்றனர்?

பதில்: தமிழ் மக்கள் அப்படிக் கூறுகின்றனரா இல்லையே?

கேள்வி: எங்களுக்காகத்தான் பிரபாகரன் போராடுகின்றாரென தமிழ் மக்கள் கூறுகிறார்களே?

பதில்: அந்தக் காலம் இப்போதில்லையே. தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்றைய போராட்டமானது தமிழ் மக்களுக்கான போராட்டம் அல்ல. அது பயங்கரவாதத்தின் பக்கம் வழி தவறிச் சென்று விட்டது. புலிகளை முதலில் வெறுத்தவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். மாவட்ட மக்களே. இப்போது அந்த வெறுப்பாப்பானது பரவிக் காணப்படுகிறது.

கேள்வி: அப்படியாயின் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வுதான் என்ன?

பதில்: மாகாண சபை ஊடான அதிகாரப் பரவலாக்கலே சிறந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றைக் காணமுடியும்.

கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நீங்கள் முழுமையான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச முடியாது.

பதில்: பொலிஸ் அதிகாரத்தின் மூலம்தான் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுமா? பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏனைய சமூகங்கள் தவறாகக் கணிப்பிடக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என்பதனாலேயே இதனை எதிர்க்கிறேன். அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் எதிர்காலத்தில் தமிழ் மொழி பேசும் பொலிசாரே நியமிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில் பொலிஸ் அதிகாரம் தேவை இல்லையென்பதே எனது கருத்து.

கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பூரணமாக வழங்கவில்லையென்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான); பகிரங்கமாகத் தெரிவிக்கிறாரே?

பதில்: எதனை எவ்வாறு கையாள்வதெனத் தெரியாத பிள்ளையான் தனது தரப்பிலுள்ள பிழைகளை மறைப்பதற்காக சுமத்தும் குற்றச்சாட்டுகள்தான் இவை. கிழக்கின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான நிதி திருப்பியனுப்பப்பட்டமைக்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஹில்புல்லாஹ் கிழக்கு மாகாண அமைச்சர்தானே அவரும் அதே மாகாண சபை மூலம் எவ்வளவு சேவைகளைச் செய்து வருகிறார். முதலில் நிர்வாகத் திறமை இருக்க வேண்டும் அது இல்லாமல் தாம் விடும் பிழைகளுக்கெல்லாம் பிறரைக் குற்றம் சொல்வது தவறு.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது யுத்த களமுனையில் உள்ளாரா அல்லது வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருப்பாரா?

பதில்: வன்னிப் பெரும் பரப்பிலுள்ள காடொன்றுக்குள் அவர் ஒழிந்துள்ளாராரென்றே நான் கருதுகிறேன். அவரால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது கடினம். அப்படித் தப்பிச் சென்றாலும் இந்தியா உட்பட பல நாடுகள் அவரை ஏற்றுக் கொள்ளமாட்டாது. இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கை விவகாரம் தொடர்பில் எல்லாம் முடிந்த கதை. அவர்கள் தங்களது கொள்கையிலிருந்து மாறவும் மாட்டார்கள். யாராலும் அவர்களை மாற்றவும் முடியாது.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர்- பா.நடேசன்

nadesan.jpgஇந்தியாவில் இருந்து வெளிவரும் ‘தெஹெல்கா’ இதழின் செய்தியாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் பேட்டி அளித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு காலம் (Post-LTTE Scenario), என பலர் கூறுகிறார்களே?
 
இங்கு நான் ஒரு விசயத்தைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario) என்று ஒன்று இருக்கப்போவதேயில்லை. தமிழர்கள் அனைவருடைய அறிவிலும், உணர்விலும் சுதந்திரத்திற்கும், சுயரியாதைக்குமான தாகம் தான் குடிகொண்டுள்ளது என்பதை உலகம் முழுவதிலும் உங்களால் பார்க்க முடியும்.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர். அவர்களுடைய விடுதலைப் போராளிகள் என்ற முறையில், அவர்களது உரிமைகளை எந்தவகையிலும் விட்டுக்கொடுக்காமல் – கடந்த 35 வருட காலத்துக்கும் மேலாக அவர்களது போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருவதன் மூலமே இந்தப் பொறுப்பு நிலையை நாம் பெற்றிருக்கின்றோம்.

போர்க் களங்களில் பின்னடைவுகளும், முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை.

இறுதியாக நாம் எதனை அடைகின்றோம் என்பதுதான் முக்கியமானது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து காலத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, எமது மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து, அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் தமது கவனத்தைச் செலுத்துமாறு அனைத்துலக சமூகத்தையும் இந்தியாவையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு கால கட்டம் என ஒன்று ஒருபோதும் வரப்போவதில்லை.

விடுதலைப் புலிகளுடனான இந்த போரில் சிங்களப் படையினருடன் இந்தியப் படையினரும் இணைந்து போர் புரிகின்றனரா?
 
சிங்கள மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் இராணுவம் சார்ந்த  ஒத்துழைப்பு இருக்கின்றது என்பதை என்னால் சொல்ல முடியும்.
 
பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றார்கள் என்கிற பேச்சு இருக்கிறது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?
 
சிங்கள அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தம் மீது பிரயோகிக்கப்படுகின்றமை பற்றி தமிழ் மக்கள் நன்கு  அறிவார்கள். அவ்வாறு ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அந்த அரசாங்கத்தின் கைகளில் அகப்பட அவர்கள் விரும்பாத நிலையில் இங்கு வாழும் மக்களை போருக்குள் ‘சிக்குண்டவர்கள்’ என்றோ அல்லது ‘மனித கேடங்கள்’ என்றோ குறிப்பிடுவது பொருத்தமற்றது.
 
மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் இந்தப் பகுதிக்கு வந்து மக்களுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும்.
 
போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றீர்கள். இது உங்களுடைய பலவீனத்தின் அடையாளமா?
 
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதால்தான் நாம் போர் நிறுத்தம் ஒன்றை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் ஒன்று அவசியமாகும்.

உலகத்திற்கு  உங்களுடைய கோரிக்கை என்ன?
 
அப்பாவிச் சிறுவர்கள், தாய்மார் மற்றும் பெரியவர்கள் சிங்கள ஆயுதப் படைகளால் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனால் தான் ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.
 
‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இணைந்து போக வேண்டாம் என அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த போரை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு, பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்பெயர்ந்து வந்தவர்கள் இரண்டாம்தர குடிமக்களா? – வீரகேசரி ஆய்வு

Wanni_Warவன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைத் தாண்டி விட்டதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு நிம்மதியான வாழ்வும் நிலையான அமைதியும் கிடைக்கும் என்று அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது.

ஆனால் இன்னொரு புறத்தில் இந்த மக்களை நிரந்தரமாகவே இரண்டாந்தரக் குடிமக்களாகப் பிரித்துக் காட்டும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை “புலிகளின் பிடியில் இருந்து தப்பி வரும் மக்கள்’ என்ற அடைமொழியுடன் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அரசாங்கம் அதே வகையானதொரு நிலைக்குள்தான், இங்கும் தள்ளுகிறோம் என்பதை மறந்து விடுகிறது. வன்னியில் இருந்து வரும் மக்கள் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டிருக்கின்ற முகாம்களுக்குள் மட்டுமே அடைக்கப்படுகின்றனர். இங்கே “அடைக்கப்படுகின்றனர்’ என்ற பதம் சிறைகளில் அடைக்கப்படுவது என்பதற்கு எந்தவிததிலும் குறைவானதாக இருக்க முடியாது. ஒரு சிறைக்குள் இருப்பவர்கள் வெளியாருடன் தொடர்பு கொள்வதற்கு, வெளியே செல்வதற்கு, அல்லது சுதந்திரமாக நடமாடுவதற்கு எவ்வாறு தடுக்கப்பட்டிருப்பார்களோ, அது போன்ற நிலை தான் வன்னியில் இருந்து வந்த மக்களுக்கும் உள்ளது. இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாது. அவர்களின் உறவினர்கள் கூட உள்ளே சென்று பார்க்க முடியாதுள்ளது.

ஐ.நா.வின் உதவித் திட்ட நிவாரணத்தைப் பெற்று சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அதற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும். இதுவும் ஒரு சிறை வாழ்க்கை தான். சுற்றிவர இராணுவத்தினரும், பொலிஸாரும் காவல். உள்ளேயும் அவர்கள் தாராளமாக நடமாடுவர். இந்த முகாம்களே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.

இதுபற்றி சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர் தான் இராணுவத்தினரின் பொறுப்பில் இருந்து விடுவித்து மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத் திருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.  இது பெயரளவுக்குத் தான் இருக்குமே தவிர நிச்சயம் படைத்தரப்பின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் தான் முகாம்கள் இருக்கும். வன்னியில் இருந்து வரும் மக்களிடையே புலிகள் மறைந்திருக்கலாம். அவர்கள் இங்கு வந்து தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு படையினர் செயற்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.

srilanka_idp.jpgஆனால் ஒரு சில புலிகளைப் பிடிக்க அரசாங்கம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் நலன்களை முடக்கிப் போட்டு அவர்களின் சுதந்திரமான அசைவுகளைக் கட்டுப்படுத்தி நடைப்பிணங்களாக்கி வைத்திருப்பது சரியானது தானா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பெரும் விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் படும் வேதனைகள் பற்றி சர்வதேச பிரதிநிதிகளே தமது கள ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் தனது இறுக்கமான போக்கில் இருந்து தளரத் தயாராக இல்லை. அமைச்சர்கள், அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்படும் சில அரசியல்வாதிகள் மட்டும் இடம்பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட முடியும் என்ற நிலை தான் காணப்படுகிறது. ஆனால் இவர்களின் காதுகளுக்குள் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் ஏறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்படியான பிரச்சினைகளை வெளியே சொல்வது அரசாங்கத்துக்கு, இலங்கை தேசத்துக்குச் செய்யும் துரோகமாக அவர்கள் பார்ப்பார்கள். வன்னியில் வாழ்ந்த மக்களை புலிகள் கட்டாயமாகத் தான் படைகளில் சேர்த்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அப்படி கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, தப்பி வந்தவர்களைக் கூட அரசாங்கம் வவுனியாவில் புலிகளாகத் தான் பார்க்கிறது. இதை விடப் பரிதாபம் புலிகள் 55வயதுக் குட்பட்டோருக்கு கட்டாய பயிற்சி கொடுத்ததாக அரசாங்கமே சொல்கிறது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களைக் கூட அரசாங்கம் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து வெளியே போக விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.

கடந்த வாரம் தான் 60 வயதுக்கு மேற்பட்டோர் வெளியே சென்று வசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது இன்னமும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டு வாழும் அவலம் தான் காணப்படுகிறது. இந்த அடைபட்ட வாழ்வு எதுவரை நீடிக்கும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பதற்கு யாரும் உறுதியான பதில் சொல்வதாகத் தெரியவில்லை. இந்தநிலையில் தான் அரசாங்கம் வன்னியில் இருந்து வந்த மக்கள் அனைவருக்குமே விசேட அடையாள அட்டையை வழங்கப் போவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.

இது அந்த மக்களை அரசாங்கம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த முற்படுகிறது என்பதற்கான அடையாளமாகவே தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்னர், வவுனியாவில் இருந்து கொழும்பு செல்வதற்கு தமிழ்மக்களுக்கு பாஸ் தேவைப்பட்டது. இதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இவ்வாறான பாஸ் நடைமுறை சட்ட விரோதமானதென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அதே பாஸ் நடைமுறையை அரசாங்கம் 1996 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவோருக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதைவிட அங்கு விசேட அடையாள அட்டை நடைமுறையும் இருக்கிறது. இது பற்றி எவரும் வழக்குத் தாக்கல் செய்ய முனையவில்லை. இப்போது வன்னி மக்களுக்கும் விசேட அடையாள அட்டை கொடுத்து அவர்களை ஏனைய மக்களிடத்தில் இருந்து பிரித்துக் காட்டும் இரண்டாந்தரக் குடிமக்களாகப் பிரகடனப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை முக்கியமானதாக இருக்கும் போது அதற்கு மாறாக விசேட அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டுமென நிர்ப்பந்திப்பது குறிப்பிட்ட மக்களை தரக் குறைவாகப் பார்ப்பதற்கே வழிவகுக்கும்.

யாழ்ப்பாணத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே விசேட அடையாள அட்டையைப் பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டனர். 18வயதுக்கு உட்பட்டோரை படைகளில் சேர்த்தால் அது மிக மோசமான மனித உரிமை மீறலாக இருக்கும்போது 10வயதுச் சிறுவனையே அடையாள அட்டையுடன் அலைய விடுவது மட்டும் மனித உரிமையை மதிக்கும் செயலாகுமா? தமிழ் மக்களை விடுவிப்பதற்காகப் போர் நடத்துவதாகவும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் வசந்தம் வீசும் என்றும் சொல்லிக் கொள்ளும் அரசாங்கம் அந்த மக்களை நிரந் தரமாகவே புலிகளாக நோக்க வைக்கும் ஒரு காரியத்தை இப்போது செய்து கொண்டிருக்கிறது. இடம் பெயர்ந்து வந்த மக்களை பிரித்துக் காட்டும் விசேட அடையாள அட்டையை நடைமுறைக்குக் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற நிலையில், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் எவருமே இது பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

இது ஒன்றே இடம்பெயர்ந்து வந்த மக்களின் துயரங்கள் எவ்வளவு தூரம் மறைக்கப் பட்ட நிலையில் இருகிறது என்பதற்கு போதுமான சாட்சி.

 நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 4/6/2009

தமிழ் மக்கள் கொல்லப்படுவதை ஐ.நாவால் தடுக்க முடியவில்லை : ஜோன் ஹோம்ஸ் மீது புலிகள் குற்றச்சாட்டு

nada-_jhon.jpgஐக்கிய நாடுகள் சபை தனது உறுப்பு நாடான இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் போது அதனை தடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அக்கடிதத்தில் ‘’எமது பகுதியில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் சென்றடையும் வண்ணம் வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோளை எமது அமைப்பு வரவேற்கின்றது. உடனடியான போர் நிறுத்தம் வேண்டும் என்ற எமது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். ஒவ்வொரு தடவையும் நாம் இதனைக்கூறுவதும் உங்களுக்கு தெரிந்ததே.

ஆனால், அரசு அதனை நிராகரித்து வருகின்றது. போர் நிறுத்தத்தை நிராகரிப்பதுடன் சுதந்திரமான பத்திரிக்கையாளர்களும், மனிதாபிமான அமைப்புக்களை சேர்ந்தோரும் எமது பகுதிக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபடுவதையும், உதவி புரிவதையும் அரசு தடுத்தும் வருகின்றது. அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்க வேண்டும் என எமது அமைப்பிடம் இருந்து எதிர்பார்க்கும் உலகம், அதே அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்குமாறு தன்னை ஜனநாயக நாடாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசை கோருவதுடன் நாள் தோறும் எறிகணை வீச்சுக்களினால் கொல்லப்படும் மக்களின் மனித அவலங்களை நிறுத்தவும் முன்வர வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்னும் வரையறைக்குள் அடங்கவில்லையா? சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை அனைத்துலக சமூகம் நிறுத்துவதற்கு முன்வராத போது அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பிற்கு துணை போவதாகவே நாம் கருத முடியும். சிறிலங்கா .நா. சபையில் உறுப்புரிமையுள்ள நாடு. ஆனால் அதன் உறுப்பு உரிமையுள்ள நாடு ஒன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிப்பது தொடர்பாக .நா. அதிக கவனம் கொள்ளவில்லை. ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் எறிகணை வீச்சுக்களினாலும், பட்டினியாலும் நாள்தோறும் இறப்பை சந்தித்து வருகின்றனர்.

சிறிலங்காவில் இருந்து தமிழ் மக்களை முழுவதுமாக இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையையே அரசு மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்க்கும் முகமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். எமது அமைப்பும் அவ்வாறே உருவாகியது ஆனால், உலகம் எமது அபிலாசைகளை இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித மற்றும் பொது உரிமைகளுக்காகவும், சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், அடக்குமுறையான சட்டங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவுமே போராடி வருகின்றனர். தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் அழித்தொழிப்பு போரில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கும், தமது வாழ்க்கையை வாழ்வதற்கும், பிள்ளைகளை காப்பாற்றவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், அனைத்துலக சமூகம் அடிப்படை காரணங்களை புரிந்துகொள்ள மறுப்பதுடன், ஆயுதங்களை கீழே போடுமாறு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. எதற்காக? நாட்டில் உள்ள தமிழ் இனத்தை அழித்த பின்னர் சிங்கள மக்கள் எஞ்சிய மக்களை அடக்கி ஆட்சி புரிவதற்காகவா? வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அனைத்துலக சமூகம் தமிழ் மக்களின் நிலையில் இருந்தால் அவர்கள் விருப்பத்துடன் அரசின் பாதுகாப்பு தேடி செல்வார்களா? அரச படையினரின் எறிகணைத்தாக்குதலில் உங்களின் ஒரு பிள்ளை கொல்லப்பட்ட பின்னர் மறுநாள் ஏனைய பிள்ளைகளுடன் நீங்கள் அதே அரசின் பாதுகாப்பு தேடிச் செல்வீர்களா?

.நா.வின் நிதி உதவியில் இயங்கிவரும் தங்கும் முகாம்களில் கூட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை. அங்கு மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஏனைய மக்களும் அங்கு செல்ல வேண்டும் என அனைத்துலக சமூகம் எவ்வாறு எதிர்பார்க்கலாம். மக்களை பலவந்தமாக தடுத்துவைக்க வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்களே உங்களுக்கு இதனை தெரிவிப்பார்கள்.

.நா.வின் பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் அவர்கள் கூட வவுனியாவில் மக்கள் தங்கியுள்ள முகாமுக்கு சென்று முயற்சிக்கவில்லை. முகாமுக்கு செல்லும் போது சுதந்திரமான மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்களோ, மருத்துவர்களோ, உதவி அமைப்புக்களோ ஏதாவது கருத்தை தெரிவித்தால் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் என அரசு குற்றம் சுமத்தி வருகின்றது. ஆனால், அரசினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்களை சுற்றி சிறிலங்கா அரசின் கடுமையான கண்காணிப்பு உள்ள போது அவர்கள் எவ்வாறு உண்மையை கூறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.