03

03

புதுக்குடியிருப்பு சந்தியை படையினர் கைப்பற்றியுள்ளனர்

puthukkudiyiruppu-junction.jpgமேஜர் ஜெனரல் கமால் குனரத்ன தலைமையிலான 53வது படைப்பிரிவின் படையணியான 8வது செயலணி படைப் பிரிவினரும் பிரிகேடிய சாவேன்திர சில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவினரும் இன்று (மார்: 03) காலை 9.30 மணியளவில் எல்ரிரிஈ இன் இறுதித் தளமான புதுக்குடியிருப்பு நகரின் சந்தியைக் கைப்பற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

58வது படைப்பிரிவினரும் 8வது செயலணிப்படையினரும் கடந்த 20ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி புலிகளின் நிலைகளை முற்றாக அழித்துக் கொண்டு இச்சந்தியை அடைந்துள்ளனர். இப்படைப்பிரிவின் படையணிகளான 12 வது கஜபா றெஜிமன்ட், முதலாவது கஜபா றெஜிமன்ட் மற்றும் 4வது விஜயபாகு படையணிகள் தற்பொழுது இச்சந்தியின் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதுடன் எல்ரிரிஈ இன் மீதித் தளங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

புதுக்குடியிருப்பு நகரின் மேற்கு எல்லையில் 10வது மற்றும் 12வது கஜபா படையணிகள் நிலைகொண்டுள்ளன. 6வது, 9வது, 12து கெமுனுப் படையினர் கோம்பாவிலிருந்து புதுக்குடியிருப்பு நகருக்கு வடக்காக தாக்குதல் தொடுத்து வருகின்றனர். 7வது சிங்கப் படையினரும் 10வது, 11வது காலால்படையினரும்  எல்ரிரிஈ இன் நிலைகளை தேடி அழிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ-35 பாதைக்கு தெற்காக முதலாது கஜபா படையினரும் நான்காவது விஜயபாகு படையினரும் 8வது செயலணி படையனரும் தாக்குதல் நடத்தி புதுக்கடியிருப்பு சந்தியை கைபற்றியுள்ளனர். படையினர் இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிந்திய செய்தி – பாக்கிஸ்தானில் இலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணி மீது துப்பாக்கிச் சூடு. ஆறு வீரர்கள் காயம்! எட்டு பொலிஸார் பலி!

20090302.jpgஇலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணியின் மீது இன்றுகாலை துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று விளையாட்டில் கலந்துகொள்வதற்கென மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கற் அணியைச் சேர்ந்த ஆறு காயமடைந்துள்ளனர்.

இதில் கிரிக்கற் வீரர்களான திலான் சமரவீர,  மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நால்வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வைத்திய சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளனர். கிரிக்கற் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு காலில் சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாத துப்பாக்கி நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச்சேவை அறிவித்துள்ளது.

அதேநேரம் இன்று நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.  

காயமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் இலங்கைக் கிரிக்கற் வீரர்கள் வருமாறு:-

திலான் சமரவீர,

தாரங்க பரணவித்தான,

அஜந்த மெண்டிஸ்,

சங்ககார ,

மகேல ஜெயவர்தன

சமிந்தவாஸ்

செய்திப் பின்னிணைப்பு

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் கிரிக்கற் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரியொருவருடன் ‘தேசம்நெற்’ தொடர்புகொண்டபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திலான் சமரவீரவினதும் உதவிப்பயிற்சியாளர் போல் சாபேர் ஆகியோரின் நிலைமை பாரதூரமானதல்ல எனத் தெரிவித்தார். ஏனைய கிரிக்கற் வீரர்கள் 5 வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் தொலைக்காட்சிச்சேவை இது குறித்து தகவல் தெரிவிக்கையில்,  வெள்ளை நிற வாகனமொன்றில் வந்த இனந்தெரியாதவர்களாலே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தது. இறுதியாகக் கிடைக்கும் தகவல்களின்படி இத்தாக்குதலில் எட்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதம்

பாகிஸ்தான் லாகூரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை வீரர்கள் காயமடைந்ததையடுத்து, வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசர விமானம் மூலமாக இலங்கை அணி வீரர்களை வெகு விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிரிக்கெட் சபை பிரதம நிறைவேற்று அதிகாரி துலிப் மெண்டிஸ் தெரிவித்தார்.

அத்துடன் தோற்பட்டையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து காயமடைந்த பரணவித்தான, திலான்,துணைப் பயிற்றுவிப்பாளர் போல் ஆகியோர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும், இன்று இரவுக்குள் நாடு திரும்புவர் எனவும் துலிப் மெண்டிஸ் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து லாகூர் கடாபி மைதானத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தமையை இட்டு தாம் அதிர்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை வீரர்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்த பின்னரே அவர்கள் பாகிஸ்தான் சென்றதாகவும் அர்ச்சுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது முதல் தீவிரவாத தாக்குதல் 

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர் காயம்:

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அம்பயர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாரும் அபாய கட்டத்தில் இல்லை-ஜெயசூர்யா:

இதற்கிடையே தாக்குதலில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள பேட்டியில், எந்த வீரரும் அபாய கட்டத்தில் இல்லை. கவலைப்படும்படியான நிலையில் எந்த வீரரும் இல்லை. இதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நாங்கள் இருந்த வேன் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநர், இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி.  மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது என்று தெரிவித்துள்ளார்.

cricket_pakisthan.jpg

pak-2nd-test.jpg

கட்டுநாயக்கவில் சுட்டு வீழ்த்தப்பட்ட தற்கொலை விமானத்தின் விமானி அடையாளம் காணப்பட்டுள்ளார்

ruban.jpgகட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடாத்த வந்த விமானம் தரையில் உள்ள படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. அவ்விமானத்தை செலுத்திவந்த புலிகள் இயக்க தற்கொலைதாரி ரூபன் நீர்கொழும்பு மஜித்திரேட் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

30 வயது முருகப்பிள்ளை சிவரூபன் என அவரது உறவினரும் முன்னாள் புலிகளியக்க உறுப்பினருமான 29 வயது இளைஞர் ஒருவரால் நீர்கொழும்பு பிரேத அறையில் வைத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளார். சாட்சியின் தகவல்களின் படி முருகுப்பிள்ளை சிவரூபன் இடைக்காடு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரைப் படித்தவர் எனவும் பின்னர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார் எனவும் தெரிகிறது. அவரது தகப்பனார் புற்றுநோயினால் பாதிப்புற்று வன்னியின் கிழக்குப்பகுதியில் வாழ்வதாகவும் சகோதரி ஒருவர் ஜேர்மன் நாட்டில் வாழ்வதாகவும் மேலும் தெரிய வருகின்றது.

கிழக்கு மாகாண அமைச்சர்கள் கலந்துகொண்ட வைபவத்தில் துப்பாக்கிச் சூடு; பெரும் பரபரப்பு

gun.jpg காத்தான்குடியில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வைபவமொன்றில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், துரையப்பா நவரெட்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாகாண அமைச்சர் நவரெட்ணராஜாவின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அறியவருகிறது.

மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் மாகாண விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.நவரட்ணராஜா கலந்துகொள்ளும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நேற்று காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசங்களில் நடைபெற ஏபற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காத்தான்குடி கமத்தொழில் விவசாய நிலையத்தில் அடிக்கல் நடும் விழாவில் மாகாண அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே ஒரு மீற்றர் தூரத்திற்குள் நின்ற மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி தவறுதலாக திடீரென்று வெடித்ததையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. ரவைகள் மேலே நோக்கி பாய்ந்ததால் அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், நவரட்ணராஜா மற்றும் அதிதிகள், பொதுமக்கள் எந்தவொரு ஆபத்துமின்றி உயிர்தப்பினர்.

உடனடியாக கடமையில் இருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியை கைப்பற்றியதுடன் வெடித்த நான்கு ரவைகளையும் மீட்டெடுத்துள்ளனர். பின்னர் நிலைமை வழமைக்கு திரும்பியதையடுத்து நிகழ்வுகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. 

ஆயுதங்களைக் களைய த.ம.வி. புலிகள் உத்தேசம்

tmvp2.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இன்னும் சில தினங்களில் தமது அமைப்பிலுள்ள ஆயுதங்களைக் களையவுள்ளதாக அதன் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். எதிர் வரும் சனிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை தமது ஆயுதங்களைப் பாதுகாப்பு தரப்பிடம் வைபவ ரீதியாகக் கையளிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமது கட்சியின் முழுமையான ஜனநாயகத்தையும் அரசியலையும் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளதாகக் கூறும் அவர், தமது அமைப்பிலுள்ளவர்களுக்குத் தொழிற்பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. வைகோ

26-vaiko.jpg பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து வைகோ, இன்று மாலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜெயில் வாசலில் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

பிரபாகரனுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த படத்தை வெளியிட்டு உள்ளனர். அவை பழைய படங்கள். இருந்தபோதிலும் அந்த படங்கள் பற்றி நான் பெருமைப்படுகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வன்னி பகுதிக்கு செல்வேன். விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்று அரசியல் நடத்தினால் அது விபச்சாரத்தை விட மோசமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்  தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பிரசாரத்தை பாளையங்கோட்டை ஜெயில் வாசலில் இருந்து தொடங்குகிறேன் என்றார்.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது!

sri-lanka-parliment.jpg பாராளுமன்றம்  இன்று  காலை  மீண்டும்  கூடுகிறது.  இன்றைய  அமர்வின்  போது   இலங்கை மின்சாரசபை திருத்தச் சட்டமூலம் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டப்ளியு. டி. ஜே. செனவிரத்ன இப்புதிய சட்டமூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.

முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன்

Pearl_Logo‘முல்லைத்தீவின் யுத்த பிராந்தியத்தினுள் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா உதவக் கூடாது’ என People for Equality and Relief in Lanka (PEARL) என்ற அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. ‘மாறாக பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்தவும்’ என்று அவ்வமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்துள்ள பகுதிகளிலேயே தாக்குதலை மேற்கொண்டு பல நூற்றுக் கணக்கான வன்னி மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ள நிலையில் PEARL நேற்று இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது.

‘U.S. Pacific Command (PACOM) முல்லைத் தீவில் சிக்குண்டுள்ள மக்களை வெளிறேற்றும் திட்டத்தில் தலைமைப் பாத்திரம் ஏற்று உள்ளதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள PEARL இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடும்படி கோரி உள்ளது. ‘இவ்வாறு வெளியெற்றப்படும் மக்கள் இலங்கை அரசின் திடமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாவர்கள்’ என்று கூறியுள்ள PEARL ‘எங்களின் கையில் அந்த மக்களின் குருதி வேண்டாம்’ என்று தெரிவித்து உள்ளனர். PEARL   அமெரிக்கத் தமிழர்களால் 2005ல் உருவாக்கப்பட்ட அமைப்பு. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கவனத்திற்கொள்ளும் 1800 பெரும்பாலும் அமெரிக்கத் தமிழர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தங்களுக்குக் கிடைத்தள்ள தகவல்களின் படி ‘U.S. Pacific Command (PACOM) முல்லைத்தீவில் சிக்குண்டு உள்ள மக்களை வெளியேற்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளது PEARL. இந்த இலங்கை அரசு ஒப்படைக்கப்பட்ட மக்களை நாசி முகாம்கள் போன்ற முகாம்களில் (concentration-style internment camps) அடைக்க திட்டமிடுவதாகவும் PEARL குற்றம்சாட்டி உள்ளது.

இந்த மக்களை முல்லைத் தீவு பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதை கைவிட்டுவிட்டு பாதுகாப்பு வலயத்தை மேலும் விரிவாக்கி சர்வதேச உதவிப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை சுதந்திரமாக அங்கு அனுமதிப்பதன் மூலம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என PEARL கேட்டுக்கொண்டு உள்ளது.

எல்ரிரிஈ தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் 14 சதுர கி.மீ பரப்பளவை தனது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர். அப்பிரதேசம் அங்குள்ள 200 000 மக்களினால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவர்களில் கணிசமான எல்ரிரிஈ உறுப்பினர்களது குடும்பங்களும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் மற்றும் ஏனைய ஆயுத அமைப்புகளின் களையெடுப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கபடுவார்கள் என்ற நியாயமான அச்சம் அந்த மக்களிடையே உள்ளது. அவர்கள் அப்பிரதேசங்களை விட்டு வெளியேற முடியாமலிருப்பதற்கு இவை முக்கிய காரணியாக உள்ளது. ஏனையவர்கள் பெரும்பாலும் விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது பெரும்பாலான மனித உரிமைகள் அமைப்புகளாலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

எல்ரிரிஈ தனது கடைசித் துண்டு நிலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 200 000 மக்கள் சிக்குண்டுள்ள நிலம் மிக அவசியம் என்பது பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனாலேயே அனைத்து பகுதிகளிலும் பின்வாங்கிய எல்ரிரிஈ மக்கள் மிக மிகச் செறிவான பகுதியில் தங்கள் கடுமையான யுத்தத்தை நிகழ்த்துகின்றனர். இப்பகுதியை இழப்பது எல்ரிரிஈ தனது பிரதேசக் கட்டுப்பாட்டை முற்று முழுதாக இழப்பதற்கு ஒப்பானது. கிட்டத்தட்ட இரு தசாப்தங்களின் பின் எல்ரிரிஈ பிரதேசக் கட்டுப்பாட்டை கொண்டிராத ஒரு கொரில்லா அமைப்பாக மீண்டும் மாறுவதையெ இது குறிக்கும்.

அதனால் தனது பிரதேசக் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்வதற்கு யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை பாதுகாப்பு வலயம் என்பன எல்ரிரிஈ க்கு மிக அவசியமானது. பயங்கரவாதத்தை அழிப்பதன் பெயரில் இலங்கை அரசு ஒட்டமொத்த தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடத்தி இன அழிப்பொன்றை மேற்கொள்வதாக பெரும்பாலான தமிழ் மக்கள் நியாயமாகவே நம்புகின்றனர். அதனால் இந்த இன அழிப்பை நிறுத்த யுத்த நிறுத்தம் அவசியமானது என்பதை சரியாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை அரசு சர்வதேச உதவியுடன் முல்லையில் சிக்குண்ட மக்களை வெளியேற்றி சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் மேற்பார்வையில் அம்மக்கள் விடப்பட்டால் இன்று யுத்தம் நடைபெறும் பிரதேசத்தின் முக்கியத்துவம் இழந்து போவதுடன் எல்ரிரிஈ தனது கடைசித்துண்டு நிலத்தையும் விட்டு கொரில்லாப் போர் முறைக்குச் சென்றுவிடும். இது எல்ரிரிஈ இன் வரலாற்றில் மிக மோசமான பின்னடைவாக அமைவது தவிர்க்க முடியாதது.

2002ல் ஒஸ்லோவில் இலங்கை அரசுக்கு சமமாக ஒரு பிரதேசக் கட்டுப்பாட்டை கொண்டு புரிந்தணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திட்ட எல்ரிரிஈ ஏழு வருடங்களில் அவற்றையெல்லாம் இழந்து மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்துவிடும்.

அந்த நிலைக்குச் செல்வதை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எல்ரிரிஈ மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். அதில் மக்கள் பகடைக்காய்களாக கேடயங்களாக ஆக்கப்படுவதிலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முல்லையில் உள்ள வன்னி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இரண்டு இராணுவங்களின் பிடியில் சிக்குண்டு உள்ளனர். இரு இராணுவங்களுமே அந்த மக்கள் மீது தமது அதிகாரத்தை நிலைநாட்டும் தங்கள் இறுதி முயற்சியில் மிக ஆக்கிரோசமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த யதார்த்தத்தின் பின்னணியில் தான் யுத்தம் நடைபெறும் முல்லையில் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் அமெரிக்காவில் உள்ள PEARL அமைப்பு அங்குள்ள மக்களை வெளியேற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. ஹொலிவூட் படங்களில் மட்டுமே செல் அடிகளைப் பார்த்துக்  கொள்பவர்கள் கடந்த பல மாதங்களாக செல் அடிக்குள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் மக்களை யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியெற்ற வேண்டாம் எனக் கேட்கின்றனர்.

PEARL அமைப்பின் கோரிக்கை முல்லையில் உள்ள வன்னி மக்களின் பாதுகாப்பு சார்ந்ததாக இருந்தால்  PEARL  பின்வரும் கோரிக்கைகளையே முன் வைத்திருக்க வேண்டும்.
வெளியெற்றப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவும் சர்வதேசமும் பொறுப்பேற்க வேண்டும்.
வெளியேற்றப்படும் மக்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
தற்காலிகமான முகாம்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
மிக விரைவில் சில மாதங்களுக்குள் அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த யுத்தத்தில் உயிரிழப்புகள், அங்கங்களை இழந்தவர்கள் உடமைகளை இழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகளே யுத்தம் நிறுத்தப்படாத பட்சத்தில் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை அதிலிருந்து பாதுகாக்க ஒரே வழி. அதனைவிடுத்து எல்ரிரிஈ அரசியல் பேரம் பேசுவதற்கும் எல்ரிரிஈ இனதும் புலம்பெயர் தமிழர்களதும் அரசியல் அபிலாசைகளுக்காகவும் இந்த மக்களை பணயம் வைக்க முடியாது. இலங்கை அரசு இனவாத அரசு என்ற முடிவுக்கு நாம் வந்தால் வன்னி மக்களை அந்த யுத்தப் பிராந்தியத்தில் இருக்க நிர்ப்பந்திக்க முடியாது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வாய்ப்பு அழிப்பது அவசியம்.

வடக்கு – கிழக்கு தமிழர்களில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மூன்றில் ஒரு பகுதியான ஒரு மில்லியன் வரையானோர் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டனர். மீதமுள்ளவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தெற்கில் வாழுகின்றனர். வெளிநாடுகளுக்கு வரவும் கொழும்புக்கு வரவும் வசதியற்றவர்களே பெரும்பாலும் இன்று வன்னியில் சிக்குண்டுள்ளனர். அந்த மக்களின் வறுமையைக் காரணம் காட்டி அவர்களின் தலையில் தமிழீழச் சுமையை இறக்கி வைத்துவிட்டு ‘உந்த மோட்டுச் சிங்களவன்களுக்கு பாடம் புகட்ட’ ஒற்றைக் காலில் நிற்கும் கோட் ரை கட்டும் கனவான்களும் கனவாட்டிகளும் யதார்த்தத்தை புரிந்த கொள்ள வேண்டும்.

._._._._._.

People for Equality and Relief in Lanka (PEARL)
Action Alert Archive
Take Action Now! (USA)

U.S. Troops Plan Evacuation in Sri Lanka: Sign Death Warrants for Hundreds of Thousands, Support Ethnic Cleansing
March 2, 2009

Credible reports from Colombo, Sri Lanka reveal the U.S. Pacific Command (PACOM) is planning to lead an evacuation of nearly 200,000 Tamil civilians trapped in the war-torn northern region of Sri Lanka. We urge you to stop these plans immediately, which would only serve to exacerbate the crisis for these civilians and support ethnic cleansing in this region. Instead of an evacuation, the “safe zones” these civilians are currently in should be strengthened, with full access for aid workers, journalists and human rights monitors.

These civilians have been besieged by the Sri Lankan government’s military offensive, which has raged on since September, costing the lives of over 2,000 Tamil civilians and wounding another 7,000 Tamil civilians. Reports reveal that PACOM is planning to evacuate these civilians and deliver them to the Sri Lankan government – who would then imprison them in concentration-style internment camps. Human Rights Watch and other humanitarian agencies have criticized the Sri Lankan government for its treatment of refugees: forcibly keeping them in internment camps, separated from family and secluded from international aid agencies, as they are harshly interrogated and abused.

PACOM evacuating these civilians and delivering them to the Sri Lankan government signs the death warrants of thousands of civilians, who would “disappear” upon entry into government-run camps. The Sri Lankan government has the ignoble title of having the highest rate of state-sponsored abductions in the world, according to the United Nations Working Group on Enforced and Involuntary Disappearances. The government frequently “disappears” civilians, journalists and even aid workers who they believe to be critical of their regime.

The Sri Lankan government currently estimates only 70,000 civilians inhabit the conflict area; most aid organizations including the ICRC, UN and HRW estimate 200,000 civilians. This discrepancy reflects a calculated attempt by the Sri Lankan government to underestimate the size of the population they would come to control, granting them adequate room to “disappear” thousands. These 200,000 civilians chose to live in area controlled by the Liberation Tigers of Tamil Eelam, and will therefore be treated with suspicion and brutality by the Sri Lankan government.

PACOM launching an evacuation of Tamil civilians supports the Sri Lankan government’s campaign of ethnic cleansing of this region. Tamils have been under attack by the Sri Lankan government since last September; evacuating them from Vanni and delivering them to the Sri Lankan government is equivalent to being an accomplice to genocide. As American citizens, we implore you to put an immediate stop to PACOM plans to evacuate these civilians. We do not want their blood on our hands. Instead of an evacuation, we urge the U.S. government to expand the “safe zone” these civilians are in, and strengthen their security by allowing aid workers, journalists and human rights monitors full access to the region. We also ask the U.S. government to pressure the Sri Lankan government to accept a ceasefire to provide respite to these besieged civilians.

இந்தியாவில் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்டமாக மக்களவைத் தேர்தல்

election_ballot_.jpg இந்தியாவில் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி வரை மக்களவைத் தேர்தல் 5 கட்டமாக நடக்கவுள்ளது. மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 16ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 23ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 30ம் தேதியும், 4வது கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதியும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதியும் நடக்கவுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 5 கட்டமாகவும், பிகாரில் 4 கட்டமாகவும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் 3 கட்டமாகவும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2 கட்டமாகவும் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மற்ற 15 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

இந்த அறிவிப்புகளை தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி டெல்லியி்ல் வெளியிட்டார்.

ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவில் 124 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 23ம் தேதி 141 தொகுதிகளுக்கும், ஏபரல் 30ம் தேதி 107 தொகுதிகளுக்கும், மே 7ம் தேதி 85 தொகுதிகளுக்கும், மே 13ம் தேதி 86 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கோபால்சாமி அறிவித்தார். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 71.40 கோடியாகும். இது கடந்த தேர்தலைவிட 4.3 கோடி அதிகமாகும்.

மொத்தம் 40 லட்சம் அரசு ஊழியர்கள், 21 லட்சம் போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நாடு முழுவதும் மொத்தம் 8,28,804 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும். தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த மக்களவை ஜூன் 2ம் தேதிக்குள் அமைய வேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டோருக்கான ரிசர்வ் தொகுதிகள் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலைவிட 5 இடங்கள் அதிகமாகும். அதேபோல பழங்குடியினருக்கான தொகுதிகள் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலை விட 6 தொகுதிகள் அதிகமாகும். இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியின் பதவி்க் காலம் ஏப்ரல் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராவார்.

இதனால் முதல் கட்ட தேர்தலையடுத்து கோபால்சாமி விலகிவிடுவார். அடுத்த 4 கட்டத் தேர்தல்கள் சாவ்லாயின் தலைமையில்தான் நடைபெறும்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

medicine-01.jpgவவுனியா நலன்புரி நிலையங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 31,000 பேர் வவுனியாவில் 13 நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு குறைந்தது பத்துப்பேருக்கு மலசல கூடம் தேவையாகும். ஆனால், இங்கு 100 பேருக்கு ஒரு மலசல கூடம் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாக நிவாரண பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் விநியோகம் நடைபெறுகின்றது. ஆனால், தற்போதைய வெப்பகாலத்தில் கூடுதலான நீர் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெப்பகாலத்திற்கு பொருத்தமற்ற கூடாரங்களிலும் தகரத்திலான கொட்டகைகளிலும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பல இடர்களை அனுபவிக்கவேண்டியுள்ளது.

வந்தவர்களை தங்கவைக்க தற்காலிக ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.செட்டிகுளத்தில் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வைத்தியகுழுவினர் நலன்புரி நிலையங்களுக்கு தினமும் விஜயம் செய்துவருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.

நலன்புரிநிலையத்திற்குள் நுழைவதற்கு மாவட்ட செயலகத்தினால் பாஸ் வழங்கப்பட்டவர்கள் மாத்திரம் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்புக் கடமையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.