வன்னியில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் அகப்பட்டு ஒருசிறிய பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையான மக்கள் தவிக்கும் இக்காலத்தில் இம் மக்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்த லண்டனில் ஒழுங்கு செய்ய்பட்டடுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTF) ஒழுங்கு செய்துள்ள போதிலும் இதில் தமிழ் மக்களின் தர்மீக போராட்டத்தை ஆதரிக்கும் பெரும்பாலான மக்களும் அமைப்புக்களும், இயக்கங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த காலங்களில் லண்டனில் நடைபெற்ற பல பொதுவான தமிழ்ரகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தமிழர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடும்படி கேட்டுக் கொண்டபோதும் இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் புலிகளின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களகவும் புலிகள் மட்டும் தனித்த ஏகபோக தலைமை என்ற அங்கீகாரம் கேட்கும் கூட்டங்களாகவே அமைந்திருந்தது. அப்படி ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் எந்தவித பலாபலனும் கிடைக்காமல் போனதும் புலம் பெயர்வாழ்வின் வரலாறாகிவிட்டதை நாம் மறந்துவிட முடியாது.
குறைந்தபட்சம் 40 பேர் கூடும் ஆர்ப்பாட்டங்களை BBC – ITV பெரிய செய்திகளாக்கி தேசிய தொலைக்காட்சில் வெளிப்படுத்தி கொடுக்கும் ஆதரவின் ஒரு துளியைக் கூட 50,000 தமிழ் மக்கள் பங்கேடுத்து நடாத்தும் போராட்டங்களுக்கு கொடுக்காததின் உண்மையை விளங்க முன்வர வேண்டும்.
இப்டியான ஆர்ப்பாட்டங்களில் ஒன்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக கடந்த ஆண்டு யூனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம். இதன் போது எல்லோரும் வருகை தாருங்கள், பழையதை மறவுங்கள், தமிழர்கள் ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொண்டு வாருங்கள் என்றெல்லாம் அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் நடந்த பல சம்பவங்களினால் அதன் பலாபலனை சரியாக வெளிக் கொணர முடியாது போனதும் நாம் தெரிந்து கொண்டதொன்றே. இப்படியான சம்பவங்களக்கு BTF தரும் விளக்கங்களும் வழமைபோல யாரோ வாறாங்கள், என்னவோ செய்யிறாங்கள் அதற்கும் எமக்கும் தொடர்பில்லை என்ற பொறுப்பற்ற பதிலாகும்.
ஏதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலம் அப்படியான சம்பவங்களை எதிர்பார்துள்ள போதிலும் தமது சுதந்திரமின்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிர்ப்பந்தத்திலிருந்து அம் மக்கள் வெளியே அனுமதிக்கும் படியான நிர்ப்பந்தத்தை அடக்குபவர்கள் மீது செலத்தும் நிகழ்வாகவும் அக்கோரிக்கையில் அம்மக்கள் வெற்றி கொள்ளும் படியாகவும் அமைய வேண்டும்.
போர்ச் சூழலில் வன்னி மக்கள் மிகக் குறைந்த பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையாக மிகசெறிவாக வாழ்வது மரணங்களையும் அதிகரிக்வே செய்யும். இந்த மக்களை விடுவிக்கக் கோருவதும் யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் மிகவும் முக்கியமான விடயம். இன்று வன்னியில் ஏற்ப்பட்டுள்ள மிக இக்கட்டான சூழநிலைகளைப் பயன்படுத்தி புலிகள் தமது ஏகபோக பிரதிதநிதித்துவம் பெறுவதற்கு இவற்றை பயன்படுத்தக் கூடாது. இந்த விடயத்தில் எல்லா தமிழர்க்கும் பொதுவானதாகச் செயற்படுவதாகக் கூறும் பிரிட்டிஸ் தமிழ் போரம் (BTF) இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடந்த சில நாட்களாக வன்னி மக்களுக்காக நடைபெற்ற இப்படியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இந்த மக்களின் பிரதிபலிப்புக்கு மேலாக அந்த அந்த ஆர்ப்பாட்டங்களில் பறக்கவிடப்படும் புலிகளின் கொடிகளும் படங்களும் புலிகளுக்கு அங்கீகாரம் தேடும் மற்றும் புலிகளே ஏகபோக பிரதிநிதித்துவம் பெறும் நிகழ்வாக நடைபெறுவது அவதானிக்கப்படுகிறது. வன்னி மக்களின் பரிதாபகரமான நிலையில் அவர்களின் பரிதாபத்தில் அவர்களின் துன்பத்தில் அவர்களின் உதவிகளற்ற மரண அனுதாபத்தை புலிகளின் தேவைகளுக்கு பாவித்துவிடக் கூடாது. இப்படி செய்யப்படுவதன் மூலம் பெறவேண்டிய பலனை இந்த நிகழ்வு பெறாது போய்விடும்.
புலிகளுக்கு அங்கீகாரம் பெறும் அல்லது புலிகளுக்கு ஏகபோக பிரநிதித்துவம் பெற தனிப்பட்ட தனியான ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதே சாலப் பொருத்தமானதும் அதற்குரிய பலனை பெறக் கூடியதும் ஆகும்.
யாழ்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோதும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஏற்பபாடு செய்து விட்டு ஏற்பாட்டாளர்கள் புலிகளின் கொடியையும் படங்களையும் வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது நினைவிருக்கலாம். அந்த ஆர்பாட்டம் மிகச்சிறிய சலசலப்பைக் கூட ஜரோப்பிய நாடுகளில் ஏற்பபடுத்தாது போனதும் நினைவிருக்கலாம்.
கடந்த காலத்தில் போராட்ட அணுகு முறைகளிலும் மனிதாபிமான நடத்தைகளிலும் எற்ப்பட்ட தவறுகளே இன்று தமிழ் மக்களின் அரசியற் தீர்விற்கான பாதையற்றுப் போன காரணங்களாகும். இப்படியான தவறுகளை தொடர்ந்தும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.
நாளை (ஜனவரி 31) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அந்த வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருத்தல் வேண்டுமே ஒழிய புலிகளின் பிரதி நிதித்துவத்திற்கு அங்கீகாரம் கேட்பதாக இருக்கமாயின் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் நோக்கத்தை அடைய முடியாத போய்விடும். இதுவும் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் போலவே பிரயோசனம் அற்றதாகிவிடும்.
இந்த வாரம் வெளிவந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின், ஜக்கிய நாடுகளின் மன்றத்தின் அறிக்கைகள் யாவும் இதுவரையில் விடுதலைப் புலிகள் முக்கியமாகவும், இலங்கை அரசும் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருப்பதாகவும், காயமடைந்த குழந்தைகள், வயோதிபர்களின் மக்களின் வெளியேற்றத்திற்கு தடையாக இருப்பதாயும் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும் இந்த இருதரப்பினரையும் (விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும்) வன்னி மக்கள் மீதுள்ள தடைகளை நீக்க கோரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும் அம் மக்கள் பலன்பெற வேண்டும்.
யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு வன்னி மக்களை சுதந்திரமாக செயற்ப்பட புலிகளும் அரசும் அனுமதிக்க வேண்டும்.
.
ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்:
STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS
MASS PROTEST MARCH
on
SATURDAY, 31st JANUARY 2009
in
Central London
Begins 1:00 PM at MILLBANK
(Nearest station Vauxhall or Pimlico)