அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மூதூரில் ஐ.நாவின் புல்டோசர் கண்ணி வெடியில் சிக்கியது!

மூதூரில் நேற்று (Aug 24 2010) இடம்பெற்ற கண்டிவெடிச் சம்பவத்தில் ‘புல்டோசர்’ ஒன்று சேதமடைந்துள்ளது. திருகோணமலை மாவட்டம் மூதூர் தோப்பூர் பகுதியில் ஐ.நா. அபிவிருத்திட்டத்தின் கீழ் கணிகளைத் துப்புரவாக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அப்பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த ‘புல்டோசர்’ கண்ணிவெடியில் சிக்கி சேதமானது.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து ஐ.நா.வின் அப்பணி இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காணியில் அகற்றப்படாத நிலையிலிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் 2 இலட்சம் வீடமைப்புத் திட்டம்: – முத்துசிவலிங்கம்

sri-lanka.jpgமலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்க கால்நடை அபிவிருத்தி கிராமிய சமுதாய அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இதன் ஆரம்ப நடவடிக்கையாக 300 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மலையகப் பெருந் தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு வீடமைப்பிற்காக இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் 4 இலட்சத்து நாற்பதினாயிரம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேபியின் குற்றச்சாட்டை வைகோ மறுப்பு

இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கே.பி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார் வை.கோ,

மாந்தை தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள் முதல் கற்கை நெறிகள் ஆரம்பம்

kilinochchi-district.jpgவன்னிப் பிரதேசத்தில் மீளக் குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கவென பத்து தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் மாந்தை கிழக்கு தொழிற் பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 30ம் திகதி தொழிற் பயிற்சி கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னிப் பிரதேச பணிப்பாளர் ரீ. வினோதராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :- பத்து தொழிற்பயிற்சி நிலையங்களினதும் நிர்மாணப் பணிகளை இம்மாதமே பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்ப ட்டிருந்தது. இருப்பினும் மாந்தை கிழக்கில் அமைக்கப்பட்டுளள் தொழிற் பயிற்சி நிலையத்தின் அமைப்புப் பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன. அதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிற் பயிற்சி கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

இப்பயிற்சி நிலையத்தில் அலுமினிய இணைப்பு மற்றும் இலத்திரனியல் வயரிங்க ஆகிய கற்கை நெறிகள் முதலில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.  ஒரு கற்கை நெறிக்கு முப்பது பேர் என்ற அடிப்படையில் இளைஞர், யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படுகின்ற மூன்று தொழிற் பயிற்சி நிலையங்களிலும் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கற்கை நெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு நேர்முகப் பரீட்சைகள் நிறைவுற்றுள்ளன. மன்னார் மற்றும் வவுனியாவில் அமைக்கப்படும் நிலையங்களுக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு தற்போது நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 2 தமிழர்கள் மேன்முறையீடு

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இரு தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக இருப்பதற்கான தமது கோரிக்கையை கையாண்ட விதம் நீதியற்றது எனத் தெரிவித்து அவர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர். தமது புகலிடக் கோரிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு அவர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவில் 2009 அக்டோபரில் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடைய புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக குடிவரவுத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதனால் அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் நிலைமையை எதிர்கொண்டிருந்தனர். எம்61, எம்69 என்று மட்டுமே இந்த இருவரும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களின் வழக்குகளைத் தனிப்பட்ட முறையில் பரிசீலனைக்கு எடுக்க குடிவரவுத்துறை அமைச்சர் தவறிவிட்டதாகவும் நடைமுறை ரீதியில் பல குறைபாடுகள் இருந்ததாகவும் அகதிகள் மற்றும் குடிவரவு சட்ட நிலையத்தைச் சேர்ந்த டேவிட் மானே கூறியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெற் செய்கை

paddy.jpgவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அதிக நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவது எதிர்வரும் பெரும் போகத்தின் போதேயாகும், என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார, வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் இருந்து கிடைத்த 6500 மில்லியன் ரூபா நிதி விவசாயத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன்படி இப்போது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நெற் செய்கைக்கான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேற்படி 5 மாவட்டங்களிலும் சிறிய நீர்ப்பாசன வசதிகள் திருத்தப்பட் டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் 13 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இம்முறை நெற் செய்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் 900 ஏக்கர் நெற் செய்கைக்கு தயார் நிலையில் உள்ளது.

மன்னாரில் நடமாடும் சேவையை நடத்த பணிப்பு

மன்னார் மாவட்ட மக்களுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நடமாடும் சேவையொன்றை உடனடியாக நடத்துமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னார் அரசாங்க அதிபர் நிக்கிலஸ்பிள்ளைக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மாவட்டத்தில் மீள் குடியேறியுள்ளோர் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், பிறப்பு – இறப்பு மற்றும் தனிப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களின்றி பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதால் அவர்கள் ஒரே கூரையின் கீழ் இந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விரைவில் நடமாடும் சேவையொன்றை நடத்துமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இலவச பாட நூல் விநியோகம் இன்று – ஹோமாகம புதிய களஞ்சியசாலையில் வைபவம்

books.jpg2011ம் கல்வியாண்டுக்குரிய அரசாங்கப் பாடசாலைகளுக்கான இலவச பாடநூல் விநியோகம் ஹோமாகமையில் இன்று ஆரம்பமாகுமென கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார். இலவச பாடநூல்களுக்காக அரசாங்கம் 2700 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சகல அரச பாடசாலைகள், பிரிவேனாக்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக 25 மில்லியன் பாட நூல்கள் அச்சிடப்பட்டு வருவதுடன் இவை 364 வகையான பாடநூல்களாகு மெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பணிப்பாளரும் பிரதி பரீட்சைகள் ஆணையாளருமான புஷ்பகுமார தெரிவிக்கையில் :- கல்வி வெளியீட்டுத் திணைக்களமானது இம்முறை இலவச பாடநூல்களைக் களஞ்சியப்படுத்துவதற்காக ஹோமாகமயில் புதிய நூல் களஞ்சியசாலையொன்றை நிர்மாணித்துள்ளது. பாடநூல்கள் அச்சிடப்படும் வேளையிலேயே பாடநூல்கள் விநியோகப் பணிகளும் ஆரம்பமாகியுள்ளது.

கல்வியமைச்சானது சலுசல நிறுவனத்தி ற்குச் சொந்தமான களஞ்சிய சாலையிலேயே பாடநூல்களைக் களஞ்சியப்படுத்தி வந்துள்ளது. இம்முறை இரண்டரைக் கோடி ரூபா செலவில் ஹோமாகமையில் புதிதாக நிர்மாணிக்கப்ப ட்டுள்ள களஞ்சிய சாலையில் பாடநூல்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு அங்கிருந்து விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன.

இக்களஞ்சியசாலை முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் களஞ்சிய சாலைகளுக்காக செலவிடப்படும் பல இலட்ச ரூபாய்களை மீதப்படுத்த முடியும் என கல்வியமைச்சு தெரிவிக்கின்றது. இன்று 25ம் திகதி ஆரம்பமாகும் பாடநூல் விநியோக நடவடிக்கைகள் டிசம்பர் 12ம் திகதியுடன் நிறைவுறும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வட பகுதி கடலில் சிறிய தாழமுக்கம்

இலங்கையின் வட பகுதிக் கட லில் இந்தியாவுக்கு அருகே சிறிய தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை தாய்லாந்து கடலில் சூறாவளி உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இவற்றின் விளைவாக அடுத்து வரும் சில தினங்களுக்கு இலங்கையில் கடும் காற்று வீசும் எனவும் அவர் குறிப்பிட்டார்

வட வகுதி கடலில் உருவாகியு ள்ள சிறிய தாழமுக்கம் மற்றும் தாய் லாந்து கடலில் காணப்படும் சூறா வளி என்பனவற்றின் காற்று வீசும் திசை இலங்கை ஊடாக அமைந்திருப்பதாலேயே காற்றின் வேகம் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படும் எனவும் அவர் கூறினார்.

இலங்கையின் வட பகுதி கடலில் 300 – 400 கிலோ மீட்டர் தூரத்தில் இச் சிறிய தாழ்முக்கம் உருவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு எதுவிதப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையைக் கண்டித்து தி.மு.க. தீர்மானம்

karuna-nithy.jpgஇலங் கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குத் துரிதமாகப் புனர்வாழ்வளிப்பதற்குரிய பொருத்தமான வழிமுறையைக் கண்டறியுமாறு இந்திய மத்திய அரசாங்கத்தைத் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியிருக்கிறது.

தி.மு.க.வின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றபோது இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வு தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் புனர்வாழ்வு விடயத்தில் தாமதம் காட்டப்படுவதாக இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதேவேளை, கூட்டத்தின் பின் நிருபர்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி, வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தன்னை சமீபத்தில் சந்தித்தபோது தூதுக்குழு அல்லது விசேட தூதுவர் ஒருவர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறினார். இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காகத் தூதுக்குழுவை அல்லது விசேட தூதுவரை அனுப்பவுள்ளதாக உறுதியளித்திருந்ததாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

இதேவேளை, பொருட்கள், சேவைகள் வரி மற்றும் மருத்துவ கல்லூரி அனுமதிக்கு பொது நுழைவுப் பரீட்சை நடத்தும் யோசனை என்பவற்றுக்கும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.