இலங் கையின் புதிய அமைச்சரவை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுள்ளது. இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் மொத்தம் 60 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதில் பிரதமருடன் இணைத்து 10 சிரேஸ்ட அமைச்சர்களும் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுமாக 60 அமைச்சர்களும், 31 பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
அமைச்சுப் பொறுப்புகளை சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றுமாறும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
பத்துப்பதினைந்து வாகனங்களை வைத்துக்கொண்டு மக்களை விட்டும் தூரமாகிச் செயற்படவேண்டாமெனவும், அமைச்சுப் பொறுப்புகளை சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றுமாறும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தலை விடுத்தார்.
.திங்கட்கிழமை (22.11.2010) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தையடுத்து அமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்ட அறிவுறுத்தல்களை விடுத்தார்.
அமைச்சர்கள் பதவியேற்று முடிந்தவுடன் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் விதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையை நிகழ்த்திய உரையில் கூறியதாவது;
இன்றைய அமைச்சரவைக்கு பல புதிய முகங்களை நான் அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். மூத்தவர்கள் சிலரை சிரேஷ்ட அமைச்சர்களாக நியமித்து கௌரவமளித்துள்ளேன். அவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டிய கடப்பாடு எம்மிடம் காணப்படுவதாலேயே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன்.நாட்டுமக்கள் எம்மீது நம்பிக்கைவைத்து ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் உரிய முறையில் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
பயங்கரவாதத்தில் சிக்கியிருந்த நாட்டை நீண்டகால போராட்டத்தின் பின்னர் மீட்டெடுத்து பிளவுபட்டிருந்த தேசத்தை ஒரே நாடாக கட்டியெழுப்பியுள்ளோம். இப்போது ஒரேநாடாக ஒன்றுபடுத்தியுள்ளோம். இனிமேல் எம்மீதுள்ள பாரிய பொறுப்பு நாட்டை அபிவிருத்தி செய்து முன்னேற்றத்தின் பக்கம் கொண்டு செல்வதே ஆகும்.
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களிடம் நான் ஒப்படைத்துள்ளேன்.
இந்த அமைச்சுப் பதவிகளை சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்த முனையாதீர்கள். 10,15 வாகனங்களை வைத்துக் கொண்டு அலங்கார ஊர்வலம் செல்ல முற்படாதீர்கள். அப்படிச் செய்ய நீங்கள் முயற்சித்தால் மக்கள் உங்களை நிராகரிக்க தயங்கமாட்டார்கள். மக்களிடமிருந்து தூரமாகும் நிலைக்கு உங்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
வீண்விரயம், ஊழல்,மோசடிகளுக்கு ஒருபோதும் துணைபோக வேண்டாம். அதன் மூலம் உங்களுக்கும், அரசுக்கும் அபகீர்த்தி ஏற்படவாய்ப்பாகிவிடும். அந்த நெருக்கடிநிலை ஏற்பட இடமளிக்கக்கூடாது. உங்கள் கைகளில் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப்பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.
ஏனைய அமைச்சுக்களினதும், அமைச்சர்கள், அதிகாரிகளதும் குறைகளை கண்டுபிடித்து குறைசொல்லித்திரிய நீங்கள் எவரும் முற்படக்கூடாது. அப்படிச்செய்வதன் மூலம் அரசுக்கும், கட்சிக்குமே அபகீர்த்தி ஏற்படலாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நீங்கள் சரிவர நிறைவேற்றினால் எவரிடமும் குறை ஏற்படப்போவதில்லை. நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்த இடமளிக்கக்கூடாது. அரசிலுள்ளவர்களைப் பற்றித் தவறாகப் பேசி எதிரணியினருக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்காதீர்கள்.
நாமனைவரும் ஒன்றுபட்டு ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டி நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்கொண்டு செல்வோம். அதுதான் எம்முன்னுள்ள பிரதான பணியாகும். நாட்டுமக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றவேண்டும். அதனையே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.
நான் இரண்டுபேருக்கு அமைச்சர் பதவி வழங்க அழைத்தபோது அவர்கள் பெருந்தன்மையுடன் என்னிடம் கூறியது அமைச்சுப் பதவி வேண்டாம். பிரதியமைச்சர்களாக எனது அமைச்சுக்களுக்கு நியமிக்குமாறு கோரினர். அவர்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
இந்த நிமிடம் முதல் தேசத்தை வளமாகக்கட்டியெழுப்பும் உறுதிப்பாட்டுடன் தாய்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பாடுபடுவோம். உங்களனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
சிரேஸ்ட அமைச்சர்கள் விபரங்கள்
டி எம் ஜயரத்ன – பிரதமர், புத்த சாசன மத விவகார அமைச்சர்
ரட்னசிறி விக்கிரமநாயக்க – நல்லாடசி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
டியு குணசேகர – மனிதவள சிரேஷ்ட அமைச்சு
அதாவுத செனவிரட்ன – கிராமிய விவகார சிரேஷ்ட அமைச்சு
பி.தயாரட்ன, – உணவு மற்றும் போஷாக்குத்துறை
ஏ எச் எம் பௌஸி – நகர செயற்பாடுகள்
எஸ் பி நாவின்ன, – நுகர்வோர் சேமநலன்
பியசேன கமகே – தேசிய வளங்கள் சிரேஷ்ட அமைச்சர்
திஸ்ஸ விதாரண – விஞஞான விவகாரம்
சரத் அமுனுகம – சர்வதேச நிதி ஒத்துழைப்பு
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 49 போ்
நிமல் சிறிபால டி சில்வா – நீர்வழங்கல்-வடிகால் முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன, – சுகாதார துறை
சுசில் பிரேம்ஜயந்த – கனியவளதுறை
ஆறுமுகன் தொண்டமான் – கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன – நீர்வழங்கல் துறை
டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்
ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, – உள்ளுராட்சி – மாகாணசபை
ரிசாத் பதியுதீன், – கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
பாடலி சம்பிக ரணவக்க – மின்சக்தி சக்திவலுத்துறை
விமல் வீரசங்ச – நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு, பொதுவசதிகள்
ரவூப் ஹக்கீம், – நீதித்துறை
பசில் ராஜபக்ச – பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார – தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க – உயர் கல்வி
ஜி எல் பீரிஸ் – வெளிவிவகாரம்
டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன – அரசநிர்வாக – உள்நாட்டலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன – நாடாளுமன்ற விவகாரம்
ஜீவன் குமாரதுங்க – அஞ்சல்துறை
பவித்ரா வன்னியாராச்சி – தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி
அநுர பிரியதர்சன யாப்பா – சுற்றாடல் துறை
திஸ்ஸ கரலியத்த – சிறுவர் அபிவிருத்தி> மகளிர் விவகாரம்
காமினி லொகுகே – தொழில் மற்றும் தொழிலுறவு
பந்துல குணவர்த்தன – கல்வி
மஹிந்த சமரசிங்க – பெருந்தோட்டத்துறை
ராஜித சேனாரத்ன – மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி
ஜனக பண்டார தென்னகோன் – காணி மற்றும் காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா – சமூக சேவைகள்
சி.பி.ரட்னாயக்க – தனியார் போக்குவரத்து சேவை
மஹிந்த யாப்பா அபேவர்தன – விவசாயத்துறை
கெஹலிய ரம்புக்வெல்ல – ஊடக மற்றும் செய்தித்துறை
குமார வெல்கம – போக்குவரத்து
டளஸ் அழகப்பெரும – இளைஞர் விவகார, திறன் மேம்பாட்டு
ஜோன்ஸ்டன் பர்ணான்டோ – கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
சந்திரசிறி கஜதீர – புனருத்தாபன, சிறைச்சாலை சீரமைப்பு
சாலிந்த திஸாநாயக்க – தேசிய வைத்திய துறை
ரெஜினோல்ட் குரே – சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி
டிலான் பெரேரா – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி
ஜகத் புஸ்பகுமார – தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி
ரி.பி.ஏக்கநாயக்க – கலாசார மற்றும் கலைவிவகாரம்
மஹிந்த அமரவீர – அனர்த்த முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன – விவசாய சேவை மற்றும் வனவிலங்கு
குணரத்ன வீரக்கோன் – மீள்குடியேற்றதுறை
மேர்வின் சில்வா – மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் விவகாரம்
மஹிந்தானந்த அளுத்கமகே – விளையாட்டுத்துறை
தயாஸ்ரீ த திசேரா – அரச வள மற்றும் தொழில்துறை அபிவிருத்தி
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பம்
ஜகத் பாலசூரிய – தேசிய மரபுரிமைகள்
லக்ஷ்மன் செனவிரட்ன – உற்பத்தி திறன் அபிவிருத்தி
நவின் திசாநாயக்க – அரச முகாமைத்து மீளமைப்பு
பிரியங்கர ஜயரட்ன – சிவில் விமான சேவைகள்
பிரதியமைச்சர்கள்
சுசந்த புஞ்சி நிலமே – மீன்பிடி, நீர்வளத்துறை
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – பொருளாதார அபிவிருத்தி
ரோஹித்த அபேகுணவர்தன – துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பண்டு பண்டாரநாயக்க – தேசிய வைத்திய துறை
ஜயரத்ன ஹேரத் – கைத்தொழில், வர்த்தகவிவகாரம்
துமிந்த திஸாநாயக்க – இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி
லசந்த அழகியவண்ண – நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரோஹண திசாயக்க – போக்குவரத்து
எச்,ஆர்.மித்ரபால – கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
நிர்மல கொத்தலாவல – துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பிரேமலால் ஜயசேகர – மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை
கீதாஞ்சன குணவர்தன – நிதி மற்றும் திட்டமிடல்
விநாயகமூர்த்தி முரளிதரன் – மீள்குடியேற்றம்
பைசர் முஸ்தபா – தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி
இந்திக பண்டாரநாயக்க – உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள்
முத்துசிவலிங்கம் – பொருளாதார அபிவிருத்தி
சிறிபால கம்லத் – காணி மற்றும் காணி அபிவிருத்தி
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க – வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம்
சந்திரசிறி சூரிய ஆராயச்சி – சமூகசேவைகள்
நந்திமித்ர ஏக்கநாயக்க – உயர்கல்வி
நிரூபமா ராஜபக்ஷ – நீர்வழங்கல் துறை
லலித் திசாநாயக்க – சுகாதாரம்
சரண குணவர்தன – கனியவள தொழில்துறை
காமினி விஜித் விஜயமுனி சொய்சா – கல்வித்துறை
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்
வீரகுமார திசாநாயக்க – பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர்
ஏ.டி.எஸ்.குணவர்தன – புத்த சாசன மதவிவகார
ஏர்ல் குணசேகர – பெருந்தோட்டதுறை
பசிர் ஷேகுதாவுத் – கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
அப்துல் காதர் – சுற்றாடல்
டுலிப் விஜேசேகர – அனர்த்த முகாமைத்துவம்
பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலாளர்களில் மாற்றமில்லை
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று ஜனாதிபதியின் செயலாளராக லலித் வீரதுங்க தொடர்ந்து செயற்படுவார்.