::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பாகிஸ்தான் குண்டுத்தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் பலி

தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையை அடுத்து, பெரும்பாலும் கிளர்ச்சிக்காரர்கள் எவரும் இல்லாத பிராந்தியம் என்று பாகிஸ்தான் இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட ஸ்வாட் பள்ளத்தாக்கில் தற்கொலைக் கார் குண்டுத் தற்கொலைத் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

துருப்பினரின் வாகானத் தொடரணி ஒன்று சனநெருக்கடி மிக்க சந்தைப் பகுதி ஒன்றை கடந்து சென்றபோது வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு கார் அவற்றின் மீது மோதச் செய்யப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.

அண்மைய நாட்களில் பாகிஸ்தானில் தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறது – பிரிட்டன் அமெரிக்கா

210909flag.jpgதலிபான் களின் அச்சுறுத்தல் இருந்தாலும், பாகிஸ்தானின் அணுஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ராவல்பிண்டியில் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கிறது என கூறினார்.

ஆனால் ஆயுததாரிகள் பாகிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலர் டேவிட் மிலிபேண்ட் கூறும்போது, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்ந்து விடும் என்ற பிரச்சினையே இல்லை என தெரிவித்தார்.

அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

Alfred_Nobelபொருளா தாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலினர் ஆஸ்ட்ராம் மற்றும் ஆலிவர் வில்லியம்சன் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான ஆஸ்ட்ராம், பொருளாதார நிர்வாகம் குறித்த – குறிப்பாக சாமான்ய மக்களுக்கான- ஆராய்ச்சிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

அதேபோன்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம்சனுக்கும் பொருளாதார நிர்வாகம் குறித்த – நிறுவனங்களின் எல்லைகள் பற்றிய – ஆராய்ச்சிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு தொகையான 1.4 மில்லியன் டாலரை இருவர்ம் பகிர்ந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி!

தரையி லுள்ள ஒரு இலக்கிலிருந்து மற்றொரு தரை இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி -2 ஏவுகணையை இந்தியா இன்று ( திங்கட் கிழமை)  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியது.
 
ஐந்து நிமிட இடைவேளையில் இரண்டு ஏவுகணைகள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளன. சரியாக காலை 10.28 க்கு முதல் ஏவுகணையும், 10.33 க்கு இரண்டாவது ஏவுகணையும் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரிதிவி -2 ஏவுகணை ஒரு குறுகிய தூர ஏவுகணையாகும். 9 மீட்டர் நீளமும் 1.1 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணைää  250 கி.மீ.ää வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகும்.

திரவ எரிபொருளில் இயங்கக்கூடிய இந்த ஏவுகணையில்ää ஆயிரம் கிலோ எடை கொண்ட  வெடிகுண்டுகளை  பொருத்த முடியும்.   அணு ஆயுதங்களையும் தாங்கிச்செல்லும் இந்த ஏவுகணைகளை கடலில் பயணிக்கும் கப்பலில் இருந்து கூட தரை இலக்கை தாக்கும் வகையில் ஏவலாம்.

கடந்த 1996ம் ஆண்டு இந்தியா, முதன்முறையாக பிருத்வி-2 ரக ஏவுகணையை சோதித்து பார்த்தது. பின்ää 1999ம் ஆண்டு இந்திய விமானப்படையில்ää இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது.  தொடர்ந்து ஜூன் 2000ää  மார்ச் 2001ää டிசம்பர் 2001ää ஜனவரி 2004 மற்றும் மார்ச் 2004 ஆகிய ஆண்டுகளில் பிருத்வி-2 சோதித்துப்பார்க்கப்பட்டது.

கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு வெற்றிகரமாக பிருத்வி சோதித்துப்பார்க்கப்பட்டது. இந்தியாவிடம் இதுவரை 70 பிருத்வி -2 ரக ஏவுகணைகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 முதல் 30 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் 1ம் திகதி, சீனா தனது தேசிய தினத்தின் போது,  52 வகையான புதிய ஆயுதங்களை முதன்முறையாக உலகின் பார்வைக்கு வைத்து அசத்தியது.

இதனையடுத்து, இன்று ( 12 ம் தேதி திங்கட்கிழமை ) பிருத்வி-2 ஏவுகணை,  ஒரிசாவிலுள்ள சண்டிப்பூர் ஏவுகணை சோதனை மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தச்சோதனை வெற்றிகரமாக நடந்தது தொடர்ந்து,  பிரம்மோஸ், கே-15 மற்றும் அக்னி -2 ஏவுகணைகளும் விரைவில் சோதிக்கப்படவுள்ளன.

பிலிப்பைன்ஸில் கடும் புயல், நிலச்சரிவு! : 153 பேர் பலி

280909.jpgபிலிப் பைன்ஸ் நாட்டில் ‘பார்மா’ என்ற புயல் கடுமையாகத் தாக்கியது. இதனையடுத்துப் பலத்த மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நிலச்சரிவும் ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  ஏராளமானோர் பலியானார்கள். வெள்ளம் வடிந்த பிறகும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு மலைக் கிராமத்தில் இன்று மீட்பு பணி நடந்தது. அப்போது மண்ணுக்குள் புதைந்துக் கிடந்த 153 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு ? : என் எஸ் குமரன்

Alfred_Nobel2009ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுக்கு வழங்க நோபல் பரிசுக் குழுவின் தீர்மானம்  இன்று 09ஆம் திகதி முற்பகம் 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இது சமாதானத்துக்கான 89ஆவது நோபல் பரிசாகும்.

உத்தியோகபூர்வ பரிசுவழங்கும் வைபவம் டிசம்பர் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சர்வதேச அரசியல், சூழலியல், ஜனநாயகம் விடயத்தில் அவரின் பாத்திரத்தை கருத்திற்கொண்டே இவ்விருத்தினை வழங்குவதற்கான ஆராய்வுகள் இடம்பெற்றதாக இந்த அறிவிப்பை வெளியிட்டவேளை  பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறும் 3வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆவார். ஏற்கெனவே, 1906இல் தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கும்,  1919இல் வூட்ரோ வில்ஸனுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் பதவியில் இல்லாத காலத்திலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. பதவியிலிருக்கும் போதே  வழங்கப்பட்டது இதுவே முதன்முறை.

2007ஆம் ஆண்டுக்கான பரிசு அமெரிக்கவின் முன்னாள்  உதவி ஜனாதிபதி அல்கோருக்கு வழங்கப்பட்டது. சூழலியல் குறித்த அவரது சேவையை கருத்திற்கொண்டே அது வழங்கப்பட்டிருந்தது.

இது குறித்து அமெரிக்க விவகாரங்களில் நிபுணத்துவமுள்ள ஒஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் ஊலே மோன் கருத்து தெரிவிக்கையில், தான் இது குறித்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்ததாகவும், பரக் ஒபாமாவை நோபல் பரிசுக்காக கணிப்பதற்கான காலம் போதாது என்றும்,  அவரின்  குறுகிய கடமை காலத்தைக் கொண்டு கணித்தது சரியானதல்ல என்றும், ஆனால் மரபான அமெரிக்க தலைமையிலிருந்து மாறுபட்ட திசையில் சவாலினை எதிர்கொண்டபடி அவரது பயணத்தை இது ஊக்குவிக்கலாம் என்றார்.

இதே கருத்துபட வேறு பல அரசியல் நிபுணர்களும் உடனடியாகவே ஊடககங்களுக்கு கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

சமீப கால அவரது முயற்சிகளாக பேசப்பட்டுவரும் அணுஆயுதக் குறைப்பு, குவாத்தனாமோ முகாம் குறித்த விடயங்களிலும் அவரது முயற்சி உலக அளவில் அவருக்கான ஆதரவு அதிகரித்திருப்பதையும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

நோர்வேஜிய பிரதமர் தனது உரையில் இப்பரிசு அவர் முன்னால் உள்ள கடமைகளுக்கு உறுதுணையாய் இருக்கும் என அறிவித்திருக்கிறார்.

ஏறத்தாழ 150 தொடக்கம் 200 பேர் வரையிலானவர்களை இப்பரிசுத் தெரிவுக்காக ஆண்டு தோறும் ஆராயப்படும். சென்ற தடவை 205 பேர் ஆராயப்பப்பட்டார்கள். இதுவரை காலத்தில் அதிகமானோர் முன்மொழியப்பட்டது இந்த ஆண்டுதான். இம்முறை இப்பரிசுக்காக ஆராயப்பட்டவர்கள் வரிசையில், சிம்பாபே பிரதமர் மோர்கன் சுவாங்கிரய், கொலம்பிய அரசியலாளர் இங்கிரிட் பெத்தான்கோர்ட், ஆப்கானிய மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் சீமா சமார். ரஸ்ய மனித உரிமையாளர் ஸ்வெத்லானா கன்னுஷீனா. சீன மனித உரிமை செயற்பாட்டாளர் ஹ ஜியா.

அமைதிக்கான  நோபல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு “யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ” அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

நோபல் பரிசுப் பதக்கம்

ஆல்பிரட் நோபலின் உயிலின்படி இப்பரிசை நோர்வேயின்நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நோர்வேயில் வழங்கப்படுகிறது. நோபல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்இ ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.

இந்தப் பரிசுக்குழுத் தலைவருடன் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் பிரேத்தியமாக அழைத்து சந்தித்து உரையாடியிருந்தோம்.. அதன் போது இத்தெரிவு குறித்த எதிர்ப்புகளை ஒப்புக்கொண்டார். பரிசு அறிவிக்கப்பட்ட தினத்தில் வெளிவந்த மக்கள் கருத்து இத்தெரிவு குறித்த  தமது அதிருப்தியை நோர்வேஜியர்கள் பலர் வெளிக்காட்டி வருவதை வெளிப்படையாக்காண முடிகிறது.

வழமையான நோபல் பரிசுத் தெரிவில் அமெரிக்காவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லையென்றும், ஆனால் நோபல் கமிட்டியில் உள்ளவாகளுள் அரசியல் கருத்துடையவர்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார் நோபல் பரிசுக்குழுத் தலைவர். ஏற்கெனவே 50களில் மகாத்மா காந்திக்கு பரிசு வழங்குவதனை எடுமையாக பிரித்தானியா எதிர்த்ததில் அது ஒத்தி வைக்கப்பட்டதையும் கடந்த வருடம் நோபல் பரிசுக் குழுத் தலைவருடனான உரையாடலின் போது அறிவித்திருந்ததை  குறிப்பிட விரும்புகிறேன்.

சந்திரன் மீது நாசா அனுப்பிய விண்கலம் மோதியது

நிலவில் தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய விண்கலம், சந்திரன் மீது இன்று மோதியது.

சந்திரனின் ஒரு பகுதியில் கோடிக்கணக்கான டன் எடையுள்ள உறை பனி மறைந்து இருப்பதாகவும், அந்த இடத்தை மோதி தகர்த்தால், தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறியலாம் என்ற நாசா விஞ்ஞானிகள் கருதினர்.

இதனையடுத்து 2.2 டன் எடையுள்ள காலி விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி வைத்தனர்.அதனுடன் கலர் கேமராக்கள் இணைந்த `எல்.சி.ஆர்.ஓ.எஸ்.எஸ்’ என்ற செயற்கைக்கோளையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நாசா அனுப்பிவைத்த அந்த விண்கலம் சந்திரனின் தென்துருவத்தின் மீது இன்று மாலை பலமாக மோதியது.

இதனைத் தொடர்ந்து நிலவில் தண்ணீர் உள்ளதா,இல்லையா என்பது இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் தெரிய வரும் என நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நியூஸிலாந்திலும் பிலிப்பைன்ஸிலும் இன்று காலை பயங்கர நிலநடுக்கம்

நியுஸிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. சான்டோ தீவிலிருந்து வடமேற்கே 294 கி.மீட்டரிலும் போர்ட்விலாவிலிருந்து வடமேற்கே 598 கி.மீ. தொலைவிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
 
நில நடுக்கம் உணரப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவானது. இதனால் ஆஸ்திரேலியாää நியுஸிலாந்துää பிஜி உள்ளிட்ட 11 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நில நடுக்கம் காரணமாக பல இடங்களில் தகவல் துண்டிக்கப்பட்டுள்ளதால் சேத விபரம் குறித்து அறிவதில் சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை பிலிப்பைன்சிலும் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகி உள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நில நடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை

செக் பிரதமர் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்

081009_confap.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் பணிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் லிஸ்பன் உடன்படிக்கையை அங்கீகரிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தமது நாட்டில் உள்ளதாக செக் பிரதமர் யான் பிஷ்ஷர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த உடன்படிக்கை செக் நாட்டால் அங்கீகரிக்கப்படும் என்று தான் நம்புவதாக செக் நாட்டின் பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் ஜொஸ் மேனுவல் பரோசோவை சந்தித்துப் பேசிய பிறகு கூறியுள்ளார்.

இந்த உடன்படிக்கைக்கு செக் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் செக் அதிபர் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் ஒப்புதல் அளித்த பிறகுதான் லிஸ்பன் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.

லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகளை விளக்க கடாபி இன்று விசேட உரை

லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகளை விளக்கும் வகையில் ஜனாதிபதி முஹம்மர் கடாபி விசேட உரையாற்ற வுள்ளார். அரச உயரதிகாரிகள் இந்த படை தளபதிகள் பொலிஸ் உயரதிகாரிகள் வைபவத்தில் பங்கேற்கவுள்ளனர்.

சுமார் ஆயிரம் பேர் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை இந்த விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளது. லிபிய ஜனாதிபதி முஹம்மர் கடாபியின் உரை மரபுரியாக இருக்குமென சிலரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளதாகச் சிலரும் கூறுகின்றனர். லிபியாவின் நாற்பதாவது சுதந்திர தினம் செப்டெம்பர் 01ம் திகதி கொண்டாடப்பட்டது.

அங்கு உரையாற்றிய கடாபி லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்து உரையாற்றவில்லை. இது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையளித்தது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு கடாபி உள்நாட்டு கொள்கைகளை விளக்கவுள்ளார்.

மேற்கு நாடுகளின் நெருக்குதல், அழுத்தங்களுக்குட்படாத லிபியாவையே கடாபி விரும்புகின்றார். தென்னமெரிக்க நாடுகளுடன் ஆபிரிக்க நாடுகளையும் இணைத்து பொதுவான அணியை உருவாக்குதல், ஏகாதிபத்திய வாதத்துக்கெதிராக செயற்படல் என்பன கடாபியின் முக்கிய நோக்கம்.

எரிபொருட்களூடாகப் பெறும் வருமானங்களை உள்நாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தவும் அரச அதிகாரிகள் நிறுவனங்களிடையே நிலவும் ஊழல், குறைபாடுகளைக் களையவும் கடாபி கொள்கை வகுப்பார்.