04

04

கருணா அம்மானின் சுதந்திர தின செய்தி

karuna-mp.jpgஇந்தத் தேசத்தை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் ஆர்வமும் ஆற்றலும் கொண்ட சமூகத்தை பரந்து பட்ட சகோதர உணர்வுடன் கட்டி எழுப்பும் தேவைப்பாடு எமக்குண்டு.

கிழக்கு மக்கள் விடுவிக்கப்பட்டதை போன்று வன்னி மக்களும் பயங்கரவாதத்தின் இரும்பு பிடிக்குள் இருந்து விடுதலைப்பெற்று நிலையான சமதானமும் நல்லிணக்கமும் மலர இந்த 61வது சுதந்திர தினத்தில் நாம் இன மத மொழி பேதங்களின்றி ஒன்று படுவோமாக. சரியான அரசுத் தலைமை எமக்குக் கிடைத்துள்ளதால் நல்லெண்ணம் மதிநுட்பத்துடன் எமது பிரச்சனைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிக்க வழி ஏற்பட்டுள்ளது கடந்த வருடம் பல சவால்கள் நிறைந்த வருடமாகும் சமூதாய ரீதியில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாதத்திற்கெதிராக நாம் எல்லோரும் ஒரே நாடு ஒரே கொடி என்ற உணர்வை வெளிக்கொணரும் கடப்பாட்டில் இருக்கின்றோம்

இந்தியா உள்ளிட்ட ஏனைய சர்வதேச நாடுகளுடன் இறுக்கமான நட்புறவையும் கூட்டுத் தொடர்புகளையும் பேணிவருகின்ற இலங்கை சோசலிச குடியரசு பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் அதே வேளையில் இலங்கையின் ஜக்கியம் இறைமை பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணி பாதுகாப்பதோடு எல்லா சமூகங்களின் சுதந்திர உரிமைகளையும் நீதியான அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மக்கள் அபிவிருத்தி கிராம அபிவிருத்தி நகர அபிவிருத்தி மாவட்ட அபிவிருத்தி என்று பயணிக்க நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த எல்லோரும் பங்காளிகளாக இருந்து செயற்படுவோமாக…

பாராளுமன்ற உறுப்பினர்.
கருணா அம்மான்

தமிழகம் முழுவதும் இன்று பெரும்பாலான பகுதிகளில் பந்த்

tamilnadu-040209.jpgஇலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடந்து வரும் பந்த்துக்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்துள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பந்த் கிட்டத்தட்ட முழு அளவில் உள்ளது. பஸ்கள், ரயில்கள் மட்டும் ஓடுகின்றன. இந்த பந்த் சட்டவிரோதம் இல்லை, தடை செய்ய முடியாது என நேற்று மாலை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது.

இன்று காலை பந்த் தொடங்கியது முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏஐடியூசியின் கீழ் வரும் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் பெருமளவில் ஓடவில்லை. இருப்பினும், பஸ், ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. பலத்த பாதுகாப்பு அவற்றுக்குத் தரப்பட்டுள்ளது. பந்த் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை- புளியரை இடையிலான ஒரு அரசுப் பேருந்து கல்வீசித் தாக்கி சேதப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

திருப்பூரில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். 5000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூட்பட்டுள்ளன.வேலூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரனின் அலுவலகம் கல் வீசித் தாக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸார் சாலை மறியல் செய்தனர். வேலூரில் பெல் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையி்ல் உயர்நீதிமன்றம் முன்பு திறந்திருந்த சைக்கிள் கடையை சிலர் கல்வீசித் தாக்கி மூட வைத்தனர். திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ உலகநாதன் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பூந்தோட்டம், நன்னிலம், கொரடாச்சேரி, மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். நன்னிலம் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. பத்மாவதி தலைமையில் 100 பேர் பஸ்மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதேபோல் மன்னார்குடி கீழ்பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டு பஸ் மறியல் செய்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பந்த் போராட்டத்திற்கு கணிசமான அளவில் ஆதரவு காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடிய இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாக கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்..

இதற்கிடையே பந்த் நடத்துவது சட்டவிரோதமானது என்று கட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளார். அதில், பிப்ரவரி 4-ம் தேதியன்று இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தங்கள் கட்சியின் பெயரால் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். எந்த நோக்கத்திற்காக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டாலும், அதை நடத்தக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அது தொடர்பாக இப்போதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். இந்த விவரங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.

இப்போது நீங்கள் நடத்துவதாக அழைப்பு விடுத்திருக்கும் முழு அடைப்பு என்பதன் நோக்கம் நல்ல நோக்கத்தை முன்னிட்டு என்று இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு முழு அடைப்பு நடத்துவதையே சட்ட மீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தியிருப்பதாலும், அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடியாதிருக்கும் நிலையில், நீங்கள் அறிவித்துள்ள 4-ந் தேதி முழு அடைப்பு சட்ட விரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதி முகாமில் கருப்புக் கொடி..

பாவூர் சத்திரம் இலங்கை அகதிகள் முகாமில் இன்று பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேனர் கட்டியுள்ளனர்.

எல்ரிரிஈ ஆயுதங்களைக் கைவிட்டு அரசின் பொதுமன்னிப்பை ஏற்க வேண்டும் – ரோக்கியோ இணைத் தலைமைகளின் அறிக்கை

03022009.jpgரோக்கியோ இணைத் தலைமைகள் (நோர்வே ஜப்பான் யுஎஸ் ஈயு) வடக்கு இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் சிக்கியுள்ள உள்ளே இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பாக மிகுந்த கரிசனை கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள துப்பாக்கிப் பிரயோகம் தவிர்க்கப்பட்ட பகுதிகளுள் அல்லது மருத்துவமனை (மற்றும் மருத்துவ கட்டமைப்புகள்) உள்ள பகுதிகளுள் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நடத்த வேண்டம் என்று இணைத்தலைமைகள் கேட்கின்றது. அங்கு 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் இன்னும் ஆயிரக் கணக்கானவர்கள் அங்கு தஞ்சம் பெறுகின்றனர். உணவு மற்றும் மருத்துவ உதவிகளை யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை அடையச் செய்வதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களை ஐசிஆர்சி வெளியேற்றுவதற்கு அனுமதிக்கும்படி மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கும்படி இரு தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம். எல்ரிரிஈ யும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச மனித உரிமை விதிகளை மதிக்க வேண்டும்.

சிவிலியன்களின் சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதிக்கும்படி எல்ரிரிஈக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் தோல்வி அடைந்துள்ளது. எல்ரிரிஈ தனது கட்டுப்பாட்டில் உள்ள வடக்கின் அனைத்துப் பகுதிகளையும் இழப்பதற்கு அநேகமாக இன்னும் குறுகிய நேரமே உள்ளது. மேலதிக உயிரிழப்புகள் – சிவிலியன்கள் மற்றும் போராளிகள் – எவ்வித பலனையும் அளிக்காது என்பதனை எல்ரிரிஈ யும் இலங்கை அரசாங்கமும் உணர நடந்து கொள்ள வேண்டும்.

மேலதிக சிவிலியன் இழப்புகளை மனித வேதனைகளைத் தவிர்ப்பதற்கு இணைத் தலைமைகள் எல்ரிரிஈ, இலங்கை அரசுடன் கலந்துரையாடி இந்நிலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு ஆயுதங்களைக் கைவிட்டு வன்முறையைக் கைவிட்டு இலங்கை அரசாங்கத்தினுடைய பொது மன்னிப்பை ஏற்று இறுதியான தீர்வைக் காண்பதற்காண செயற்பாடுகளில் அரசியல் கட்சியாகச் செயற்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமும் எல்ரிரியும் தற்காலிகமான தாக்குதல் தவிர்ப்பு பிரதேசம் ஒன்றை அறிவித்து காயப்பட்டவர்களையும் நோயாளிகளையும் சிவிலியன்களையும் வெளியெற அனுமதிக்க வேண்டும். இணைத் தலைமைகள் இலங்கை அரசாங்கம் இந்தியா யுஎன் மறறும் அமைப்புகளுடன் இணைந்து அதனை உறுதிப்படுத்த பணியாற்றும்.

வடக்கில் இருந்து உள்ளே இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். அம்முகாம்களுக்கு யுஎன் ஐசிஆர்சி மனிதாபிமான அமைப்புகள் முழுமையான அனுமதியைக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே இடம்பெயர்ந்த மக்கள் சர்வதேசதரத்தில் நடத்தப்பட வேண்டும். இயலுமான விரைவில் அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் மீளக் குடியமர ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

உள்வாங்கிக்கொள்ளும் பேச்சுவார்த்தை மூலமே அரசியல் தீர்வை ஏற்படுத்தி நிரந்தரமான சமாதானத்தையும் மீளபுரிந்துணர்வையும் அடைய முடியும்.

Statement by the Tokyo Co-Chairs

Colombo, February 3, 2009: The Tokyo Co-Chairs (Norway, Japan, US and EU) jointly express their great concern about the plight of thousands of internally displaced persons trapped by fighting in northern Sri Lanka. The Co-Chairs call on the LTTE and the Government of Sri Lanka not to fire out of or into the no-fire zone established by the Government or in the vicinity of the PTK hospital (or any other medical structure), where more than 500 patients are receiving care and many hundreds more have sought refuge. They also call on both sides to allow food and medical assistance to reach those trapped by fighting, cooperate with the ICRC to facilitate the evacuation of urgent medical cases, and ensure the safety of aid and medical workers. The LTTE and the Government of Sri Lanka must respect international humanitarian law.

International efforts to persuade the LTTE to allow the civilians freedom of movement have failed. There remains probably only a short period of time before the LTTE loses control of all areas in the North. The LTTE and the Government of Sri Lanka should recognize that further loss of life – of civilians and combatants – will serve no cause.

To avoid further civilian casualties and human suffering, the Co-Chairs:

call on the LTTE to discuss with the Government of Sri Lanka the modalities for ending hostilities, including the laying down of arms, renunciation of violence, acceptance of the Government of Sri Lanka’s offer of amnesty; and participating as a political party in a process to achieve a just and lasting political solution and

call on the Government of Sri Lanka and the LTTE to declare a temporary no-fire period to allow for evacuation of sick and wounded, and provision of aid to civilians.
The Co-Chairs will work with the Government of Sri Lanka, India, the United Nations and others to ensure

the internally displaced people from the north are transferred to temporary camps where UN agencies, the ICRC, and humanitarian organizations will have full access and the IDPs will be treated according to international standards and resettled in their original homes as soon as possible and

an inclusive dialogue to agree on a political settlement so that lasting peace and reconciliation can be achieved.

வன்னியிலுள்ள நோயாளர், சுகாதார துறை ஊழியர்களை புலிகள் உடன் விடுவிக்க வேண்டும்- புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் வேண்டுகோள்

red_cross.jpgவிடுவிக் கப்படாத வன்னிப் பிரதேசத்தில் உள்ள அப்பாவி நோயாளர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் மோதல் தவிர்ப்பு பிரதேசத்திற்குள் செல்லுவதற்கு இடமளிக்குமாறு புலிகள் இயக்கத்தினருக்கு அழுத்தம் கொடுக்கும்படி சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது.  இது தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை, அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுலகஹந்த லியனகே அவசர கடிதமொன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நேற்று அனுப்பி வைத்தார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது : முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் தம்முடன் தொடர்புகொண்டு புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், உடையார்கட்டு, மற்றும் சுதந்திரபுரம் ஆகிய பிரதேச ஆஸ்பத்திரிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட வேண்டிய விதம் தொடர்பாக ஆலோசனை கேட்டுள்ளனர். இப்பிரதேசங்களில் மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெறும் போது இந்த ஆஸ்பத்திரிகளின் சுற்றுப்புறங்களில் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி வேட்டுக்கள் இடம்பெறக்கூடிய அச்சுறுத்தல்கள் உள்ளன.  அதனால் இப்பிரதேசங்களை விட்டு விலகி மோதல் தவிர்ப்பு வலயத்திற்கோ, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கோ செல்லுமாறு இந்த ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், சிகிச்சைபெறும் சிவில் நோயாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

புலிகள் இயக்கத்தினர் இப்பிரதேச சாதாரண மக்களுடன் கலந்து இருக்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகளை அமைத்திருக்கிறார்கள் என நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதனால் இந்த ஆஸ்பத்திரிகளின் ஊழியர்களையும், அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்களையும், ஆஸ்பத்திரிகளின் வளாகங்களில் முகாமிட்டிருக்கும் சிவிலியன்களையும் பாதுகாப்பு கருதி வெளியேறுமாறு கேட்டிருக்கிறேன். புலிகள் இயக்கத்தினரின் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்கள் காரணமாக சிவிலியன்களுக்கு பாதிப்புக்களும், காயங்களும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும் தமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் செல்லுவதற்கு மக்கள் தயாராக இருப்ப தாகவும், அதற்குப் புலிகள் இயக்கத்தினர் தடையாக இருப்பதாகவும் தமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி விடு விக்கப்படாத வன்னிப் பிரதேசத்தில் உள்ள சுகாதார துறை ஊழியர்களும், நோயாளர்களும், பொதுமக்களும் மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் அச்சமின்றி சுதந்திரமா கச் செல்ல இடமளிக்குமாறு புலிகள் இயக்கத்திற்கு ஐ. சி. ஆர். சி. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவுவதாக கூறுவது பொய்க்குற்றச்சாட்டு – கலைஞர் கருணாநிதி

0302-karunanidhi.jpgஇலங்கைப் போரில் அந்நாட்டு இராணுவத்துக்கு இந்தியா உதவுவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நேற்று தி.மு.க. செயற்குழுவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு;

கே: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா?

ப: அதற்காகத் தான் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றோம். மாநில அரசுக்கு நேரடியாக தலையிட்டு போரை நிறுத்த அதிகாரமோ வலிமையோ இல்லை.

கே: தி.மு.க. அரசுக்கெதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாகக் கூறியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம்?

ப: தேவையற்ற கிளர்ச்சிகளை நடத்துகின்றனர். முதலில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு இப்போது பிரதான கட்சியான தி.மு.க.விற்கு எந்த அழைப்பும் இல்லை. இது ஒன்றே போதாதா?

கே: நாளை (04) பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து ?

ப: இது குறித்து நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.

கே : முதல்வர் என்ற முறையில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

ப: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கே: ராஜபக்ஷ தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாரே?

ப: எதுவும் கூற விரும்பவில்லை.

கே: பந்த் தேவையற்றது என்று மார்க்ஸிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளாரே?

ப: அவரது கருத்தை வரவேற்கின்றேன்.

கே: இலங்கையில் பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்திலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்துகின்றதே?

ப: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதில் இரு வேறு கருத்துக்கே இடமிருக்க முடியாது. இதனைத் தடுத்து நிறுத்திட தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

கே: அப்படியென்றால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுப்பீர்களா?

ப: மதியார் தலைவாசல் மிதிக்கமாட்டோம்.

கே: இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களின் பிரதிநிதி விடுதலைப்புலிகள் தான் என்றும் பிரபாகரனோடே சமரசத் தீர்வு குறித்து பேச முடியும் என்றும் கூறப்படுகிறதே?

ப: பிரபாகரனா அல்லவா என்பது அல்ல பிரச்சினை. இலங்கையில் நடைபெறும் தமிழர் படுகொலை நிறுத்தப்பட வேண்டுமென்பதே முக்கியம்.

கே: ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்று கட்சிகள் கூறுகின்றனவே?

ப: ஐக்கிய நாடு தலையிட்டால் நல்லது. வரவேற்பேன்.

கே: இலங்கையில் நடக்கும் போரை இந்தியா தான் பின்னின்று நடத்துகிறது. தேவையான எல்லா உதவிகளையும் அளிக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறதே?

ப: இத்தகைய பொய்க்குற்றச்சாட்டுக்கு பலமுறை இந்தியா பதிலளித்து விட்டது. பாதுகாப்பு அமைச்சரும் உரிய பதில் அளித்துள்ளார்.

கே: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை திருப்தியளிக்கிறதா?

ப: போதுமானதாக இல்லை என்பதால்தான் இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

கே: பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம் திருப்தியளிக்கிறதா?

ப: அவருக்கே முழுத்திருப்தியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு கொழும்புடன் இணைந்து தீர்வுகாண டில்லியிடம் தி.மு.க. கோரிக்கை

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசாங்கம் கொழும்புடன் இணைந்து தீர்வு காணவேண்டும் என்றும் குறித்த காலவரையறைக்குள் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வையும் சுயாட்சியையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தி.மு.க. கோரியுள்ளது.

இதேவேளை, தமிழக அரசியல் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும்நிலையில், அந்த இயக்கத்துடன் தன்னை ஒன்றிணைத்துக்கொள்ள விரும்பாத கருணாநிதி தலைமையிலான தி.மு.க. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நலப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி எதிர்வரும் 7ஆம் திகதி சென்னையிலும் 8,9 ஆம் திகதிகளில் மாவட்டங்களின் தலைநகரங்களிலும் பேரணிகள், பிரசாரப் பொதுக்கூட்டங்களை நடத்தப்போவதாக முடிவுசெய்திருக்கிறது.

அத்துடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்வதுடன், குறிப்பிட்டகால வரையறைக்குள் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.இதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் “”தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்யும் சூழ்நிலை உருவாகும்’ என எச்சரிக்கப்பட்டது.

அதன் பிறகு சட்டப்பேரவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து முறையிட்டனர். ஆனாலும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூடியபோது இறுதி வேண்டுகோள் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனாலும் பலன் ஏதும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமார் சென்னையில் தீக்குளித்து இறந்தார். இலங்கைப் போர் பற்றி போராட்டங்கள் நடத்தி வந்த கட்சிகள், அமைப்புகள் எல்லாம் இப்போது ஓரணியில் திரண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளன.

எனவே இப் பிரச்சினையில் மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் மத்திய அரசில் இருந்து தி.மு.க.அமைச்சர்கள் ராஜிநாமா அல்லது மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் போன்ற முக்கிய முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கைப் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க நேற்று கூடிய தி.மு.க.செயற்குழு கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நலப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி பேரணி மற்றம் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதவாச்சி சோதனைச் சாவடியில் மூன்றரை மணிநேரம் காத்திருக்க வைத்து திருப்பி அனுப்பப்பட்ட 3 எம்.பி.க்கள்

மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப்பின் அழைப்பின் பேரில் மன்னாரிலும் செட்டிக்குளத்திலும் அகதி முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களைச் சந்திக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, சுரேஷ் பிரேமச்சந்திரன், சந்திரகாந்தன் சந்திரநேரு ஆகியோர் நேற்றுக்காலையில் மதவாச்சி சோதனைச் சாவடியில் சுமார் மூன்றரை மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லையெனத் தெரிவித்து மேற்கொண்டு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவும், சுரேஷ் பிரேமச்சந்திரன், சந்திரநேரு ஆகியோரும் காலை 9.30 மணியளவில் மதவாச்சி இராணுவச் சோதனைச் சாவடியை சென்றடைந்துள்ளனர். அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தங்களது மன்னார் பயணம் தொடர்பாக தெளிவுபடுத்திய போதிலும் மேலிட உத்தரவை பெற்றுக் கொள்ளும் வரை தாமதிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் மூன்றரை மணித்தியாலங்களாக நீண்ட நேரம் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியில்லாமல் மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாதென அங்குவந்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜயலத் ஜயவர்த்தன உடனடியாகவே அநுராதபுர மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும், அமைச்சர்கள், பாதுகாப்புப் பிரிவு, பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும் தொடர்பு கொண்ட போதிலும் அவர்களிடமிருந்து சாதகமான பதில் எதுவுமே கிடைக்கப் பெறவில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தால் மாத்திரமே தங்களால் அனுமதிக்க முடியுமெனத் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு: 5 ஏக்கரில் புலிகளின் சிறைச்சாலை, சித்திரவதை முகாம்- நாசி யுகத்தை ஒத்ததென்கிறார் இராணுவ பேச்சாளர் (படங்கள் இணைப்பு)

wiswamadu.jpgபுலிகளின் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளடக்கிய பாரிய சித்திரவதை முகாமை பாதுகாப்புப் படையினர் நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளனர். விசுவமடுவுக்கு மேற்கு பிரதேசத்தில் உள்ள சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் கோட்பாடுகளை செவிமடுக்காதவர்களை கடுமையான விசாரணைக்குட்படுத்தி அவர்களுக்கு கடுமையாக சித்திரவதை செய்வதற்கு இந்த வதைமுகாம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சிறைக்கூடங்கள் நாசியுக சிறைக் கூடங்களுக்கு ஒத்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் சித்திரவதை முகாம் அமைந்திருக்கும் வளாகத்தைச் சுற்றிலும் சுமார் பத்து அடி உயரத்திற்கு முற்களைக் கொண்ட சுருள்கம்பிகளால் வேலியிடப்பட்டுள்ளது. கொங்கிரீட் மற்றும் சீமெந்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் மிகவும் சிறிய பல சிறைக்கூடங்களை காணமுடிகிறது. இவை காற்றோட்டம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

சிறைகூடங்களுக்கு அண்மித்ததாக புலிகளின் தலைமைகளால் தண்டனை வழங்கப்படும் பாரிய மண்டபம் ஒன்றும் காணப்பட்டது. இந்த மண்டபத்தை சுற்றி பல இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேவேளை, புலிகள் இன்னுமொரு தண்டனை வழங்கும் உபாயமாக குட்டையானதும் நீளமானதுமான காற்றோட்டமில்லாத இரும்பு பெட்டியொன்றை வைத்துள்ளனர். கடுமையான தண்டனைக்குரியவர்களென தீர்மானிக்கப்படுவோர் அந்தப் பெட்டியினுள் இட்டு அடைத்து வைக்கப்படுவர். அதிலும் தண்டனை அதிகரிக்கும் பட்சத்தில் அப்பெட்டி ஜெனரேட்டரின் உதவியுடன் மேலும் சூடாக்கப்படுமெனவும் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழிகள், அதிசொகுசு வீடுகள், களஞ்சியங்கள், முகாம் தொகுதிகள் உள்ளிட்ட பல முக்கிய கட்டடத் தொகுதிகளை கைப்பற்றி வரும் படையினரது வெற்றிக்கு சித்திரவதை முகாம் கைப்பற்றப்பட்டுள்ளமை பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதெனவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

img_0401-01.jpg

img_0401-02.jpg

img_0401-03.jpg

img_0401-04.jpg

.

வன்னியில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் 20 பொலிஸ் நிலையங்களை அமைக்க முடிவு

ranjith-gunasekara.jpgமீட்கப் பட்ட வன்னி பிரதேசத்தில் 20 பொலிஸ் நிலையங்களை அமைக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார். வன்னி பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-

மீட்கப்பட்ட பகுதிகளில் நிலக் கண்ணி அகற்றும் பணிகள் தற்பொழுது முன்னெடு க்கப்படுகிறது. அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அம்ச மாகவே பொலிஸ் நிலையங்களை ஏற்ப டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதி யின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின் னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். எந்தெந்த இடங்களில் பொலிஸ் நிலையங்களை அமைப்பது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப் படவில்லை என்று கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறினார். இதேவேளை மீட்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் 22 பொலிஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டதோடு இதுவரை ஏழுக்கும் அதிகமான பொலிஸ் நிலையங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

எல்லை நிர்ணயம் செய்து செயற்படுவதற்கு – எந்தவொரு ஆயுதக் குழுவுக்கும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாது

sarath-fonseka.jpgஇலங் கையில் இனிமேல் எந்தவொரு ஆயுதக் குழுவும் எல்லைகளை நிர்ணயம் செய்துகொண்டு செயற்பட இடமளிக்கப் போவதில்லையென இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதும் அதனை மீண்டும் தலையெடுக்க எவ்வகையிலும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் இராணுவத்தளபதி தெரிவித்தார். அநுராதபுரத்தில் நடைபெற்ற முன்பள்ளித் திறப்பு விழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இராணுவத்தளபதி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கூறியதாவது: “இராணுவத்தில் இணைந்துகொள்வோரின் தொகை முன்னரைவிட அதிகரித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் 116,000 ஆக இருந்த படையினரின் எண்ணிக்கை 180,000 ஆக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத்தொகையை 10 முதல் 15 மடங்காக அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்” என்றும் தெரிவித்தார்.

இலங்கை இந்திய உடன்படிக்கை முறையாக பயன்படுத்தியிருந்தால் பிரச்சினை வியாபித்திருக்காது – அமைச்சர் டக்ளஸ்

epdp.jpgபொன்னான வாய்ப்பாக அமைந்த இந்தியஇலங்கை உடன்படிக்கை சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் வியாபித்திருக்காதென ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த வாய்ப்பை விடுதலைப் புலிகளே நழுவவிட்டு விட்டதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தேவானந்தா இவ்வாறு கூறினார். அரசியல் கட்சி என்ற வகையில் இனப்பிரச்சினைத் தீர்விற்கு முதற்கட்டமாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் முறையாக அமுல்செய்யப்பட வேண்டும். அது அரசியலமைப்புக்கு உட்பட்ட சட்டமென்ற வகையில் அதை நடைமுறைப்படுத்துவதை எவராலும் மறுக்க முடியாது. இந்தியஇலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் யாழ்.குடாநாட்டு மக்களுக்கு வறுமை ஏற்பட்டிருக்காது.

யுத்தம் நடைபெறுமொரு பிரதேசத்தில் இருக்கும் நிலைமையே வன்னியிலும் நிலவுகிறது. எனினும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு பாதிப்புகளையும் சேதங்களையும் குறைத்து மக்களை மீட்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.