அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

கப்பம் கோருவோர் அச்சுறுத்துவோர் தொடர்பில் அவதானமாக இருக்கவும்! : ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்

EPDPLogoஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் திட்டமிட்ட வகையில் தொலைபேசியூடாக பொதுமக்களிடம் கப்பம் கோரியும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தும் வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எமது மக்களுக்கான நேர்வழியைக் காட்டி எமது மக்களை கடந்தகால துன்ப துயரங்களில் இருந்து மீட்டெடுக்கும் எமது கட்சியின் மக்கள் நலன்சார்ந்த பணிகளைப் பொறுத்துக் கொள்ளாத எமது மக்களைத் தொடர்ந்தும் துன்ப துயரங்களில் ஆழ்த்தி அதன்மூலம் தங்களது குறுகிய சுயலாப அரசியலை மேற்கொள்ள விரும்பும் சில தீயசக்திகள் குழப்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் நோக்கில் எமது கட்சியின் மீது பல்வேறு வழிகளிலும் சேறு பூசும் குறுகிய எண்ணத்துடனும் அதேநேரம் ஒரு கல்லில் இரு மாங்காய் என்ற ரீதியில் பணம் பறித்துக் கொள்ளும் நோக்கத்துடனும் திட்டமிட்டு செயற்பட்டு வருவதை இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் யாழ் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

எச்சந்தர்ப்பத்திலும் எந்த நிலையிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எந்தவொரு நபரிடம் இருந்தும் எவ்வித நிதியும் அறவிடுவதில்லை என்பது எமது மக்கள் அறிந்த விடயமாகும்.
இந்த நிலையில் எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் வதந்திகளைப் பரப்புவர்கள் தொடர்பில் எமது மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 021 2229824 0112503467 0777781891 எனும் தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு எமக்கு உடனடியாக அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

ஊடகச் செயலாளர்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – ஈபிடிபி

”நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்!” : சிவஞானம் சிறிதரன் பா உ (ரிஎன்ஏ)

Sritharan_SivagnamTNA_MP(ரிஎன் பா உ சிவஞானம் சிறிதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் வழங்கிய கன்னி உரையின் முழுமை இங்கு பதிவிடப்பட்டு உள்ளது. கிளி / கிளிநொச்சி மகா வித்தியாலயம் (கனிஸ்ரா) அதிபரான இவர் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்தவர். ‘சிறி வாத்தி’ என தனது பிரதேச மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் கடந்த தேர்தலிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதற் தடவையாக பாராளுமன்றம் சென்றுள்ளார். இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளராகவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மனிதநேய அமைப்புகளின் இயக்குநர் சபை உறுபிப்பினராகவும் உள்ளார்.)

கெளரவ சபாநாயகர் அவர்களே மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின்  அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.

இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயண தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிகையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.

தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

துருக்கிய பேரரசாலும்  ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.

உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.

இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும்  பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.

மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?

நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.

எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்க வேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புக்குரியவர்களே இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.

புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.

இலங்கை “பெண்களின் சொர்க்கம்” என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.

ஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிருபடவேண்டும் என்பதே நமது அவாவாகும்.

நிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன். நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வீதியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.

உலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில். போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கையென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர் . ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும்? எங்கள் சகோதர்களே மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனபாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.

தற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும்இ  இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.

சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.

ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.

சுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.

இன மீளுறவை ஏற்படுத்துவதற்கான பாத்திரமும் பொருளாதார மீள் கட்டுமானமும் – கருத்துக்களை பதிவு செய்யவும்

Question_Markசென்னையில் நடைபெறவுள்ள ‘Role in Ethnic Reconciliation and Economic Reconstruction –  இன மீளுறவை ஏற்படுத்துவதற்கான பாத்திரமும் பொருளாதார மீள் கட்டுமானமும்’ என்ற கருத்தரங்கில் ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முயற்சி எடுத்துள்ள வி மனோகரி கீழுள்ள கேள்விகள் தொடர்பான பதிலை புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றார். இந்த ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டு மத்திய அரசின் முன்வைக்கப்படும் என்றும் வி மனோகரி அனுப்பி வைத்துள்ள மின் அஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார். இக்கருத்தரங்கிற்கு தேசம்நெற் இணையத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாத. ஆயினும் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக தேசம்நெற் வாசகர்களின் கருத்துக்களை பலரும் அறிவதில் பாதகம் இல்லை. ஆதனால் கீழுள்ள கேள்விகள் தொடர்பாக உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்.

Q.1. How do you see the Sri Lankan Diaspora after the LTTE’s defeat?
கே1: எல்ரிரியின் தோல்விக்குப் பின் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

Q.2.What are the important political developments among the Sri Lankan Tamil diaspora after May 2009?
கே2: மே 2009க்குப் பின் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் உள்ள முக்கிய அரசியல் நடவடிக்கை என்ன?

Q.3. Non-LTTE Tamil diaspora- any change of political strategy and how are they influencing the Sri Lanka government and the West?  Sri Lankan Muslim diaspora parties?
கே3: – புலிகள் அல்லாத புலம்பெயர்ந்த தமிழர்கள் – இலங்கை அரசு மீதும் மேற்குலகு மீதும் செல்வாக்கு செலுத்தும் வகையில் அரசியல் செயற்திட்டம்  அமைந்துள்ளதா? புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லீம் கட்சிகளின் நிலையென்ன?

Q.4. What do you think the government should do to engage diaspora? What are the hindrances faced by diaspora in playing a political or economic role in Sri Lanka?
கே4: புலம்பெயர்ந்தவர்களுடன் தொடர்புகனை ஏற்படுத்த அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள்? புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபடுவதில் எதிர்கொள்ளும் தடைகள் என்ன?

Q.5. How did Sinhalese diaspora respond and what activities did they undertake?கே5: புலம்பெயர்ந்த சிங்களவர்கள் எவ்வாறு பரதிபலிக்கின்றனர்? எவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்?

Q.6. Were/Are there any attempt by the Sri Lankan High Commissions (SLHC) in the West to engage Tamil diaspora in ethnic reconciliation?
கே6: மேற்குலகில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் இன மீள்உறவை ஏற்படுத்த ஏதாவது முயற்சிகளை எடுத்துள்ளதா?

Q.7. In your view, what should be the role of SLHC in engaging diaspora, to solve the conflict at home?
கே7: இலங்கையில் உள்ள இன முரண்பாட்டை தீர்ப்பதில் புலம்பெயர்ந்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் இலங்கைத் தூதரகங்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

Q.8. What kind of involvement is there among the Tamil diaspora to economically develop the Tamil provinces in Sri Lanka? What initiatives did the diaspora take up?
கே8: இலங்கையில் உள்ள தமிழ் மாநிலங்களை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு ஈடுபடுகின்றார்கள்? எவ்வாறான முன்முயற்சிகளை புலம்பெயர்ந்தவர்கள் எடுத்துள்ளனர்?

Q.9.What steps do you think the Sri Lankan government should take to solve the ethnic differences?
கே9: இன வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு எவ்வாறான படிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்

Matara District
Final District Result – Matara District 

     United People’s Freedom Alliance UPFA 213,937 65.31% 6
      United National Party UNP 91,114 27.81% 2
     Democratic National Alliance DNA  20,465     6.25%     0
     Sri Lanka National Front SLNF  478    0.15% 0
     Independent Group 5 IND05_  278   0.08% 0
      Our National Front ONF  261    0.08% 0
     United Socialist Party USP  240    0.07% 0
     Jathika Sangwardhena Peramuna JSP  180    0.05% 0
      United Democratic Front UDF  150    0.05% 0
      Left Liberation Front LLF  126    0.04% 0
      Thamil Makkal Viduthalai Pulikal TMVP  49    0.01% 0
      Independent Group 4 IND04_  42     0.01% 0
      Patriotic National Front PNF  37    0.01% 0
      Independent Group 1 IND01_  35     0.01% 0
      Jana Setha Peramuna JSEP  33    0.01% 0
      National Peoples Party NPP  30    0.01% 0
      The Liberal Party LP  30    0.01% 0
      Independent Group 3  IND03   30    0.01% 0
      Independent Group 2  IND02    25     0.01% 0
      Sri Lanka Labour Party SLLP  23     0.01% 0
      Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya SMBP  19     0.01% 0
 
Valid     327,582     95.82%
Rejected     14,289     4.18%
Polled     341,871     59.06%
Electors     578,858

Hambantota District
Final District Result – Hambantota District

     United People’s Freedom Alliance UPFA 174,808 62.87% 5
     United National Party UNP 83,027 29.86% 2
     Democratic National Alliance DNA  19,186     6.90%     0
     Our National Front ONF  230     0.08%     0
     United Socialist Party USP  160     0.06%     0
     Independent Group 4 IND04     113     0.04% 0
     United National Alternative Front UNAF  96     0.03% 0
     Sri Lanka National Front SLNF  81     0.03% 0
     Independent Group 1 IND01    58     0.02% 0
     Independent Group 3  IND03     51     0.02% 0
     United Democratic Front UDF      41     0.01% 0
     Patriotic National Front PNF    32    0.01% 0
     Left Liberation Front LLF     30     0.01% 0
     Independent Group 2  IND02     30      0.01% 0
     National Peoples Party NPP  27     0.01% 0
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  26     0.01% 0
     Eksath Lanka Maha Sabha ELMS  23     0.01% 0
     Jana Setha Peramuna JSEP  22    0.01% 0
     Sri Lanka Labour Party SLLP  13     0.00% 0
 
Valid 278,054      96.11%
Rejected 11,240     3.89%
Polled 289,294     68.69%
Electors 421,186

Moneragala District
Final District Result – Moneragala District
 

     United People’s Freedom Alliance UPFA  120,634         75.64%            4
     United National Party UNP  28,892              18.12%             1
     Democratic National Alliance DNA  9,018         5.65%              0
     Our National Front ONF  275          0.17%       0
     Sri Lanka National Front SLNF  136 0.09% 0
     Independent Group 4 IND04_D20 68 0.04% 0
     Jathika Sangwardhena Peramuna JSP  66 0.04% 0
     Independent Group 2  IND02_D20 64 0.04% 0
     United Socialist Party USP  60 0.04% 0
     Jana Setha Peramuna JSEP  58 0.04% 0
     United National Alternative Front UNAF  57 0.04% 0
     Independent Group 3  IND03_D20 40 0.03% 0
     Independent Group 1 IND01_D20 32 0.02% 0
     United Democratic Front UDF  29 0.02% 0
     Patriotic National Front PNF  29 0.02% 0
     Ruhunu Janatha Party RJP  12 0.01% 0
     Left Liberation Front LLF  11 0.01% 0
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya SMBP  10 0.01% 0
 
Valid 159,491         94.02%
Rejected 10,149         5.98%
Polled 169,640         56.43%
Electors 300,642

Matale District
Final District Result – Matale District
 

     United People’s Freedom Alliance UPFA  131,069      66.96%     4
     United National Party UNP  55,737     28.47%      1

     Democratic National Alliance DNA  7,636 3.90% 0
     Our National Front ONF  163 0.08% 0
     Jathika Sangwardhena Peramuna JSP  128 0.07% 0
     Independent Group 1 IND01_D05 96 0.05% 0
     Independent Group 7 IND07_D05 92 0.05% 0
     Independent Group 11  IND11_D05 90 0.05% 0
     Independent Group 9  IND09_D05 86 0.04% 0
     United National Alternative Front UNAF  76 0.04% 0
     Sri Lanka National Front SLNF  75 0.04% 0
     Independent Group 2  IND02_D05 75 0.04% 0
     Independent Group 6 IND06_D05 51 0.03% 0
     Independent Group 5 IND05_D05 45 0.02% 0
     Eksath Lanka Maha Sabha ELMS  39 0.02% 0
     Independent Group 8 IND08_D05 39 0.02% 0
     Independent Group 10 IND10_D05 38 0.02% 0
     Jana Setha Peramuna JSEP  37 0.02% 0
     United Democratic Front UDF  36 0.02% 0
     Independent Group 4 IND04_D05 32 0.02% 0
     Patriotic National Front PNF  22 0.01% 0
     Left Liberation Front LLF  20 0.01% 0
     Independent Group 3  IND03_D05 16 0.01% 0
     Sri Lanka Labour Party SLLP  15 0.01% 0
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya SMBP  13 0.01% 0
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  12 0.01% 0
     Ruhunu Janatha Party RJP  12 0.01% 0
 
Valid 195,750         91.02%
Rejected 19,310       8.98%
Polled 215,060       62.76%
Electors 342,684

Badulla District
Final District Result – Badulla District

     United People’s Freedom Alliance UPFA 203,689 58.25% 6
     United National Party UNP 112,886 32.28% 2
     Democratic National Alliance DNA  15,768      4.51%      0
     Up-Country People’s Front UCPF  11,481      3.28%     0
     Independent Group 4 IND04_D19 4,646      1.33%      0
     United National Alternative Front UNAF 254      0.07% 0
     Independent Group 5 IND05_D19 244 0.07% 0
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya SMBP  137 0.04% 0
     United Democratic Front UDF  120 0.03% 0
     Independent Group 1 IND01_D19 91 0.03% 0
     Jana Setha Peramuna JSEP  79 0.02% 0
     National Peoples Party NPP  71 0.02% 0
     Eksath Lanka Maha Sabha ELMS  70 0.02% 0
     Independent Group 2  IND02_D19 48 0.01% 0
     Independent Group 3  IND03_D19 44 0.01% 0
     Ruhunu Janatha Party RJP  26 0.01% 0
     Sri Lanka Labour Party SLLP  24 0.01% 0
 
Valid 349,678 93.54%
Rejected 24,169 6.46%
Polled 373,847 65.04%
Electors 574,814

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

Viyoogamமே 18 இயக்கம் விடுக்கும் அறிக்கை.

மீண்டும் ஒரு தேர்தல்! புலிகளை சிங்கள பேரினவாத அரசு தோற்கடித்து ஒரு வருடத்தினுள் தமிழர் தாயகத்தில் நடைபெறும் மூன்றாவது தேர்தல்!! நடத்தப்படும் தேர்தல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் தன்மையை மதிப்பிடுவதாயிருந்தால் அந்த பட்டியலில் சிறீலங்கா முன்னிலையில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துரதிஸ்டவசமாக ஜனநாயகம் என்பது இந்த தேர்தல் நடத்துவது என்பதை விட இன்னமும் ஆழமான தார்ப்பரியங்களைக் கொண்டது. அப்படிப் பார்த்தால்> யுத்தம் முடிந்து> பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு முழுமையாக திரும்பாமலேயே> யுத்தத்திற்கு இட்டுச் சென்ற அரசியல் பிரச்சனைகள் பற்றிய தீர்வு காணாமலேயே> இன்னும் குறிப்பாக அப்படிப்பட்ட தீர்வுகளை காண்பதற்கான நிர்ப்பந்தங்களை தள்ளிப்போடும் நோக்கில் நடத்தப்படும் தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தை கருவறுக்கும் செயற்பாடுகளேயாகும். ஆனாலும் பரவாயில்லை. அதில் போட்டியிடவும் தயாராக பல குழுக்கள்! முன்னர் பின்னர் தேர்தல்களில் கலந்து கொள்ளும் நோக்கமோ> அது தொடர்பான சிந்தனையையோ கொண்டிராத பலர் கூட களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். எல்லாம் ஆளும் கட்சியின் உபயம் தான். தனது அரசியல் எதிராளிகளை தோற்கடிப்பதற்காக> அந்தந்த பிரதேசங்களில் உள்ள பல்வேறு குழுக்களையும் பணத்தைக் கொடுத்து செயற்கையாக களத்தில் இறக்கும் செயற்பாட்டை ஆளும் கட்சி செய்து வருகிறது. இதுவொன்றும் ஜனநாயகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தவில்லை. மாறாக> ஜனநாயகம் மீது இந்த கும்பல் கொண்டுள்ள இளக்காரமான பார்வையைத்தான் காட்டுகிறது.

இந்த தேர்தலில் நாம் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட> ஒரு அரசியல் அமைப்பு என்ற வகையில் எமது அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம். அந்த நோக்கிலேயே இந்த அறிக்கையானது வெளியிடப்படுகிறது. புரட்சிகர> முற்போக்கு சக்திகள் பாராளுமன்ற தேர்தல்களை தமது பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்று கருதும் ‘மே 18 அமைப்பு’ இந்த தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாடுகளை முன்வைக்கிறது.

இந்த தேர்தல் தொடர்பாக நாம் அணுகும் போது பின்வரும் விடயங்கள் எமது கவனத்திற்கு உரியனவாக இருப்பது அவசியமானது.

1. மக்களுக்கு தேர்தல்கள் தொடர்பாக கல்வியூட்டுவது.
2. மோசமான பிற்போக்கு சக்திகள்> அரச கைக்கூலிகளை தனிமைப்படுத்துவது.
3. முற்போக்கான சக்திகளை இனம் காட்டுவது.
4. ஒரு விரிவான ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை நோக்கி வென்றெடுக்க முயல்வது.

இந்த நோக்கில் பின்வரும் நிலைப்பாடுகளை நாம் முன்வைக்கலாம் என்று கருதுகிறேம்

சிங்கள கட்சிகள்.

ஐ.தே.க மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டுமே தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர்கள். இப்போதும் கூட இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே நிராகரிக்கும்> ஒற்றையாட்சி முறைக்குள் சில நிர்வாக மீளொழுங்குகளை மேற்கொள்வதன் மூலமாக தீர்வு காண முனைவதாக கூறுவதன் மூலமாக இலங்கை ஒரு பல்தேச சமூகம் என்பதை மறுத்துரைக்கும் இவர்கள் தமிழ் மக்களது எதிரிகளாவர். தமிழர் தேசியம்> தமிழர் தாயகம்> சுயநிர்ணய உரிமை என்பவற்றை மொத்தமாக மறுதளித்துவிட்டு இவர்கள் தருவதாக கூறப்படும் அபிவிருத்தி பூச்சாண்டிகளை தமிழ் மக்கள் நிராகரிப்பதன் மூலமாக தமது சுதந்திரத்திற்கான வேட்கையை வெளிப்படுத்த வேண்டும்.

கூலிப்படைகள்
புலிகள் இருந்த காலத்தில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களைக் கூறி சிறீலங்கா அரசுடனும்> இந்திய அரசுடனும் ஒட்டிக் கொண்டிருந்த கூலிப்படைகள் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளுடன் விளையாடுவதற்காக வருகிறார்கள்.

புலிகளது அராஜகத்திற்கு எதிராக போராடுவதாக் கூறிக் கொண்டே இவர்கள செய்து முடித்த அராஜகங்களும்> மனித உரிமை மீறல்களும் மிகவும் அதிகம். இப்போது புலிகள் மடிந்த பின்னரும்> தாம் அரசுடன் ஒட்டிக் கொண்ட காலத்தில் பெற்ற சலுகைகளை காப்பாற்றுவதற்காக தமிழ் மக்களை விற்றுப் பிழைப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். சிங்கள அரசிடம் எந்தவிதமான சமாதான முன்மொழிவுகளும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிந்து கொண்டே> தமிழ் மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் இவர்கள். ஜனநாயக வழிமுறைக்கு திரும்பிவிட்டதாக கூறிக் கொண்ட போதிலும் இப்போதும் ஆயுதங்களை ஏந்தியவாறு> தமக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களையும்> முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும்> ஊடக சுதந்திரத்தையும் ஒடுக்குவதற்கு மாத்திரம் இந்த ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

தமிழ் சமூகத்தில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய எந்த விதமான தேசிய> ஜனநாயக முன்முயற்சிகளையும் தீவிரமாக நசுக்குவதில் முன்னிற்பவர்கள் என்ற வகையில்> இவர்கள் தமிழ் மக்களது அரசியல் அரங்கில் இருந்து அகற்றப்படுவது> இந்த முன்முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு மிகவும் அவசியமானதாகிறது. ஆதலால் இவர்களை சிங்கள அரசின் கூலிப்படைகளாக இனம் கண்டு முற்றாக நிராகரிக்குமாறு மக்களை கோருகிறோம்.

சிங்கள தேசமானது தமிழ் மக்களை ஒரு தனியான தேசம் என்பதை மறுதலித்து> அவர்களை அடிமைகள் போல நடத்த முனைகிறது. தனியான> சுயமான அரசியல் அதிகாரத்தை கோரி நிற்கும் ஒரு தேசத்தின் முன் சில எலும்புத் துண்டுகளை எறிந்துவிட்டு> அபிவிருத்தி என்று பூச்சாண்டி காட்டுகிறது. இந்த திமிரான ஆதிக்க சக்திகளது குப்பை கூழங்களை கூவி விற்கும் இந்த பொறுக்கிகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தமிழ் மக்களது வாக்குகள் அமைய வேண்டும்.

தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடவே வக்கில்லாத இந்த அடிமைகள்> ஒரு தேசத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காட்ட முனைவது என்பது சுத்த மோசடியாகும். ஒரு தேசத்தின் சுயமரியாதையை விற்று பிழைப்பு நடத்தும் இவர்கள் தமிழரது தேசிய அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டிய களைகள் ஆகும். இப்போது இந்த பீடைகளை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிவைக்க கிடைத்துள்ள தருணத்தை தமிழ் மக்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டக்லஸ் தேவானந்தா> கருணா அம்மான்> பிள்ளையான் போன்ற கைக்கூலிகளை ஜனநாயகரீதியாகவும்> அரசியல்ரீதியாகவும் தனிமைப்படுத்துக! அமைச்சர் பதவிகளை வைத்துக் கொண்டு அதிகாரம் பண்ணும் நிலைமைகளுக்கு முடிவு கட்டுவோம்!

தமிழர் தேசிய கூட்டமைப்பு

சரியான அர்த்தத்தில் பார்த்தால் இவர்கள் ஒரு அரசியல் கட்சியோ> அல்லது அமைப்போ கூட கிடையாது. புலிகள் தமது ஏவலை செய்வதற்கு சில அரசியல்வாதிகளை தேடினார்கள். இன்னும் சரியாக கூறுவதானால்> தமிழர் தாயகத்தில் உள்ள பாராளுமன்ற ஆசனங்களை கூலிப்படையினர் அலங்கரித்துக் கொண்டு> அரசின் பிரச்சாரத்திற்கு துணை போவதை தடுக்க முனைந்தார்கள். அதற்காக பொறுக்கியெடுக்கப்பட்ட தனிநபர்களே இவர்கள். தமிழர் தேசிய கூட்டமைப்பிற்கு என்று ஒரு அமைப்பு வடிவமோ> அல்லது திட்டவட்டமான கொள்கை நிலைப்பாடுகளோ கிடையாது. அதில் இருப்பதாக கூறப்படும் பல்வேறு அமைப்புக்களும் கூட இந்த தலைவர்களது கட்டுப்பாடுகளில் கிடையாது. ஆக மொத்தத்தில் தமது பதவி சுகங்களுக்காக வெட்கம் இன்றி புலிகளது கொத்தடிமைகளாக செயற்பட்ட ஒரு கூட்டம் இது. பதவியில் இருந்த காலத்தில் இவர்கள் புலிகள் அமைப்பிற்கோ> அல்லது தமிழ் மக்களுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. தத்தம் சொந்த சொத்து சேர்க்கும் வேட்டையில் முழுமையாக மூழ்கித் திழைத்தவர்கள். இவர்களுள் பலர் தமது தொகுதிகளுக்கு செல்லாதது மட்டுமல்ல> இலங்கையிலேயே கூட இருந்ததில்லை. அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு> இலங்கை திரும்பும் போதெல்லாம்> பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த சலுகைகளை பயன்படுத்தி புத்தம் புதிய வாகனங்களை இறக்குமதி செய்து விற்று கொள்ளை இலாபம் சம்பாதித்தவர்கள். வன்னியில் மக்கள் கடும்துயரில் இனப்படுகொலையை சந்தித்துக் கொண்டிருக்கையில் தமது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைத்துக் கொண்டே> புலிகளால் பலவந்தமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பாக> வன்னி மண் அந்த மக்களது மண் எனவும்> அவர்கள் அங்கு தங்கி நிற்பதே சரியானது என்ற வித்திலும் மிகவும் பொறுப்பற்ற அறிக்கை விட்டவர்கள்.

புலிகளது மறைவுடன் இவர்களது இருப்பிற்கான காரணம் மறைந்து விட்டது. ஆயினும் பாராளுமன்ற ஆசனங்கள் என்ற ஒரே குறியில் இவர்கள் அந்த அமைப்பை காப்பாற்றி வருகிறார்கள். இந்த ஆசனங்களை குறியாக வைத்தே ஒரு கூட்டம் இதைச் சுற்றிக் கொண்டு வருகிறது. முன்பு புலிகள் அமைப்பு இருந்த போது> வன்னியில் இவர்களது கட்டளைத் தலைமையகம் இருந்தது. இப்போது இது டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அரசின் நலன்களுக்கு தமிழ் மக்களை தாரைவார்க்க தயாராகிவிட்டார்கள்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுத்து வந்த பிற்போக்கு> வலதுசாரி> மேட்டுக்குடியின் மிச்ச சொச்சமான இந்த அமைப்பானது> வரலாற்றுரீதியிலும்> அரசியல்ரீதியிலும் காலாவதியாகிப்போன ஒரு போக்கை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமானது> இந்த பிற்போக்குத் தலைமைகள் முறியடிக்கப்படுவதிலேயே தங்கியுள்ளது.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (தமிழ் கொங்கிரஸ் கூட்டு)

தமிழ் கொங்கிரஸ் அமைப்பானது தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் தோன்றிய சாபக்கேடான ஒரு அமைப்பாகும். தமிழ் சமுதாயத்தில் காணப்பட்ட அத்தனை பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு ஒட்டு மொத்தமான வடிவமாக திகழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் அரசியலை மாத்திரமே செய்து வந்தவர்கள். தொண்ணூறுகளில்; புலிகளுக்கு ஆதரவாக ஆங்கிலத்தில் அறிக்கை விடும் ஒருவராக செயற்பட்டு> அரசினால் படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் மகன் என்ற ஒரு தகைமை மட்டுமே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பிற்காலத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியது. புலிகளது காலத்தில் தமிழ் மக்களது விடுதலைக்காக இவர்கள் எந்தவிதமான உருப்படியான முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை.

புலிகளின் நியமனத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இடம் பெற்ற கஜேந்திரகுமார்> பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் புலிகளது நியமனம் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியையோ> அரசியல் முன்னெடுப்பையோ கொண்டிராதவர்கள். இப்போது இந்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக> அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் மறுக்கப்பட்ட நிலையில் இவர்கள்> கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள இவர்கள் முன்வைக்கும் வாதங்களை நம்பும் அளவிற்கு தமிழ் மக்கள் அரசியல்ரீதியில் ஒன்றும் அப்பாவிகள் அல்லர்.

விக்கரமாபாகு கருணாரத்ன தலைமையிலான இடது முன்னணி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் நவ சமசமாஜ கட்சியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரித்தோம். கடந்த காலத்தில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்தவர் என்ற ரீதியிலும்> தொடர்ந்தும் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை நிபந்தனையின்றி ஆதரித்து வந்தவர் என்ற வகையிலும் இந்த ஆதரவிற்கான முடிவு எடுக்கப்பட்டது. இவர் கடந்த காலத்தில் புலிகளை நிபந்தனையின்றி ஆதரித்தது தவறு என்ற விமர்னத்தை நாம் கவனத்தில் கொண்டோம். ஆயினும் சிங்கள தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் என்ற வகையில்> தமிழர் தரப்பில் வேறு மாற்று சக்திகள் எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாத நிலையில் அதனை ஒரு பாரதூரமான தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில்> வேறு எந்த முற்போக்கு சக்திகளும் அரங்கில் இல்லாத நிலையில்> தமிழ் வலதுசாரி தலைமைக்கு முடிவு கட்டுவது> மற்றும் சிங்கள முதற்போக்கு சக்திகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் நோக்குடனும் மேற்கொள்ளப்பட்ட அந்த முடிவானது சரியானது என்றே நம்புகிறோம்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் நிலைமைகள் வேறுபட்டிருப்பதாக நாம் உணர்கிறோம். முற்போக்கான அமைப்பு என்ற வகையில் நவ சமசமாஜ கட்சியானது> இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு> ஜனநாயக சக்திகளுடன் கூட்டுக் சேராது> சிவாஜிலிங்கம்> சிறீகாந்தா ஆகியோருடன் கூட்டு சேர்ந்திருப்பது விநோதமானதாக இருக்கிறது. இவர்கள் இருவருமே> தமிழ் சமூகத்தின் மிகவும் பிற்போக்கான கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள். இவர்கள் முன்னெடுக்கும் அரசியலானது கோமாளித்தனமானது. தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு முற்போக்கான கட்சி என்ற வகையிலும்> தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்பவர்கள் என்ற வகையிலும் இவர்கள் தமிழ் மக்களின் நட்பு சக்திகள் என்றே நாம் கருதுகிறோம். ஆனால் இவர்கள் தமிழ் பிற்போக்கு வலதுசாரிகளுடன் எற்படுத்திக் கொண்ட தேர்தல் கூட்டானது இவர்கள் தமிழ் மக்களது முற்போக்கு> ஜனநாயக சக்திகளின் ஆதரவை பெற்றுக் கொடுப்பதில் தடையாக அமைந்து விட்டதாகவே நாம் கருதுகிறோம்.

கழகம் மற்றும் ஈபிஆர்எல்எப் (நாபா) பிரிவு

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்> இப்போது அந்த கூட்டுக்கு வெளியில் நிற்கிறார்கள். அதற்கான விளக்கங்களை முன்வைக்கவில்லை. 1983 யூலை கலவரத்தின் பின்பு தன்னியல்பாக தோன்றிய பல்வேறு குழுக்களும் அவற்றின் வரலாற்றுக் காலத்தையும் கடந்து> திட்டவட்டமான அரசியல் செயற்பாடுகள் எதுவும் அற்ற விதத்தில் வெறுமனே செயற்கையாக ஆதிக்க சக்திகளால் உயிர்வாழ வைக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் தனிநபர்களது பிழைப்பு மற்றும் ஆசனத்திற்கான கனவுகளே இந்த அமைப்புக்கள் உயிர்வாழ்வதற்கான காரணங்களாக அமைகின்றன.

இப்படிப்பட்ட சில தனிநபர்களது பிழைப்பிற்காக> ஒரு தொகையான இளைஞர்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளிலும் இதன் அங்கத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது கடந்த கால அடாவடித்தனங்கள்> மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் இன்றைய பாத்திரம் போன்றவற்றை கருத்திற் கொள்ளும் போது> இப்படிப்பட்ட அமைப்புக்களை கலைத்துவிடுவதே தமிழ் மக்களது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது. இது இவர்களுக்கு மாத்திரம் அன்றி> அந்நிய சக்திகளது தயவில் செயற்கையாக இயக்கப்படும் இன்னும் பல உதிரிக் குழுக்களுக்கும் பொருந்தி வரக்கூடியது என்றே கருதுகிறோம்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபை

ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் அமைப்பாவதும்> அதன் அடிப்படையில் தமது அரசியலை முன்னெடுப்பதும் சரியானதே. ஆதலால் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக தேர்தலில் நிற்பது என்பதுடன் எமக்கு கொள்கையளவில் முரண்பாடு கிடையாது. ஆனால் இந்த இடைக்காலத்தில் பல விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. தலித் முன்னணி என்ற அமைப்பின் தோற்றமும்> அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒட்டு மொத்தத்தில் தமிழ் தேசியத்தை மறுதலிக்கும் வகையில் முன்வைப்பதும்> இந்த அமைப்பின் நோக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அத்தோடு இந்த அமைப்பானது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படும் குழுக்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளும் சந்தேகத்திற்கு உரியனவாக உள்ளன. அத்தோடு அரசாங்கம் மற்றும் தன்னார்வ குழுக்களது பணங்கள் கைமாறப்படுவதான குற்றச்சாட்டுக்களை எம்மால் நிரூபிக்க முடியாவிட்டாலும்> அது அவர்கள் மீது ஒரு கறையாக படிவதை தவிர்க்க முடியாதுள்ளது. நாடளாவிய ரீதியில்> தமது எதிரணிகளை பலவீனப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் பெருந்தொகையான பணத்தை விசியெறிந்து பல்வேறு குழுக்களை செயற்கையாக உருவாக்கி தேர்தலில் கலந்து கொள்ளச் செய்து தமது எதிரணிகளது வாக்குகளை சிதறடிக்க முனைவதை காண்கிறோம். அது இவர்கள் விடயத்திலும் நடப்பதாக ஒரு சந்தேகம் நிலவுவதை நாம் மறுத்துரைக்க முடியவில்லை.

கடந்த காலத்தில் சிங்கள அரசானது தமிழ் தேசியத்தினுள் உள்ள அக முரண்பாடுகளை கிளறிவிட்டு அதில் குளிர்காய்ந்ததை நாம் அறிவோம். தமிழ் தேசிய இயக்கத்தினுள் யாழ்மையவாதம்> சாதியம்> வர்க்கம்> ஆணாதிக்கம் போன்ற முரண்பாடுகளும்> ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்கள் – முஸ்லிம் மலைய மக்கள் – தொடர்பான தப்பெண்ணங்களும் நிலவுவது உண்மையே. இவை ஒரு தேசத்தினுள் உள்ள அகமுரண்பாடுகள் என்ற வகையில் தேசத்தினுள்ளும்> ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்களுடனான சமத்துவம் பற்றிய விடயமாக அந்த சகோதர தேசங்களுடன் அரசியல்ரீதியாக பேசியும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனைகளாகும். ஆனால்> எதிரகளோ இந்த முரண்பாடுகளை மிகவும் கூர்மையடையச் செய்து> தமிழர் தேசத்தை அதன் கூறுகளாக சிதறடிக்கவும்> பின்பு அந்த கூறுகளை ஒன்றோடொன்று மோதவிட்டு குளிர்காயவும் முயல்கின்றார்கள். அந்த நோக்கில் பயன்பட்டவர்களே இ;ந்த கருணா- பிள்ளையான கோஷ்டியும்> தலித் முன்னணியாகும். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்காத தனிநபர்கள் அடையாள அரசியலை முன்வைப்பதும்> தன்னார்வ குழுக்களது ஆதரவில் செயற்படுவதும் இப்போதும் நடந்து வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை அமைப்பாவதும்> தாம் அன்றாடம் முகம் கொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட முன்வருவதும் வரவேற்கத்தக்கதே. ஆனால் இந்த முயற்சியானது> இந்தியாவில் நடைபெறுவது போல> வெறுமனே சாதிச்சங்கங்களை தோற்றுவித்து ஒடுக்கப்பட்ட மக்களை வெறுமனே வாக்குவங்கிகளாக மாற்றி> அந்த ஒடுக்கப்பட்ட மக்களது போராட்ட உணர்வுகளை திசை திருப்புவதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அத்துடன் இந்த அக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் என்ற பெயரில்> வெளிப்படையாகவே எதிரியின் நடவடிக்கைகளுடன் கூட்டுச் சேர முனைவது தவறான அரசியல் என்றே நாம் கருதுகிறோம். ஆதலால் நாம் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை நிராகரிக்குமாறு கோருகிறோம். ஆனால் எமது ஆய்வுரைகளுக்கு மாறாக யதார்த்த நிலைமைகள் இருப்பதாக காணும் எவருமே தமது சுயமான முடிவுகளை எடுப்பதை நாம் ஊக்குவிக்கிறோம்.

புதிய ஜனநாயக கட்சி

இந்த தேர்தல் களத்தில் நிற்கும் கட்சிகளுள் முற்போக்கு கொள்கைகளுடனும்> சந்தர்ப்பவாத கூட்டுக்கள் இல்லாமலும்> தமது கொள்கை நிலைப்பாடுகளை மாத்திரம் முன்வைத்து தேர்தலில் நிற்கும் இவர்கள் கவனிக்கப்பட வேண்டிய சக்திகளாவர். ஒரு மரபார்ந்த இடதுசாரி அரசியல் கட்சி என்ற வகையில் இவர்களது கடந்த கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும்> இப்போது முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாகவும் எமக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆயினும் ஒரு விரிவான ஜனநாயக கூட்டமைப்பு என்ற வகையில் இவர்களுடன் இணைந்து செயற்படவும்> தொடர்ச்சியாக உரையாடல்களை நடத்தவும் இந்த குறைபாடுகள் பெரிய தடையாக அமைந்துவிடாது என்று நம்புகிறோம். ஆதலால் நாம் சில கருத்து வேறுபாடுகளுடன்தான் என்றாலும் புதிய ஜனநாயக கட்சிக்கு முழுமையாக ஆதரவு வழங்கலாம் என்று கருதுகிறோம்.

மேலே கூறப்பட்ட நிலைப்பாடுகள் எமது அமைப்பின் கருத்துக்கள் என்ற வகையிலேயே முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் உங்களது சொந்த அனுபவங்கள்> பரிசீலனைகளையும் வைத்து இறுதி முடிவை நீங்களே முன்வையுங்கள்.

சில குறிப்பான பிரச்சனைகள் குறித்து…

நாம் தேர்தல் தொடர்பான கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடு ஒன்றை முன்வைப்பதன் அவசியத்தை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை> எமது தேசம் முகம் கொடுக்கும் குறிப்பான பிரச்சனைகள் குறித்து பாராமுகமாக இருக்க முடியாது என்றே கருதுகிறோம்.

அந்த வகையில் திருகோணமலை> மட்டக்களப்பு> அம்பாறை போன்ற எல்லைப்புற மாவட்டங்களின் தேர்தல் களநிலைமைகள் குறிப்பான கவனத்தை வேண்டி நிற்கின்றனவாகும். இந்த மாவட்டங்களில் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களும்> நிர்வாக மற்றும் தேர்தல் அலகுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாகவும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசத்திலேயே தமது பிரதிநிதித்துவத்தை இழக்கும் ஆபத்தை எதிர் கொள்வதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் பிரதிநிதிகள் அதிகம் சாதிப்பார்களோ இல்லையோ> குறைந்த பட்சம் ஒரு சிங்கள பிரதிநிதியை வரவிடுவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையாவது தவிர்ப்பதில்> தடுத்து நிறுத்துவதில் ஓரளவுக்காவது பயன்படும் என்பது உண்மையே. இப்படியாக மக்கள் மத்தியில் உள்ள பய உணர்வுகளை சில அமைப்புக்கள் பயன்படுத்தி தமது அரசியலை நடத்த முனைவதும் நாம் அறியாதது அல்ல. ஆயினும் இப்போது இருக்கும் நெருக்கடியான நிலைமைகளில் இந்த சர்ச்சைகளில் அதிக சக்தியை விரயம் செய்யாமல் இந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதனால் நாம் முன்னர் குறிப்பிட்ட தவறான செயற்பாடுகளை உடைய கட்சிக்கு இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வாக்களிக்க நேர்வது தவிர்க்க முடியாது போகலாம். ஆனால் அப்படிப்பட்ட நிலைமைகளில் கூட> இந்த கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் உள்ள தீவிரமாக செயற்படும் சக்திகளை இனம் கண்டு> அவர்களை முன்னுக்கு கொண்டுவர உதவுவதாக உங்களது வாக்குகள் அமையலாம்.

தமிழ் மக்களே! பிற்போக்கு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்!!
முற்போக்கு ஜனநாயக சக்திகளை இனம் கண்டு ஆதரிப்போம்!!

18 இயக்கம் முடிவல்ல புதிய தொடக்கம்.

மாற்றத்திற்காகத் தமிழர் வாக்களிக்கவில்லை : சுரேன் சுரேந்திரன் (Global Tamil Forum))

Suren Surendiranசிறீ லங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் பதிலாகச் சமஷ்டி முறைக் கட்டமைப்பையே விரும்புகின்றது. அதில் பகிரப்பட்ட இறையாண்மை கோரப்பட்டுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்றும் அவர்கள் சுயநிருணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப் பங்கீடானது இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஓர் அலகில் சமஷ்டி முறைக் கட்டமைப்பின் அடிப்படையில், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக நிறுவப்பட வேண்டும். அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டமும் ஒழுங்கும்இ கல்வி, சுகாதாரம் உட்படச் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றைப் பின்வரும் நிலைமைகளிற் பார்த்தல் வேண்டும்:

“எனினும், பல ஆண்டு காலம் நீடித்து ஏழு மாதங்களுக் முன்னர் முடிவடைந்த போர்க் காலத்தில் அழிந்த தங்கள் சொந்த வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பக்கூட இன்னமும் தொடங்காத இந்த நேரத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கத் தமிழர் விரும்பவில்லை. அவர்கள் இராணுவத்தினதும் ஒட்டுப்படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் மனித உரிமைமீறல்கள் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓரு கூறென ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பொதுவாக அச்சத்துடன் வாழ்கின்றனர்.” (http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes).

சனவரி 26, 2010 இல் நடைபெறவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி நான் சனவரி 8, 2010இல் மேலே தரப்பட்டுள்ளதை எழுதியிருந்தேன். சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு.: சுரேன் சுரேந்திரன்அத் தேர்தலில் வாக்களித்தோரின் தேசிய சராசரி 75%ஆக இருந்தும் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் பங்குபற்றியோர் தொகை (அஞ்சல் வாக்குகள் உட்பட) 25% ஆகவே இருந்தது என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. (http://www.slelections.gov.lk/presidential2010/AIVOT.html).

இந்நிலையில் சிறீ லங்காவில் நிலைமைகள் மோசமடைகின்றன என மனிதவுரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் 2009ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பற்றிய அறிக்கை சிறீலங்கா அரசைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது. சிறீலங்கா அரசோ அல்லது அதனுடன் நெருக்கமாவுள்ள ஒட்டுப்படைகளோ கேள்விமுறையற்ற கொலைகளுடனும் ஆட்காணாமற்போதலுடனும் தொடர்புடையன எனவும் சட்டத்தரணிகளும் ஊடகவியலாளரும் தொந்தரவு செய்யப்பட்டுப் பழிவாங்கப்படுகின்றனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் போரினால் பாதிப்புற்ற பகுதிகளிலேயே ஆட்காணாமற்போதல் மிகக்கூடிய தொகையில் உள்ளதென்றும் நூற்றுக் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர் எனக் கணிக்கப்பட்டுள்ளதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில கிழமைகளுக்கு முன்தான் சீறீலங்காவில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் பெறுபேறுகள் பற்றிய வரைபடமானது  இலங்கைத் தீவு இனவாரியாக இரு துருவங்களாகப் பிளவுபட்டிருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sri_lankan_presidential_election_2010).

வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியனவும் மத்திய மாகாணத்தில் தமிழர் பல தலைமுறையாக வாழ்ந்துவரும் நுவரேலியா மாவட்டமும் பொன்சோகாவிற்கு வாக்களித்தன. பெரும்பான்மையான மற்றைய மாகாணங்கள் இராசபக்சவிற்கு வாக்களித்தன. இரு கொடியவர்களில் பொன்சேகா சற்றுக் குறைந்த கொடியவர் எனத் தமிழர் பொதுவாகக் கருதினாலும் பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மேல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் நம்பிக்கை இழந்துவிட்டதென்பதையும் தேசியப் பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றலோ நேர்மையோ அவருக்கில்லை என்பதையும் இது தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அதேபோன்று பெரும்பான்மைச் சிங்களச் சமூகமும் இரு கொடியவர்களில் எவர் தாம் விரும்புகின்ற அதிதீவிர தேசியவாதி என்பதையும் இனத்துவேசம் கொண்டவர் என்பதையும் இத்தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.

சிறீ லங்காவின் பொது ஆட்சிமுறையானது கருத்து வேற்றுமையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அப்படியானவர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் என்பதையும் பல ஊடகவியலாளரும் அரசியல்வாதிகளும் கடத்தப்பட்டமையும் கொலை செய்யப்பட்டமையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை இராசபக்ச சிறையிலடைக்கத் தீர்மானித்துவிட்டார் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாகி விட்டது. தனி ஒருவரோ சமூகமோ கட்சியோ பிரிவினையை ஆதரிப்பதை நாட்டின் அரசியல் யாப்பே தடைசெய்கின்றது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டில் அதாவது தாயகம், தமிழர் தேசம், தமிழர் இறையாண்மை மற்றும் தமிழர் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஆணித்தரமாக ஆதாரமாகக்கொண்டு அம்முன்னணி அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. 

1977 ஆம் ஆண்டில் (பிரிவினைனயை எடுத்தியம்புவதைத் தடைசெய்கின்ற அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் செய்யப்படுமுன்) இலங்கையிலுள்ள தமிழர் இலங்கைத் தீவில் தமெக்கென்ற ஒரு தனிநாடு வேண்டும் என்ற தம் வேட்கையை எவ்வளவு வலுவாக எடுத்துக் காட்டினரோ அதேபோன்று வலுவுடன் உலகெங்குமுள்ள புலம்பெயர்ந்த தமிழர் தாம் குடிகொண்ட நாடுகளில் பக்கசார்பற்ற மேற்பார்வையுடன்கூடிய கருத்துக் கணிப்புகளை நடத்தி அதே வேட்கையை எடுத்துக் காட்டி வருகின்றனர்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவரான வண. எஸ்.ஜெ. இமானுவேல் அடிகளார் அவர்கள் பரிகாரமாக அல்லாது ஒரு தந்தையின் வழிகாட்டலாகத் தமிழ் உடன்பிறப்புகளுக்கு அண்மையில் எழுதிய மடலின் ( http://globaltamilforum.org/userfiles/file/GTF_Letter_from_President_to_Tamils_10_March_2010__-_Tamil_Version_-_Final.pdf ) ஒரு பகுதியைக் இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்:

“பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே  எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம் வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் பொழுது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம்  இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.”

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் – 2010

2010 பொதுத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்

இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனம் பதினாறாம் நூற்றாண்டில் மேற்கத்தேய வல்லரசுகளின் வருகைக்கு முன்னதாக இலங்கைத் தீவிலே மூன்று ராஜதானிகள் இருந்தன. அவற்றில் ஒன்று வடக்கிலே தமிழருக்குச் சொந்தமாக இருந்தது. மத்திய மலையகத்திலே இருந்த கண்டி இராச்சியம் தான் கடைசியானதாக 1815ல் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தது. 1833ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக இந்த மூன்று இராஜதானிகளையும் பிரித்தானியிர் ஒன்றிணைத்தனர் . அன்றிலிருந்து இலங்கை ஒரே நிலப்பரப்பாக ஆளப்பட்டது. 1948ஆம் ஆண்டு ‘காலனித்துவ’ ஆளுகையிலிருந்து சுதந்திரம் பெற்ற வேளையில் சாதாரண பெரும்பான்மைத்துவம் கொண்ட ஒற்றை ஆட்சித் தன்மையான அரசியல் அமைப்பு ஒன்று இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த அரசியல் அமைப்பின் 29(2) உறுப்புரையில் குறித்ததொரு சமூகத்தையோ சமயத்தையோ பாதிக்கின்ற அல்லது மட்டுப்படுத்துகின்ற சட்டமோ அல்லது குறித்த ஒரு சமூகத்துக்கோ சமயத்துக்கோ மற்றவர்களுக்கு இல்லாத சலுகையை கொடுக்கும் சட்டத்தையோ நிறைவேற்றக் கூடாதென்ற தடை விதிக்கப்பட்டது.

சமஷ்டி அரசியல் அமைப்பிற்கான கோரிக்கை
1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமானோருடைய குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் சிங்களம் மாத்திரம் அரச கரும மொழியாக மாற்றப்பட்டது. 29(2) உறுப்புரை இப்படியானவற்றை தடுப்பதற்காக இயற்றப்பட்டிருந் தாலும் கூட இந்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இது அதுவரை காலமும் இருந்த அரசாங்க கொள்கைக்கு மாறான செயலுமாகும். இந்த கால கட்டத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வட, கிழக்கு பிரதேசங்களில் அந்த பிரதேசங்களில் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கும் விதத்தில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் முழு மூச்சோடு நடைமுறைப் படுத்தப்பட்டன. இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களவரிடம் இருந்து பிறிதொரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை 1951 ஏப்ரல் மாதத்தில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி எடுத்தியம்பியது. இந்த சுயநிர்ணய உரிமையின் வெளிப்பாடாக தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் ஒரு சமஷ்டி முறையான ஆட்சியை தமிழரசுக்கட்சி வலியுறுத்தியது. ஆரம்பத்தில் வெளிநாட்டுப் படையெடுப்புக்களினாலும் பின்னர் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத பெரும்பான்மையினரின் மேலாதிக்க வாதத்தை உறுதி செய்யும் அரச முறை ஒன்றின் மூலம் தமிழ் மக்கள் இழந்து விட்ட சுயநிர்ணய உரிமையை திரும்பவும் வென்றெடுப்பதற் காக 1950 களிலிருந்து 1960 களின் இறுதிவரை தமிழ் அரசுக்கட்சி பல அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது.

பண்டா – செல்வா ஒப்பந்தம்.
அரச கரும மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இலங்கையின் பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ. பண்டாரநாயக்காவிற்கும் தமிழ் மக்களின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கும் இடையில் 1957 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அரச காணிகளுக்கு மேலான தனி அதிகாரத்தையும் மற்ற அரச அதிகாரங்களையும் பிரதேச சபைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்தது. ஆனால் பெரும்பான்மை சமூகத்தினர் இதனை எதிர்க்கிறார்கள் என்று காரணம் காட்டி பண்டாரநாயக்கா இந்த ஒப்பந்தத்தை அமுல்ப் படுத்தவில்லை.

டட்லி – செல்வா ஒப்பந்தம்.
பின்னர் 1960 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதை தடை செய்யும் வகையில் அரச காணி பகிர்ந்தளிப்பதற்கான கொள்கைகளை உள்ளடக்கி சுயாட்சியை ஏற்படுத்துகின்ற ஒப்பந்தம் ஒன்று தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கும் பிரதமர் டட்லி சேனநாயக்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப் பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத் தப்படும் என்ற நம்பிக்கையில் 1965 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அமைச்சரவையில் இணைந்து கொண்டது. ஆனால் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்ற காரணத்தாலும் சுயாட்சியை ஏற்படுத்த அரசு முயற்சிக்கவில் லை என்ற காரணத்தாலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டது.

அரச குடியேற்றங்கள்
வடக்கு கிழக்கை தங்களுக்கு பாரம்பரிய தாயகமாகவும் அதிலே தமது சுயநிர்ணய உரிமையை உடையதாகவும் கருதுகின்ற எமது மக்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் வடக்கு கிழக்கின் குடிசனப் பரம்பலை பாதிக்கும் வகையிலான அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் பெரிதும் பாதிப்படைந்தனர். 1940 களுக்கும் 1980 களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களினால் அரச காணி பகிர்ந்தளிக் கின்ற கொள்கையினாலும் குடிசனப் பரம்பல் வீதம் பாரியளவில் மாற்றம் அடைந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது கிழக்கு மாகாணத்தில் 9% ஆக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 1981ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற குடிசன மதிப்பீட்டின் படி 25% மாக உயர்ந்திருந்தது. அதே சமயம் 1947ற்கும் 1981ற்கும் இடைப்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் சிங்கள மக்களின் சனத்தொகை 238% ஆக உயர்ந்த வேளையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சிங்கள மக்களின் சனத்தொகை 883% ஆக அதிகரித்தது. வடக்கு கிழக்கின் குடிசனப்பரம்பலை இவ்விதமாக மாற்றும் அரசின் நிகழ்ச்சி நிரல் முழுத் தீவிரமாக இன்று வரை நடைபெற்று வருகின்றது.

கடந்த 60 ஆண்டு காலமாக வடக்கு கிழக்கில் புதிதாகக் குடியேற்றப்பட் ட சிங்கள மக்களுக்கான நீர்ப்பாசன திட்டங்கள் தவிர வேறு எந்தவிதமான முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களும் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப் படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரான காலப்பகுதியில் எமது மக்களும் எமது நிலமும் முற்றுமுழுதாக புறக்கணிக்கப் பட்டன.

குடியரசு அரசியலமைப்பு உருவாகத்தில் தமிழ் மக்கள் பங்குபற்றாமை
1970ஆம்ஆண்டு இலங்கைக்கு இலங்கை மக்களே உருவாக்குகின்ற அரசியலமைப்பொன் றை ஏற்படுத்துவதற் காக அரசியல் யாப்பு நிர்ணயசபை ஒன்று கூட்டப்பட்டது. இதிலே தமிழரசுக்கட்சியும் ஆரம்பத்தில் பங்குபற்றி சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியது. ஆனால் அந்த பிரேரணைகள் யாவும் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப் பட்டபோது தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் அந்த அரசியல் யாப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறினர். அதைப் போலவே 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கும் தமிழ் மக்கள் தமது ஒப்புதலை வழங்கவில்லை. முதலாம் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்புக்கள் இரண்டும் ஒற்றையாட்சி முறையை உறுதிப்படுத்தி சிங்கள மொழிக்கு மட்டும் அரச கரும மொழி என்ற அந்தஸ்த்தையும் பௌத்த மதத்திற்கே முதலிடம் என்ற அந்தஸ்த்தையும் கொடுத்தன. சோல்பரி அரசியல் யாப்பில் 29(2) இல் சிறுபான்மை மதங்களுக்கும் மக்களுக்கும் எதிராக சட்டம் இயற்றக்கூடாது என்ற தடையையும் இந்த அரசியல் யாப்பு நீக்கியது. ஆகவே 1972ஆம் 1978ஆம் அரசியல் யாப்புக்கள் தமிழ் மக்களின் ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டதாகும்.

தரப்படுத்தல்
பல்கலைக்கழக அனுமதிகளைத் தரப்படுத்தும் திட்டமொன்று அறிமுகப் படுத்தப்பட்டதன் மூலம் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத் தினுள் செல்ல முடியாமலும் அவர்களை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற சிங்கள மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெறவும் வழிவகுக்கப்பட்டது. இது தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தடுத்து அவர்களுடைய விரக்தியை அதிகரித்தது. 1970ஆம் ஆண்டுகளில் இதற்கெதிராக அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்ட 40இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவசர காலச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணையின்றி சில வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டனர் .

தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள்
தமிழ் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரபட்ச நடவடிக்கைகளுக்கும் மற்ற அநீதிகளுக்கும் மேலாக 1956, 1958, 1961, 1977, 1981, 1983ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இந்த சந்தர்ப்பங்களில் நாட்டின் மற்றப் பாகங்களில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களை அரசாங்கம் கப்பல்களில் ஏற்றி வடக்கு கிழக்குக்கு அனுப்பியதன் மூலம் இந்த இரு மாகாணங்களும் எமது பாரம்பரிய தாயகம் என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மேற்கண்ட நடவடிக்கையின் விளைவாக அரச பயங்கரவாதத்திற் கெதிராகவும் தமிழ் மக்கள் இழந்துவிட்ட இறையாண்மையை மீண்டும் வென்றெடுப்பதற்காகவும் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்தனர்.

இழந்துபோன இறையாண்மையை மீட்டெடுப்பதற் கான அழைப்பு
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியும் ஏனைய தமிழ் கட்சிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து 1976ஆம் ஆண்டிலே இழந்த எமது இறையாண்மையை மீளப் பெறவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். இது 1956ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் கொடுத்த ஜனநாயக ஆணையை அரசு புறக்கணித்ததாலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை தொடர்ச்சியாக மறுத்து வந்தமையாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். சிங்கள அரசாங்ககளுக்கும் தமிழ் தலைவர்களுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் கூட மதிக்கப்படவில் லை. தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறையும் பாராபட்சமும் எந்தவிதமான கட்டுப்பாடின்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுவந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1977 யூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இழந்து போன இறையாண்மையை மீளப் பெறுவதற்கான ஆணையை தமிழ் மக்களிடம் கோரியிருந்தது. அந்த தேர்தலிலே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றியீட்டியது.

அதிகாரத்தை பகிர்வதற்கான ஒழுங்குமுறைகள்
1983ஆம் ஆண்டு தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்குப் பின்னர் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்று தமிழ் பேசும் மக்களுக்கு கூடிய சுயாட்சி வழங்குகின்றதோர் மாற்று அரசியல் திட்டத்தினூடாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்பட்டன. 1987ஆம் ஆண்டு ஏற்படுத்திய இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரதிபலனாக வடக்கு கிழக்கை ஒரு மாகாணமாக ஒன்றிணைத்து ஒரு அரசியல் நிர்வாக அலகு தோற்றுவிக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைகள் உருவாக்கப்படுவதற்கு இந்த மாற்றங்கள் வழிவகுத்தன. ஆனால் இந்த நாடு ஒற்றையாட்சி முறையின் கீழே தொடர்ந்தும் இருந்தது. அத்தோடு அதிகாரங்களைப் பகிரவந்த 13வது திருத்தச்சட்டம் மத்திக்கான அதிகாரங்களை மீளப் பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டது. அர்த்தமுள்ள விதத்தில் அதிகாரத்தைப் பகிர்வதற்கு இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

ஒற்றையாட்சி முறையை இல்லாதொழித்தல் பகிர்ந்தனுபவிக்கும் இறைமை.
1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசாங்கம் அரசியல் சாசனத்திற்காக ஒரு தொகுதி பிரேரணைகளை அறிவித்தது. இலங்கை ஒரு பல மொழி பல மதங்களைக் கொண்ட பன்மத்துவ சமூகம் என்ற அடிப்படையில் ஐக்கியப்பட்ட நாட்டிற்குள் ஒரு அரசியல் வரைவை பிரிக்கப்பட முடியாத பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் வெளியிட்டது. 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை என்பது அகற்றப்பட்டு அரசியல் அதிகாரங்களைப் பொறுத்தவரையில் பகிரப்பட்ட இறையாண்மை என்ற அடிப்படை முன் வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தை
எரிந்து கொண்டிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எந்த முன்னேற்றமும் ஏற்படாத அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் பல்வேறுபட்ட ஆயுதமேந்திய இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுதிலும் கூட 1987இலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தனிநாட்டுக்காகப் போராடும் ஒரேயொரு ஆயுதமேந்திய இயக்கமாக பரிணமித்தது. ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தின. 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதோடு பின்னர் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிரகாரம் ஒஸ்லோ உடன்பாடு என்ற பெயரில் இரு தரப்பினரும் சில அடிப்படைக் கொள்கை விதிகளை ஏற்றுக் கொண்டனர்.

அது பின்வருமாறு:
உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலமைந்த வாழ்விடப் பிரதேசங்களில் சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசியல் தீர்வொன்றை ஐக்கிய இலங்கைக்குள் கண்டெடுப்பதற்கும் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்

இராணுவத் தாக்குதல்களும் அதன் பின் விளைவுகளும்
இந்தப் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப் படாமல் அரசாங்க இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் போராட்டம் திரும்பவும் ஆரம்பமாகி 2009 மே மாதம் 19ம் திகதியோடு அனைத்து இராணுவ மோதல்களும் முடிவுக்கு வந்தன. இந்த 30 வருட போராட்ட காலம் தமிழ் தாயகத்தையும் தமிழ் மக்களையும் முற்று முழுதாக சூறையாடி ஏதுமற்ற ஏதிலிகளாக்கியுள்ளது. பத்து இலட்சம் தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தும், இன்னொரு ஐந்து இலட்சம் மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த போராட்ட காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராணுவத் தாக்குதலில் கடைசிக் கட்டங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சர்வதேச நிறுவனங்களினாலேயே மதிப்பிடப்பட்டுள்ளது. வேறு பலர் அங்கங்களை இழந்தும் பாரதூரமான காயங்களிற் உள்ளாகியும் மன உளைச்சல்களிற்கு உள்ளாகியும் துன்பப்படுகின்றனர். இதைவிட வன்னியில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வீடு வாசல் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தும் பின்னர் எல்லா முறைமைகளையும் மீறி தடுப்பு முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டுமிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இன்னமும் இந்த முகாம்களிலே கைதிகளாக வாழ்கின்றனர். பதினோராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் வேறாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். விடுவிக்கப்பட்ட மற்றவர்களை எந்தவித நிவாரணமோ வாழ்வாதாரமோ இன்றி தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுமாறு விடப்பட்டுள்ளனர். தங்களுடைய என்று சொல்லிப் போக வீடொன்று கூட அவர்களுக்கு கிடையாது. இந்த மக்களுடைய திட்டவட்ட மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும் எமது தாயகத்தை மீளக்கட்டியெழுப்புவதும் இந்த மணித்துளியின் உடனடித் தேவையாக உள்ளது. தமிழ் மக்களுடைய வணக்கஸ்தலங்கள் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் பல அசுத்தப்பட்டு இடித்தழிக்கப் பட்டிருகின்றன. அரசாங்கத்தின் மிக உயர் நிலைகளுக்கு இது சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எமது மக்கள் சுரண்டப்பட்டு எமது நிலம் சூறையாடப்படுகின்றது.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் குறிப்பாக யாழ். குடாநாட்டிலும் சம்பூர் உள்ளிட்ட மூதூர் கிழக்கிலும் ஏராளமான நிலப்பரப்பு பலவருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பூர்வீகத் தமிழ் மக்களுக்கு தங்களுக்குச் சொந்தமான பிரத்தியேக வீடுகளில் வாழ்வதற்கும் தங்களது சொந்தக் காணிகளில் பயிர் செய்வதற்கும் மீன்பிடித்தல் மற்றும் வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப் பட்டிருக்கின்றது. தொழில்துறை சுற்றுலாத்துறை வட கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களின் குடிசனப் பரம்பலை மாற்றி சிங்களக் குடியேற்றங்களாக ஆக்குவதற்கு பல முன்னெடுப்புக்கள் தீவிரமாக நடைபெறுகின்றன. கரையோரப் பகுதியில் மீன்பிடித்தலுக்கான உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டு தமிழ் பேசும் மக்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. பனைவள அபிவிருத்திச் சபை அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இருப்பதன் காரணமாக தங்கள் வாழ்வுக்கு பனை வளத்தில் தங்கியிருக்கின்ற மக்கள் மிக மோசமாகச் சுரண்டப்படுகிறார்கள். தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டு அவர்களுடைய சமத்துவத்திற்கான உரிமை பல வழிகளில் மீறப்படுகின்றது. பல வருடங்களிற்கு முன்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் இன்னமும் குற்றச்சாட்டின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எமது மக்களில் பெரும்பாலானோரது வாழ்க்கை நிலைகள் பரிதாபமானதாகக் காணப்படுகின்றது.

2010 ஜனாதிபதித் தேர்தல்
ஜனவரி ஜனாதிபதித் தேர்தலிலே எமது மக்களுடைய அவல நிலையைக் குறித்தும் எமது அரசியல் உரிமைகளைப் பரிசீலிப்பதிலும் அரசாங்கத்திற் கு இருந்த அக்கறையற்ற போக்கை எமது மக்களுக்கு விளக்கிச் சொன்னோம். சர்வகட்சி பிரதிநிதி குழு ஒன்று அமைக்கப்பட்ட பொழுது கூட வடக்கு கிழக்கில் இருந்து தெரிவான 23 தமிழ் பிரதிநிதிகளில் 22 பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை. ஜனாதிபதியால் உருவாக்கப்பட் ட நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மையினரால் கொடுக்கப்பட்ட சிபார்சுகளும் கூட கருத்திலெடுக்கப் படவில்லை. இந்தக் காரணங்களுக்காகவும் ஏனைய பல காரணங்களுக்காகவும் ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருப்பதற்கு இரண்டாவது தவணைக்காக கேட்ட மக்களாணையை நிராகரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களைக் கேட்டுக் கொண்டது. தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும் சந்தேகமற்ற முறையிலும் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். ஒரு புதிய மக்காளணைக்கான ஜனாதிபதியின் கோரிக்கைக்கெதிராக மிகப் பாரியளவில் தமிழ் மக்கள் வாக்களித்தன் மூலம் முதலாவது தவணையின் பொழுது ஜனாதிபதியின் ஆட்சிமுறையை தாங்கள் விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாக வெளிக்காட்டியிருக் கின்றார்கள் . அதைவிட முக்கியமானதாக தமக்கு வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக் கின்றார்கள் .

அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு
இந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இரு இனங்கள் பகிரப்பட்ட இறையாண்மையூடாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமானதென சில குறிப்பான அரசியல் சாசன விதிமுறைகளும் கொள்கைகளும் அவசியம் என்று கருதுகின்றது. கீழே தரப்படும் அதிகாரப் பகிரலுக்கான முக்கிய அம்சங்கள் நீடிய சமாதானத்திற்கும் இலங்கையின் அனைத்து மக்களின் மேம்பாட்ற்கும் அபிவிருத்திக் கும் மிக அடிப்படையானவை:

• தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்கள் இலங்கைத் தீவில், சிங்கள மக்களுடனும், ஏனையோருடனும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள் .
• தொடர்ச்சியான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாகும் .
• தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.
• அதிகாரப் பங்கீடானது இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில், சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் நிறுவப்படவேண்டும். இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
• அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் உட்பட சமூக, பொருளாதார அபிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
• புதிய தொழிற்துறைகளை உருவாக்கவும் மற்றும் எமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும், வடக்கு – கிழக்கில் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும்.
• பல்கலைக்கழகத் திற்கு அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு அவர்களுக்குரித் தான அவசியமான துறைகளில் உயர் கல்வி கற்பதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்தல்.

எமது மக்களின் உடனடித் தேவைகள்
எமது மக்களிற்கு நிலைத்து நிற்கக்கூடியதும் சமாதானமுமான வாழ்வொன்றிற் காக செயற்படுகின்ற அதேவேளையில் அவர்களுடைய உடனடியானதும், தற்போது நிலவக் கூடியதுமான முக்கிய பிரச்சினைகளை கையாழ்வதிலும் விரைந்து செயற்படுவோம். இப்பிரச்சினைகள் தொடர்பாக பின்வரும் விடயங்களிற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமும், இராணுவ தளபாடங்களும் அகற்றப்படுதல் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் மூலமும் 1983ஆம் ஆண்டிற்கு முந்திய நிலைக்கு எமது பிரதேசத்தை இட்டுச் செல்லக் கூடிய அர்த்தமுள்ள இராணுவ விலகல் அவசியமானது.

• போரினால் இடம்பெயர்க்கப் பட்ட தமிழ் மக்கள் விரைவாக தமக்குரிய சொந்த இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டும், வாழ்வாதாரங்கள் மீளமைக்கப்பட் டும், அவர்களது கௌரவம் மதிக்கப்படுகின்றதுமான வகையில் மீள் குடியேற்றப்பட வேண்டும்.
• இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் உடல் ஊனங்களுக்கும், சொத்திழப்புக்களுக்கும் போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
• தேசிய நல்லிணக்கத்திற்கான முதற்படியாக எந்தவித குற்றமும் சுமத்தப்படாத, தடுப்புக்காவலில் உள்ள நபர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன், ஏனையவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட வேண்டும்.
• கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை விட்டு வெளியேறிவர்கள் மீண்டும் தமது இல்லங்களுக்கு வர அனுமதிக்கப்பட வேண்டுமென்பதுடன், அதற்கேற்ப சூழ்நிலையை உருவாக்கவும் வேண்டும்.
• புலம் பெயர்ந்த தமிழ் மக்களதும், சர்வதேச சமூகத்தினதும் செயலூக்கமிக்க பங்களிப்பின் மூலம் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் முழுமையான மீள் குடியேற்றமும், புனர்வாழ்வு, மற்றும் அபிவிருத்தி ஆகியன முன்னெடுக்கப்படும் .
• அகதிகள் என்ற நிலை அடியோடு நீக்கப்பட வேண்டும் – அதுவரை அகதிகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் இன்றைய உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யும் வகையில் உயர்த்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.
• சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய சமூகங்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் மற்றும் தொழில் துறையினை மேம்படுத்தவும் உத்தரவாதப்படுத்தும் வகையில் சமூக மேம்பாட்டு ஆணையம் ஒன்றின் அவசியத்தை வற்புறுத்தி நிற்கின்றோம் .
• கரையோர மக்கள், மீனவ சமூகம் சுதந்திரமாகத் தங்கள் தொழிலை நடத்துவதற்கும், தங்கள் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும், அவர்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் பொருத்தமான நடவடிக்கையை முன்னெடுப்போம் .
• அடித்தட்டு மக்கள், கூலித்தொழிலாளர் கள் ஊதியம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படவும், தனியார் துறை ஊழியர், அரசு ஊழியர் சம்பளம் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யும் வகையில் உயர்த்தப்பட வேண்டும்.
• நம் சமூகத்தில் பெண்களின் சமத்துவத்தை பேணவும், போர் காரணமாக அநாதரவாக்கப் பட்டுள்ள இலட்சக்கணக்கான பெண்கள், முதியோர், சிறுவர் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நல்வாழ்வுத் திட்டங்கள் உத்தரவாதப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.
• வேலையற்ற பட்டதாரிகள், மற்றும் வேலையற்றோர் தொழில் வாய்ப்பு பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் உறுதி பூண்டுள்ளோம் .

2010 பொதுத் தேர்தலில் எதிர்நோக்கும் சவாலான பிரச்சனைகள்
ஒன்றுபட்ட நாட்டிற்குள் தமது தலைவிதிகளைத் தாமே தீர்மானிக்கக் கூடிய தமிழ் மக்களின் மறுக்க முடியாததும், பிரிக்க முடியாததுமான உரிமைகளை இலங்கையின் அரசாங்கங்கள் தொடர்ச்சியாக நிராகரித்தே வந்துள்ளன. 1956ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் இறைமைக்கான கோரிக்கைகள் அனைத்தும் நியாயப்படுத்த முடியாத வகையில் மறுக்கப்பட்டே வந்துள்ளது.

30 ஆண்டுகால அஹிம்சைவழிப் போராட்டங்கள் அனைத்தும் கொடூரமான அடக்குமுறை மூலம் நசுக்க முற்பட்டமையே ஓர் தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. அடுத்து வந்த முப்பதாண்டுகளில் ஆயுத ரீதியான எதிர்ப்பை அடக்குதல் என்ற பேரில் எமது மக்களின் அடிப்படை உரிமைகள் மோசமாய் பறிக்கப்பட்டன. அப்பாவி பொதுமக்கள் மீது விமானக்குண்டு வீச்சுக்கள் நடாத்தப்பட்டன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. மக்கள் தமது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப் பட்டனர். ஏராளமான இளைஞர்கள் சிறைப்படுத்தப் பட்டும், சித்திர வதைக்குள்ளாக் கப்பட்டும் மேலும் மீறல்களுக்கு உள்ளாக்கப்பட் டனர். அத்துடன் அநேகர் கொல்லப்பட்டும் ஊனமுற்றும் சொத்துக்களை இழந்துமுள்ளனர். மிகக் கடுமையான மனித உரிமை வேண்டுமென்ற சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல் மூலம் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட போதும் அது ஆக்கபூர்வமான தீர்வொன்றிற்கு இட்டுச் செல்லாமல் முடிவிற்கு வந்தது.

அரசகாணி சம்பந்தமாகவும் மற்றைய வளங்கள் சம்பந்தமாகவும், குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கென ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமானது அப்பட்டமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறி இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரித்துவிட்டதாகக் கூறுகின்றது. வியன்னா பொது இணக்க ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது என்ற வகையில் இந்திய இலங்கை உடன்பாட்டை இலங்கை மீற முடியாது. அரசாங்கத்தின் நீதித்துறையானது பாரபட்சமானதும், அதிகாரத்துப் போக்குடையதுமான பல்வேறு நடவடிக்கைகளின் அனுபவங்கள் தமிழ் மக்கள் அரசின் நீதித்துறையையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளியிருக்கின்றது.

இந்த நாட்டின் நிர்வாகத் துறையின் கொள்கைகள் தமிழ் மக்களை இந் நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வகையில் பெருமளவு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இன்றிருக்கக்கூடிய ஆட்சி முறை ஒன்றில் மத்திய சட்டவாக்கமைப்பு பெரும்பான்மைத் துவத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இது மிகத் தெளிவான ஒரு இன ஒழிப்புத் திட்டமே. ஆனால் எவரும் இதுவரை இதனைத் தடுத்து நிறுத்தவில்லை. பல ஆண்டுகளாக இந்தியாவும், சர்வதேச சமூகமும் இது தொடர்பாக எழுப்பிய கரிசனைகளை இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகள் எவையும் தமக்கு அறிவுரை கூறவோ, வழிகாட்டவோ முடியாதென நாகரீகமடைந்த தேசங்களைக் கொண்ட சர்வதேச சமூகத்திற்கு பகிரங்கமாகவே பிரகடனம் செய்கிறது. இப்போக்கு தொடருமானால் திட்டமிட்டபடி அரசின் இன ஒழிப்பு வெற்றி பெறும். இத்தீவில் இருந்து தமிழர் என்ற மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள்.

இப்பொதுத் தேர்தல் முடிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் செயற்திட்டத்தினை நடைமுறைப் படுத்தவுள்ளது. எமது மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையை அரசாங்கம் மதித்து தமிழ் மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்கக் கூடிய வகையில் ஆட்சி முறையை மீளக் கட்டியமைப்பதற்கான பேச்சுவார்த்தையை எம்முடன் நடாத்த வைப்பது முதலாவது கட்டம். கடந்த காலத்தைப் போல அரசாங்கம் எமது மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையை தொடர்ந்து புறக்கணிக்குமானால் இவ்விடயத்தை நாம் நேரடியாக இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் கொண்டு செல்வோம். தமிழ் மக்களுக்கெதிரான இவ் இன ஒழிப்புத் திட்டம் தொடர்பாக உரிய பார்வையைச் செலுத்தி பொருத்தமானதும் தாக்கமானதுமான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம் .

இன்றைய பாணியிலேயே இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உரிய கௌரவம் வழங்காத ஆட்சி முறையைத் தொடருமானால், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்முறையற்ற காந்திய வழியிலான சட்டமறுப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டால், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார விடயங்களில் தமிழ் மக்கள் நேரடியாக தங்களைத் தாங்களே ஆளுகை செய்வதைத் தடுத்தால் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு சர்வதேச சமூகம் வேறு தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண் டும் என்று கோருவதற்கு வழி அமைப்பதாக இருக்கும்.

தமிழ் மக்களுடைய உடனடித் தேவைகளை சந்திப்பதற்கும் எமது அரசியல் இலக்கை அடைவதற்கும், தமிழ் மக்களுக்கிடையிலான ஐக்கியம் மிகவும் முக்கியமானதென்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம். நான்கு பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த போதும் கடந்த பாராளுமன்றத்தில் அது பிளவுபடவோ அல்லது ஓர் உறுப்பினரேனும் வெளியேறாத ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பேயாகும். எனினும் அன்றிலிருந்து தமிழ் பேசும் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் செல்வாக்கைப் பலவீனப்படுத்த வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பெருமளவிலான சுயேட்சைக் குழுக்களை ஒழுங்கு செய்ததனூடாக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய அவசியத் தேவை எமது ஒற்றுமையை பாதுகாத்தலும் வெளிப்படுத்தலுமாகும். எமது மக்களையும் அவர்களின் நிலங்களையும் அழிப்பதற்கு அங்குலம் அங்குலமாக அரசு முன்னேறும் வேகத்தை நிறுத்துவதற்கான முதற்படி இதுவேயாகும். எமக்கிடையேயான ஒற்றுமைஷையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதுடன் இக் குறிக்கோளை நோக்கி தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஆக்கபூர்வமாக செயற்படுகின்றனர் . இவ்வொற்றுமையை மேலும் உறுதியானதாக்கவும் நிலை நாட்டவும் நாம் ஈடுபாட்டுடன் செயற்படுவோம் . வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களைத் திட்டமிட்ட வகையில் விரைவில் மீள்குடியேற்றுவதிலும் நாம் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

கௌரவமான மனிதர்கள் என்ற எமது தனித்துவமான அடையாளத்தினைப் பேணும் வகையில் எமது மக்களின் வாழ்வு மீள் கட்டியெழுப்பப்படும். நாங்கள் தனி மக்கள் என்ற வகையில் எமது உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே இத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெயரிலும் வீட்டுச் சின்னத்திலும் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைவரும் வாக்களிப்பதன் மூலம் துணிச்சலுடன் எழுந்து எமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமெனத் தமிழ் பேசும் மக்களைக் கோருகின்றோம் .

இரா சம்பந்தன்- தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
மாவை. சேனாதிராசா- பொதுச் செயலாளர், இலங்கை தமிழரசுகட்சி.
பிரசன்னா இந்திரகுமார்- பொதுச் செயலாளர், தமிழீழ விடுதலை இயக்கம்
சுரேஸ் பிறேமச்சந்திரன்- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

உலகத் தமிழர் பேரவை அறிக்கை

அன்புள்ள தமிழ் உடன்பிறப்புகளே,
“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம்: ஒன்றாய் இருத்தல் முன்னேற்றம்: ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.

பெப்புரவரி 24 – 2010 அன்று இலண்டனிலுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிமிகு தொடக்க மாநாட்டை அடுத்து இம்மடலைத் தங்களுக்கு வரைவதில் பேருவகை அடைகின்றேன். அதேவேளை சிறீலங்காவில் வாழும் எம் உடன்பிறப்புகள் பலரது பெரும் கவலைக்குரிய நேரத்தில் இதை எழுதுகின்றேன் என்பதையும் அறிவேன்.

இப்பொழுது நிலவுகின்ற மனித அவலநிலை மற்றும் அரசியல் நிலை பற்றிப் பொதுவாகவும் தமிழர் எதிர்நோக்கியுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் குறிப்பாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் கருத்துக்களைக் கீழே தர முயற்சிக்கின்றேன். பாரிஸ் கூட்டத்தில் 14 நாடுகள் கூட்டாக வரைந்த உ.த. பேரவையின் நோக்கம் குறிக்கோள் ஆகியவற்றில் கூறப்பட்டதற்கு அமைய சிறீலங்காவில் உயிர் பிழைத்து வாழும் தமிழரது மாந்தநேய மற்றும் அரசியல் தேவைகளைத் திறமையாக நிறைவுசெய்ய நாட்டு அடிப்படையிலும் பன்னாட்டு அடிப்படையிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழரை ஒன்று திரட்டி நாம் செயற்படுவோம்.

போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை பத்தாயிரக் கணக்கில் இரண்டகமாகக் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு குழந்தைகள் முதியோர் ஊனமுற்றோர் உட்பட 300 000 தமிழரை அனைத்துலக மனிதாபிமான உதவிகள் ஏதும் கிடைக்காத வகையிலும் செய்தி ஊடகங்கள் அணுகாத முறையிலும் மிக மோசமான நிலையில் வதைமுகாங்களில் தடுத்து வைத்துவிட்டுச் சிறீலங்கா அரசு இன்னமும் அம்மக்களது அவல நிலையை அனைத்துலகுக்கு மறைத்து வருகின்றது. அத்தோடு பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அனைத்துலக உதவி கிடைப்பதை வீம்புடன் தடுத்து வருகின்றது. முன்னர் வன்னி முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஓர் இலடச்த்திற்கு மேற்பட்டோர் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் புதிய முகாங்களில் தகுந்த மறுசீரமைப்பு இன்றியும் அடிப்படை வாழ்க்கை வசதிகள் இன்றியும் மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெயர்வாற்றல் உடையவர்களாகவும் இன்னமும் உள்ளனர்.

சரணடைந்த இளைஞரில் ஆயிரக்கணக்கானோர் முறையான விசாரணையோ சட்டவியல் பிரதிநிதித்துவமோ அற்ற நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் கூடத் தொடர்பேதுமின்றி சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போரானது 2009 மே 19 அன்றோடு முடிவுற்றுவிட்டது என அரசு அறிவித்ததோடு மறுசீரமைப்புப் பணிகள் மீள்கட்டுமானப் பணிகள் மீளிணக்கம் ஆகிய துறைகளில் தானெடுக்கும் முயற்சிகள் பற்றி அனைத்துலகச் சமூகத்திற்கு உறுதிமொழி வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற மெய்யாக முயற்சிக்காது மாறாகத் தமிழர் தாயகத்தில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பௌத்த மக்களைக் கொணர்ந்து குடியமர்த்தும் தன் வேலைத்திட்டத்தை வளர்ச்சித்திட்டம் என்ற போர்வையில் நிறைவேற்றி தமிழ் மக்களின் மொழி மற்றும் இறைநெறி அடையாளத்தை அழித்து வருகின்றது. இந்த இக்கட்டான நிலையில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் தமிழர் அடியோடு ஆர்வமற்றவர்களாக உள்ளனர். இதனை அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தெளிவாகக் காட்டியுள்ளனர். இந்நிலையை இன்னுமிரு காரணிகள் மேலும் மோசமாக்கியுள்ளன. இவற்றுள் ஒன்று அரசில் தம் செல்வாக்கையும் பதவியையுமே வேண்டித் தமிழரது உண்மையான வேட்கைகளை வஞ்சனை செய்கின்ற அரசியல்வாதிகள் எம்மிடையே உள்ளனர் என்பதாகும். இவர்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வன்முறையையும் ஊழல் வழிமுறைகளையும் கையாழுகின்றனர். அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுவரும் பிளவுகளையும் சிதைவையும் பெரும் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் நாம் கண்டுவரும் நிலை. தமிழரது அடிப்படை வேட்கைகளை ஒரே குரலில் எடுத்தியம்புவதற்கான ஒற்றுமையை இது நலிவுபடுத்தி அடக்குமுறையாளரும் இரண்டகர்களும் தம் பணிகளை எளிதாகச் செய்ய வழிசெய்கின்றது.

எமது உடன்பிறப்புகள் அடிப்படை வாழ்க்கை வசதிகள் ஏதுமற்றுத் துன்புற்று, ஊழலையும் தமிழரது உண்மையான அடிப்படை உரிமைகள் பற்றிய குழப்பத்தையும் கலக்கத்தையும் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையின் கீழ் ஒன்றுபட்டுள்ள புலம்பெயர்ந்த தமிழராகிய நாம் இலங்கைத் தீவில் உயிர்வாழ்வதற்கு இன்னமும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் எமது உடன்பிறப்புகளுக்கு எம் பரிவையும் கூட்டொருமையையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களோடான எமது கூட்டொருமை, அக்கறை ஆகியவற்றின் சிறு அடையாளமாக வடகிழக்கில் இயங்குகின்ற நம்பகமிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உள் ஊரில் இடம்பெயர்ந்த, சிறப்பாக ஆதரவற்ற சிறுவர், கைம்பெண்கள் போன்றோருக்கு நிதியுதவி வழங்கும் பணியை ஏற்கனவே நாம் தொடங்கியுள்ளோம். மறுசீரமைப்பும் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பானது பாதிக்கப்பட்டோருக்குக்கான உதவி என்ற பெயரில் ஏராளமான நிதியுதவியைப் பெற்றுவரும் அரசுக்கே பெருமளவில் உரியதென்பதாலேயே சிறுஅடையாளமான உதவியெனக் குறிப்பிட்டுள்ளோம்.

பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம்வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.

எமக்கு உள்ளார்ந்தமாக உள்ள தன்னாட்சி உரிமை, தமிழரது அடிப்படை வேட்கைகள், தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் துணிவுடன் நிலைத்தியங்கக்கூடிய அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் உலகத் தமிழர் பேரவையானது புலம்பெயர்ந்த தமிழரிடையுள்ள பல்வேறு வளங்களையும் திரட்டி ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றும்.

உலகத் தமிழர் பேரவை பற்றிய கூடுதல் தகவல்களைக் கீழே தரப்பட்டுள்ள எமது இணையத் தளத்திலிருந்து அறிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

www.Globaltamilforum.org

உங்கள் உண்மையான
வண. எஸ் ஜெ. இமானுவேல்
தலைவர் – உலகத் தமிழர் பேரவை
10 மார்ச் 2010

தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனம்

பாராளுமன்றத் தேர்தல் – 08.04. 2010

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அனுபவித்து வரும் துன்பங்களுக்கு இதுவரை நிரந்தரத் தீர்வோ அல்லது, தற்காலிக நிவாரணமோ கிட்டவில்லை. இதற்காக காலத்திற்குக் காலம் நற்சிந்தனையுள்ள தலைவர்கள் நியாயபூர்வமாக மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து சில கடும் போக்காளர்களினால் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தன. இவற்றைக் கவனத்திற் கொண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் அடிப்படைக் கொள்கையில் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக விவேகமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் யுத்தம் உட்பட நடந்தேறிய பல சம்பவங்கள் சிறுபான்மையினரின் மனிதாபிமான பிரச்சினைகள் மேலும் அதிகரித்துள்ளமையால் அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு ஒரே விதமான சிந்தனை கொண்ட கட்சிகளினதும், மக்களினதும் பொறுப்பு என தமிழர் விடுதலைக்கூட்டணி உணர்கின்றது.

பல்வேறு திசைகளில் இருந்து கடந்த காலங்களில் நாட்டை குட்டிச்சுவராக்க கங்கணம் கட்டி நிற்கின்ற சில கடும் போக்காளர்கள் உட்பட, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திடீரென தம்மை வெளிக்காட்டிக் கொண்டு, நாட்டின் நிலமையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை வெளியிடுவதிலும், அறிக்கைகளை விடுவதிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு சில உள்நோக்கங்கள் இருக்கின்றமையை தெளிவாக உணர முடிகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெளிப்படையான கருத்து, சகலருக்கும் மனத்திருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கி, சிறியவன், பெரியவன் என்ற பேதமின்றி அனைவரும் சமஉரிமையுடன் வாழ வேண்டும் என்பதே!

நம் நாட்டில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தும் எம் அனைவரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்துள்ளன. பல்லாயிரக்கணக்கான உயிர்கள், பல கோடி ரூபா பெறுமதியான தனியார், அரச உடமைகள் என்பன அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தில் இழக்கப்பட்டுள்ளன. கற்பனைக் கெட்டாத பெருந்தொகையான பணம் யுத்தத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. பல கோடி ரூபா செலவிலான இராணுவ முகாம்கள், தளபாடங்கள் மற்றும், படையினருக்கு ஏற்படுகின்ற செலவுகள் அத்தனையும் நம் அனைவருக்கும் நல்லதொரு பாடத்தை போதித்துள்ளது. இத்தகையதொரு நிலமை மீண்டுமொரு தடவை ஏற்படக்கூடாது. ஏற்பட விடவும் கூடாது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, சோல்பரி அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனத்திற்கு ஒரேயொரு பாதுகாப்பாக இருந்த 29வது சரத்திற்கு ஏற்பட்ட கதியை நன்கு அறிந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஒற்றை ஆட்சி அமைப்பின் கீழ் ஏற்பட்டு, அத்தீர்வு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் மீள் பரிசீலிக்க நேர்ந்தால் இதுவரை காலமும் பல உயிரிழப்புகளுக்கும் சொத்தழிவுகளுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்தனையும் பாழாகிவிடும். கடந்த ஐந்து ஆண்டு காலமாக சமஷ்டி அமைப்பின் கீழ் ஒரு தீர்வை அடைய பெருமுயற்சி எடுத்திருந்தும், அதற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வொன்றை ஏற்க தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருந்தது. ஓற்றையாட்சி அமைப்பின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வொன்றை ஒரு போதும் அடைய முடியாதென தமிழர் விடுதலைக்கூட்டணி முழுமையாக நம்புவதால் முற்று முழுதாக ஒற்றையாட்சி முறைமையை கூட்டணி நிராகரிக்கின்றது. வடக்கு கிழக்கு இணைப்பால் இந்நாட்டிற்கும் அன்றி, அப்பகுதியில் வாழும் எந்த இனத்திற்கும் எதுவித பாதிப்பும் ஏற்படாது. மாறாக, பல்லின மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் சமாதானத்தையும் வளர்க்க அது உதவுவதாக அமையும் என்பதையும், அம்முயற்சிக்கு அப்பகுதியில் வாழும் பல்லின மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதையும் கூட்டணி பூரணமாக நம்புகின்றது. அத்தோடு அரசின் திட்டமிட்ட குடியேற்றம் இன ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாக வேற்றுமையையே வளர்க்கும் என்பதால், இம்மூன்று விடயங்களிலும் மாற்ற முடியாத ஒரே நிலைப்பாட்டை தமிழர் விடுதலைக் கூட்டணி கொண்டுள்ளது.

பின்வரும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இக்கட்டான நிலையில் தள்ளப்பட்டுள்ள இந்த நாட்டை மீட்டெடுத்து இனங்களுக்கிடையே வலுவான ஒரு உறவுப்பிணைப்பை ஏற்படுத்தி சுபீட்சமான வாழ்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி உண்மையாகவும் மிக உறுதியாகவும் நம்புகிறது. அவ்விடயங்கள் தொடர்பாக கூட்டணி அரசாங்கத்தோடு விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்.

1. இடம்பெயர்ந்த மக்களை- வடக்கு கிழக்குத் தமிழர், இந்திய வம்சாவளித்தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எந்த இனத்தவராகிலும் அவர்கள் முன்னர் வாழ்ந்த அவர்களின் சொந்த இடங்களிலேயே குடியமர்த்த தமிழர் விடுதலைக்கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.

2. இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிழப்பு, உறுப்பிழப்பு, சொத்து சேதம் என்பவற்றிற்கும் இன, மத, சமூக பேதமின்றி முழு அளவிலான இழப்பீடு வழங்கப்பட அரசிற்கு வலுவான அழுத்தத்தை கூட்டணி கொடுக்கும். அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமரும் பகுதிகளில் அவர்களுக்கான போக்குவரத்து மற்றும், மருத்துவ சுகாதார வசதிகள் விரிவு படுத்தப்பட அரசை வலியுறுத்தும்.

3. யுத்தம் ஆரம்பித்த பின்னர் வன்னிப்பகுதியில் உயிழந்தும், காணாமல் போயுமுள்ள குடிமக்களின் பெயர், முகவரி போன்ற விபரங்களைத் திரட்ட நடவடிக்கை எடுக்க அரசிற்கு அழுத்தம் கொடுத்து அதற்கான ஒத்துழைப்பையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வழங்கும்.

4. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிறுவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தி புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அச்சிறுவர்கள் அவரவர் பெற்றோர்களிடம் உடன் கையளிக்கப்பட வேண்டும். அவர்களில் சிலர் தாமாக விரும்பி புலிகள் இயக்கத்தில் இணைந்திருக்கலாம். ஆனால், ஏனைய அனைவரும் பலாத்காரமாக இணைக்கப்பட்டவர்களாவர். இப்போது இச்சிறுவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படுவது பெற்றோரின் அன்பும் அரவணைப்புமாகும். இந்த அப்பாவிப் பிள்ளைகளை பெற்றோரிடம் கையளிப்பின் அவர்களுக்கு எத்தகைய கல்வியை ஊட்ட வேண்டும் என்பதை பெற்றோர்களே தீர்மானிப்பர் என்பதை, அரசிற்கு எடுத்துக்கூறி அதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும்.

5. வடக்கில் ஆட்கடத்தல், கொலைகள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வடக்கிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க தமிழர் விடுதலைக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

6. தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு, அங்குள்ள வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட அரசை வற்புறுத்துவோம். உரியவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் தனியார் விடுகள் மற்றும், கட்டடங்கள் உடனடியாக உரியவர்களிடமோ, அல்லது அவர்களின் வாரிசுகளிடமோ ஒப்படைக்கப்பட தமிழர் விடுதலைக்கூட்டணி அரசை வற்புறுத்தும்.

7. சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு கிழக்கு பகுதிகளில் அப்பாவி மக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு தங்கம் பின்னர் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற உறுதியோடு பெறப்பட்டது. ஒரு சிலருக்கு தங்கம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. பலருக்கு கொடுக்கப்பட வில்லை. இது தவிர மக்கள் தங்கள் தங்க நகைகளை புலிகளின் வங்கிகளில் ஈடு வைத்திருந்தனர். அத்துடன் தங்கள் பணத்தையும் அவ்வங்கிகளில் வைப்புச் செய்திருந்தனர். வன்னியில் மீட்கப்பட்ட தங்கமும் பணமும் உரிய மக்களுக்கே சொந்தமானவை. ஆகவே அங்கு மீட்கப்பட்ட நகைகளும் பணமும் உரிமை கோருபவர்களுக்கு வழங்கப்பட தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வற்புறுத்தும்.

8. உயர் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்று யுத்தம் காரணமாகவும், பலவந்தமாக பிடிக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவுமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, கல்வியைத் தொடர முடியாமல் பலர் இருப்பதால் அவர்கள் கல்வியைப் பெறவும், வன்னிப்பகுதிக்கென பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அங்கு விவசாயம், கலைப்பிரிவு போன்ற துறைகளை இயங்க வைக்கவும் தமிழர் விடுதலைக்கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

9. வன்னி வர்த்தகர்களில் பலர் அனைத்து சொத்துக்களையும் இழந்துள்ளனர் என்பதால் இடம்பெயர்வதற்கு முன் அவர்கள் பெற்றிருந்த உரிமைகளான- ஏகவிநியோக உரிமை, உத்தரவு பெற்ற வர்த்தக உரிமை, எரிபொருள் நிலையம் நடத்தும் உரிமை போன்றவற்றை வழங்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வலியுறுத்தும்.

10. இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தும் போது, இரு விசேட பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். முதலாவதாக 1992ஆம் ஆண்டு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நலன்கள் பேணப்பட வேண்டும்.
இரண்டாவது- 1958 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்தும், நாட்டின் பல வேறு பகுதிகளிலிருந்தும் வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குடியேறிய மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கூட்டணி இவ்விரண்டு விடயங்கள் குறித்தும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.

11. கணவன் தடுப்பு முகாம்களிலும், மனைவி மக்கள் வீடுகளிலும் என ஆதரவற்ற நிலையில் வாழும் குடும்பங்களை ஒன்று சேர்த்து வைக்க தமிழர் விடுதலைக்கூட்டணி நடவடிக்கை எடுக்கும். அத்துடன் ஊனமுற்றோர், உடலில் துப்பாக்கி ரவைகள், குண்டுச்சிதறல்கள் தைக்கப்பட்டு உடல் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட அரசாங்கத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தும். உடல் ஊனமுற்று இயங்க முடியாமலுள்ளவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது வேதனைக்குரியதாகும், இது நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயம் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசிற்கு உணர்த்துகிறது.

12. வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகளை புனரமைத்து மீள இயங்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக்கூட்டணி மேற்கொள்ளுவதோடு, அரசுத்துறைகளிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் இதுவரை இழந்தவற்றை சீர்செய்து, கணிசமான பங்கினை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வழங்க அரசை வற்புறுத்தும்.

13. வடக்கில் மூன்றில் இரண்டு பகுதி கடலால் சூழப்பட்ட பகுதியாகும் கடற்றொழில் எமது மக்களின் பாரிய தொழில் வளமாகவுள்ளது. தற்போது கடற்றொழிலாளர்கள் தங்கள் தொழிலில் எதிர்நோக்கும் சிக்கல்களை அரசாங்கத்திடம் விளக்கி கடற்றொழிலாளர்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும். விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி, விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் சிக்கல்களையும், சவால்களையும் நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை கூட்டணி மேற்கொள்ளும்.

14. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் தன்னிச்சையாக ஒரு சிலரின் விருப்பத்திற்கு இணங்கச் செயற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள், அரச அதிகாரிகள், நன்கொடை வழங்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோரின் ஆலோசனைகளையும் பங்களிப்புகளையும் பெற்று செயற்படுத்த வேண்டும். அவ்வாறில்லாவிடில், உண்மையான அபிவிருத்திப் பணிகளை அரசினால் தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகின்றது.

15. போர்ச் சூழலாலும், பொருளாதார நிலைமைகளாலும் வழிதவறிப்போன இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும் செயற்திட்டங்களையும் கூட்டணி மேற்கொள்ளும்.

16. மனிதஉரிமை விதிமுறைகளை மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்க வலுவுள்ள ஓர் அடிப்படை சாசனம் சட்டமாக்கப்பட தமிழர் விடுதலைக்கூட்டணி முயற்சி எடுக்கும்.

17. யுத்தம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட கல்வித்தரத்தனை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், அதே போல் விளையாட்டுத்துறைகளை உயர்த்த சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் கூட்டணி முயற்சியெடுக்கும்.

18. புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு உள்ளுரில் உறவுகள் சொத்துக்கள் போன்ற பல்வேறு தொடர்புகள் இருப்பதால் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு வந்து செல்லவும், மீளக்குடியேறவும் வழிவகை செய்ய கூட்டணி பாடுபடும்.

தமிழ் பேசும் மக்களின் எதிர்கால நலன்களில் இதயபூர்வமான, உள்ளார்ந்த அக்கறை கொண்டுள்ள முதிர்ந்த அரசியல் கட்சி என்பதாலும், சொந்த நலன்களை ஈட்டுவதற்காக அரசியல் நடத்துபவர்கள் அல்லர் என்பதாலும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மிளிர்வதாலும் தமிழ் மக்களுக்கு கௌரவத்துடன் கூடிய சமாதானத் தீர்வும், ஏனைய மக்கள் சகலருக்கும் நீதி,நியாயமும் விரைவில் கிடைக்கின்ற சூழ்நிலை உதயமாவதற்கும் தமிழர் விடுதலைக்கூட்டணி தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்போல தொடர்ந்து மேற்கொள்ளும். எனவே, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

சபாஸ் சரியான போட்டி: தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி எதிர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Sambandan R TNAgajendrakumar_ponnampalam”சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறிக்கொள்பவர்கள் என்ன அடிப்படையில் ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசிற்கும் அதன் அரசியல் சாசனத்திற்கும் விசுவாசமாக இருப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்கின்றார்கள். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பொழுதும், வெற்றி அடைந்து பாராளுமன்றத்திற்குப் போகும் பொழுதும், இந்த சத்தியப் பிரமாணத்தைச் செய்து தானே போகின்றார்கள். அப்பொழுது சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா?” – தமிழ் தேசியக் கூட்டமைப்பு:

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை உருவாக்கியமை தொடர்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியிட்டதாக ஒரு கட்டுரை நேற்றைய யாழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகியது. அது தொடர்பான உண்மை விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிக்கொணர விரும்புகின்றது. மே மாதம் 2009 ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நிலவிவந்த ஒற்றுமையை அதன் தலைமையான இரா சம்மந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் திட்டமிட்டு சிதைத்துவிட்டனர் எனவும், கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களதும், மக்களினதும் செயற்பாட்டாளர்களினதும் பங்களிப்பு இல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டு அவசரத்தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்ததாகவும் தமிழ் காங்கிரசால் குற்றம் சாட்டப்படுகின்றது.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற அமைப்பு எங்கு நடந்த கூட்டத்தில் எப்படி உருவாக்கப்பட்டது. அதில் யார் யார் எல்லாம் பங்குபற்றினார்கள்? அதன் தலைவர் யார்? அதன் செயலாளர் யார்? இவை எதுவும் தமிழ் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான அங்கத்தவர்களின் ஒத்துழைப்பின்றித்தான் ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் தயாரித்ததாகக் கூறுகின்றவர்கள் குறைந்தபட்சம் அப்படி எதிர் கருத்துள்ளவர்களுக்காவது தமது தேசியத்திற்கான மக்கள் முன்னணி உருவாக்குவதற்கு அழைப்புவிடுத்தார்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிதைவிற்குக் காரணம் சம்பந்தன், சுரேஷ், மாவை எனக் கூறுபவர்கள் அவர்கள் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு புதிய முன்னணி அமைக்க அழைப்பு விட்டனர். திருமலையில் தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுபவர்களுக்கு இப்படி ஒரு முன்னணி உருவானதைப் பற்றியாவது தெரியுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது அது ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து சம்பந்தன், மாவை, சுரேஷ், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய ஐவரைக் கொண்ட தலைமைத்துவமாகவே இருந்து வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக சம்பந்தன் இருந்ததுடன் தமிழரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைமைத்துவத்தை சார்ந்தவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும் இருந்தார்கள். இவர்கள் தவிர மேற்கண்ட கட்சிகள் சார்பாக தேர்தலில் வெற்றியடைந்துவந்த பிரதிநிதிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வன்னியிலும், யாழிலும், கிழக்கிலும் நியமிக்கப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களையும் உள்ளடக்கியதாகவே இக் கூட்டமைப்பு இருந்தது. இதில் மூவரை மட்டும் பெயர் குறிப்பிட்டு சிதைவிற்கு காரண கர்த்தாக்கள் எனக் குற்றம் சாட்டும் கஜேந்திரகுமார் ஏன் செல்வம் அடைக்கலநாதன் உட்பட ஏனையோருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது ஒன்றே இவர்களின் பொய்யான முகமூடிகளைக் காட்டவில்லையா?

மே மாதம் 2009 ஆம் ஆண்டிற்குப் பின் நாம் எமது கொள்கையில் இருந்து தடம் புரண்டோம் புதிய தீர்வுத் திட்டம் என்ற ஒன்றைத் தயாரித்தோம் என்று கூறும் பத்மினி, கஜேந்திரன் ஆகியோரிடம் ஒன்றைக் கேட்கவிரும்புகின்றோம். மே 2009 இற்கு முன்னரும் பின்னரும் நீங்கள் எங்கிருந்தீர்கள்? உங்களுடன் கலந்துரையாடவில்லை எனக் கூறும் நீங்கள் நோர்வேயிலும், இங்கிலாந்திலும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். வருடக் கணக்காக வெளியில் இருந்த நீங்கள் இதற்கு மேலும் பாராளுமன்றத்தில் லீவு எடுக்க முடியாது. பதவிகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொழுது பாய்ந்தடித்து கொழும்பிற்கு வந்த நீங்கள் ஏன் ஒரு வருடம் முன்னரே வந்திருக்கக்கூடாது? இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று தம்முடன் கலந்து பேசாமல் ஓர் தீர்வுத்திட்டத்தை உருவாக்கி இருக்கின்றோம் என்பது. அத்தீர்வுத் திட்டமானது கூட்டமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக இருக்கின்றது என்பதும் அவர்களது வாதம்.

தீர்வுத் திட்டத் திட்டத்தயாரிப்பொன்றை மேற்கொள்வதற்காக இலங்கையில் இருந்த சம்பந்தன், கஜேந்திரகுமார், மாவை, சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழு (அப்பொழுது செல்வம் அடைக்கலநாதன் இங்கிருக்கவில்லை) கூட்டமைப்பின் ஆதரவு சக்தியான ஓர் சட்டத்தரணிகள் குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி ஓர் வரைவை உருவாக்கும்படி அவர்களைக் கேட்டிருந்தோம். இக் கூட்டத்திற்கு கஜேந்திரகுமாரும் வந்திருந்தார். நாங்கள் கலந்துரையாடியது போக மேலதிகமான ஆலோசனைகள் இருப்பின் மின் அஞ்சல் ஊடாக அனுப்பும் படியும் சட்டத்தரணிகள் கேட்டிருந்தனர். இக் கூட்டம் முடிந்ததும் இங்கிலாந்து சென்ற கஜேந்திரகுமார் அவர்கள் இறுதிவரை தனது ஆலோசனைகள் என்னவென தெரிவிக்கவில்லை.

இரண்டாவதாக பலமாதங்களாக நாம் கேட்டுக்கொண்ட வரைபு (draft) பூர்த்தி அடையாமல் இருந்தது. இதற்கு சட்டத்தரணிகளுக்கு நெருக்கடியாக இருந்த வேலைகளும் ஒரு காரணம். எனவே இவற்றை முடிப்பதற்கு இலண்டனில் இருந்த கஜேந்திரகுமாரையும் அழைத்தோம். அவருக்கு மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் தேவையாக இருந்தது. இங்கு சட்டத்தரணிகளுக்கு அவர் வரும் நாட்களில் நேரப்பிரச்சினை இருந்தது. இந்த சமயத்தில் தான் சில நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து ஓர் வரைபை செய்து முடித்தோம்.

பின்னர் இவ் வரைபு பாராளுமன்றக் குழுவின் கருத்தை அறிவதற்காக அவர்கள் முன் வைக்கப்பட்டது. வரிக்கு வரி விவாதிக்கப்பட்டது. இதில் திருத்தங்கள் தேவையா என ஆலோசனை கேட்கப்பட்டது. சிலரால் திருத்தஙகள் முன் வைக்கப்பட்டன. இதில் மிகப் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வரைபை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றோருக்கு முரண்பாடுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் கஜேந்திரகுமார், பத்மினி போன்றோர் சட்டத்தரணிகள் உடனான கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்பட்டனர். அங்கும் பல மணிநேரம் விவாதித்து தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். இதிலுள்ளவற்றை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முன் வருமானால் அது பெரிய விடயம்” என்ற பதிலைத்தான் அன்று கஜேந்திரகுமார் சட்டத்தரணிகளிடம் கூறினார். இவர் தான் இன்று கூறுகின்றார் மூன்று பேர்களால் இரகசியமாக உருவாக்கப்பட்ட ஓர் தீர்வுத் திட்டம் என்று. ஓர் வரைபு உருவாக்கப் பட்டால் தான் அதில் உள்ள சரி பிழைகள், என்ன மாற்றம் செய்ய வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றிப் பேசலாம். அதனைத் தான் நாங்கள் செய்தோம். அதன் பின்னர் விவாதித்தோம், திருத்தினோம் என்பது தான் உண்மை. எந்த ஒரு வரைபும் இல்லாமல் ஒரு விடயத்தைப் பேசுவோமாக இருந்தால். அது பேசிய இடத்துடன் முடிந்துவிடும். அந்த அடிப்படையில் தான் எம்மால் ஒரு வரைபு உருவாக்கப்பட்டது. கஜேந்திரகுமாருக்கு மாற்றுச் சிந்தனை இருக்குமானால் வேறு ஒரு வரைபை முன்வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் தத்துவங்களைப் பேசுவோர் அது எதனையும் முன் வைக்கவில்லை. எனவே தமக்குத் தெரியாமல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது முழுமையான பொய்யாகும்.

இப்பொழுது இன்னுமொரு விடயத்தை முன்வைக்கின்றார். அதாவது “தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் தாயகம், தமிழ் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு” இவை 2001, 2004 ஆம் ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சுட்டிக்காட்டப்பட்டன. இதிலிருந்து யாரும் விலகமுடியாது என காங்கிரஸ் கஜேந்திரகுமார் கூறுகின்றார். இதை கஜேந்திரகுமார் சொல்லித்தான் யாரும் அறியவேண்டியதல்ல. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும், 1985 திம்புப் பிரகடனமாகவும் அதனை வெளியிட்டவர்கள் கூட்டணியும், ரெலோவும், ஈபிஆர்எல்எப், எல்ரீரீ போன்ற அமைப்புக்கள். கூட்டமைப்பில் இருக்கும் TELOவும், EPRLFஉம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள். அதேபோன்று வடக்கு கிழக்கு இணைப்பதற்கு இறுதிவரை போராடியது கூட்டணி, அதிலும் பிரத்தியேகமாக திரு சம்பந்தனின் தனிப்பட்ட முயற்சி இதில் மிகவும் கனதியானது.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம், அவர்கள் தொடர்ச்சியான நிலப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கென தனித்துவமான மொழி, கலை, கலாசாரம், பண்பாடுகள் உள்ளன. அவர்களது பிரதேசத்திற்கான பொருளாதார வளங்கள் உண்டு. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாரும் மறுதலித்தது கிடையாது. இந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் காணி, பொலிஸ், நிதி உட்பட முழுமையான அதிகாரப் பகிர்வொன்று சமஷ்டி அரசியல் அமைப்பு முறையின் ஊடாக உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது. இதனை எந்த ஒரு இடத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொடுத்தது கிடையாது.

“சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை தனித்துவமான தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் வட்டுக்கோட்டைப் பிரகடனம் செய்யப்பட்டது. அதிலிருந்து கூட்டமைப்பு விலகிவிட்டது” என்றும் தாம் மாத்திரம் தான் மேற்கண்ட கொள்கைகளில் உறுதியாக இருப்பது போன்ற புலுடாவை விட சிலர் ஆரம்பித்துள்ளனர். சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறிக்கொள்பவர்கள் என்ன அடிப்படையில் ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசிற்கும் அதன் அரசியல் சாசனத்திற்கும் விசுவாசமாக இருப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்கின்றார்கள். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பொழுதும், வெற்றி அடைந்து பாராளுமன்றத்திற்குப் போகும் பொழுதும், இந்த சத்தியப் பிரமாணத்தைச் செய்து தானே போகின்றார்கள். அப்பொழுது சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? தமிழ் மக்களுக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது, ஏமாற்றிவிடலாம் என்று சிந்திக்கின்றார்களா? உண்மையாகவே சிறீலங்காவின் இறையாண்மையை இவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடின் பாராளுமன்ற அரசியல் முறையைக் கைவிட்டு அவர்கள் சொல்கின்ற தனித்துவத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராட வேண்டும். அப்படிச் செய்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அதனை விடுத்து சொல் வேறாகவும், செயல் வேறாகவும் இருப்பது சுத்த ஏமாற்றுவித்தையே தவிர வேறல்ல.

இவை ஒருபுறம் இருக்க இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை இரு தேசங்களின் கூட்டு எனக் கூறும் இவர்கள் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இத் தத்துவத்தையே கூறிக்கொண்டிருக்கப் போகின்றார்களா? இல்லையேல் இதன் அடிப்படையில் ஏதாவது தீர்வுத் திட்டம் இவர்களிடம் உண்டா? இனப்பிரச்சினைத்தீர்வின் அடுத்த கட்டம் நோக்கி எவ்வாறு பயணிக்கப் போகின்றோம். சுலபமாகத் தத்துவம் பேசலாம். அதற்கான காரண காரியங்களையும் விளக்கலாம். ஆனால் அவையெல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வை ஏற்படுத்தித் தருமா? முப்பது வருட அகிம்சைப் போராட்டம் 30 வருட ஆயுதப் போராட்டத்தின் பின் தோல்வியுற்ற தீர்வுப் பாதைக்கு, மீண்டும் திரும்புகின்றோம் என குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். 60 வருடப் போராட்டத்தின் பின் எதுவும் இல்லை என ஒதுங்கப் போகின்றோமா? அல்லது காங்கிரஸ் கஜேந்திரகுமார் போல் தத்துவம் பேசுவோம் ஆனால் தீர்வைப் பற்றி அக்கறை இல்லை என இருக்கப் போகின்றோமா? அல்லது தமிழ் மக்களின் தேசம், தேசியம், இறைமை இவற்றைக் காப்பாற்றக் கூடிய ஒரு தீர்வை நோக்கிப் போகப் போகின்றோமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரட்டுத் தனமாக தத்துவம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அதே சமயம் எமது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வை நோக்கி நாம் போக வேண்டுமென விரும்புகின்றோம். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலம் பொருந்திய அமைப்பாக இருந்த பொழுது அவர்களுக்கு பேரம் பேசும் ஆற்றல் இருந்தது. அதன் ஊடு தமிழ் மக்களுக்கு உச்சபட்ச அதிகாரங்களை அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம். மாறாக இராணுவப்பலம் சிறீலங்கா இராணுவத்தால் நிர்மூலம் செய்யப்பட்டது. யுத்தத்தில் வென்ற அரசு தமிழர்களுக்கு எதுவுமே கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. புலிகளும் இல்லை. எமக்கு பேரம் பேசும் வலுவும் இல்லை. இந்த நிலையில் அடுத்த கட்டத்தை நகர்த்துவது என்பதை சிந்திக்கவேண்டும்.

இன்று எமக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சாதகமான நிலைமை சர்வதேச சமூகம் காட்டக் கூடிய குறைந்தபட்ச அக்கறை. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் இன்னும் பல நாடுகளும் எமது இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்கள். எனவே இவர்களின் ஆதரவுடன் தீர்வொன்றை எட்டுவதற்கு முயற்சிப்பதே புத்திசாலித்தனமான சிந்தனையாக இருக்க முடியும். சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாம் பெற்றுக் கொள்ளவேண்டுமாயின், எமது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் கடும் போக்காளர்கள் என்னும் தன்மையைக் காட்டிக்கொள்ளாமல் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் அதிகாரங்களுடன் தம்மைத் தாமே ஆளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். அப்படியான ஓர் திட்டத்தைத்தான் கூட்டமைப்பு உருவாக்கியது. எமது தீர்வுத்திட்டத்தை சர்வதேச சமூகம் நிராகரிப்பது கடினமானது ஏனெனில் உலகின் பல பாகங்களில் இவ்வாறான சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான தீர்வுத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் 13வது திருத்தத்தையே கொடுக்க விரும்பாத இலங்கை அரசு அவ்வாறான தீர்வுத் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பதையும் நாங்கள் அறிவோம். இந்த நிலையில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை இலங்கை நிராகரிக்கும் பொழுது இலங்கை மீது அழுத்தம் செலுத்தவோ, அல்லது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு வேறு வழிமுறைகளை கையாளவேண்டிய தேவையோ சர்வதேசத்திற்கு ஏற்படலாம். எனவே கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காத அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட அதேசமயம் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமாகவே இதனை நாம் தயாரித்தோம். இதன் மூலம் சர்வதேச சமூகத்தை எமது ஆதரவு சக்தியாக மாற்றமுடியும் என்பதுடன், அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான நியாயமான தீர்வுக்கெதிரான போக்குகளையும் சர்வதேச அரசுகள் புரிந்துகொள்ளச் செய்யலாம். ஆனால் இதனை விடுத்து இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது. இலங்கை இலங்கை இரு தேசங்களின் கூட்டு எனக் கூறும் பொழுது வெளி உலகமோ, சர்வதேச சமூகமோ சரி எமக்குக் கிட்டவும் நெருங்கியும் வராது. இதனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

வன்னியில் மூன்று இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் இவர்களது வாழ்விடங்கள் வாழ்வாதாரங்கள் எல்லாமே அழிக்கப்பட்டு விட்டது. 30வருட யுத்தத்தில் இழக்கக்கூடாத சகலவற்றையும் தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள். யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகள் இராணுவ ஆக்கிரமிப்பால் நிரம்பிவழிகின்றன. இராணுவக் குடியேற்றமும் அதனைத் தொடர்ந்து சிங்களக் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை எமது கையை விட்டுப் போகும் சூழல். இந்த நிலையில் மிக விரைவில் வடகிழக்கின் அதிகாரத்தை எமது கையில் எடுக்கப் போகின்றோமா? அல்லது தத்துவம் பேசிவிட்டு உட்காரப் போகின்றோமா? எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் தேசம், தேசியம், இறையாண்மை, சுயநிர்ணய உரிமை எதனையும் விடவில்லை. ஆனால் தந்திரோபாயமாக இன்றிருக்கும் எமக்கு சாதகமாக சர்வதேச சூழலைப்பயன்படுத்தி தீர்வைக்காண முயற்சிக்கின்றோம். ஆனால் இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எந்தத் தீர்வுத்திட்டமும் இல்லாமல் கூட்டமைப்பை விமர்ச்சிப்பதும் குற்றம் சுமத்துவதும் அர்த்தம் அற்றதும் ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகும்.

தேசம், தேசியம், இறையாண்மை எல்லாவற்றையும் விடுத்து இந்தியா கூறியது போன்று நாம் தீர்வுத் திட்டம் தயாரித்ததாகவும் இவர்கள் கூறுகின்றார்கள். இது சுத்த அபத்தமானதும் பைத்தியக்காரத்தனமானதுமாகும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தீர்வு இவ்வாறு தான் இருக்க வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியது கிடையாது. அது தொடர்பாக நாம் கலந்துரையாடியதும் கிடையாது. மாறாக புலிகள் அழிக்கப்பட்ட சூழ் நிலையிலும் இலங்கை அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்காத சூழ் நிலையிலும் நாம் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதன் மூலமே சர்வதேசத்தை எம்மை நோக்கி அணி திரளச் செய்ய முடியும் என யோசித்தோம். அந்த அடிப்படையில் மிக நீண்ட கலந்துரையாடல்களின் பின்பே ஒரு வரைபு உருவாக்கப்பட்டது. (அதன் விபரம் மேலே தரப்பட்டது)

கடந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என அறிக்கை விடுத்த திரு கஜேந்திகுமார் அடுத்த கணமே இலண்டன் சென்றுவிட்டார். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சிலநாட்களின் பின்னர் வந்தார். கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றென்ற வகையில் வேட்புமனுக்களைப் பரிசீலிக்கும் குழுவில் அவரும் ஒரு அங்கத்தவர் என்ற வகையில் அவரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் தனக்கு அடிப்படையில் முரண்பாடுகள் உள்ளதாக கூறியதன் அடிப்படையில் அது தொடர்பாக இரண்டு மணி நேரம் கலந்துரையாடப்பட்டது. தனது கட்சிக்குழுவில் பேசி முடிவெடுத்துவிட்டு மாலை எமக்கு அறிவிப்பதாக கூறியவர் இரண்டு நாட்களாக எம்முடன் தொடர்பு கொள்ளவில்லை. எமது தொலை பேசித் தொடர்புகளையும் அவர் பேசாமலேயே நிராகரித்தார். இதன் பின்பு காங்கிரசின் தலைவர் திரு விநாயகமூர்த்தியின் முயற்சியால் ஒரு சில சட்டத்தரணிகள் சமரசம் பேச முற்பட்டனர். இவருக்காகவே ஏற்கனவே வரையப்பட்ட தீர்வுத்திட்டத்தை விடுத்து தேர்தலின் பின்னர் எல்லோரும் இணைந்து ஒரு புதிய தீர்வுத்திட்டத்தை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அது எழுத்திலும் உள்ளது. ஆனால் கஜேந்திரகுமார் அவர்கள் ஏகமனதான முறையில் இத் தீர்வுத்திட்டம் அமையவேண்டும் எனக் கூறினார். பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் தீர்வுகள் எடுக்க முடியுமே தவிர ஏகமனதானதென்று எதற்கும் ஒத்துவராது, எல்லாவற்றையும் மறுதலிக்கும் வீற்றோ அதிகாரத்தை யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை அவர்களுக்குத் தெரிவித்தோம். இறுதியாக இதனை ஏற்றுக்கொண்டு அடுத்த நாள் வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்ய சம்மத்தித்தார். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர் தனது செயலாளரையும் இன்னும் இருவரையும் எம்முடன் பேசும்படி கூறிவிட்டு அவர் போய்விட்டார். அவர்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் சம்மதம் அளிக்கப்பட்டது. ஆனால் போனவர்கள் மீண்டு(ம்) வரவில்லை. திரு சம்பந்தன் கஜேந்திரகுமாருடன் பேச எடுத்த முயற்சியும் சில சட்டத்தரணிகள் (ஏற்கனவே சமரசம் பேசியவர்கள்) அவருடன் பேச எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை. அடுத்த நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக கஜேந்திரகுமார் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தார். இதில் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது இலண்டனில் இருந்து வரும் பொழுதே அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என்ற முடிவுடனேயே வந்தார். ஆனால் கூட்டமைப்பை சிதறடிக்கக் கூடாது என்பதற்காக நாம் இறுதிவரை முயற்சி செய்தோம். ஆனால் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனை காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தியிடமும் அவரது நட்பு சட்டத்தரணிகளிடமும் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். நிலைமை இவ்வாறு இருக்க எல்லாவற்றையும் திரித்தும் பொய்யாகவும் கூறமுற்படுவது அரசியல் வங்குரோத்துத் தனமே அல்லாமல் வேறல்ல. வெளிநாட்டில் இருக்கக் கூடிய ஓரிரு குழுக்களின் வழிகாட்டுதலில் தான் இது நடைபெறுகின்றது. எமது தமிழினத்தை இன்னும் பாரிய அழிவிற்கு இட்டுச் செல்லும் என்பதை கடும் போக்காளர்கள் எனத் தம்மைக் கருதுவோர் புரிந்துகொள்ள வேண்டும்.

இறுதியாக தமிழ் தேசியம் பற்றிப் பேசுபவர்கள் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையில் மாத்திரம் தான் போட்டியிடுகின்றார்கள். இவர்களின் தேசம் என்பது இவ்விரு மாவட்டங்கள் மட்டுமாக இருக்கலாம். அதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் ஓர் ஆசனம் கேட்டு நிராகரிக்கப்பட்ட கௌரி முகுந்தன் என்பவர் தான் தேசியம் பேசுபவர்களின் திருகோணமலையின் முதன்மை வேட்பாளர். சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் அலரிமாளிகையில் அங்கத்துவம் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை ஆதரித்தவர் தான் இவரின் முதன்மை வேட்பாளர். திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்றகடிக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் திட்டம் அதற்காகவே பல சுயேட்சைக்குழுக்களுடன் பிள்ளையான் போன்றவர்களும் களமிறக்கப்பட்டனர். அவரைத் தோற்கடிக்கத்தான் திருகோணமலையில் காங்கிரசும் போட்டிபோடுவதாக கஜேந்திரகுமாரும் கூறுகின்றார். உங்களுக்கும் ராஜபக்சவிற்கும் என்ன வித்தியாசம்? திருகோணமலையில் தமிழருக்குக் கிடைக்ககூடிய ஓர் ஆசனத்தையும் இல்லாமல் செய்வதுதான் உங்களது தேசியமா? என்பதை தயவு செய்து சொல்லுங்கள்?

– தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 02-03-2010 –

._._._._._.

”கூட்டமைப்பு தலைமைகளின் சரணாகதி அரசியல் நிலைப்பாட்டினையே நாம் நிராகரிக்கின்றோம்.” – தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் மகாநாடு இன்று மாலை 5.30 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ்ப்பாண் அலுவலகத்தில் நடைபெற்றது. இம் மகாநாடு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளர் சின்னத்துரை வரதராஐன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஏன்?

தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒன்றுபட்டு வெளிப்படுத்தக்கூடிய ஒரு அரசியல் தலைமை காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம்.
இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் தாயகம்
தமிழ்த் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு.

என்ற கோட்பாடுகள் அங்கீகரிக்கபடல் வேண்டும். இம்மூன்று அடிப்படைகளும் தமிழ்மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதையும், அதற்குத் தனித்துவமான இறைமை உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றன. இத்தகைய அங்கீகாரம் தருகின்ற அரசியல் அந்தஸ்த்தின் நிலை நின்றே தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும்.

இலங்கைத் தீவில் இரு தேசங்கள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றபோதுதான், இவ்விரு தேசங்களும் இணைந்த ஒரு நாட்டில் நாம் சமாதான சகவாழ்வு வாழமுடியும். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலான அரசியற் பேச்சுவார்த்தை மூலம்தான் தமிழர்களின் அரசியற் பிரச்சினைக்கான தீர்வை நாம் எட்ட முடியும். இந்தப் பாதையிலிருந்து தமிழர்களின் அரசியற் தலைமைகள் ஒருபோதும் விலகிப்பயணிக்க முடியாது. இதனையே தமிழ்மக்கள் மீண்டும் மீண்டும வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். 2001 ம் 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில் த.தே.கூ வினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையும் இதுவே. இந்த நிலைப்பாடு தமிழர்களின் அரசியற் கொள்கைகளிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதது; சமரசத்திற்கு அப்பாற்பட்டது.

தந்தை செல்வா காலத்தில் தோல்வியடைந்த தந்திரோபாயங்கள்:

இத்தகைய தீர்மானம் ஒன்றிற்கு தமிழ் அரசியல் தலைமைகள் செல்லுவதற்கு முன்னரான முப்பது ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அங்கீகரிக்கும் வகையில் இலங்கை அரசின் அரசியல் கட்டமைப்புக்களில் திருத்தங்களை கொண்டுவருவதன் மூலம் அதிகாரப்பகிர்வு என்ற பாதை ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய முயற்சிகளாகவே பண்டா செல்வா உடன்படிக்கை, டட்லி செல்வா உடன்படிக்கை போன்ற அரசியல் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதே போன்று 1970 ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தந்தை செல்வா தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி தேர்தலின் பின்னர் இலங்கைக்கான புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் அதிர்காரப் பகிர்வு ஊடாக இலங்கை அரசை மாற்றி அமைத்து ஓர் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தது. அந்தப் பிரேரணை உடனடியாக நிராகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழர் தரப்பு கோரிக்கைக்கு நேரெதிராக இலங்கை அரசை ஓர் ஒற்றையாட்சி அரசாக உத்தியோகபூர்வமாக அரசிலமைப்பினூடாக நிலை நாட்டப்பட்டது.

அத்துடன் அது வரை காலமும் தமிழ் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பிற்காக என சோல்பெரி அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த 29 ம் சரத்து நீக்கப்பட்டது. பௌத்த மதம் அரசியல் யாப்பின் ஊடாக முதன்மையான மதம் என்ற அந்தஸ்த்து வழங்கப்பட்டு ‘சிங்கள மொழி மட்டுமே’ ஆட்சி மொழியாக அரசியல் அமைப்பின் மூலம் அமுல்படுத்தப்பட்டது. தமிழ் தலைமையினால் முன்வைக்கப்பட்ட அதிகாரப்பகிர்வுக்கான தீர்வு யோசனைகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டது மட்டுமன்றி சிங்கள அரசின் மேற் கூறிய செயற்பாடுகள் அதற்கு நேரெதிரான திசையில் அமைந்தன.

இத்தகைய அனுபவங்கள் காரணமாகவே தந்தை செல்வா அவர்கள் ஒரு தீர்க்கமான மாற்று முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இதே வகையில் இனப்பிரச்சினைக்கு பல்வேறு வழிமுறைகளுடாக தீர்வு காண முற்பட்ட அனைத்து தமிழ் தலைமைகளும் இலங்கை அரசியலமைப்பின் வரையறைக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வு பாதையூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்தன.

இதன் விளைவாக தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவற்றினடிப்படையில் 1976 ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மேற்கொள்ளப்ப்ட்டது. அதற்கு 1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்களாணை வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே கடந்த முப்பது ஆண்டுகள் தமிழ் மக்களது உரிமைகளைப் பெறுவதற்கான பயணம் நடைபெற்றது.

தோல்வியடைந்த தீர்வுப் பாதைக்கு மீண்டும் திரும்ப முயலும் கூட்டமைப்பின் தலைமைகள்:

இந்நிலையில் தந்தை செல்வா தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒருபோது உதவாது என்று 35 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள கூட்டமைப்பின் தலைமை முயல்கின்றது. 2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைபபின் மூத்த தலைமைகளினால் இரகசியமான முறையில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்தாமல் தீர்வுத்திட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள வரைபில் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படை கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. இந்த அடிப்படைப் பிறழ்வு நீண்டகாலமாக உறங்கு நிலையில் இருந்த பொழுதும் வன்னிப் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கும் பொழுதே வெளிப்படையாக தலைதூக்கியது.

கொள்கைகளை காப்பதற்காக கூட்டமைப்பினுள் போராட்டம்:

தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கப்படுவது தொடர்பான தகவல் அறிந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் கூட்டமைப்பின் மூத்த தலைமைகளுடன் தொடர்பு கொண்டு தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், தனித்துவமான இறைமை என்ற அடிப்படைகளிலேயே அமைய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

குறித்த தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கபட்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அந்த தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளை கைவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சுட்டிகாட்டியிருந்தனர். அத்துடன் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், அதன் தனித்துவமான இறைமை ஆகியன அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என வலியுறுத்தினர்.

கூட்டமைப்பு தலைமையின் பிடிவாதம்:

மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என கூட்டமைப்பின் மூத்த தலைமைகள் எதேச்சாதிகாரமாக மறுத்தனர். தாயகம் தேசியம்இ சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை என்ற அடிப்படைகளில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதனை பிராந்திய சக்திகள் ஒருபோதும் விரும்பாது ஏற்றுக் கொள்ளாது என்றும் அந்த சக்திகளின் விருப்பப்படியே தாம் செயற்பட வேண்டும் என்றும் தாம் அதனையே கடைப்பிடித்து வருவதாகவும் அடித்துக் கூறிவிட்டனர். அத்துடன் அதிகாரப்பகிர்வு அடிப்படையில் தாம் தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தினையே முன்வைப்பது என தாம் தீர்மானித்து விட்டதாகவும் உறுப்பினர்கள் யாருடைய ஆதரவு இல்லாவிட்டாலும் இந்த தீர்வுத்திட்ட வரைபை சமர்ப்பித்தே தீருவோம் என்றும் ஆணித்தரமாக கூறிவிட்டனர்.

நாம் பிராந்திய சக்திகளதோ அல்லது வேறு எந்தவொரு நாட்டினதுமோ நலன்களுக்கு எதிராக செயற்படும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர். எனினும் பிராந்திய சக்திகளினதும், ஏனைய நாடுகளினதும் விருப்பத்திற்கேற்ற வகையில் எமது மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை கைவிட்டு தீர்வுத்திட்டம் ஒன்றினை முன்வைக்க வேண்டும் என்ற கூட்டமைப்பு தலைமைகளின் சரணாகதி அரசியல் நிலைப்பாட்டினையே நாம் நிராகரிக்கின்றோம். எமது மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தினை பெறும் வகையில் பிராந்திய வல்லரசுடனும் ஏனைய உலக நாடுகளுடனும் நல்லுறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். இதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு.

ஏனெனில் இலங்கை அரசின் வெளிவிவகாரக் கொள்கை செயற்பாடுகள் காரணமாக இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக் வேண்டிய தேவை சர்வதேச சமூகத்திற்கு அதிகரித்து வருகின்றது. இந்த அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை சர்வதேசம் தனது கையில் எடுக்கும் சாத்தியப்பாடுகள் நிறையவே உண்டு. இவ்வாறு உருவாகக் கூடிய சூழலை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டுமாயின் நாம் எமது கொள்கை நிலைப்பாட்டில் சமரசத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மிகவும் உறுதியாக நிற்பது அத்தியாவசியம்.

தமிழர்களது அபிலாசைகளுக்கு இடம் மறுக்கப்பட்டது:

யதார்த்தம் இவ்வாறு இருக்க தமிழ் மக்களின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக மூத்த தலைமைகள் தீர்மானங்களை மேற்கொண்டன. அந்த தீர்மானங்களுடனும் செயற்பாடுகளுடனும் இணங்க மறுத்து தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை எடுத்துக் கூறிவந்த கட்சிகளை சாராத கூட்டமைப்பு உறுப்பினர்கள் திட்டமிட்டு அகற்றப்பட்டனர்.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாகவும் பிளவின்றி ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ் காங்கிரஸ் கட்சி ஆழமாக விரும்பி அதை நிறைவேற்ற சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தது.

இதன் கடைசிக் கட்டமாக எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் (உதாரணமாக தீர்வுத்திட்டம் பற்றிய முடிவு) முடிவெடுக்கும் பொழுது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் தரப்புக்களினதும் ஏகமனதான ஒப்புதல் பெறப்படும் என்ற எழுத்து மூலமான உத்தரவாத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கோரியது. இவற்றை கூட்டமைப்பின் தலைமை முற்றாக நிராகரித்த வேளையிலேயே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனினும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது கூட்டமைப்பினுள் இருக்குமாறு அதன் மூத்த தலைமைகள் பிடிவாதம் பிடித்தன. ஆனால் கொள்கைகளை நேர்மையாகவும் உறுதியாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிற்குள் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

கூட்டமைப்பின் ‘ஒற்றுமை’ நாடகம்:

தமது தவறுகளை மூடி மறைப்பதற்காக ‘ஒற்றுமை’ என்ற உயரிய விழுமியத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் கூட்டமைப்பின் இந்தப் பிரகிருதிகளின் சுயரூபத்தினை தேர்தலுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தோலுரித்துக் காட்ட வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்குள்ளது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமது தேசிய, அரசியல் அபிலாசைகளுக்காக உண்மையாகவும் உறுதியாகவும் குரல் கொடுக்க கூடியவர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் எமது முக்கிய பொறுப்பென நாம் உணர்கின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதயம்:

இந்த நோக்கில் தமிழ் மக்களின் தயாகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய அடிப்படை கொள்கைகளில் உறுதிப்பாட்டுடன் கூட்டமைப்பின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பது எமது நோக்கமல்ல. தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை சிதறடிப்பதும் எமது நோக்கம் அல்ல அதுபோல தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதும் எமது நோக்கம் அல்ல.

ஆனாலும் கூட்டமைப்பை தவறான வழிக்குச் இட்டுச் செல்லும் இந்த தலைமைகள் அகற்றப்படல் வேண்டும். இந்த தலைமைகள் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். இந்த தவறான தலைமைகள் அகற்றப்பட வேண்டுமென்றால் திருகோணமலை யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படல் வேண்டும்.

மீண்டும் ஒற்றுமை:

இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூய்மை செய்யப்பட்டு அது ஆரம்பிக்கப்பட்ட உண்மையான அர்த்தத்தில் மீண்டு வருவதற்கு வாய்ப்பு உண்டு.

அத்தகைய சூழ்நிலையில் அடிப்படை அரசியல் கொள்கைகளில் உறுதியாகவுள்ள அனைத்து தரப்புகளுடனும் ஒன்றிணைந்து செயலாற்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தயாராக உள்ளது.

தேர்லில் வெற்றி பெற்ற பின்னர் தாயகத்திலுள்ள தமிழ் மக்களுடனும், புலம்பெயர் தமிழ் மக்களுடனும் இணைந்து சர்வதேச சமூகத்துடன் செயலாற்றி தயாகம் தேசியம் சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய கொள்கைகளுக்கான அங்கீகாரத்தை பெற்று அதனடிப்படையில் கௌரவமான பாதுகாப்பான அரசியல் தீர்வு அடைவதற்காக அற்பணிப்புடனும் நேர்மையுடனும் உழைக்கும் என சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உறுதியளிக்கின்றது.

நன்றி!

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி.