16

16

நாளை தமிழகம் கொந்தளிக்க வேண்டும் – வைகோ

1102-vaiko.jpgநாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பெப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும் நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று உலகில் யாரும் இதுவரை சொன்னதில்லை.

முல்லைத் தீவில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக அந்த அரசு பொய் சொல்கிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தாங்காமல் லண்டனில் இருந்து ஜெனீவா சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞர் தீக்குளித்து இறந்துள்ளார்.

தமிழகத்திலும் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கிக் குரல் கொடுத்தாக வேண்டும். அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக வீதிகளில் கரம் கோர்த்து நிற்குமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. தண்ணீரில் தத்தளிக்கும் குழந்தை, தாயின் கரங்களைப் பற்றி துடிப்பதைப் போல இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் இருந்து நம்முடைய கரங்களை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பிப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் பற்றிய பேச்சு: ப.சிதம்பரத்துக்கு வைகோ கண்டனம்

1102-vaiko.jpgதிருச்சியில் இன்று ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய கோரி தமிழ்நாடு தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘’ மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமானால் விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார். எந்த போர் நிறுத்தத்தில் இதுவரை ஒரு தரப்பை மட்டும் ஆயுதத்தை கீழே போட சொல்லி இருக்கிறார்கள் போர் நிறுத்தம் என்றால் இரண்டு புறமும் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

விடுதலைபுலிகளை பொறுத்த வரை கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரிலேயே நார்வே தூதுக்குழு கேட்டு கொண்டதற்கு இணங்க போர் நிறுத்தம் செய்தனர். ஆனால் போர் நிறுத்தத்தை இலங்கை அரசுதான் முறித்தது. இலங்கை போர் என்பது ராஜபக்சே அரசும், இந்திய அரசும் சேர்ந்து நடத்துவது ஆகும். ஆனால் மத்திய அரசும் தமிழக முதலமைச்சரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளித்து போய் இருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் போரை நிறுத்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
இந்திய அரசு ஒப்புக்காக போரை நிறுத்த கூறினாலாவது மற்ற நாடுகள் போரை நிறுத்த கோரி குரல் கொடுக்கும். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

எல்ரிரிஈயினரின் பெருந்தொகை படைப் பொருட்கள் கண்டுபிடிப்பு

truck.jpgவிஸ்வமடுப் பகுதியில் எல்ரிரிஈயினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுவரும் 57வது படைப்பிரிவின் 571 வது, 572 வது பிரிகேட் படையினர் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் நேற்று (பெப்:15) அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் விட்டுச் சென்ற பல படைப்பொருட்களை படையினர் கண்டுபிடித்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

571வது பிரிகேட்டின் 17வது கஜபா படையணியினர் விஸ்வமடுப் பகுதியில் நடத்திய தேடுதலில் 20 கைக்குண்டுகள், இரண்டு விருத்தி செய்யப்பட்ட வெடிக்கவைக்கும் உபகரணம்(IED) மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர். அதேவேளை இப்பகுதியில் தேடுதல் நடத்திய  572வது படைப்பிரிவின் 7வது காலால் படையினர் பெருமளவான இராணுவ உபகரனங்களைக் கண்டுபிடித்துள்ளதுடன் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட  டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பீப்பாக்களையும் கைபற்றியுள்ளனர்.

இப்படையணி எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட முகாமையும் கண்டுபிடித்துள்ளனர்.  7 வது காலால் படையினர் இத்தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடித்துள்ள மற்றய  உபகரணங்களின் விபரங்கள் பின்வருமாறு

09 x எல்ரிரிரிஈ பவுச் , 2530 x ரி-56 ரவைகள் ,250 x எப் என்சி ரவைகள் , 07 x கைக்குண்டுகள் , 41 x எல்ரிரிஈ தொப்பிகள், 52 x எல்ரிரிஈ  சீருடைகள் , 03 x ஜெகட்டுகள் , 05 x எல்ரிரிஈ பெக், 02 x 81 மிமீ மோட்டார் குண்டுகள்

விஸ்வமடுப் பகுதியில் 572பிரிகேட்டின்  9வது விஜயபாகு படைப்பிரிவினர் இருவேறு தேடுதல் நடவடிக்கையின் போது பெருந்தொகையான ஆட்டிலறி செல்களைக் கைபற்றியுள்ளனர். மேலும் 14 கிறீஸ் பெரல்கள்(210லீ), பசளைக் (யூரியா) களஞ்சியசாலைக் கட்டிடங்கள் மற்றும் டோசர் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களையும் கைபற்றியுள்ளனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட மற்றய பொருட்களின் விபரங்கள் பின்வருமாறு.  115 x 122மிமீ.ஆட்டி செல்கள், 40 x 130மிமீஆட்டிசெல்கள், 75 x 81மிமீ மோட்டார் பியூஸ்கள், 05 x 82 மிமீமோட்டார் குண்டுகள், 180 x 60 மிமீ.​மோட்டார் பியூஸ், 10 x 130மிமீஆட்டிலறி பியூஸ், 20 x 130மிமீ வெற்றுச் செல்கள், 01 x கண்ணிவெடி, 01 xடோசர் 02 x ரி- 56 துப்பாக்கிகள்.

முல்லையில் காயப்பட்டு திருமலை பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களின் விபரம்

01. கந்தையா செல்லையா, உடையார் கட்டு (வயது 71)
02. எஸ்.ரஜிகாந்தன், உடையார் கட்டு (வயது 25)
03. தயாபரன், புளியம்பொக்கணை (வயது 28)
04. கே.கனகேந்திரன், அம்பலபுரம், முல்லைத்தீவு (வயது 40)
05. எஸ்.மோகன்ராஜா, வன்னிக்குளம் (வயது 48)
06. சரோஜினிதேவி, இராமநாதபுரம், கிளிநொச்சி (வயது 50)
07. ஜெயந்தினி, யாழ்ப்பாணம் (வயது 59)
08. ஆர்.ஜெனகந்தன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் (வயது 69)
09. எஸ்.ஜெயகாந்தன், சுதந்தரபுரம் (வயது 27)
10. அருள் ரமேஷ் மேரி தயானா, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு (வயது 27)
11. என்.தியாகராஜா, வெலசின்னக்குளம், ஓமந்தை (வயது 63)
12. ரி.தயாபரன், பூக்கணா (வயது 28)
13. மேரி மலர், முள்ளியவளை (வயது 30)
14. மேரி சோபனா, முள்ளியவளை (வயது 01)
15. வி.வள்ளியம்மா, தேவிபுரம், முல்லைத்தீவு (வயது 60)
16. கமலம், உடையார்கட்டு (வயது 61)
17. ரி.மகேஸ்வரி, புளியங்குளம் (வயது 42)
18. என்.தர்மலிங்கம், புளியங்குளம் (வயது 61)
19. சங்கீதா
20. யோகம்மா, இராமநாதபுரம், கிளிநொச்சி (வயது 72)
21. ஸ்ரீதரன், கணவி, கிளிநொச்சி (வயது 16)
22. நாகஸ்வரன், கணவி, கிளிநொச்சி (வயது 57)
23. ஆர்.மனோன்மணி, உருத்திரபுரம், கிளிநொச்சி (வயது 57)
24. சுதந்திரன் சாரதா, ஒட்டக்களம் (வயது 28)
25. சுகந்தன், பூநகரி (வயது 29)
26. துரையப்பா, கோம்பாவில், புதுக்குடியிருப்பு (வயது 86)
27. செந்தில்குமரன், இயக்கச்சி, கிளிநொச்சி (வயது 25)
28. சங்கவி, பளை (வயது 03 மாதம்)
29. செந்தில்குமரன் லட்சுமி, பளை (வயது 29).
30. எம்.மங்களேஸ்வரி, இயக்கச்சி, புளியங்குளம், வயது 17
31. கலைச்செல்வி, தேவிபுரம், முல்லைத்தீவு, வயது 27
32. ராகினி, தேவிபுரம், முல்லைத்தீவு, வயது 44
33. எஸ்.வனஜா, புளியங்குளம், வயது 36
34. சுகிர்தா, சுதந்திரபுரம், வயது14
35. பொன்னம்மா, முல்லைத்தீவு வயது 85
36. வை.சாந்தி, கெரணமடு, வயது 40
37. எம்.செல்லத்துரை, கிளிநொச்சி, வயது 73
38. கிஷாந்த், புதுக்குடியிருப்பு, வயது 08
39. ஆர். மகேந்திரராஜ், பளை, வயது 60
40. லோஜினி, வட்டைக்காடு, முல்லைத்தீவு, வயது 08
41. கெலிலூர், வட்டைக்காடு, முல்லைத்தீவு, வயது 44
42. கேசனி, முல்லைத்தீவு, வயது 4
43. சந்திரகலா, முல்லைத்தீவு, வயது 46
44. கே.ராசம்மா, கரடிமடு, வயது 60
45. அந்தோனி யேசுஸ் பமிலா, குருநகர், யாழ்ப்பாணம், வயது 29
46. தனுஜன், குருநகர், யாழ்ப்பாணம், வயது 62
47. தங்கரட்ணம். யாழ்ப்பாணம், வயது 62
48. தேவலட்சுமி, புதுக்குடியிருப்பு, வயது 53
49. வேலுப்பிள்ளை பரமலிங்கம், புதுக்குடியிருப்பு, வயது55
50. ரி.நரேஷன், முல்லைத்தீவு வயது 15
51. சுகிர்தா, கிளிநொச்சி, வயது 36
52. றே. குகவதனி, வயது 12
53. எஸ். சிவஞானசுந்தரம், ஒட்டுசுட்டான், வயது 70
54. மதுரா, புதுக்குடியிருப்பு, வயது 05
55. கே.சாந்தநாயகி, கிளிநொச்சி, வயது 55
56. குமரநாதன், மன்னார், வயது 33
57. வி.முருகுப்பிள்ளை, புதுக்குடியிருப்பு, வயது 62
58. சூசைமுத்து, மட்டுவாய், புதுக்குடியிருப்பு, வயது 30
59. சசிகலா, கிளிநொச்சி, வயது 37
60. மதுஷா, கனகராயன் குளம், வயது 08
61. மகேஸ்வரி, உதயநகர், கிளிநொச்சி, வயது 55
62. மிதுலன்
63. குணமணி, யாழ்ப்பாணம், வயது 43
64. எழிலன், யாழ்ப்பாணம், வயது 02
65. ராஹினி, புதுக்குடியிருப்பு, வயது 12
66. பூமலர்தேவி
67. கே.வைரமுத்து, கச்சேரி விடுதி, வயது 78
68. அகல்யா, கிளிநொச்சி, வயது 29
69. நாகலட்சுமி, முல்லைத்தீவு, வயது 48
70. கௌசிதன், முல்லைத்தீவு, வயது 07
72. வி.இதயரூபன், புளியம்பொக்கணை, வயது 33
72. தபுஷன், புளியம்பொக்கணை, வயது 03
73. உமாதேவி, தேவிபுரம், முல்லைத்தீவு, வயது 33
74. நாகேஸ்வரி, கனகராயன்குளம், வயது 42
75. ஏ.வசந்தி, கிளிநொச்சி,
76. தயாளினி, வட்டக்கச்சி, முல்லைத்தீவு, வயது 34
77. கனிஷ்டன், வட்டக்கச்சி, முல்லைத்தீவு, வயது 03
78. ரத்தினம், முள்ளியவளை, வயது 62
79. வில்வநாதன் ரஞ்சினி, ஆண்டாபுளியங்குளம், வயது 62
80. சவிசன், ஆண்டாபுளியங்குளம்
81. நாகராசன், தேவிபுரம், முல்லைத்தீவு, வயது 28
82. சின்னத்துரை சின்னமுத்து, முள்ளியவளை, வயது 63
83. எஸ். நாதன், முள்ளியவளை, வயது 28
84. சரோஜினிதேவி, கிளிநொச்சி, வயது 60
85. வி.தவேஸ்வரன், மாதலி, புதுக்குடியிருப்பு
86. எஸ். கமலா, அம்பலன்பொக்கணை, புதுக்குடியிருப்பு, வயது 50
87. கே.வாசுகி, மாங்குளம், வயது 3
88. கமலாதேவி, கிளிநொச்சி நகரசபை, வயது 45
89. ஏ.விதுஷன், வானாக்குளம், புதுக்குடியிருப்பு, வயது 10
90. மெனுஷன், மாதாளை, புதுக்குடியிருப்பு, வயது 12
91. கே.அனசராஜ், மாதாளை, புதுக்குடியிருப்பு, வயது 12
92. கீர்த்திகா, கிளிநொச்சி, வயது 02
93. ஜே.ஜயதீபன், கிளிநொச்சி, வயது 35
94. ஆனந்தன், புதுக்குடியிருப்பு, வயது 24
95. பெனடிக்ற், புதுக்குடியிருப்பு, வயது 1 1ஃ2
96. கஸ்தூரி, யாழ்ப்பாணம், வயது 32
97. சுதர்சிகா, யாழ்ப்பாணம், வயது 06
98. கே. முதல்வன், யாழ்ப்பாணம், வயது 01
99. கே.பிரதீப், கிளிநொச்சி வயது 10
100. விதுஷன், கிளிநொச்சி, வயது 13
101. ஜே.பி.குணராசா, கிளிநொச்சி
102. ஜே.புருணுவேல், வட்டக்கச்சி, வயது 60
103. தமிழ்கீதன், வட்டக்கச்சி, வயது 2 1
104. ஜெகதீஸ்வரன், புதுக்குடியிருப்பு, வயது 28
105. இந்திரகாந்தி, வட்டக்கச்சி, வயது 40
106. ஆர்.ஜெயக்கொடி, வட்டக்கச்சி, வயது 18
107. ராஜேஸ்வரி, இரணைப்பாலை, வயது 72
108. எம்.சுப்பிரமணியம், புதுக்குடியிருப்பு வயது 41
109. எஸ்.விக்னேஸ்வரன், மல்லாவி, முல்லைத்தீவு, வயது 16
110. கலைச்செல்வி, புதுக்குடியிருப்பு, வயது 22
111. சுடர்விழி, புதுக்குடியிருப்பு, வயது 02
112. சிவராணி, வன்னிவிளாங்குளம், வயது 23
113. சங்கரன், வலலவாவி, வயது 07
114. சங்கவி, மல்லாவி, வயது 03
115. கௌசலா, மல்லாவி, வயது 29
116. எம்.சரஸ்வதி, சுதந்திரபுரம், வயது 45
117. கமலாதேவி, கிளிநொச்சி, 62 வயது
118. சிவநாயகி, தர்மபுரம், 58 வயது
119. மலர்விழிதேவி, கிளிநொச்சி, 30 வயது
120. சுதாரகன், சுதந்திரபுரம், 23 வயது
121. ராஜரட்ணம், கிளிநொச்சி, 49 வயது
122. தங்கமுத்து, தேவிபுரம், கிளிநொச்சி, 69 வயது
123. வி. கஜன், உடும்பன்குளம், 14 வயது
124. எம். ரஜனி, பளை, 30 வயது
125. கவிதன், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, 07 வயது
126. என். செல்வராணி, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, 43வயது
127. பிரிந்தாவினி, தாளையடி, 09 வயது
128. பரமேஸ்வரி, தாளையடி, 36 வயது
129. மிதினியன், புதுக்குடியிருப்பு, 10 வயது
130. மீனலோஜினி, புதுக்குடியிருப்பு, 62 வயது
131. யாழினி, புதுக்குடியிருப்பு, 05 வயது
132. லோகநாகேஸ்வரன், கிளிநொச்சி, 44 வயது
133. பரமநாதபிள்ளை, கனகபுரம், 70 வயது
134. அபிராமி, கிளிநொச்சி, 30 வயது
135. பி.செல்வராணி, விசுவமடு, 40 வயது
136. நிரோஜன், 06 வயது
137. தேவகௌரி, 36 வயது
138. தேவநேசன், விசுவமடு, 08 வயது
139. எஸ். திருச்செல்வம், கிளிநொச்சி, 27 வயது
140. லோகநாகேஸ்வரன், கிளிநொச்சி, 09 வயது
141. சித்ராதேவி, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, 31 வயது
142. ரெஜித்ரா, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, 8 வயது
143. தேவமலர், முல்லைத்தீவு, 49 வயது
144. ஜெனிற்றா, முல்லைத்தீவு, 05 வயது
145. சுசிலா, முல்லைத்தீவு, 25 வயது
146. ரி. துஷ்யந்தன், 24 வயது
147. எஸ். மலர்விழி, கனவளை, கிளிநொச்சி, 20 வயது
148. எஸ். ரதீஸ், கனவளை, கிளிநொச்சி, 04 வயது
149. யதுஷா, கனவளை, கிளிநொச்சி, 06 மாதங்கள்
150. மேரி ஜரீனா, கற்கோவளம், பருத்தித்துறை, 23 வயது
இசையரசி, கற்கோவளம், பருத்தித்துறை, 13 வயது
சிவலிங்கம் (75) கற்றக்காடு, பெரியகுளம், முல்லைத்தீவு……
டொமினிக் (24) யாழ்ப்பாணம்….
பி.குகராணி (42) பெரியமடு….
ஜெயரூபன் (12) வல்லிபுரம்…
எஸ்.நல்லம்மா (71) பெரியமடு….
அருள்ராஜ் (11) பெரியமடு, தேவிபுரம்….
கஜீபன் (08) பெரியமடு, தேவிபுரம்….
ஜேம்ஸ் ரண்டராஜா (43) வன்னிக்குளம், கிளினொச்சி….
எஸ்.மங்கையர்கரசி (47)….
மேகராஜா (64) வன்னிக்குளம், கிளினொச்சி….
எஸ்.வரதராசன் (23) இயக்கச்சி…
பி.ஜெயந்தி (46) தர்மபுரம், கிளினொச்சி….
புவனேஸ்வராஜ் (39) 831, மன்னார்…..
தங்கவேல் (73)
ரி.ராமுஜி (68) உடையார்க்கட்டு, முல்லைத்தீவு….
ப்ரியதர்சினி (30) வவுனியா….
ராசமலர் (05) வட்டக்கச்சி…
துஸ்யந்தினி (02) விஸ்வமடு, முல்லைத்தீவு…
சந்திரகுமார் (21) மன்னார்…
துஸ்யந்தி (21) மன்னார்…
கே.மகேந்திரன் (42) வட்டப்பளை….
ரி;.கிருஸ்ணா (19) ரணியபாலம், புதுகுடியிருப்பு…
எம்.ராசமலர் (48) வட்டப்பளை….
எம். மஞ்சுதன் (07) வட்டப்பளை….
மேரி (80) முல்லைத்தீவு…
வை.லோகராசா (34) புதுக்குடியிருப்பு…
எஸ்.சுப்ரமணியம் (59) நெடுங்கேணி, முல்லைத்தீவு….
எல்.லோஜிதா (1 லீ) தொண்டமணாரு, கிளிநொச்சி….
எல்.சிவாஜினி (24) தொண்டமணாரு, கிளிநொச்சி….
எல்.நிலோசா(06) தொண்டமணாரு, கிளிநொச்சி….
எஸ்.ஜேசுதாசன் (63) வாசவிலான்….
பூமணி (61) 4 மைல் போஸ்ற், புதுக்குடியிருப்பு…
கங்காராணி (25) முல்லைத்தீவு…
தனபாலன் (36) முல்லைத்தீவு…
கே.அஜந்தா (30) முல்லைத்தீவு…
தனுஸா (9 நாட்கள்)
எஸ்.விஜிதா (23) புதுக்குடியிருப்பு…
அருந்தவாசி (49) புதுக்குடியிருப்பு…
சுதர்சினி (20) வட்டக்கட்சி….
ஜெயரூபி (04 நாட்கள்) 7 மைல் போஸ்ற், புதுக்குடியிருப்பு…
பி சாரூஜன் (07) 7 மைல் போஸ்ற், புதுக்குடியிருப்பு…
தேவபாலன் (36) முல்லைத்தீவு…
என்.நிரேஜா (05) கோணாவில், கிளிநொச்சி….
ரீரா மேரி (30) கோணாவில், கிளிநொச்சி….
கே.கனுஸா (09) புதுமுறிப்பு, கிளிநொச்சி….
ஸர்சன் (04) குமுனுமுனை , முல்லைத்தீவு…
ஸஜன்தி (06) குமுனுமுனை, முல்லைத்தீவு…
பத்மான்ஜனி (36) குமுனுமுனை, முல்லைத்தீவு…
ஜெயந்தி (38) புதுமுறிப்பு, கிளிநொச்சி….
எஸ்.மேரி மார்கிறெற் (35) யாழ்ப்பாணம்….
துவாரகா (03) யாழ்ப்பாணம்….
தூரணி (05) யாழ்ப்பாணம்….
எ.நவரட்ணம் (81) கொடிகாமம்….
கே.மகேஸ்வரன் (51) 69, ஜெயந்திநகர். முல்லைத்தீவு….
வ.விஜிதா (52) இரணிபபாலம், புதுக்குடியிருப்பு…
வை.ரஞ்சிதா (09) கந்தவளை மகா வித்தியாலயம்…
மேரி மஞ்சுளா (26) விஸ்வமடு, முல்லைத்தீவு…
கிம்சிகாந் (09) 231 வட்டக்கச்சி…
மேரி அர்ஸினி (60) முல்லைத்தீவு…
எஸ்.நிமலன் (10) மல்லாவி…
ஜெயசுதன் (43) 231 வட்டக்கச்சி…
புஸ்பராணி (50) வட்டக்கட்சி…
சி.சுகந்தி (37) யாழ்ப்பாணம்…
நிரோயன் (13) மல்லாவி…
நிலானி (11) மல்லாவி…
சிவான்தி (08) மல்லாவி…
மாப்பனார் மாணிக்கம் (37) கொஸ்பிற்றல் குவாற்றேஸ், புதுக்குடியிருப்பு…
ரி.இந்திரா ரஞ்சனி (16) கொஸ்பிற்றல் குவாற்றேஸ், புதுக்குடியிருப்பு…
பூசையாமணி (64) தர்மபுரம், கிளிநொச்சி….
யூலியற் (29)…
தாஞ்சாயினி ஜெயந்தி (11) மல்லாவி…
கே.ஜெகதீஸ்வரன் (49) வவுனிக்குளம்…
தர்மிகன் (11) வவுனிக்குளம்…
வித்தியாகரன் (14) வவுனிக்குளம்…
நிவேதன் (12) வவுனிக்குளம்…
திருமதி.எல்.கஜேந்திரன் (68) கிளிநொச்சி….
குசிதா (08) ஓல்ரதகுளம்…
மஞ்சுளா (43) ஓல்ரதகுளம்…
ரி.அபிரஞ்சன் (06) பூக்கடதார், கிளிநொஞ்சி…
தமிழினியால் மதுரஞ்சன் (06) பூக்கடதார், கிளிநொஞ்சி…
தமிழினி (10) பூக்கடதார், கிளிநொஞ்சி…
விநோயினி (16) உறுத்திரபுரம், கிளிநொஞ்சி…
சற்குணம் அருமைதாஸ் (25) மல்லாவி…
மனோகரன் (10) கிளிநொஞ்சி…
லோரி (67) உறுத்திரபுரம், கிளிநொஞ்சி…
அமிர்தராஜ் (55) புளியங்குளம்…
ரி.சுப்த்திராதேவி (70) கிளிநொஞ்சி…
கலைநிலா (02)….
கலைவிழி (07)….
கமலேந்திரன் (33) யாழ்ப்பாணம்….
தாஞ்சாயினி (10) வட்டக்கட்சி…
பத்மராணி (35) பாரதிபுரம், கிளிநொஞ்சி….
சேபமலர் அன்ரனிபிள்ளை (31) கொலி பமிலி கொன்வன்ற், தலைமன்னார்…
எஸ்.பூமலர் (60) மிருசுவில், யாழ்ப்பாணம்….
ரி.அன்ரனிப்பிள்ளை (45) வட்டக்கட்சி…..
திலகேஸ்வரி (2) அரசிக்குளம்….
பானுஸா (9)…
ரி.புஸ்பவதி (68) மல்லாவி…
ஆர்.உமையாள் (09 நாட்கள்) கொஸ்பிற்றல் குவாற்றேஸ், கிளிநொஞ்சி…
தடகாயிபிராட்டி (49) கொஸ்பிற்றல் குவாற்றேஸ், கிளிநொஞ்சி…
எட்வாட் சுகந்தினி (26) பொலிஸ் ஸ்ரேசன் வீதி, ஆணையிறவு…
ரி.துளசி (04) கொஸ்பிற்றல் குவாற்றேஸ், கிளிநொஞ்சி…
ரி.லதா (35) கொஸ்பிற்றல் குவாற்றேஸ், கிளிநொஞ்சி…
வி.சரஸ்வதி (7) புதுக்குடியிருப்பு…
ராஜேஸ்வரி (40) புளியங்குளம் …
செல்வகிருஸாந்தன் (08) புளியங்குளம் …
ஜோசப் பெர்னான்டோ சேபன் (50) முல்லைத்தீவு…
லைப்பன் (08) ஞானபாலையம்…
சி.பரமேஜஸ்வரி (58) கிளிநொஞ்சி…
பிரான்சிஸ் (7) கொஸ்பிற்றல் குவாற்றேஸ், கிளிநொஞ்சி…
பிரகாஸ் (10)
பிரமிகாஸ் (02)
பிரதேஸ் (09)
வி.ஞானகுமாரி (47) கோப்பாய், புதுக்குடியிருப்பு…
எஸ்.சிந்துஜா (18) கிளிநொஞ்சி
ஜி.யோகேஸ்வரன் (17)…..
மகாலக்ஸ்மி (58) கணேஸபுரம், கிளிநொஞ்சி
சுபாஜினி (27) ஸ்கந்தபுரம், கிளிநொஞ்சி…
பேபி ஒப் சுபாஜினி (3ஃ365) ஸ்கந்தபுரம், கிளிநொஞ்சி…
எஸ்.சசிதரவாணி (37) கிளிநொஞ்சி…
கார்த்திக் (09)
தவமணி (62) முள்ளியவளை…
சிவப்பிரகாஸம் (77) முள்ளியவளை…
பகிரதன் (09) கிளிநொஞ்சி…
எ.அம்பலம் (60) கிளிநொஞ்சி…
ஆர்.சரோயா (51) சுதந்திரபுரம்…
எஸ்.சசிகரன் (31) முரசுமோட்டை…
எஸ்.சிவமணி (27) முரசுமோட்டை…
எஸ். பானுயா (02) முரசுமோட்டை…
எஸ்.நாகேஸ்வரி (53) விஸ்வமடு .முல்லைத்தீவு…
ஜி.சிந்துயன் (12) பூநகரி…
மாரியம்மா (63) யாழ்ப்பாணம்…
தேவராசா (56) திருநகர், கிளிநொஞ்சி…
எஸ்.சந்திரகாசன். (28) முள்ளியவளை…
ஜெயதரிசினி (22) முள்ளியவளை…
சந்திரா (01) முள்ளியவளை…
ஜி.சிவகுருநாதன் (63) ஸ்கூல் றோட், முல்லைத்தீவு..
எஸ்.ரஜிதா (25 ) யாழ்ப்பாணம்…
கலைவாணி (23) வட்டக்கட்சி..
கனகேஸ்வரி (67) வட்டக்கட்சி..
எம்.ராஜேஸ்வரி .(46) பெரியபளை..
எஸ்.ரஜினி (32) பெரியகுளம்…
மலைச்செல்வி (02) உதயபுரம், கிளிநொஞ்சி..
மேரி அஞ்சலி (71) உதயபுரம், கிளிநொஞ்சி..
ரத்னபூபதி (59) தர்மபுரம்..
எஸ்.நிலம்தன் (1 லீ)
மனோன்மணி (58) கிளிநொஞ்சி…
என்.மலர்வன் (01) ஆலயங்கேணி, பூநகரி….
கே.நிசாந்தன் (23) ஆலயங்கேணி, பூநகரி….
யாகோப் ராஜேஸ்(36) யாழ்ப்பாணம்…
மரியகுனேஸ்வரி (31) யாழ்ப்பாணம்…
சுந்தரலிங்கம் (55)
ராமசாமி (68) முல்லைத்தீவு…
அன்னமுத்து (67) முல்லைத்தீவு…
சத்தியசீலன் (04) முல்லைத்தீவு…
நகேஸ்வரி (06) முல்லைத்தீவு…
விவேகன் (36) முல்லைத்தீவு…
சி.தேவராஜா (74) கிளிநொஞ்சி..
பி.கோகிலா (01) கிளிநொஞ்சி…
கிருஸ்ணா (25) கிளிநொஞ்சி…
பி.கோகிலா (02) கிளிநொஞ்சி..
என்.சிந்துஜா (14) கிளிநொச்சி..
என்.வளர்மதி (38) கிளிநொச்சி..
சிந்துஜன் (12) பூநகரி…
ஆர். ஜரிணி (03) தர்மபுரம், கிளிநொச்சி…
ஆர்.சசிகலா .(35) தர்மபுரம், கிளிநொச்சி…
ஆரணி (1 லீ) புதுக்குடியிருப்பு…
முகந்தனி (25) பூநகரி…
அனுலாவதி …
தனலக்ஸ்மி ( 05 நாட்கள்) கிளிநொச்சி…
மதுசாலினி (07) கிளிநொச்சி…
சரோயாதேவி (43) பூநகரி…
தமிழின்பன் (1 லீ) கிளிநொச்சி…
கே.பவித்திரா (06) கிளிநொச்சி…
கே.அன்ரனி (04) கிளிநொச்சி…
கே.தனலக்ஸ்மி (34) கிளிநொச்சி…
கனேஸபிள்ளை (7) முல்லைத்தீவு…
எஸ்.அஞ்சலிகா (57) கிளிநொச்சி…
மகிலன் (04) கிளிநொச்சி…
அருமைநாதன் (46) விஸ்வமடு, முல்லைத்தீவு…
ரி.பாலசுப்ரமணியம் (55) கிளிநொச்சி…
என். மோகனதாஸ்(38) கிளிநொச்சி…
நிசாந்த் (27) கிளிநொச்சி…
மோகனராஜ் (23) இயக்கச்சி..
மோகனரஞ்சிதன் (38) இரணைமடு
தெய்வீகராணி (48) இயக்கச்சி..
குழந்தைவேல் (38) முல்லைத்தீவு…
சர்மினி (57) உதயநகர்…
செல்வகுமார் (38) கிளிநொச்சி…
ரி.தாமின்பன் (61) முல்லைத்தீவு…
செல்வகன்(05) முல்லைத்தீவு..
எஸ்.பிரதீபா (27) அளவெட்டி…
எ.சுந்தரலிங்கம் (55) வெள்ளங்குளம்…
காசியம்மா (36) இடுப்பங்கட்டு….
சிவகுமார் (05) முல்லைத்தீவு…
சுரேஸ்காந் (25) முல்லைத்தீவு..
எஸ்.ரஞ்சித் (30) சுகந்திரபுரம்…
ஆர்.ஜெகதீஸ்வரி (24) சுகந்திரபுரம்…
ஆர். ஜீவதாஸ் (1 லீ) சுகந்திரபுரம்…
எஸ்.லீலாவதி (34) உதிப்புளம், கிளிநொச்சி..
எஸ். சியாளினி (15) உதிப்புளம், கிளிநொச்சி..
எ. சியாளினி (30) தாண்டிக்குளம் வவுனியா…
எ.சிருற்றிகா (04) தாண்டிக்குளம் வவுனியா …
வி;.தர்மலிங்கம் (59) கிளிநொச்சி..
பி.சுதர்ஸன் (32) பொக்கனை. முல்லைத்தீவு….
பாலசரஸ்வதி (35) புதுக்குடியிருப்பு…
என்.சரோயாதேவி (50) உடையார்க்கட்டு, முல்லைத்தீவு…
செல்லத்துறை கலைவாணன் (42) புதுக்குடியிருப்பு…
கே.தர்மேஸ் (07) தண்ணீரூற்று முல்லைத்தீவு…
திருமதி.மகாலிங்கம் (70) தண்ணீரூற்று முல்லைத்தீவு…
பவதாரிணி (05)
ரியோ சைக்கிளோ (24) பரந்தன், முல்லைத்தீவு…
ரியோ லூயிஸ் (67) பரந்தன், முல்லைத்தீவு…
கே.பார்த்தசாரதி (25) பலாலி வீதி, யாழ்ப்பாணம்…
சகோதரி லூயிட்ஸ் (67) பரந்தன், முல்லைத்தீவு…
மேரி ரிக்கோயா (34) வலைப்பாடு…
அனிரெற்றா (36) வலைப்பாடு…
கே.மகாலிங்கம் (60) புதுக்குடியிருப்பு..
செல்லம்மா (65) கண்ணகிபுரம், கிளிநொச்சி
ரி.சர்மிளன் (24) கிளிநொச்சி
சரிதா (24) கிளிநொச்சி
ரதுஸன் (1 லீ) கிளிநொச்சி
சித்ராதேவி (34) கிளிநொச்சி
தயாராணி (34) வெற்றிலக்கேணி…
பௌதினி (09) வெற்றிலக்கேணி…
ஜெசிந்தன் (1 லீ) வெற்றிலக்கேணி…
ஜெசித்தன் (03) வெற்றிலக்கேணி…
ஜேசுதாஸ் (34) வெற்றிலக்கேணி…
எஸ். தவகுமார் (23) பூவரசம்குளம், வவுனியா..
கே.குருசாமி (69) பரந்தன், முல்லைத்தீவு…
எஸ்.பிரதாப் (05) பரந்தன், முல்லைத்தீவு…
என்.மகேந்திரன் (53)
எம். இந்திராதேவி (46) விஸ்வமடு, முல்லைத்தீவு…
புஸ்பநீலமணி (58) நெடுங்கேணி, முல்லைத்தீவு…
எஸ்.கந்தையா (60) சுகந்திரபுரம்…
எஸ்.தனுஸா யாழ்ப்பாணம்
வி.சற்குணராஜா (35) யாழ்ப்பாணம்
எஸ்.வன்னியசிங்கம் (50) அக்கராயன்குளம்…
என்.நடராஜா (16) புதுக்குடியிருப்பு..
எஸ்.கிருஸாந்த் (13) யாழ்ப்பாணம்
என்.ஸ்ரீதர் (44) பலாலி
எஸ்.செல்வரத்னம் (70) யாழ்ப்பாணம்
ஜனகராஜ் (16) ராமநாதபுரம்..
எஸ்.மாலதி (27) யாழ்ப்பாணம்
கணிகை (56) விஸ்வமடு
எஸ். ஜெயபாலன்.. (45) கட்டவேலி
எஸ்.சுகிர்தகுமார் (48) வட்டுக்கோட்டை
அபிதா (08) வட்டுக்கோட்டை
எஸ்.கோசிலா (12) வட்டுக்கோட்டை
எஸ்.அலன் (10) வட்டுக்கோட்டை
எ.குணசீலன் (44) புதுக்குடியிருப்பு..
என்.சண்முகநாதன் (60) சுழிபுரம்
பி.பெரியநாயகி (50) கிளிநொச்சி
எஸ்.நடராஜ் (65) புதுக்குடியிருப்பு..
ரத்னேஸ்வரி (50) முல்லைத்தீவு…
கலையரசி (36) கிளிநொச்சி
மேகநாதன் (65) யாழ்ப்பாணம்
கே.மாணிக்கம் (35) குமுளமுனை
கே.கிருபாதேவி (49) உடையார்கட்டு
ஜே.தனலக்ஸிமி (28) உடையார்கட்டு
எம்.ஜதுகுலன் (29) உடையார்கட்டு
கஜீபன் (03) உடையார்கட்டு
சிவமாரி (31) புதுக்குடியிருப்பு..
மாணிக்கம் (52) புதுக்குடியிருப்பு..
வி.சிவபாதசுந்தரம் (59) கிளிநொச்சி
எ.ராஜேந்திரன் (63) மன்னார்
எம்.ஜோகேஸ்வரி (20) யாழ்ப்பாணம்
பி.துவாரகா (07) முல்லைத்தீவு
பாலராஜ் (40) முல்லைத்தீவு
எம்.சரஸ்வதி (56) யாழ்ப்பாணம்
கிஸோர் (01) யாழ்ப்பாணம்
சண்முகம் (64) தேவிபுரம்
எஸ்.சண்முகம் (66) தேவிபுரம்
சுவர்ணா முள்ளியவளை
சகுந்தலாதேவி (46) முள்ளியவளை
திலக்ஸிகா (01) முள்ளியவளை
செபமாலி மேரி (10) மன்னார்
திருஸிகா (14) புதுக்குடியிருப்பு..
ராசகுமாரி (07) தேவிபுரம்
ரி.ஜெயராணி (54) சுகந்திரபுரம்…
ரி.ஜெயந்தன் (36) சுகந்திரபுரம்…
கே.மகேந்திரன் (53) முல்லைத்தீவு..
நித்தியகலா (22) தேனிபுரம் கிளிநொச்சி
எ.மதுரைநாயகம் கிளிநொச்சி
மதுஸன் (35) கிளிநொச்சி
மயூரன் (11) கிளிநொச்சி
என் . மலர்வாணி (01) கிளிநொச்சி
எம் .புஸ்ப ஜெனோபா (31) கிளிநொச்சி
சிவஞானம் (47) கன்னங்கராயன்குளம்
தேவேந்திரராசா (31) தேவிபுரம்
கோபிகா (45) தேவிபுரம்
புணீரபாகரன் (28)
அசிசத் (05) தேவிபரம்
றோகினி (13) பூநகரி
தனுஸ் (04) சுகந்திரபுரம்…
பி.ஸ்ரீகலா (27) சுகந்திரபுரம்…
கிருஸாலினி (02) சுகந்திரபுரம்…
எம்.அபர்ணா (05) யாழ்ப்பாணம்
அபிமன்யு (03) யாழ்ப்பாணம்
எம்.ஜமுனா (36) யாழ்ப்பாணம்
கந்தசாமி (54) சுள்ளிபுரம்..
பி.தட்சணாமூர்த்தி (63) கோண்டாவில் கிழக்கு.
எஸ்.தினகரன் (54) ஆனந்தபுரம்
கே.தர்ஸன் (15) முளங்காவில்
பி.லிந்துஜா (09) மல்லாவி
பிரேமநாதா (41) மல்லாவி
விதுரகன் (11) மல்லாவி
பி.கிருஜா (35) மல்லாவி
திவ்யன் (04) மல்லாவி
லக்ஸனா (10) பூநகரி
பி.தனுஜன் (06) மல்லாவி
நாகேந்திரன் (39) முல்லைத்தீவு..
எஸ்.கோவிந்தபிள்ளை (57) புதுக்குடியிருப்பு..
பி.ராமர் (51) கிளிநொச்சி
எஸ்.ஜதுர்ஸி (16) முள்ளியவளை
கோபாலகிருஸ்ணன் (35) காரைநகர்
சுணீவதாஸ் (24)
கே.புஸ்பமலர் (52) குமிலமுனை
ராஜேஸ்வரி (31) பூநகரி
ஆர்.எழிலரசி (36) முல்லைத்தீவு..
எம்.சிவம்மா (40) புதுக்குடியிருப்பு..
கே.முருகேஸ் (80) மன்னார்
என்.நாகேஸ்வரி (55) புதுக்குடியிருப்பு..
கே.சிவபாலன் (37) பூநகரி
கிருஸாந்தன் (17) கிளிநொச்சி
எம் . யசோதினி (35) புதுக்குடியிருப்பு..
எம் . பவிர்ஸன் (04) புதுக்குடியிருப்பு..
எம் .விதுர்ஸன் (07) புதுக்குடியிருப்பு..
மகேஸ்வரி (46) கிளிநொச்சி
எஸ். மனோகரன் (46) பூநகரி
டிலக்ஸா (02) சோலைமரவடி
அஜந்தினி (22) சோலைமரவடி
கணேஸலிங்கம் (32) பூநகரி
எஸ்.கேமமாலினி (32) கிளிநொச்சி
எஸ்.திலகராணி (01) கிளிநொச்சி
செல்வராஜ் (50) முல்லைத்தீவு..
சண்முகநாதன் (70) விஸ்வமடு
வைத்தி ஜோசப் (75) பாசிப் பொட்;டல்
எஸ்.ரவிராஜ் (17) மட்டக்களப்பு
பி.இருதயசீலி வெள்ளவேலி
பிரபாமேரி ஜெனிற்றா (18) வெள்ளவேலி
எஸ்.தவமலர் (59) புத்தூர் கிழக்கு
எஸ்.ஸ்ரீஜா (31) அள்ளிக்குளம், வவுனியா
சுதர்ஸன் (33) முரசுமோட்டை
றோசலின் (48) மாதகல், யாழ்ப்பாணம்.
சிதம்பரநாதன் (60) முரசுமோட்டை
வி.ரஜினிதேவி (45) முள்ளியவளை
அன்ரனிதேவதாஸ் (40)
மனோன்மணி (68) மல்லாவி
ரி.தீலிபன் (34) மல்லாவி
என்.ராஜரத்னம் (60) குமரபுரி
பி.தியாகலிங்கம் (69) காரைநகர்
நல்லம்மா (71) அரியாலூர்
வி.கோமதி (30) முல்லைத்தீவு
சிவசாமி (69) இரணியன்குளம் வவுனியா
ரி.சர்மிளா (06) பாரதிபுரம்
ரி.மேனகா (28) பருத்தித்துறை
எஸ்.செல்வரஞ்சி (63) கிளிநொச்சி
ஆர் .ஸ்ரீகரன் (37) வவுனியா
எஸ்.தமிழரசி (37) புதுக்குடியிருப்பு..
த்ரிஸிகன் (07) புதுக்குடியிருப்பு..
எஸ்.சபாரத்னம் (57) புதுக்குடியிருப்பு..
எஸ்.குலதீபன் (23) முல்லைத்தீவு
குலசூரியன் (66) புதுக்குடியிருப்பு..
யு.கமலதேவி (43) வற்றாபளை

மஹேல ஜயவர்தனவின் இறுதி எதிர்பர்ப்பு

mahela1102.jpgஇலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டித் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக நேற்று பாக்கிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன பங்குபற்றும் இறுதி டெஸ்ட் போட்டியாக இது அமைகிறது. இந்த போட்டித் தொடரை வெற்றிகொள்வது தமது ஒரே குறிக்கோள் என மஹேல தெரிவிக்கின்றார்.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
பாக்கிஸ்தானுடனான போட்டித் தொடரை இந்தியா இரத்து செய்ததையடுத்து அந்தப் போட்டித்தொடரில் விளையாட பாக்கிஸ்தான் இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. பாக்கிஸ்தானின் அழைப்பை இலங்கை ஏற்றுக்கொணடதற்கு ஏற்ப இந்த போட்டித்தொடர் நடத்தப்படுகிறது.

இந்த போட்டித்தொடர் ஒரு நாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் கொண்டதாக உள்ள போதிலும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி ஒரு நாள் போட்டித் தொடர் முன்னர் நடத்தப்பட்டதுடன் அதில் இலங்கை அணி வெற்றிபெற்றது. பாக்கிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியில் புது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பரன வித்தான மற்றும் வேகப் பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் ஆகிய இரு புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.

மஹேல தலைமயிலான அணியில் குமார் சங்கக்கார, திலக்கரத்ன டில்ஷான், திலான் சமரவீர, பிரசன்ன ஜயவர்தன, மாலிந்த வர்ணபுர,  தரங்க பரன வித்தான,  சமிந்த வாஸ், முத்தையா முரளீதரன், அஜந்த மெண்டிஸ், சாமர கப்புகெதர,பர்வீஸ் மஹரூப், தில்ஹார பெர்னான்டோ, திலான் துஷார, சுரங்க லக்மால் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

ஆயுதம் தரித்த புலிகளுடன் பேசுங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை! – ப. சிதம்பரம்

p-chidambaram.jpgஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகள் அறிவித்தால், உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெற இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உரிய ஏற்பாடு செய்யும். இதுதான் இந்திய அரசின் கொள்கை என இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் கூறியதாவது: இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மதிக்காமல்,  அதை புலிகள் காலில் போட்டு மிதித்ததே,  இன்றையப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம்.

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது

இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா தளங்களிலும் சம உரிமை அளிக்கும் விதத்தில் 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்காவிட்டாலும்,  பிறகு ஏற்க சம்மதம் தெரிவித்தார். அவர் சம்மதம் அளித்ததால்தான், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தம் மட்டும் அமுலாகியிருந்தால், இந்நேரம் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வும்,  ஜனநாயக அரசும் கிடைத்திருக்கும். அங்கே ஒரு தமிழ் மாநிலமும்,  தமிழர் ஒருவர் முதல்வராக ஆளும் வாய்ப்பும் அமைந்திருக்கும். அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஏராளமான இலங்கைத் தமிழினத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும்; புலிகள் படுகொலை செய்தது மாபெரும் தவறு.

இலங்கைத் தமிழர்களின் சர்வாதிகாரமிக்க தலைவராகத் தான் திகழ வேண்டும் என பிரபாகரன் கருதுவதே பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். அவரை சர்வாதிகார தலைவராக்குவது நமது வேலையல்ல. இந்தியா மட்டுமல்ல, உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும், ஆயுதம் ஏந்திய போராளிகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.  இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல. நம் காலனியாதிக்க நாடும் அல்ல. அது ஒரு இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு.

எனவேää ஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை என்றும் அமைச்சர் ப. சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

புத்தளத்தில் மறுவாக்களிப்பு 21ஆம் திகதி! தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவிப்பு

sri-lanka-election-01.jpgபுத்தளம் தேர்தல் தொகுதியில் ரத்துச் செய்யப்பட்ட நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது இந்த வாக்களிப்பு நிலையத்தில் மோசடி இடம்பெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இதன் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க ரத்துச் செய்தார்.

இந்த வாக்களிப்பு நிலையத்தின் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதியின் இறுதி முடிவுகளை அறிவிப்பது பிற்போடப்பட்டுள்ளதுடன்ää புத்தளம் மாவட்ட மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகளும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விறகு வெட்டச் சென்ற போது கைது செய்யப்பட்ட 25 முஸ்லிம்களுக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை

justice.jpgவிறகு வெட்டச் சென்ற போது கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 25 முஸ்லிம்களுக்கும் மொனறாகலை நீதிமன்றம் ஒரு வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட 25 முஸ்லிம்களும் பொத்துவில் காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற வேளையில் பொலிஸ்காரர்களால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை மொனறாகலை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் கருணாரட்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.

அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களம் இவ் வழக்கை தாக்கல் செய்திருந்தது. விசாரணையின் போது கைதிகள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதிபதி இத்தீர்ப்பினை வழங்கினார்.

இந்த வழக்கின் கைதிகளின் சார்பில் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆஜராகி இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன் விறகு வெட்டச் சென்ற 26 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் சிறைச்சாலையில் மரணமடைந்தனர். இவர்களை விடுவிக்குமாறுகோரி அவர்களது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கடந்த வாரம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் 500 கர்ப்பிணிகள் அனுமதி

pregnant-lady.jpgஅரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள 500 கர்ப்பிணித் தாய்மார்களை வவுனியா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களை அனுமதித்ததாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளதுடன் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கட்டுப்பாடற்ற பகுதியில் பல துன்பங்களை அனுபவித்து வந்த இந்த கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மரணங்கள் அதிகரிக்கிறது! முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு!! வன்னி மக்கள் மரணத்துள் வாழ்வு!!! : த சோதிலிங்கம்

Eelam_Girl300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு. மரணங்களின் எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் அதிகரிக்கிறது. முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு – பெப்ரவரி 10 வரையான இவ்வாண்டின் கடந்த 40 நாட்களில் வன்னியில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 40 நாட்களில் தினமும் 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடந்த 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் எப்போதுமே இவ்வளவு தொகையான பொதுமக்கள் ஒரு குறுகிய காலத்தில் கொல்லப்பட்டு இருக்கவில்லை. புலிகளிடமுள்ள கடைசிச் சில கிராமங்களுக்காக நடைபெறும் இந்த வன்னி யுத்தத்தில் 5000 முதல் 10000 தமிழ் மக்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

மிக மோசமான வார்தைகளுக்குள் அடக்க முடியாத மனித அவலம் ஒன்று முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச ஊடகவியலாளர்களோ சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையோ இலங்கை அரசு அனுமதிக்காத நிலையில் வன்னி அவலம் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு உள்ளது. உண்மைநிலையை அறிந்துகொண்ட சர்வதேச அரசுகள் குறிப்பாக இணைத் தலைமை நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்காமல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளன.

‘பயங்கரவாதிகளான புலிகளை’ அழிக்கிறோம் என்ற போர்வையில் இலங்கை அரசு ஒட்டுமொத்த வன்னித் தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடாத்துகிறது. உணவு மற்றும் மருத்துவ சேவைகளை அம்மக்களுக்கு வழங்காது வன்னி மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்கும் இலங்கை அரசு, தான் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய பகுதிகளையும் மருத்துவமனையையுமே கொலைக்களமாக்கி உள்ளது. அங்குள்ள மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் உடனடியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு பெப் 11 அன்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 300 000 வரையான மக்கள் யுத்தமுனையில் மருத்துவ வசதியின்றி உயிருக்குப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

உலகத்தின் மிகக் கட்டுக்கோப்பான செல்வந்த விடுதலை அமைப்பாக கருதப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டப்பாட்டில் இருந்து அனைத்து பிரதேசங்களில் இருந்தும் மக்களுடன் பின்வாங்கி முல்லைத்தீவின் விரல் விட்டு எண்ணக் கூடிய சில கீராமங்களில் மக்களை அரணாக வைத்து தாக்குவதாக அனைத்து முக்கிய சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன.

யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற முயலும் மக்கள் மீது புலிகளும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக வன்னியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவரான இளம்பருதி பெப் 11ல் அதனை மறுத்துள்ளார். மக்கள் வெளியேறிச் செல்லும் முன்னரங்க நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தமிழ் பொது மக்களும் இராணுவதினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இத்தாக்குதலுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்றும் புலிகள் மறுப்புத் தெரிவித்து உள்ளனர். மேலும் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வந்த பல நூற்றுக் கணக்கானவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மூன்று இளைஞர்கள் தீக்குளிக்குமளவிற்கு தமிழக மக்கள் கொந்தளித்த போதும் தமிழக மாநில அரசும் குறிப்பாக இந்திய மத்திய அரசும் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளன. புலிகளுக்கு இந்தியா எடுக்கும் கடைசிப் பாடமாக இது கருதப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் படுதோல்வியை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிளவு ஏற்படலாம் எனச் செய்திகள் கசிகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய இலங்கை அரசு சார்பான அணி ஒன்று உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளிடமுள்ள கடைசியான முல்லைக் கிராமங்கள் பறிபோகும் போது இந்தப் பிளவு எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் உயிரிழப்புகள் ஆயிரக் கணக்கில் செல்லும் போது அந்த மனித அவலத்தில் இருந்து மீண்டும் புலிகள் தாங்கள் இழந்த அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் கடைசி முயற்சியாகவே இந்த முல்லைக் கிராமங்களில் நடைபெறும் யுத்தம் கருதப்படுகிறது. இங்கு சிக்குண்ட மக்கள் அனைவரையும் புலிகள் பயங்கரவாதிகள் என்ற தோரணையில் இலங்கை அரசு தாக்குதலை நடத்துகிறது. அங்கு கொல்லப்படும் பச்சிளம் குழந்தையையும் புலிக்குட்டி என்று சொல்வதற்கு இலங்கை அரசு எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

தமிழ் மக்களின் குருதியில் முல்லை மண் சிவக்கிறது என்றால் அது மிகையல்ல. அவலம் முடிவின்றித் தொடர்கிறது. சொல்லி அழ நாதியில்லை! கேட்பதற்கும் யாரும் இல்லை!! வேலிகளே பயிரை மேய்கிறது.

லண்டன் குரல் : இதழ் 27
————————
இலங்கை அரசின் கண்மூடித்தனமான தாக்குதலும் புலிகளின் உதாசீனமும் வன்னி மக்களை சொல்லொனாத் துயரத்திற்குள் தள்ளியுள்ளது. பாதுகாப்பாக இருக்க இடமும் இல்லாமல் தப்பிச் செல்ல வழியுமில்லாமல் அவர்கள் படுகின்ற அவஸ்தை கொடூரமானது. சிங்கத்திடமும் புலியிடமும் சிக்கித் தவிக்கும் இந்த வன்னி மக்கள் கூட்டம் இவ்வாறான ஒரு கொடுமையை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒருபுறம் மரணங்கள் மறுபக்கம் பிரசவங்களும் நிகழ்கின்றன.

வடக்கு கிழக்கின் சகல பிரதேசங்களிலும் பின்வாங்கிய போதும் புலிகள் மக்கள் செறிந்துள்ள பகுதியை யுத்த மையமாக்கி உள்ளனர். இலங்கை அரசோ எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை வெற்றிக் கொடி ஏற்றினால் போதும் என்றளவில் யுத்தத்தை முடுக்கிவிட்டுள்ளது.

பெப் 9 இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவே புலிகளால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த தாக்கதல் இராணுவ இலக்கு மீதான தாக்குதல் என்பதிலும் பார்க்க மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு உள்ளது. இது மனித உரிமைகளை மீறும் செயல். புலிகள் மேலும் மேலும் தவறிழைக்கின்றனர். அதுமட்டுமல்ல இப்படியான தவறுகள் தாக்குதல்கள் நடைபெற்றால் அவற்றை நியாயப்படுத்தும்; அப்படியான நியாயங்களை பரப்புரை செய்யும் முறையும் கண்டிக்கப்பட வேண்டியது.

முற்றிலும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புலிகளும் புலிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் செயற்படுவதையே காணக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறே புலிகளை ஆதரிப்பவர்களும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்களதும் செயற்பாடுகள் உள்ளது. புலிகளை ஆதரிப்பவர்கள் புலிகள் மீதும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் அரசாங்கததின் மீதும் அழுத்தங்கள் கொடுப்பதில்லை.

மக்கள் தாம் சுயமாக வெளியேற முடியுமாயின் எப்பவோ புலிகளின் பிடியை மீறிக் கொண்டு வெளியேறியிருப்பார்கள். அப்படி அவர்கள் வெளியேற முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மக்களுக்கு இலங்கை அரசு மீதும் அரச படைகள் மீதுமுள்ள அவநம்பிக்கை மிக முக்கியமானது. அங்குள்ள மக்களில் பெம்பாலானவர்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள். இன்னுமொரு பகுதியினரது குடும்ப உறுப்பினர்கள் புலிகளின் உறுப்பினர்களாக உள்ளனர் அல்லது அவர்கள் மாவீரர் குடும்பத்தினராக உள்ளனர் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பின் மிகநெருங்கிய அல்லது முக்கிய உறுப்பினர்கள் அல்லது தொடர்புடையவர்கள் இப்படியான புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு யாழ் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் கடந்த காலங்களில் அரசின் ஆதரவுடன் காணாமல் போகும் செயல்கள் நடந்தேறியுள்ளன இவற்றின் காரணமாக மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அஞ்சுகின்றனர். அந்த அச்சம் மிகவும் நியாயமானது. அவர்களது அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அரச தரப்பில் பாதுகாப்பு செயலர் பல கருத்துக்களை தெரிவித்து உள்ளார். மேலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்கள் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு முகாம்களில் என்ன நடக்கும் என்பதைத் தமிழ் மக்களுக்கு விரிவாககச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனை ரைம்ஸ் பத்திரிகையாளர் தனது கட்டுரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.

வன்னியில் உள்ள அத்தனை இளைஞர்களும் புலிகளின் பயிற்ச்சி பெற்றவர்கள் அல்ல. ஆயினும் அவர்கள் அத்தனை பேரையும் புலிகளாக அரசு நோக்கும் தன்மையை அவதானிக்க முடிகிறது. தப்பி வந்த இளைஞர்களை அகதி முகாம்களிலிருந்து தனித்து அழைத்துச் செல்லப்படுவதாகவும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது இதுவரையில் யாருக்கும் தெரியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகிறது இதில் சில மிககவும் பயமூட்டும் செய்திகளாளாகும். இது தமிழர் வரலாற்றில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ரெலோ(TELO) – ஈபிஆர்எல்எப்(EPRLF) அழிப்பு அல்லது வெருகலில் நடைபெற்ற சம்பவத்திற்க்கு ஒப்பானதொரு செயலாகும். இவை மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியாத மனித நேயமற்ற செயலாகும்.

வன்னியில் புலிகளின் பிடியில் இருக்கும் தமிழ் மக்களில் பெருந் தொகையானோர் புலிகளை சுயவிருப்பில் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருப்பதால் அவர்களின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து செயற்பபடுவதாலும் அவர்கள் புலிகளின் ஆயுததாரிகள் என்ற தப்புக் கணக்கில் அரசும் இராணுவமும் செயற்படுவது மிகத் தவறாகும்.

புலிகள் கடந்த காலங்களின் செய்த தவறுகளும், மனித உரிமை மீறல்களும், அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், அவர்கள் வழிபின்பற்றி வந்த ரிஎன்ஏ(TNA) யினரின் பம்மாத்து அரசியலும் இன்றுள்ள இந்த இக்கட்டான நிலைக்கு தமிழ் பேசும் மக்களை கொண்டுவந்து விட்டுள்ளது.

புலிகள் இறுதியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய போது தமது பாதுகாப்பிற்காக தம்முடன் இழுத்து வந்த மக்களை இன்று இன்னுமொரு தடவை தமது பாதுகாப்பிற்காக வன்னியில் கேடயமாக்கி உள்ளனர். ஒவ்வொரு தடவையும் தமது பாதுகாப்பிற்கு குந்தகமான சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் புலிகளின் செயற்ப்பாடானது தமிழ் மக்களை போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தியும் மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளைத் தோற்றுவித்துமே வந்துள்ளனர். இவ்வாறான நிலைகளிலும் புலத்தில் உள்ள புலிகள் ஆதரவு அமைப்புக்கள் புலிகளின் மீது எந்தவித அழுத்தங்களையும் கொடுப்பதில்லை. இந்த விடயத்தில் ரிஎன்ஏ(TNA) யும் தவறிழைத்துள்ளது.

இலங்கை அரசு இந்த இக்கட்டான காலகட்டத்தில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றியது மிக மோசமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை இலங்கை அரசு எப்படியான மனித உரிமை நடவடிக்கைகளை செய்யப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவிக்கின்றது. அப்பாவி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த யுத்தம் தொடரும் வரை மக்களுடைய அவலங்களும் தொடரும்.

அரசும் அரசியற் கட்சிகளும் குறிப்பாக கொழும்புத் தமிழ் அரசியற் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் போராட்டவாதிகளும் மக்களுக்காகவே என்று சொல்லிக் கொள்கின்ற போதிலும் வன்னி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் பகடைக்காய்களாகவே உள்ளனர். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் கொள்கைகளும் நடைமுறைகளும் மக்களுக்காவே இருக்க வேண்டும். இந்த மக்கள் அவர்களின் இனம், மொழி போன்றவற்றிக்கு அப்பால் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வன்னி மக்களை பாதுகாக்காமல், இந்த மக்களின் உயிர் அழிவிற்கு மேல் இனிமேல் என்றுமே மக்ளுக்கான அரசியல் செய்ய முடியாது. இந்த அரசியல்வாதிகள் தம்மை மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவது அபத்தமாகி விடும். மக்களை பாதுகாக்க முடியாத இந்த கட்சிகள் மக்களின் பெயரால் இனிமேல் தமது அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடியாது போகும் இந்த அரசியற் கட்சிகள் அர்த்தமற்றதாகி விடும்.

பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு இனவாதத்தை ஊட்டி அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராகும் ஆளும் கட்சியும் வன்னியில் உள்ள மக்களை புலிகளாகக் காட்டி அவர்களது அவலத்தின் மீது வெற்றியை நிலைநாட்டத் துடிக்கிறது. அந்த வெற்றியின் மீது இந்த தேர்தலை சந்திக்க தயாராகுகின்றது மகிந்த அரசு. இதற்கான ஒத்திகையாக மாகாணங்களுக்கான தேர்தல்களை அரசு பரீட்சார்த்தமாக (14 பெப்) சந்தித்துள்ளதது.

தமிழ் தேசியப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்ச்சி அளித்து ஆயுதபாணிகளாக்கி தனது பிராந்திய வல்லாதிக்கத்தை பயிற்ச்சி செய்த அதே இந்தியா இன்று வன்னி யுத்த களத்திலும் இலைமறை காயாக நிற்கின்றது. தமிழக மக்கள் கொதித்தெழுந்த போதும் அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. வன்னி யுத்த களத்தில் இருக்கும் தமிழ் மக்களின் உயிரில் அக்கறையில்லாமல் உள்ளது. தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது.

வன்னி மக்கள் மீதான இராணுவ தாக்கதல்களுக்கு முற்படும் அரசும், அரச ஆதரவு தமிழ் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களும் – வன்னி மக்களை தமது மிக குறுகிய பிரதேசத்தில் அடக்கி வைத்திருக்கும் புலிகளும், புலிகள் ஆதரவு இயக்கங்களும், ரிஎன்ஏ(TNA) யும் வன்னி மக்கள் மீது நடாத்தப்படும் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வந்து அவர்கள் பாதுகாப்பாக சுயகௌரவத்துடன் வாழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.