::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

டுவென்டி-20 உலக கோப்பை : அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான்

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடக்கும் இருபதுக்கு 20  உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் ’எப்’ பிரிவில் அயர்லாந்து பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.. பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 9விக்கெட்டுகளை இழந்து 120ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி 35 ஓட்டங்களால் அயர்லாந்தை வெற்றி கொண்டதால் அரையிறுதிக்கு தகுதிபெற்றது 

உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டித் தொடரின் மிக முக்கியமான சுப்பர் எட்டு 2வது ஆட்டத்தில் ’இ’ பிரிவில் இங்கிலாந்து வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் மோதுகின்றன.

இந்தியாவின் அரையிறுதிக் கனவு கலைந்தது – தொடரை விட்டு வெளியேறுகிறது

t20-world-cup.jpgஉலகக் கிண்ணத்துக்கான 20 ஓவர் கிரிக்கெட் சுப்பர்-8 சுற்றில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டி ஒன்றில் நடப்புச் சாம்பியன் இந்தியாவும், இங்கிலாந்தும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் சந்தித்தன. இரு அணிகளுக்குமே இது ஒரு பலப்பரீட்சையாக  அமைந்ததால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
 
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இர்பான் பதான், பிரக்யான் ஓஜாவுக்கு பதிலாக ஆர்.பி.சிங்,  ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நாணயற் சுழற்சியில்; வென்ற இந்திய கேப்டன் டோனி, முதலில் பந்து வீச முடிவெடுத்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களை எடுத்தது.

இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளயும்,  ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சஹீர்கான், ஆர்.பி.சிங் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர. ஆதனைத் தொடர்ந்து  154 ஓட்டங்கள்; எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ஓட்டங்களை எடுத்து  3 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்தியா ஏற்கனவே சுப்பர்-8 சுற்றின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம்  தோற்று இருந்தது. இனி தனது கடைசி ஆட்டத்தில் நாளை தென்ஆப்பிரிக்காவை வென்றாலும் அதற்கு பலன் கிடையாது. அதே சமயம் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் -மீதியான நேர அட்டவணை

t20-world-cup.jpgஜூன் 15, இங்கிலாந்து மேற்கிந்தியா, மாலை 6 மணி

ஜூன் 15, அயர்லாந்து பாகிஸ்தான், இரவு 10 மணி

ஜூன் 16, நியூஸிலாந்து இலங்கை, மாலை 6 மணி

ஜூன் 16, இந்தியா தென் ஆபிரிக்கா, இரவு 10 மணி

ஜூன் 18, முதலாவது அரையிறுதி , இரவு 10 மணி

ஜூன் 19, 2 வது அரையிறுதி, இரவு 10 மணி

ஜூன் 21, இறுதிப் போட்டி, இரவு 7.30 மணி

3 ஓட்டங்களால் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

t20-world-cup.jpgசுப்பர் 8 சுற்றில் இந்திய  மற்றும் இங்கிலாந்து  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய  இந்திய  அணி 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

போராடி வென்றது இலங்கை அணி

t20-world-cup.jpgசுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து  அணி 135 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இப்போட்டியை  இலங்கை அணி போராடியே வென்றது.

20 -20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை Vs அயர்லாந்து / இந்தியா Vs இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

muralitharan-sri-lankas.jpg ஐ.சீ.சீ. உலக் கிண்ண ‘டுவன்டி-20’ கிரிக்கட் தொடரின் ‘சுப்பர்-8′ சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலகக் கிண்ண டுவன்டி-20’ கிரிக்கட் தொடரில் ‘சுப்பர்-8’ எனப்படும் இரண்டாவது சுற்றின் இன்றைய ஆட்டம் லண்டன்,  லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது.

இதேவேளை, ‘சுப்பர்-8’சுற்றின் மற்றுமொரு போட்டியும் இன்று நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் இப்போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஏகான் கிளாசிக் டென்னிஸ்: சானியா மிர்சா தோல்வி

27-saniamirza.jpgஇங்கி லாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் சனிக்கிழமை நடந்த ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுலோவேகியாவின் மக்டலினா ரிபரிகோவாவிடம் 6 3, 0 6, 3 6 என்ற செட் கணக்கில்  தோல்வியடைந்து வெளியேறினார்.

இருபதுக்கு இருபது கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவிகளை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

11bravo20-20.jpgஃபிளெட்சரின் விக்கெட்டை எடுத்து மகிழும் பந்துவீச்சாளர் பார்னெல் இங்கிலாந்தில் நடந்துவரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடந்த ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி இருபது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி முதலில் மட்டைப்பிடித்து இருபது ஓவர்களில் 183 ரன்களைக் குவித்திருந்தது. ஹெர்ஷெல் கிப்ஸ் அதிகபட்சமாக 55 ரன்களைக் குவித்திருந்தார். துவக்க ஆட்டக்காரர்களான காலிஸ் மற்றும் அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோரும் அணியின் எண்ணிக்கை உயருவதற்கு கணிசமான பங்களிப்பு செய்திருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க பந்துவீச்சாளர் ஜெரோம் டெய்லர் மூன்று விட்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இரண்டாவதாக மட்டை பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்கவில்லை.

ஆனால் முதல் விக்கெட்டுக்காக களமிறங்கியிருந்த அண்ட்ரூ சிம்மன்ஸ் மிகச் சிறப்பாக விளையாடினார். 50 பந்துகளில் 77 ரன்களை அவர் குவித்திருந்தார்.

தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்ததோடு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன் குவிப்பு வேகத்தையும் கட்டுப்படுத்தினர்.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பார்னெல் தனக்கு வழங்கப்பட்ட நான்கு ஓவர்களில் பதிமூன்று ரன்களை மட்டுமே தந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இருபது ஓவர்களின் கடைசியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

20-20 உலக கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்டங்கள்

11bravo20-20.jpgதென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் (இ பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: மாலை 6 மணி

நியுசிலாந்து Vs பாகிஸ்தான் (எப் பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: இரவு 10 மணி

‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் – குரூப் ‘இ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

11bravo20-20.jpgஇங்கிலாந் தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி 20  வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

தொ‌டர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.