::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

இறுதிநாளில் மாறிய போட்டியின் திசை – இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியபந்துவீச்சாளர்கள் !

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை துடுப்பெடுத்தாட செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு முழு இலக்குகளையும் இழந்தது. தாகூர் 57 ஓட்டங்கள் , கோஹ்லி 50 ஓட்டங்கள் பெற்றதே அதிகமாக இருந்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 290 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் ஒல்லி போப், அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் விளாசினார். இந்த தொடரின் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ், இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்தார்.
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். ஆரம்பவீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, நிலைத்து ஆடிய ரோகித் சர்மா, சதம் விளாசினார். அவர் 256 பந்துகள் விளையாடி 127 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சார்பில் செத்தேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட், ஷிராதுல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 466 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம் 368 ஓட்டங்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. நேற்று 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்கள் எடுத்தது.
ஆனால், இன்று ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.
இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் கண்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தியபோதும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி ஆகியோர் முறையே 5, 0, 0 ஆகிய ஓட்டங்களில் வெளியேறியது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.
இந்தியாவுக்காக உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி, 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 10 ஆம் தேதி மான்சஸ்டரில் தொடங்குகிறது.

இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்கள் – கிரிக்கெட்டின் பிதாமகன் பிரட்மன் சாதனையை நெருங்கும் ரோகித் !

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணினக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்று வருகிறது.

ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் வெளிநாட்டு மண்ணில்  ரோகித் சர்மா தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலமாக ரோகித் சர்மா இங்கிலாந்து மண்ணில் மொத்தமாக ஒன்பது சதங்களை பூர்த்தி செய்த வீரராக தன்னை அடையாளப்படுத்தினார்.

இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்களை பதிவு செய்த வீரராக கிரிக்கெட்டின் பிதாமகன் பிரட்மன் காணப்படுகிறார், பிரட்மன் இங்கிலாந்து மண்ணில் 11 சதங்களை பூர்த்தி செய்திருக்கும் அதே நேரத்தில், மேற்கிந்திய தீவுகளின் விவ்வியன் ரிச்சர்ட்ஸ் 9 சதங்களை இங்கிலாந்தில் பெற்றுள்ளார்.

இவர்களுக்கு அடுத்து இந்திய வீரர் ரோகித் சர்மா அனைத்து வகை போட்டிகளிலும் இங்கிலாந்து மண்ணில் வைத்து 9 சதங்களை பூர்த்தி செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மலான் , ஷம்ஸி அசத்தல் ஆட்டம் – இரண்டாவது போட்டியில் இலங்கை தோல்வி !

தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதனைடுத்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் மலான் 121 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் சாமிக கருணாரத்ன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

5 விக்கெட் வீழ்த்திய ஷம்சிஅதனடிப்படையில் 284 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கிய நிலையில் மீண்டும் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு D/L முறைப்படி 265 என்ற இலக்கு நடுவர்களால் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் தப்ரைஸ் ஷம்ஸி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

லண்டன் ஓவலிலும் குழப்பம் – ஜார்வோ கைது !

இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட்  தொடரில் ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவர் ஏற்கனவே லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டின் போது அத்துமீறி ஊடுருவினார். அதனால் லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியைப் பார்க்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, 4-வது டெஸ்ட் நடக்கும் லண்டன் ஓவலிலும் அவர் நேற்று திடீரென மைதானத்திற்குள் ஓடிவந்து பந்து வீசுவது போல் சைகை காட்டினார். அத்துடன் வந்த வேகத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீதும் மோதினார். பிறகு பாதுகாப்பு ஊழியர்கள் அவரைப் பிடித்துச் சென்றனர். இதனால் 5 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மைதானத்திற்குள் திடீரென நுழைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஜார்வோவை லண்டன் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னாபிரிக்காவுடனான தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை அணி !

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலாக நேற்று நடைபெற்ற  முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அவிஸ்க பெர்ணான்டோ அதிகபட்சமாக 118 ஓட்டங்களையும், சரித் அசலங்க 72 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய இருவரும் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

சதமடித்த அவிஷ்கா பெர்னாண்டோ, 96 ரன் அடித்த மார்கிராம்பதிலுக்கு 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அகில தனஞ்சய இரண்டு விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது திணரும் இந்தியா – ஆறுதலளித்த ஷர்துல் தாகூர் !

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதல், மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணியின் முதல்நிலை துடுப்பாட்டவீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. ரோகித் சர்மா 11 ஓட்டங்கள், கே.எல்.ராகுல் 17 ஓட்டங்கள், புஜாரா 4 ஓட்டங்கள் என ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் தலைவர் கோலி-ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடினர்.
ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழக்க, தலைவர் கோலி அரை சதம் அடித்த நிலையில், ராபின்சன் ஓவரில் அவரும் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்களும் அணியின் ஓட்டத்தை  உயர்த்தமுடியாமல் தடுமாறினர். ரகானே 14 ஓட்டங்களிலும், ரிஷப் பண்ட் 9 ஓட்டங்களிலும்  ஆட்டமிழந்தனர்.
இந்த நெருக்கடியான  நேரத்திலும் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் ஆடிய ஷர்துல் தாகூர், 31 பந்துகளில் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், அவர் 57 ஓட்டங்கள் எடுத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக வோக்சிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின்னர் பும்ரா (0), உமேஷ் யாதவ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களிலும் சகலவிக்கெட்டுக்களையும்.  இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 3 விக்கெட், ஓக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடுகிறது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி ஒன்பது ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் 21 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான்கள் ஒப்புதல் !

அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் மூலம் நவம்பரில் டாஸ்மேனியாவில் நடைபெறும் அவுஸ்திரேலிய அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மோதும்.

தலிபானின் இந்த ஒப்புதல் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்  தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி செய்திச் சேவையிடம், “அணியை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப தலிபான்களிடமிருந்து எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

2001 இல் தலிபான்கள் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுக்களை தடை செய்தனர். பல விளையாட்டு மைதானங்கள் மற்றும் அரங்கங்கள் பொது மரணதண்டனை இடங்களாக பயன்படுத்தப்பட்டன.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் பிரபல வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் !

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் மிகச்சிறப்பான – அதே நேரம் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன். தன்னுடைய அபார பந்து வீச்சால் எதிரணி வீரர்களை நடுங்க வைக்கக்கூடியவர்.
இவர் 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி, அதை ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர். 38 வயதான ஸ்டெயின், இன்று அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.. 2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ஸ்டெயின் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். 93 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் 26 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் சாய்த்துள்ளார்.
125 ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகளும், 47 டி20 போட்டியில் 65 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டும், டி20-யில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியும் அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.

பாராலிம்பிக் 2020 – இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் !

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது இரண்டாவது பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

F64 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் சமித் துவான் கொடிதுவக்குவினால் இந்த வெண்கலப் பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டின் பிதாமகன் டொன் பிரட்மென் சாதனையை முறியடிக்க தயாராகும் ஜோ ரூட் !

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் தொடரின் மூன்று போட்டிகள் நிறைவுக்குவந்த நிலையில் இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் 3 டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் அடங்கலாக இதுவரை 500க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்து ஏராளமான சாதனைகளை படைக்க தயாராகிவிட்டார்.

10 cricketers whom Sir Don Bradman rubbed the wrong way - Cricket Country

இந்த நிலையில் கிரிக்கெட்டின் பிதாமகன் டொன் பிரட்மென் சாதனையையும் ரூட் முறியடிப்பார் என நம்பப்படுகிறது.

ஒரு ஆண்டில், ஒரு குறித்த ஒரு வீரர், குறித்த ஒரு அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை பிரட்மன் 71 ஆண்டுகளாக வைத்திருக்கிறார். பிரட்மன் இங்கிலாந்து அணிக்கைதிராக 1930 ம் ஆண்டில் 9 இன்னிங்ஸ்களில் 974 ஓட்டங்களை ஒரே ஆண்டிலேயே விளாசித் தள்ளினார்.

இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஜோ ரூட் 13 இன்னிங்ஸ்களில் மொத்தம் 875 ஓட்டங்களை பெற்றுள்ளார், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் இருக்கும் நிலையில் 100 ஓட்டங்களை பெற்றுக் கொள்வாராக  இருந்தால், 71 ஆண்டு கால சாதனையை முறியடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஒரு ஆண்டில் அதிகமான டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற மொகம்மட் யூசுப்பின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 390 ஓட்டங்கள் தேவையான நிலையில் இந்த ஆண்டில் சாதனை புத்தகங்கள் எல்லாவற்றிலும் தன் பெயரை பதித்து விடுவார் என்றே எதிர்பார்கப்படுகிறது.