“தனித் தனியான தேசியவாதங்கள் தலைதூக்கியிருக்கின்ற இன்றைய நிலையில் இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கு கூட்டுத் தேசியவாதக் கோட்பாடு அவசியம் என்ற நிலையிலேயே அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கிறது.” என மு. கா. தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பiர் சேகு தாவூத் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், “இன்று நாட்டில் சிங்களத் தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், முஸ்லிம் தேசிய வாதம் என தேசியவாதம் முரண்பட்டுக் கிடக்கின்றது. இன்று வன்முறை ஒழிக்கப்பட்டிருக்கிறதேயொழிய, தேசியவாத முரண்பாடுகள் ஒழியவில்லை.
இந்த நிலையில் அனைத்து மக்களையும் சேர்த்து கூட்டுத் தேசியவாத சிந்தனையோடு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இதனைக் கருத்திற் கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் அரசை ஆதரிக்க முன்வந்திருக்கிறது” என்றார் பiர் சேகுதாவூத்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்தது. சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை ஏற் பட்டிருக்கிறது. இதனால் அவர் 13வது திருத்தத்திற்கும் மேலாகச் (13+) சென்று சிறுபான்மையினர் நலன் பேண ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்துள்ளது. இதனையும் கருத்தில் கொண்டே நாம் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளோம் எனவும் பiர் சேகுதாவூத் சுட்டிக்காட்டினார்.