நோர்வேயில் நடந்தது முடிந்த தேர்தலில் தொழிலாளர்கட்சி (AP – 35.5% votes – 64 Seats) சோசலிச இடதுசாரி (SV – 6.1% votes – 11 seats) மற்றும் மைய கட்சி (SP – 6.2% votes – 11 seats) ஆகிய கட்சிகளின் கூட்டு ( 86 ஆசனங்கள்) மூன்றே மூன்று ஆசனங்களால் மட்டுமே பெரும்பான்மையை பெற்றுள்ளது. இக்கூட்டரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகள் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இக்கூட்டமைப்பு Red – green Coalition என அழைக்கப்படுகிறது. இடதுசாரிகள் அல்லாத கட்சிகள் 83 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
தொழிலாளர்கட்சி அதிகளவு ஆசனங்களைப் பெற்றுள்ளது, அதேவேளை சோசலிச இடதுசாரி தனது ஆசனங்கள் சிலவற்றை இழந்து சென்ற தேர்தலை விட குறைந்த பிரதிநிதிகளை பெற்றுள்ளது.
வலதுசாரி (17.2% votes – 30 seats), மற்றும் முன்னேற்றக்கட்சி (22.9% votes – 41 seats) ஆகிய இரு கட்சிகளும் சென்ற தேர்தலை விட அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தன. கிறிஸ்ரியன் டெமொகிரட்டிக் கட்சி 5.5 வித வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை வென்றுள்ளது.
லிபிரல் லெப்ற் கட்சி 3.8 வீத வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை மட்டும் வென்றுள்ளது. செப் 14 நடைபெற்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை இக்கட்சி சந்தித்து உள்ளது.
தனது வாழ்க்கை காலத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு பாராளுமன்றத்தில் கட்சிகள் தெளிவான பிரிவுத் தொகுதிகளாக பிரிந்து நிற்பதான தோற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், தற்போதுள்ள பாராளுமன்றம் பிரித்தானிய பாராளுமன்றத்தையொத்த அரசியல் கொள்கைகள் தொடர்பாக பாரிய இடைவெளி கொண்ட ஒரு செஞ்தொகுதி மற்றும் ஒரு நீல தொகுதியை ஒத்ததாக காணப்படுவதாக பேர்கன் பல்கலைக்கழக பேராசியர் Frank Aarebrot தெரிவித்துள்ளார்.
நோர்வே பாராளுமன்றத்தில் 39 வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்லின சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பிளரும் அங்கு தெரிவு செய்யப்பட்டு உள்ளார்.
73.8 வீதமான மக்கள் வாக்களித்துள்ள இத்தேர்தலே 1927க்குப் பின் குறைந்த அளவு மக்கள் வாக்களித்த தேர்தலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வி உட்பட்ட பொதுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நேர்வெயின் வட மேற்குக் கரையோரப் பகுதிகளில் பெற்றோலிய மற்றும் எரிவாயு ஆகியவற்றின் அகழ்வு பற்றிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. முன்னெற்றக் கட்சி குடிவரவு விதிகளை இறுக்கமாக்கும்படி கேட்டிருந்தது.