ஜெர் மனியில் நடக்கும் உலக ரெபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் நகரில் உலக ரெபிட் செஸ் சம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஆனந்த் (இந்தியா), அரோனியன் (அர்மேனியா), நெபோனியாட்சி (ரஷ்யா), நெய்டிட்ச் (ஜெர்மனி) உள்ளிட்ட நான்கு வீரர்கள் விளையாடுகின்றனர்.
நடத்த முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஆனந்த், அரோனியன் மற்றும் நெபோனியாட்சியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் நெய்டிட்சை வீழ்த்தினார். இதன் மூலம் ஆனந்த் ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அரோனியன் மற்றும் நெபோனியாட்சி 2.5 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இத் தொடரில் பத்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்த், இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாக போராட வேண்டிய கட்டா யத்தில் உள்ளார்.