::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

strauss.jpg 75 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றுள்ளது. திங்களன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி எத்தரப்புக்கும் வெற்றியின்றி முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து இந்தத் தொடரில் 1-0 என்கிற நிலையில் முன்னணி பெறுகிறது. இந்த ஆஷஸ் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ பிளிண்டாஃப், ஆஸி அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியமை இந்தப் போட்டியில் ஒரு சிறப்பம்சமாக இருந்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவரான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் ஆஸி அணியின் மைக்கெல் கிளார்க் சதமடித்ததும் இதர சிறப்புகளாகும்..இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து வாஸ் ஓய்வு

chaminda-vass.jpgஇலங்கை வேகப் பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.பாகிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் வாஸ்.

இதுகுறித்து 35 வயதாகும் வாஸ் கூறுகையில், பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து முறைப்படி ஓய்வு பெறுகிறேன். இருப்பினும் 2011 உலகக் கோப்பைப் போட்டி வரை ஒருநாள் போட்டிகள், 20-20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவேன்.

110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வாஸ், 354 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் 1994ம் ஆண்டு கண்டியில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்தான் வாஸின் முதல் டெஸ்ட் போட்டி. 12 முறை ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2 முறை பத்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

100 டெஸ்ட்களுக்கு மேல் ஆடியுள்ள 3வது இலங்கை வீரர் வாஸ். மற்ற இருவர்- முரளிதரன், ஜெயசூர்யா.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முரளிதரன் பங்கேற்பார் – இலங்கை அணியின் வைத்தியர் நம்பிக்கை

muralitharan-sri-lankas.jpg

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பங்கேற்கவுள்ளதாக அணியின் வைத்திய அதிகாரியான டேவிட் யங் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் விளையாடுவதற்குரிய போதிய உடற்தகுதியைக் கொண்டிருப்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியுமாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள முரளிதரன் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இலங்கை அணியின் உதவித் தலைவராக முரளிதரன் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் விளையாடும் முதலாவது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம்

16-07-2009.jpgமேற் கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்த பங்களாதேஷ் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த பங்களாதேஷ்மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பங்களாதேஷ் அணித்தலைவராக செயல்பட்ட ஷகீப் அல் ஹஸன் மற்றும் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோர் போட்டி நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்தனர்.

இது ஐ.சி.சி. ஒழுக்க விதியை மீறும் செயல் என ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தர் அன்டி பைக்ரொப்ட் தெரிவித்துள்ளார். இதற்காக ஷகீப் அல் ஹஸனுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 10 வீதமும் ஷஹ்தாத் ஹொஸைனுக்கு 5 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே குற்றத்திற்காக பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இம்ருல் கைஸுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

srilanka-cri.jpg“பாகிஸ் தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. மூன்று நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பீ. சரவணமுத்து மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து 150 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 320 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது கன்னி டெஸ்ட் செஞ்சரியைப் பெற்றார். பவாட் அலாம் பெற்ற ஓட்டங்கள் 168

ஒரு கட்டத்தில் 294 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வலுவான நிலையிலிருந்த பாகிஸ்தான் அணி இலங்கை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஏனைய 7 விக்கட்டுக்களையும் 26 ஓட்டங்களுக்குள் அடுத்தடுத்து இழந்தது.

இலங்கை அணி சார்பாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசிய நுவன் குலசேகர மொத்தமாக 8 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இவரைத் தவிர இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸ{க்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. வர்ணபுர 54 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக பவாட் அலாம், நுவன் குலசேகர தெரிவானர்.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது

பங்ளாதேஷூக்கு வெளிநாட்டில் கிட்டிய முதல் டெஸ்ட் வெற்றி!

cricket.jpgகிரிக்கெட் உலகில் அந்நிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பங்ளாதேஷ் பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பங்ளாதேஷ் அணி 2 டெஸ்ட,  3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முதலில் களம் இறங்கிய பங்ளாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 302 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பங்ளாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதனையடுத்து  களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பங்ளாதேஷ் அணி 95 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பங்ளாதேஷ் அணி அந்நிய மண்ணில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் – பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள்

pakisthan-cri.jpg“இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 170 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 171 ஓட்டங்கள் பெற வேண்டும்

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் – பவாட் அலாம் கன்னிச்சதம்

pakisthan-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது முதல் போட்டியில் கன்னிச்சதம் குவித்துள்ளார்.

அவர் ஆட்டமிழக்கமால் 102 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் யூனிஸ்கான் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது.

ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 28 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று ஆட்டம் முடியும் வரை துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் குமார் சங்கக்கார 87 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 27 ஓட்டங்களையும், சமரவீர 21 ஓட்டங்களையும், டில்சான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்து வீச்சில் உமர்குல் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் சஹிட் அஜ்மல் 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் வீழ்த்தினர். அப்துர்ரவூப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதேவேளை இலங்கை அணி சார்பாக ஹேரத் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

அவுஸ்திரேலிய “ருவென்ரி20′ போட்டியில் மெண்டிஸ், முரளி விளையாடுகின்றனர்

cricket.jpgஇலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ், உள்ளூர் “ருவென்ரி20′ போட்டியில் விளையாட தெற்கு அவுஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விக்டோரியா அணியில் விளையாடவுள்ளார்.  அவுஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் உள்ளூர் “ருவென்ரி20′ போட்டிகளில் ஒவ்வொரு அணி சார்பிலும் இரண்டு சர்வதேச வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். இம்முறை தெற்கு அவுஸ்திரேலியா அணி சார்பில் விளையாட அஜந்த மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மெண்டிஸின் முகாமையாளர் ரொஷான் அபேசிங்க கூறுகையில்;  “சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த “ருவென்ரி20′ உலகக் கிண்ணத் தொடரில் மெண்டிஸ் சிறப்பாகப் பந்துவீசி அணியின் வெற்றிக்குக் கை கொடுத்தார். தவிர, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் இவர் துல்லியமாகப் பந்துவீசி அசத்தினார். இவரது வருகையால் அணியின் இளம் வீரர்களுக்கு ஊக்கமாக இருக்கும். இவர் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை விளையாடாததால் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் சிறந்த பயிற்சியாக அமையும்’ என்றார்.

இதேபோல், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் மேற்கிந்தியாவின் டுவைன் பிராவோ இருவரும் விக்டோரியா அணி சார்பில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வீரர் லசித் மாலிங்கா மற்றும் மேற்கிந்தியாவின் கிறிஸ் கெய்ல் இருவரும் மேற்கு அவுஸ்திரேலியா அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத் தொடரில் பங்கேற்க மேலும் சில சர்வதேச வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்ப்ஸ் மற்றுமொரு உலக சாதனை

pelps.jpgஅமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் 100 மீற்றர் பட்டபிளை நீச்சல் போட்டியிலும் உலக சாதனை படைத்தார். இந்தியானா போல்ஸில் நடைபெற்றுவரும் அமெரிக்க தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலேயே பெல்ப்ஸ் இந்த உலக சாதனையை படைத்தார். இதன்போது அவர் 100 மீற்றர் படர்பிளை போட்டியை 50.22 வினாடிகளில் முடித்தார்.

முன்னதாக தனது சக நாட்டு வீரரான இயன் கிரொக்கர் நான்கு ஆண்டுகளுக்கு முன் 100 மீற்றர் பட்டபிளை போட்டியை 50.40 வினாடிகளில் முடித்ததே சாதனையாக இருந்தது.

இதன்படி பொல்ப்ஸ் தனிநபர் பிரிவில் படைத்த உலக சாதனைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. முன்னர் அவர் 200 மீற்றர் பிரீஸ்டைல், 200 மீற்றர் பட்டபிளை, 200 மற்றுர் 400 மீற்றர் மெட்ளே நீச்சல் போட்டிகளில் உலக சாதனை படைத்துள்ளார்.