::முஸ்லீம் விடயங்கள்

Wednesday, September 22, 2021

::முஸ்லீம் விடயங்கள்

முஸ்லீம் விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு; பேராசிரியர்கள் கைலாசபதி, இந்திரபாலா ஆகியோருக்கு நன்றி செலுத்துவது அவசியம்

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வரலாற்றைப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தும் நிலை பாடத்திட்டத்தில் காணப்படவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரிகம் ஒரு பாடமாக 1976 இல் அங்கீகரிக்கப்பட்டு ஆரம்பமானதன் பின்னரே இலங்கை முஸ்லிம்களின் வரலாறு அப்பல்கலைக்கழக மட்டத்தில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகக் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை அங்கீகரித்த அப்போதைய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. கைலாசபதி, பீடாதிபதி பேராசிரியர் கே. இந்திரபாலா ஆகியோருக்கு விசேடமாக நாம் நன்றி செலுத்த வேண்டும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு “இலங்கையில் இஸ்லாம்” என்னும் நூலினை அறிமுகம் செய்து உரையாற்றுகையில் பேராசிரியர் கே. எம். எச். காலிதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சென்ற ஆண்டு பங்களாதேஷ் டாக்காவில் இஸ்லாமிய மகாநாட்டு அமைப்பின் இர்ஸிகா என்னும் ஆய்வு நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தென்னாசியாவில் இஸ்லாமிய நாகரிகம் என்னும் சிம்போசியத்தில் முன்வைக்கப்பட்ட பேராசிரியர் காலிதீன் அவர்களின் ஆய்வுக் கட்டுரை நூலாக வெளியிடப்பட்டது.

தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய பேராசிரியர் காலிதீன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு மேற்குலக வரலாறு, இந்திய வரலாறுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், இலங்கை முஸ்லிம்களின் அரசியல், கல்வி, கலாசார பின்னணிகளில் கவனம் செலுத்தி பிரபல்யமான இஸ்லாமிய நாகரிக வரலாற்றையும், அதன் சர்வதேச செல்வாக்கையும் தெளிவுபடுத்தும் வகையில் அதன் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இதற்கு மிகவும் பொருத்தமான உயர் கல்வி நிறுவனமாகும்.

உலக நாகரிகங்களை ஒன்றுபடுத்தும் பணியில், இன்றைய உலகில் இஸ்லாமிய நாகரிகம் முன்னின்று பணியாற்றி வருகின்றது. பல இனங்கள், சமூகங்கள், குழுக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி மனித நாகரிகத்தைக் கட்டியெழுப்புவது அதன் பணி எனவும் இஸ்லாம் கருதுகிறது. அப்பணியை முன்னெடுப்பது எமது கடமையாகும்.

உலமா சபையின் செயற்பாடுகளில் அரசியல் சாயம் பூசவேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpgஉலமா சபையின் நடவடிக்கைகளில் அரசியல் சாயம் பூச முனைய வேண்டாமென மெளலவி நியாஸ் முஹம்மத் (கபூரி) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

அண்மையில் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இவ்வாறான விஜயங்கள் ஜனநாயக உரிமையாகும்.  அவரவரின் தெரிவுமாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பக்க சார்புகளின்றி நடுநிலைமையாய் சமய, சமயோசித வழியில் வழிநடத்த ப்படும் முஸ்லிம்களுக்கான ஒரு பொது ஸ்தாபனமாகும்.

இது இவ்வாறிருக்க சரத் பொன்சேகா வந்துசென்றதை சிலர் தவறாக விமர்சிக்கின்ற கதையும் அரசியலாக்க முனைகின்ற கதையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இது விடயத்தில் பிழையாக நடந்துகொண்டதாகவும் அதற்காக எதிரணி உலமா சபை ஒன்று உருவாகி உள்ளதாகவும் கதை ஏற்படுத்தி பிரசாரம் செய்வதும் ஒரு வகை அரசியல் இலாபம் ஈட்ட முன¨யும் காரியமாகும்.

உலமா சபை தலைமை பீடத்திற்கு ஜனாதிபதி அபேட்சகராக களமிறங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா வருகை பற்றி கட்சி உணர்வில் உந்தப்பட்டசிலரின் தனிப்பட்ட வித்தியாசமான கருத்துகளின்றி அது மேல் மட்டத்தில் வெளியான கருத்தல்ல. 16.12.2009ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்து இது விடயமாக உலமா சபையின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்திய போது ஜனாதிபதி புன்னகை பூத்தவராக ‘மெளலவி அவர்களே இதுவெல்லாம் யார் சொன்னகதை’ அப்படி நான் கருத்துக்கள் கொண்டவனுமல்ல இதற்கு எதிராக விமர்சனம் செய்பவனுமல்ல.

உலமா சபை என்பது உலமாக்களின் சமயத்துடன் இணைந்த ஒரு முஸ்லிம் மத ஸ்தாபனமாகும். அங்கு எவரும் வரலாம், வாழ்த்தும் பெறலாம். அவர்களுக்காக ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்த எனக்கு அவர்கள் நன்றி சொன்னதும் வாழ்த்து தெரிவித்ததும் எனக்கு நன்கு தெரியும். எனக்கும் அந்த உலமா சபை தலைமையகத்துக்குச் செல்ல ஆசைதான். பாதுகாப்பு நலன் கருதி நான் அங்கு செல்ல முடியவில்லை. உங்கள் மூலம் உலமா சபை உலமாக்களை எனது இல்லத்தில் சந்திக்கவும் நான் ஆவலுடன் இருக்கின்றேன்.

இது ஒரு பெரிய விவகாரமும் அல்ல. இதை எனது சார்பில் உலமா சபைக்கு அறிவிக்க தாங்களுக்கு அனுமதி தருகிறேன் என ஜனாதிபதி கூறியதை நினைவூட்டி உலமா சபையை பிரிக்க முனைகிறார்கள் என்ற பிரசாரங்களை விளங்கிக் கொள்வது நல்லது என கருதுகிறேன். எவருக்கும் அரசியல் செய்ய உரிமையுண்டு. ஆனால் உலமா சபையையும் உலமாக்களையும் அடகு வைக்காமல் கீழ்த்தரமாக விமர்சிக்காமல் அவரவரின் அரசியலைத் தொடரட்டும்.’ என அறிவுரை வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி கூறியதை நியாஸ் மெளலவி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புனித முஹர்ரம் மாத ஆரம்பம்

வியாழன் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் புனித முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை வியாழன் மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இம் மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ. ரஸா (மேமன் சங்கம்) முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜும்ஆ பள்ளி வாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள் ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ‘புனித ஸபர்’ மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் (புனித முஹர்ரம் 29) 16.01.2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா அமைப்பை உருவாக்க உதவுங்கள் – அலவி, அஸ்வரிடம் உலமாக்கள் கோரிக்கை

macca.jpgஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா என்ற புது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி பக்கச் சார்பற்ற முறையில் அதனை இயங்க வைக்க உதவிகள் செய்ய வேண்டுமென ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரை நேற்றுக் காலை கொழும்பில் சந்தித்த உலமாக்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடுநிலையான அமைப்பு. அரசியல் கட்சிக்கோ அல்லது ஒரு வேட்பாளருக்கோ இந்தமைப்பு அதன் சரித்திரத்திலேயே ஆதரவளித்தது கிடையாது.

உலமா சபைக்கு ஒரு கட்டடம் வேண்டு மென்ற வேண்டுகோளு க்கமைய கொழும்பில் பெறுமதிமிக்க காணித் துண்டை பெற்றுக் கொடு த்து அதில் நிர்வாகக் கட்டடம் அமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் மறக்காது என்றும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தலைமைகள் விடும் தவறுகளுக்காக முழு உலமா சமுதாயமும் பொறுப்பாகாது. நிதான மாக சிந்தித்து நடுநிலை வகித்து முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஏராளமான உலமாக்கள் இந்நாட்டில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.

இனங்களுக்கிடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இன்றைய தேவை – பிரதமர்

061109pm.jpgஉலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் வருடந்தோறும் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். அவர்களில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் இல்லை.

அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். ஒத்துழைப்பும் ஒற்றுமையுமே அதன் அர்த்தம் என்று பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :-

இன்று எமக்கு தேவையாக இருப்பது இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பும் ஒன்றுமையுமேயாகும். எமக்கிடையில் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் இல்லாமற் போனதன் விளைவாக நாம் வருடக்கணக்கில் வருந்த வேண்டியிருந்தது. சமாதானம் மகிழ்ச்சிக்கு பதிலாக சந்தேகம் வேறூன்றியதால் தான் சமாதான தேசமாகிய இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்கியது- அதன்காரணமாக நாட்டிலுள்ள இளைஞர்கள் பலரின் பெறுமதியான உயிர்கள் எமக்கு இல்லாமற் போயின. அந்த நிலையை மாற்றி நாட்டில் சமாதானம் எற்படுத்த இப்போது எம்மால் முடிந்துள்ளது.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் ஏற்பட்டுள்ள இலங்கையில் இருந்து முதல்முறையாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கும், உலகளாவிய ரீதியில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கும் எமது பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று பிரதமரின் வாழ்த்துச் செய்தி கூறுகிறது.

சவூதி அரேபியாவில் கடும் மழை, வெள்ளம் 77 பேர் பலி; பலரைக் காணவில்லை

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.கடந்த வருடங்களில் ஏற்படாதளவு பாரிய மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஹஜ் யாத்திரைக்காக வருகை தந்திருந்த மில்லியன் கணக்கான யாத்திரிகர்களில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென சவூதி உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மக்கா நகரில் இடம்பெறும் முஸ்லிம்களின் வருடாந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்பாரிய மழை வீழ்ச்சி இடையூறு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரசாங்கத்தினால் நடத்தப்படும் பத்திரிகை முகவர் அமைப்பின் தகவலின்படி ஜித்தா ராபி மற்றும் மக்கா ஆகிய நகரங்களிலேயே வெள்ளத்தால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த உயிரிழப்புகள் வெள்ளத்தினாலும் வீடுகள் இடிந்து வீழ்ந்தமையாலும் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் வெள்ளப் பெருக்கினால் பெருந்தொகையான மக்கள் கார்கள் மற்றும் பஸ்களினுள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, சவூதி மற்றும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் குடியிருப்புப் பகுதி என்பவற்றில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக ஜித்தாவின் பொதுப் பாதுகாப்பு தலைமை அதிகாரி அப்துல்லா அல்அம்ரீ தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் நகரைச் சூழவுள்ள குடிசைப் பகுதிகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரையினை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்தும் 3 மில்லியன் மக்கள் மக்காவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் தமது பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற இறைவனை வழிபட மலையேறும் போது சனநெரிசல் ஏற்படுவதுண்டு. இந்நிலையில், மழை காலம் என்பதனால் யாத்திரிகர்களை கவனமாக செயற்படுமாறு சவூதி அரசு எச்சரித்துள்ளது. கடந்த காலங்களில் யாத்திரையின் போது ஏற்படும் நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.ஹஜ் யாத்திரைக் காலத்தில் மழை வீழ்ச்சி ஏற்படுவது வழமை என்ற போதிலும் இம்முறை வழமைக்கு மாறாக கடும் மழை ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவையின் நிருபர் தெரிவித்துள்ளார்.

சமாதானம், சுபீட்சம் நிறைந்த வாழ்க்கை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி ஹஜ் வாழ்த்து

mahinda0.jpgவடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ் லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஹஜ் யாத்திரையையும் தியாகத்தையும் நினைவூட்டும் இப்பெருநாள் உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய வருடாந்த நிகழ்வாகக் காணப்படுகின்றது.

இன்றைய நாளில் இலங்கையி லிருந்து சுமார் 500 பேர்கள் உட்பட சுமார் நான்கு மில்லியன் முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஒன்றுகூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் யாத்திரையானது பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியத்தோடும் சகோதரத்துவ உணர்வுடனும் தமது கிரியைகளை மேற்கொள்வதை அடையாளப்படுத்தி நிற்கின்றது. இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களுடனும் மானிட சகோதரத்துவ உணர்வுடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்கள் வரலாற்று நெடுகிலும் எமது நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தும் வருகின்றனர். மூன்று தசாப்தகால பயங்கரவாதம் முற்றுப் பெற்றுள்ள இச் சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களோடு அச்சமின்றி வாழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நாளில் முஸ்லிம்கள் தமது விசேட சமயக் கிரியைகளின் போது கேட்கின்ற பிரார்த்தனைகளில் எம் எல்லோருக்கும் கெளரவமான சமாதானம் கிடைப்பதற்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் மிக்க நன்நாளாக இருக்க எனது நல்வாழ்த்துக்கள்.

நபியவர்களின் பெயரில் பத்திரிகையில் படம் வெளியானமைக்கு ஜனாதிபதி ஆழ்ந்த கவலை! – பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura.jpgஇலங் கையின் தமிழ் தேசிய நாளிதல் ஒன்றில் கடந்த செவ்வாயன்று வெளியான முகம்மது நபி (ஸல்) அவர்களுடையதென பிரசுரிக்கப்பட்ட படம் ஒன்று தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிர்ச்சியடைந்ததாகவும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது முஸ்லிம்களின் கலாசாரத்தில் உருவப்படத்துக்கு முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை. அதிலும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை எங்கும் காணமுடியாது.

இந்த உருவப்படம் வெளியான தகவல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள,  பிரமுகர்களினாலும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துகு கொண்டுவரப்பட்டபோதே ஜனாதிபதி இது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்

அந்தப் பத்திரிகை நிறுவத்தின் தவறு காரணமாக இச்செயல் இடமபெற்றிருந்தாலும் அதனால் பாதகமான வேறு விளைவுகள் ஏற்படக்கூடாதென்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகு உத்தரவிடடுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

குர்பானி விவகாரம்: அசெளகரியம் ஏற்படுத்த வேண்டாமென ஜனாதிபதி பணிப்பு

macca.jpgஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குர்பானுக்காக வேண்டி கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாத்தளை மாநகர முதல்வர், ஹில்மி கரீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இப்பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பொலிஸாரைப் பணித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் 28 ஆம் திகதி

macca.jpgபுனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 28ம் திகதி சனிக் கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜய்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை ஏகமனதாக எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கமைய ஹஜ்ஜுப் பெருநாள் 28ம் திகதி கொண்டாடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.