08

08

ஆரியர் – திராவிட உறவும் யூத பெருமையும்: நாதன் (தேசம்நெற் கருத்தாளர்)

நாம் யூதர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளாது யூதர்களை எமக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வதால் மிகபெரும் வரலாற்றுத் தவறைப் புரிகின்றோம். வரலாறு பற்றிய பிரச்சனைகளுக்கு சில கருத்துக்கள் கூறவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக யூதர்களை உதாரணம் காட்டுவதையும், ஆரிய திராவிட மோதல்கள் பற்றிய கருத்துக்கள் பல வரலாற்றுத் தவறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றுது. இவற்றை வரலாறு பற்றி தவறான புரிதலை போக்க வேண்டியதும் அவசியமான தேவையாக இருக்கின்றது. இறுதிக் கட்டம் என்று புலம்பெயர் புலிகளால் பிரச்சாரம் செய்யப்படுகின்ற வேளையில் ஆரிய திராவிட முரண்பாடு என்பது 3500 வருட வரலாறு கொண்டதாக பிரச்சாரப்படுத்தப் படுகின்றது. இதுபற்றி புரிதல் சமூகத்தில் இல்லை. இவ்வாறான வேளையில் வரலாற்று திரிபுகள் சமூகத்தில் பல வேண்டாத பிரச்சனைகளைக் கொண்டு வந்துவிடும்.

திராவிட ஆரிய சிந்தனையை தற்பொழுது முதலில் கிளறிவிட்டது சிறிலங்கா இராணுவ அதிகாரியாகும். இவரே தற்பொழுது இலங்கை சிங்களவருக்கே சொந்தம் எனக் கூறினார். இவரின் வரலாற்றுக் கூறு கண்டிக்கப்பட வேண்டியதே. இத்துடன் இவர்களின் ஆரிய திராவிட இனக்கூறு பற்றிய மிகைப்படுத்தல் பற்றிய வெளிப்பாடு என்பது சிங்கள மக்கள் மத்தியில் ஊறியிருப்பதும் இனப்பிரச்சனை தீர்ப்பதற்கு பாதக இருக்கின்றது. ஆயுதங்களை விட ஆபத்தானது விசமத்தனமாக கருத்துக்களாகும். இவ்வகையாக விசக் கருத்துக்களை பல்முனைச் செயற்பாடுகள் மூலமே எதிர்த்துப் போராட முடியும்.

இன்று எம்மக்கள் மத்தில் இருக்கின்ற ஆரியச் சிந்தனை அல்லது ஆரியவகை உலகக் கண்ணோட்டம், சமஸ்கிருத மயமாதல் இவைகளை எமது சமூத்தில் இருந்து எதிர்கொள்வதும், இலங்கையில் இருக்கின்ற சிங்களவர்கள் எல்லோருமே ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்ற கருத்தியலையும் எதிர்க் கொள்வதானது போராடும் சமூகமாகிய எமக்கு அவசியமானதாகும். இவை மாத்திரம் அல்ல யூதச் சிந்தனை எமது மக்கள் மத்தியில் மதம் மூலமாக எம்மிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது.

யூதர்களே தமிழர்களின் உதாரணம்?

யூதர்கள் எவ்வாறு ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்பது பற்றிய வரலாற்றுப் பார்வையை இங்கு முழுமையாக கொடுக்கவில்லை எனினும் சில சாரம்சத்தை இங்கு தருகின்றறேன். யூதர்கள் சர்வதேசத்தின் உதவியுடன் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்ட உண்மையைத் தான் நாம் தெரிந்து வைத்திருக்கின்றேம். அதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றை எம்மவர் தெரிந்து வைத்திருப்பதில்லை.

யூதர்களின் இஸ்ரேல் -பலஸ்தீன வரலாறு
யூதர்களின் உலகக் கண்ணோட்டும் எவ்வகையானது
அவர்களின் வாழ்க்கை முறை
யூதர்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் வரலாறு

சமகால அரசியல் (எவ்வாறு கிறிஸ்தவ நெறியை பின்பற்றும் ஏகாதிபத்திய உலகத்தின் பாதுகாப்பு அரணின் கீழ் யூததேசம் இருக்கின்றது என்பதையும், யூததேசம் எவ்வாறு மத்தியகிழக்கில் ஏகாதிபத்திய நலனைப் பாதுகாக்கின்றது என்பதை தெரிந்திருத்தல் வேண்டும்) இவைகளை அறிவதன் மூலமே யூதர்களின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.

விவிலியத்தில் யூதரின் வரலாறு பற்றி பல ஆகமங்களாக பிரிக்கப்பட்டும், பல ஆசிரியர்களை எழுத்தாளர்களாக் கொண்டும் உள்ளது. வரலாற்றினை தொகுத்த போது முன்னுக்குப் பின்னாக வரலாறு கூறப்படுவதினால், அதன் காலமும் மாற்றம் கொண்டுள்ளது.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்
கடவுள் வாக்களித்த தேசம் என தமது மேலான்மைக் கருத்தை முன்வைக்கின்றனர்.

காயின் ஆபேல் ஆகிய சகோதரர்களுக்கிடையேயான முரண்பாடு கூட இரண்டு வகை சமூகத்தின் உலகக் கண்ணோட்டத்திற்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றது. மக்கள் பொருளாதார வளர்ச்சியடைந்த பிற்பாடு ஏற்பட்ட மாற்றாத்தினால் ஏற்படும் வர்க்க வர்க்க வளர்ச்சியினால் கீழ் நிலைக்கு வருகின்றனர்.

இவற்றிற்கு எகிப்து தேசத்தில் உருவாகிய நிலப்பிரபுத்துவச் சமூதாயத்தின் அரசியல் பொருளாதார அமைப்பானது யூதர்களின் இருப்பை கேள்விக் குறியாக்கியது.

‘எந்த நாட்டில் நீ புகுவாயோ, அந்த நாட்டுக் குடிகளை எல்லாம் கலங்கடித்து, நீ வரக் கண்டவுடன் உன் பகைவர் எல்லோரும் புறமுதுகுகாட்டியோடச் செய்வோம். நீ அவர்களுடைய நாட்டில் புகுவதற்கு முன்னர், நாம் பெரிய குளவிகளை அனுப்பி ஏனையரையும் கானானையரையும் ஏத்தையரையும் துரத்தி விடுவோம். அந்த நாடுகள் பாழாய்ப் போகாதபடியும், காட்டு விலங்குகள் பல்கி உன்னைத் துன்புறுத்தாதபடிக்கும், நாம் ஒராண்டிற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்திவிடமாட்டோம். நீ பெருகி அந் நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் வரை, அவர்களைச் சிறிது சிறிதாய் உன் முன்னிலையினின்று துரத்தி விடுவோம்.

(மேலும்) செங்கடல் தொடங்கிப் பிலித்தியரின் கடல் வரையிலும், பாலைநிலம் தொடங்கி ஆறு வரையிலும், உன் எல்லைகளை உங்கள் கைகளில் ஒப்படைப்போம். அவர்களோடும் அவர்களின் தெய்வங்களோடும் நீ உடன்பட வேண்டாம். அவர்கள் உன்னை எமக்கு எதிராகப் பழிசெய்யும்படி து}ண்டாவண்ணம், அவர்கள் உன் நாட்டிலேயே குடியிருக்க வேண்டாம்” (யாத்தியர் ஆகமம் 23-27-33)

பொருளாதார வளர்ச்சியினால் உயர் வர்க்கத்தின் (ஆழுமை கொண்ட இனத்தின்) தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தினால் போராட தொடங்குகின்றனர். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவதற்கு உண்மை எனக் கொள்ளக் கூடிய கருத்துருவத்தை உருவாக்க வேண்டியது அன்றைய காலத்தில் தேவையாக இருந்திருக்கலாம். இவ்வாறாக உருவாக்கப்பட்டதாக இவ்விரண்டு சின்னங்கள் இருந்திருக்கலாம். இந்த இரண்டு கருத்துக் கொண்ட சின்னங்கள் யூத, கிறிஸ்தவத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது. இந்த இரண்டு முக்கிய கருத்துக்கள் தமிழ் மக்களை மாத்திரம் அல்ல மற்றைய இனங்கள் எதனையும் சமத்துவமான இனவகை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புறவினத்தாரிடம் சென்று நற்செய்தியைப் போதியுங்கள் என்ற கோட்பாட்டுக்கமைய தமது கருத்துருவாக்கத்தை பரப்பி மற்றைய மக்களின் உலகக் கண்ணோட்டத்தை அழித்து தமது உலகக் கண்ணோட்டத்தை பரப்பு வதன் மூலம் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இதனை தமிழ் தேசிய வாதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றார் என தெரியவில்லை. யூதர்களின் இனவெறி மிருகத்தனமானதாக உருவெடுத்துள்ளது.

வாக்களிக்கப்பட்ட தேசம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கருத்தியலின் காரணமாக இஸ்ரேல் நாட்டவருக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலே ஒரு (வல்லரசுகளால் திணிக்கப்பட்ட) சமாதான தீர்வை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. இஸ்ரேலிய நாட்டவரின் எதேர்ச்சாதிகாரத்தை நிலைகொள்ள வைப்பது அமெரிக்க, ஐரோப்பிய தேசத்தவர்களுடன், கிறிஸ்தவ உலகத்தவர்களின் உதவிகளேயாகும். ஒரு இனத்தினை தாழ்த்தி, தம்மை உயர்த்திக் கொள்ளும் தேசிய உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையா என்பதை நவீன உலகில் உழைக்கும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுப்புகின்றது. கிறஸ்தவ இறையியலைக் கொண்டு ஏன் பல நூற்றாண்டுகளாக தொடரும் யூத -பலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை?

யூதரின் வரலாற்றை மாத்திரமே உண்மை எனக் கொண்டு அதனை ஏற்றுக் கொள்வதுடன், மற்றவர்களிடத்தில் வலியுறுத்துவதை இன்னும் சாதாரண மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல, படித்த மக்களிடத்திலும் ஆழமாக ஊன்றியிருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தாம் வாழ்ந்த பூமியைத் தவிர மற்றைய தேசங்கள், இடங்கள் பற்றி அறிவு இருந்திருக்க நியாயம் இல்லை.

உலகின் ஒவ்வொரு முனைகளிலும் இருந்த மக்கள் தமக்கேயுரித்தான வரலாற்றைக் கொண்டு தான் இருந்திருக்கின்றனர். நாம் ஒவ்வொரு கண்டத்தை எடுத்துக் கொண்டாலும் பழமையான வரலாற்றைக் கொண்டிருப்பதை அறியலாம்.

யூதர்கள் தங்கள் முன்னோர்கள் பற்றி கூறும் போது ”இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாமிற்கு தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.” (பக்கம் 1.மத்தேயு 1. அதிகாரம். 17 வசனம்)

நாம் யூதர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளாது யூதர்களை எமக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வது மிகபெரும் வரலாற்றுத் தவறை நாம் புரிகின்றோம்.

சியோனிசச் சிந்தனை இவ்வாறே வாக்களிக்கப்பட்ட தேசம் என்ற கருத்தமைவில் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் சிந்தனை உருவாகியது. யூத உலகக் கண்ணோட்டம், இனப்பாதுகாப்பு, வாக்களிக்கப்பட்ட தேசத்தை உருவாக்கிக் கொள்வது, தேர்த்தெடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இவைகள் உள்ளடக்கியதே சியோனிச சிந்தனையாகும். இந்த சியோனிசச் சிந்தனையாது இஸ்ரேலிய தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்கிக் கொள்வதாக சியோனிச கொங்கிரஸ் தீர்மானம் கொள்ளவில்லை. ஆனால் இன்று உருவாகியிருக்கும் இஸ்ரேல் தேசம் என்பது மேற்கு உலகினால் கருத்திக்கப்பட்ட ஒரு சிசுவாகும்.

உலக மக்கள் யூதர்கள் மீது கொண்ட அனுதாபம் நாசிச அழிவின் எதிர்வினையாக உருவாகியது. இதனால் யூதர்களை தமது தேசங்களில் வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு அன்று பிரித்தானியாவசம் இருந்த பலஸ்தீனத்தை துண்டாக்கி இஸ்ரேல் தேசத்தை உருவாக்கிக் கொண்டனர். இவர்கள் இன்று பலஸ்தீனர்களை உலகின் பலபாகங்களுக்கும் அகதிகளாக செல்ல காரணமாகி இருக்கின்றது.

திராவிடத்தின் வரலாறு 5500 வருடங்கள் பழமையானது சிந்து வெளி நாகரீகத்தினை உருவாக்கி பெருமையுடன் வாழ்ந்த இனம். தமிழினம் தன்னை கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்தகுடி என பெருமைப்பட்டுக் கொள்கின்றது. லெமூரியா கண்டத்தில் பிறந்த மனித இனம் என்று பெருமை கொள்கின்றது. விவிலியம் பரவுவதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இனங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. அவர்கள் தமக்கென தனியான கலாச்சாரத்தைக் கொண்டு இருந்திருக்கின்றனர்.

யூதர்களின் சிந்தனையே மதமாற்றுத்திற்கு உட்பட்ட சமூகத்தில் புரையோடிப் போய் உள்ளது. எம்மவர்கள் தமது சொந்த சரித்திரத்தை தெரிந்து வைத்திருப்பதிலும் பார்க்க யூதர்களின் வரலாற்றை பக்கம் பக்கமாக தெரிந்து வைத்துள்ளனர். கிறிஸ்தவ உலகத்தின் சிந்தனை மேலேhடி இருப்பதினால் பலஸ்தீனர்களின் அலவத்திற்கான காரணம் விவிலியத்தில் இருந்து பெறப்பட்டது என்பதை அறிய முயற்சிக்காது இருக்கின்றனர். பலஸ்தீனத்தின் அவலம் இன்னும் தொடர்ந்த வண்ணமாக இருக்கின்றது. ஏன் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நோட்டே நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும், அவர்களின் செயற்பாட்டிற்கும் ஆதரவைத் தெரிவுத்துக் கொண்டது கிறிஸ்தவநாடுகளைக் கொண்ட நோட்டே அமைப்பு. இதேவேளை கமாஸ் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

புலிகளின் ஆதரவாளர், ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர் ஜிரிவியில் மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி, மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.)

யூதர்கள் பொருளாதாரத்தில் வலிமையாக இருந்தார்கள், இருக்கின்றார்கள். இவர்கள் போல தமிழர்களின் மூலதனம் வளர முடியுமா? இதற்கு பொருளாதார அமைப்பு இடம் கொடுக்குமா? சரி இன்றைக்கு தமிழ் முதலாளிகள் இருக்கின்றார்கள். இவர்கள் கொடுக்கும் சம்பளம் எவ்வாறு கணிக்கப்படுகின்றது. தமிழ் முதலாளிகளே தமிழ் தொழிலாளிகளை சுரண்டுவதை அனுமதிகக் கோருகின்றனர்.

தமிழ் மக்களிடையேயும், சிங்கள மக்களிடையேயும் இருக்கும் வரலாற்று உண்மைகள் பற்றி மயக்கம் என்பது ஆழ வேர் ஊன்றி இருக்கின்றது. இவற்றினை போக்குவது என்பது ஆழமாக சிந்தித்து உருவாக்கப்படும் வேலை முறைகளின் மூலமே இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்க முடியும்.

இதேவேளை அன்னிய வரலாறே மனித குலத்தின் வரலாறாக கற்பிக்கும் கிறிஸ்தவ, யூத வரலாற்றை தமிழ்தேசியம் எவ்வித கேள்வியும் முன்வைக்கவில்லை.இதேபோல ஆரியக் கடவுள்கள் திராவிடக் கடவுகள்களை அகற்றிவிட்டு முன்வருவதையும் தமிழ் தேசியத்தைப் போற்றுபவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஆரியச் சிந்தனையாகிய வண்ணாசிரமச் சிந்தனை எம்மீது ஆழவேர் ஊண்றியுள்ளது. இன்று இராம வழிபாட்டின் மூலமாக ஆரியச் சிந்தனை மென்மேலும் ஆழமாக வேர் ஊன்றுகின்றது. இவ்வாறு எம்மிடம் எமது வரலாற்றைத் தவிர மற்றைய சிந்தனைகளை உள்வாங்கி இருக்கின்றோம். இந்த சிந்தனையில் எதுவும் முற்போக்கானதாக இருக்கின்றதா?

முரளிதரனை சார்ந்தோர் தற்போது ஆயுதங்களை கையளிக்க மாட்டார்கள் பேச்சாளர் தெரிவிப்பு

karuna.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை கழைந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை சார்ந்தவர்கள் தமது ஆயுதங்களை தற்போதைக்கு கழைய மாட்டார்கள் என தெரிய வருகின்றது.

“தங்களைச் சார்ந்த சுமார் 3000 பேர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் ,அவர்கள் உறுப்பினர்களாக அங்கத்துவம் பெறும் வரை ஆயுதங்களை வைத்திருப்போம்” என்றும் அவர்களைச் சார்ந்த பேச்சாளரான தட்சணாமூர்த்தி கமலநாதன் தெரிவிக்கின்றார்.

“அச்சுறுத்தல்கள் இருக்கும் போது ஆயுதங்களை கையளிக்க முடியாதுள்ளது.கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் செயல்படும் சில குழுக்களினால் இன்னும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.இதன் காரணமாகவே தற்போதைக்கு ஆயுதங்களை கழையக் கூடிய சூழ்நிலை இல்லை “என்றும் அவர் குறிப்பிட்டார். 

கண்ணிவெடியகற்றும் பணி தொடர்ந்து முன்னெடுப்பு

jaffna.jpgயாழ். மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றும் பணி இதுவரை கண்ணிவெடி அகற்றாமல் இருக்கும் எஞ்சியுள்ள ஒன்பது இடங்களில் அப்பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாக யாழ்ப்பாண செயலகத்தில் இயங்கி வரும் கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டு செயலகம் தெரிவித்துள்ளது.  “ஹலோ ரஸ்ட்’ மிதிவெடி அகற்றும் நிறுவனம் சங்கத்தானை கல்லூரி வீதி, சங்கத்தானை கோவிலடி, நுணாவில் கிழக்கு பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஊர்காவற்றுறை, கரம்பொன், செம்மணிக்குளம், புத்தூர் மேற்கு, சங்கத்தானை ஆகிய இடங்களிலும் மிதிவெடி அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாண்டுக்குள் யாழ்.குடாநாடு கண்ணிவெடியற்ற பிரதேசமாகுமெனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றுவது தொடர்பில் அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது -பௌவுச்சர்

richard-boucher.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் வழிமுறைகள் தொடர்பாக அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வெளியேறுவதற்கு விரும்பும்போதும் அச்சுறுத்தல் சூழல்நிலை காரணமாக அவர்கள் வெளியேறுவது தடைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் தெற்காசிய ஊடகவியலாளர்கள் குழுவொன்றை சந்தித்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வடக்கு, தெற்கு என்றில்லாமல் சகலரும் ஐக்கியத்துடன் செயற்படமுன்வர வேண்டும்’

அரசாங்கம் பெண்களுக்கான குறைந்தபட்ச உதவியையேனும் பெற்றுக்கொடுப்பது பொறுப்பும் கடமையுமாகுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். எதிர்கட்சித், தலைவரின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

நாட்டில் பொருட்களின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்து வாழ்க்கைச் செலவை தாங்கிக் கொள்ள முடியாது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதால் நாளுக்கு நாள் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பில் குறைந்த பட்ச பாதுகாப்பையேனும் பெற்றுக்கொடுப்பது அரசின் பொறுப்பும் கடமையாகும். எமக்கு இதனால் இத்தருணத்தில் மகிழ்ச்சியடைய முடியாது.

வடக்கு, தெற்கு என்றில்லாமல் சகல இன மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகளிர் தினத்தன்று அணைவரும் வரும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து போகின்ற போது பெண்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பாகுமெனவும் தெரிவித்தார்.

95 நோயாளர்கள் திருமலையிலிருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றம்

trico.gif
திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மேலும் 95 நோயாளர்கள் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் தனியார் பேரூந்துகள் மூலம் இவர்கள் திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அழைத்துவரப்பட்டவரப்பட்டவர்களிற்கான உதவிகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேகொண்டு வருகின்றன. இதுவரையில் வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக 822 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

வெளிவிவகார அமைச்சர் வியட்நாம் விஜயம் இலங்கையில் தூதரகம் திறக்க அந்நாடு விருப்பம்

rohitha-sir-john.jpgவெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். வியட்நாமின் பிரதி பிரதம அமைச்சரினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினதும் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் போகொல்லாகமவுக்கும் வியட்நாம் பிரதி பிரதம அமைச்சருக்கும் வியட்நாம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்குமிடையே நிலவும் அதி சிறந்த இருபக்க தொடர்புகளின் நடைமுறை விடயங்களை ஆலோசித்தனர். இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதன் பொருட்டு வியாபார நிபுணர் குழுக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவுத்துறைகளுக்கிடையில் நெருக்கமான இணைப்புகளை அதன்மூலம் உருவாக்குவதற்கு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு விடயங்களிலும் புதிய உட்வேகத்தை கொடுத்து பாரம்பரிய ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கையில் தூதரகம் ஒன்றை நிறுவுவதற்கான விருப்பத்தை வியட்நாமிய தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 1982 ஆம் ஆண்டில் மூடப்பட்ட வியட்நாம் தூதரகத்தை மீளத்திறப்பதற்கான வியட்நாமின் தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டோர் விபரம்

vanni-injured.gifமுல்லைத் தீவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட 406 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு;

1.அடையாளம் காணப்படவில்லை,

2. ரி.மகேந்திரன், விஸ்வமடு (வயது 52),

3.கே.சசிகலா, முள்ளியவளை (வயது 20),

4. ஏ.ரோஸ்மலர், முல்லைத்தீவு (வயது 48),

5. ஏ.அபிஸன், முல்லைத்தீவு (6 மாதம்),

6. ஏ.நிக்ஸன் முல்லைத்தீவு (வயது7),

7.எஸ்.கோமதி, முல்லைத்தீவு (வயது 31),

8.பி.சுப்பிரமணியம், வவுனியா (வயது 64),

9. ஏ.பரஞ்சோதி, கிளிநொச்சி, உட்டுக்குளம் (வயது 30),

10. எஸ்.யசோதா, கிளிநொச்சி,அக்கராயன் குளம் (வயது 27),

11. எஸ்.யோகேஸ்வரி, கிளிநொச்சி (வயது 52),

12. எம்.வேலாயுதம், அல்பிட்டியா (வயது 67),

13. டபிள்யூ.செல்வரத்னம், மாங்குளம் (வயது50),

14. ஐ.மனோன்மணி, யாழ்ப்பாணம், வேலணை (வயது 85),

15. ஏ.வசந்தகுமாரி, கிளிநொச்சி (வயது 57),

16.எஸ்.நிஷா, முல்லைத்தீவு, மாத்தளன் (வயது 10),

17. ஏ.செல்வரூபன், முல்லைத்தீவு, மாத்தளன் (வயது 33),

18. எஸ்.லலிதாதேவி, யாழ்ப்பாணம், வேலணை (வயது 57),

19. ஏ.தெய்வானை, கல்முனை, துறைநீலாவணை (வயது 65),

20. ஜே.அனுஷாதேவி, மாத்தளன் (வயது 29),

21.ஜே.மதுஷன், மாத்தளன் (வயது 7),

22. ஏ.தயாபரி, மன்னார் (வயது 39),

23. வி.சரஸ்வதி, பொக்கணை (வயது 83),

24. திரேஸம்மா, வட்டக்கண்டல், (வயது 57),

25. அந்தனியம்மா, அடம்பன் (வயது 83),

26. வினாசித்தம்பி, பளை, (வயது 68),

27. ஏ.கவாரியல், மன்னார் (வயது 61),

28. வீ.செல்லத்துரை, வவு/புதுமன்காடு, (வயது 71),

29.டி.இராஜேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 31),

30. பி.சலானி, கிளிநொச்சி, (வயது 9),

31. பி.நிருஜா, கிளிநொச்சி, (வயது 2),

32. பி.ஜாலினி, கிளிநொச்சி, (வயது 8),

33. கே.சாவித்திரி, மாத்தளன் (வயது 30),

34.கே.சுபிஜான், மாத்தளன் (வயது8),

35. கே.வனிதா, மாத்தளன், (வயது 5),

36. கே.தனுஷன், மாத்தளன், (வயது 2),

37. எஸ்.முருகமூர்த்தி, சாவகச்சேரி, (வயது 61),

38. எஸ்.ராசன், மாத்தளன், (வயது 28),

39. வி.ராசேந்திரன், புதுக்குடியிருப்பு (வயது 78),

40. எஸ்.நிர்மலாதேவி, நாகர்கோவில் (வயது 30),

1.டி.லொறன்ஸ், மாத்தளன் (வயது 36),

42. ஏ.வசந்தி, யாழ்ப்பாணம், மானிப்பாய் (வயது 31),

43. விஜயரோகினி, முல்லைத்தீவு, சுந்தரபுரம் (வயது 26),

44. ஏ.விதுஷா, யாழ்ப்பாணம், மானிப்பாய், (வயது 4),

45. ஏ.லக்ஷிகா, யாழ்ப்பாணம், மானிப்பாய் (வயது 9),

46. ஏ.விதுஷன், யாழ்ப்பாணம், மானிப்பாய் (9 மாதம்),

47. ரத்தம், யாழ்ப்பாணம், தெல்லிப்பழை (வயது 57),

48. ரி.செல்வராசா, யாழ்ப்பாணம் (வயது 72),

49.ஜே.நவேந்திரன், பரந்தன் (வயது 15),

50. வி.இராஜேஸ்வரி, பரந்தன் (வயது 19),

51. எம்.ஜயந்தன், பரந்தன் (வயது 23),

52. பி.திருஷணா, விஸ்வமடு (வயது 45),

53. எஸ். சிவயோகம், மாத்தளன் (வயது 73),

54. ஆர்.ஜசீமா, மாத்தளன் (வயது8),

55. ஆர்.விதுஷா, மாத்தளன் (வயது2),

56. குணசேகரம், யாழ்ப்பாணம் (வயது28),

57.ரி.தேவிசரோஜா, புதுக்குடியிருப்பு (வயது 63),

58. கே.திருசெல்வராஜா, புதுக்குடியிருப்பு (வயது65),

59. வி.செல்வராஜா, கிளிநொச்சி (வயது 58),

60. எஸ்.கமலம், வட்டக்கச்சி (வயது 70),

61. ஆர்.நிரோஜன், சுந்தரபுரம் (வயது 14),

62.எம்.மதுர்ஷினி, மாங்குளம் (வயது 9),

63. எம்.ஜபசாந்தன், மாங்குளம், (8 மாதம்),

64. எம்.ரவீந்திரா, மாங்குளம், (வயது 19),

65. எம்.ஜபதர்ஷன், மாங்குளம் (வயது 2),

66. ஆர்.பத்மலதா, பொக்கணை (வயது 31),

67. ஆர்.முத்தாச்சி, பொக்கணை (வயது 71),

68. ஆர்.கந்தவனம், கண்டாவளை (வயது 69),

69. ஐ.தெய்வானைப்பிள்ளை, கண்டாவளை (வயது 68),

70. எம்.அழகன், ராமநாதபுரம் (வயது 69),

71. ஆர்.விஜயரத்னம், நாகர்கோவில் (வயது 60),

72. எஸ்.நிரேதிகா, பருத்தித்துறை, நாகர்கோவில் (வயது 2),

73. கே.கிருஷ்ணபிள்ளை, பளை (வயது 62),

74. கே.விவேகானந்தன், பளை (வயது 40),

75. கே.முனியம்மா, சுந்தரபுரம் (வயது 76),

76. ஆர்.லட்சுமி, புதுக்குடியிருப்பு (வயது 67),

77. தங்கரத்தினம் மயில்வாகனம், வவுனியா (வயது 85),

78. ஏ.சந்தனம், ஆண்டாங்குளம் (வயது 69),

79.ரி.சிவமாலை, ஆண்டாங்குளம் (வயது 70),

80.எல்.அமுதா, பூநகரி (வயது 33),

81. எல்.மேரி லவனிதா, பூநகரி (வயது 13),

82. எல்.டனிஸ்வரன், பூநகரி (வயது 9),

83. எல்.ஜோதிகா, பூநகரி (வயது 6).

84. எஸ். விகஸ்டன், (வயது 10),

85. அருந்தவமலர், முள்ளியவளை, (வயது 46),

86. வி. சின்னாச்சி, முள்ளியவளை, (வயது70),

87. கே. பாமினி, பேராறு, கற்சிரமடு, (வயது 28),

88. கே.பானுஷன், பேராறு, கற்சிரமடு, (வயது 04),

89. வை. சிவனு, முல்லைத்தீவு, (வயது 74),

90. ஏ. அனுஷா, பரந்தன், (வயது 25),

91. ஆர். கார்த்திகேசு, விஸ்வமடு, (வயது 67),

92. ஜே. ஜாலினி, பரந்தன், (வயது 06),

93. ஆர். பூங்கோதை, வவுனியா, (வயது 31),

94. ஆர். கீர்த்திகா, வவுனியா, (வயது 01),

95. கீர்த்தனா, வவுனியா, (வயது 05),

96. கே. டிஷாலினி, பரந்தன், (வயது 2.5),

97. ஆர். செல்வநாயகம், ஒட்டுசுட்டான், (வயது 50),

98. கே. கிசோபன், பரந்தன், (வயது 08),

99. கலாமதி, சாவகச்சேரி, (வயது 32), 100. இ. அபிராமி, சாவகச்சேரி, (வயது 04),

101. எஸ். அமிர்தம், மாத்தளன், (வயது 84),

102. எம். இராமநாதன், மாத்தளன், (வயது 71),

103. பி. தெய்வராணி, கிளிநொச்சி, (வயது 78),

104. எஸ். கந்தசாமி, கிளிநொச்சி, கணேசபுரம், (வயது 67),

105. ரி. மீனாட்சி, பொக்கணை, (வயது 66),

106. ஏ. கிருஷ்ணமூர்த்தி, மல்லாவி, (வயது 55),

107. எம். தங்கன், யாழ்ப்பாணம், (வயது 59),

108. எம். சின்னமணி, யாழ்ப்பாணம், (வயது 70),

109. என். அன்னமலர், மல்லாவி, (வயது 65),

110. ஆர். தவராணி, யாழ்ப்பாணம், (வயது 61),

111. எஸ். ராதாகிருஷ்ணன், யாழ்ப்பாணம், (வயது 61),

112. எஸ்.பிரதீபன், உடையார்கட்டு, (வயது 25)

113. எஸ். கந்தையா, பரந்தன், (வயது 70),

114. ஆர். மல்லிகா, ஸ்கந்தபுரம், (வயது 34),

115. வி. சண்முகலிங்கம், பூநகரி, (வயது 69),

116. கே. கிருஷ்ணமூர்த்தி, முள்ளியங்காடு, (வயது 53),

117. எஸ். அங்கம்மா, மாத்தளன், (வயது 76),

118. எஸ். ராசமணி, பூநகரி, (வயது 65),

119. எஸ். ஏ. விமலநாதன், இரணைப்பாளை, (வயது 39),

120. எஸ்.செல்வபாக்கியம், பரந்தன், (வயது 75),

121. எஸ்.ரத்தினம், வவுனிக்குளம், (வயது 57),

122. எஸ். தொம்மாசி, ஆலங்குளம், (வயது 67),

123. வி. கிருஷ்ணபிள்ளை, வற்றாப்பளை, (வயது 70),

124. கே. தங்கம்மா, வற்றாப்பளை, (வயது 69),

125. அடையாளம் தெரியவில்லை.

126. வி. நாகராஜா, யாழ்நகர், (வயது 64),

127. எஸ். சுப்பிரமணியம், வட்டக்கச்சி, (வயது 70),

128. எஸ். ராஜலட்சுமி, பரந்தன், (வயது 63),

129. ரி. றோஷ், கொய்யாத்தோட்டம், (வயது 62),

130. ஆர். ரவீந்திரன், பொக்கணை, (வயது 42),

131. கலையரசி, வட்டக்கச்சி, (வயது 4 மாதம்),

132. நாகேஸ்வரி, வட்டக்கச்சி, (வயது 23),

133. திருபா, வட்டக்கச்சி, (வயது 02),

134. எம். சிந்துஜன், மாத்தளன், (வயது 23),

135. என். தவக்கொழுந்து, புதுக்குடியிருப்பு, (வயது 62),

136. எஸ். கனகையா, வவுனியா, (வயது 72),

137. ஆர். பிரதீப், பொக்கணை, (வயது 13),

138. எம். மேகடரி, கொய்யாத்தோட்டம், (வயது 64),

139. ஐ. செல்லம்மா, தெல்லிப்பழை, (வயது 63),

140. என். நவமணி, மாத்தளன், (வயது 70),

141. ஆர். சிறிரங்கன், விஸ்வமடு, (வயது 90),

142. ஜே.ஜே.ரோஜர்ஸ், கிளிநொச்சி, கருணைநிலையம், (வயது 79),

143. பி.பி. சிசிலியா, கிளிநொச்சி, திருவையாறு, (வயது 65),

144. ரி. லஷ்மி, யாழ்ப்பாணம், பளை, (வயது 67),

145. ரி. திலுக்ஷன், புதுக்குடியிருப்பு, (வயது 09),

146. எம்.பத்மாவதி, புதுக்குடியிருப்பு, (வயது 72),

147. ஜே.பிலிப்பையா, கிளிநொச்சி, திருவையாறு, (வயது 69),

148. இருதயம், அடம்பன், (வயது 80),

149. எஸ். நிருஷா, மாத்தளன், (வயது 08),

150. கே. தமயந்தி, பருத்தித்துறை, (வயது 29),

151. ஆர். ஆர்த்திகா, பருத்தித்துறை, (4 நாள் குழந்தை),

152. ஆர். ஆர்த்தி, (4 நாள் குழந்தை),

153. கே.கே. ஈஸ்வரதேவி, பருத்தித்துறை, (வயது 67),

154. எஸ். வினோதராஜா, முள்ளியவளை, (வயது 23),

155. கே. தங்கராணி, மல்லாவி, (வயது 52),

156. எஸ்.எம். சிவக்குமார், இராமநாதபுரம், (வயது 45),

157. எஸ். விதுர்ஷா, இராமநாதபுரம், (வயது 06),

158. தெய்வானைப்பிள்ளை, அரியாலை, (வயது 62),

159. கே. ராசமணி, உருத்திரபுரம், (வயது 75),

160. ஜே. அருள்மதி, மாத்தளன், (வயது 32),

161. எஸ். ஜெயநந்தன், மாத்தளன், (வயது 32),

162. ஜே. கனிஸ்டா, மாத்தளன், (வயது 10),

163. ஜே. கனிஸ்டன், மாத்தளன், (வயது 12),

164. ஜே. கஜன், மாத்தளன், (வயது 02),

165. எஸ். ஜெயலட்சுமி, மாத்தளன், (வயது 45),

166. எஸ். விக்ஸன், மாத்தளன், (வயது 05),

167. இ. சிவராஜா, முள்ளியவளை, (வயது 67),

168. ரி. அன்னலெட்சுமி, யாழ்ப்பாணம், அளவெட்டி, (வயது 66),

169. ஏ.மேரிமட்டன்டா, மன்னார், மடுக்கோவில், (வயது 60),

170. எஸ். விஜயந்தி, கிளிநொச்சி, (வயது 30),

171. எஸ். பிரவின், கிளிநொச்சி (வயது 02).

172. கே.நாகராஜா, வட்டக்கச்சி, (வயது 93),

173. ஜனனி, மாத்தளன், (வயது 5),

174. எஸ். கமலாவதி, இரணைப்பாளை, (வயது 52),

175. என். அருளம்மா, வவுனியா, நெடுங்கேணி, (வயது 63),

176. செல்வராணி, கிளிநொச்சி, (வயது 29),

177. வி. தாமோதரம்பிள்ளை, முள்ளியவளை, (வயது 71),

178. ஆர். ராகதீஸ்வரி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 32),

179. ஆர். கஸ்மினி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 2.5),

180. ஆர். பிரவீன்குமார், யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 5),

181. ரி. சிவபாக்கியம், முள்ளியவளை, (வயது 68),

182. எஸ். வேலாயுதன், மாத்தளன், (வயது 69),

183. யு. யேசுதா, மாத்தளன், (வயது 32),

184. யு.நிலானி, மாத்தளன், (வயது 4),

185. ராமர்கிருஷ்ணபிள்ளை, இராமநாதபுரம், (வயது 60),

186. எஸ்.மயில்வாகனம், புதுக்குடியிருப்பு, (வயது 70),

187. எஸ். விருஷித்தம்மா, மடுக்கோவில், மன்னார், (வயது 84),

188. கே. பரமேஸ்வரி, குமுழமுனை, (வயது 66),

189. எஸ். தம்பு, அக்கராயன்குளம், (வயது 67),

190. எம். நேசம், தெல்லிப்பழை, (வயது 69),

191. எஸ். வீரசிங்கம், பூநகரி, (வயது 72),

192. வி. கந்தையா, புதுக்குடியிருப்பு, (வயது 70),

193. டபிள்யூ. மனோன்மணி, பூநகரி, (வயது 59),

194. ஏ.நாகராஜா, பரந்தன், (வயது 68),

195. கே.செல்லையா, புதுக்குடியிருப்பு, (வயது 70),

196. கே. சோமசுந்தரம், மாங்குளம், (வயது 71),

197. கே.சேதுப்பிள்ளை, புதுக்குடியிருப்பு, (வயது 72),

198. கனகபூரணேஸ்வரி, முள்ளியவளை, (வயது 71),

199. எஸ். கணபதிப்பிள்ளை, முள்ளியவளை, (வயது 76),

200. வி. சிவசுப்பிரமணியம், புதுக்குடியிருப்பு, (வயது 72),

201. ஏ.சீனியன், யாழ்ப்பாணம், பளை, (வயது 78),

202. எஸ். சீனியாபவளம், யாழ்ப்பாணம், பளை, (வயது 73),

203. கே. கலைவாணி, மாத்தளன், (வயது 30),

204. கே.தெய்வானை, மாத்தளன், (வயது 69),

205. வி. கண்னையா, இரணைப்பாளை, (வயது 70),

206. பிரணவன், முள்ளியவளை, (வயது 11),

207. ஆர். நவநீதராணி, முள்ளியவளை, (வயது 42),

208. ஐ.பிரதீஷன் முள்ளியவளை, (வயது 8),

209. சரோஜினி, தம்பளகாமம், (வயது 53),

210. கே. வீரசிங்கம், துணுக்காய், (வயது 70),

211. கே. மகேஸ்வரி, துணுக்காய், (வயது 71),

212. வி. சண்முகராசா, பரந்தன், (வயது 69),

213. எம். தம்பிராஜா, தயாகம, (வயது 80),

214. எஸ். சுதாகரன், மாத்தளன், (வயது 7),

215. எஸ். கௌரி, (வயது 48),

216. அக்ஸயா, (வயது 6),

217. தேவதாஸ்நவரட்ணம், மாத்தளன், (வயது 59),

218. ஏ. சந்திரகுமார், மல்லாவி, (வயது 51),

219. எஸ். சிவராஜா, ஒட்டுசுட்டான், (வயது 53),

220. என். ரத்னசிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 76),

221. கே. ஈஸ்வரி, மந்துவில், (வயது 65),

222. கே. கந்தையா, முள்ளியவளை, (வயது 77),

223. கே. மலர், யாழ்நகர், (வயது 68),

224. எப். ஜெயபாலன், வல்வெட்டித்துறை, (வயது 52),

225. ஜே. பிரேமா, வல்வெட்டித்துறை, (வயது 48),

226. எஸ். சுதர்ஸன், ஒட்டுசுட்டான், (வயது 28),

227. எஸ். ஜெயந்தினி, ஒட்டுசுட்டான், (வயது 24),

228. திருப்பாகரை, முல்லத்தீவு, (வயது 20),

229. வி. பரமேஸ்வரி, முத்தையன்கட்டு, (வயது 40),

230. ஏ. சிவபாக்கியம், புதுக்குடியிருப்பு, (வயது 71),

231. ஏ. மீனாட்சி, கிளிநொச்சி, (வயது 70),

232. கே. சிவாஜனம், பூநகரி, (வயது 52),

233. எம். சிவமழகு, மாத்தளன், (வயது 75),

234. என். பாலசிங்கம், பொக்கனை, (வயது 67),

235. ஜே. செல்லக்கண்மணி, யாழ்ப்பாணம், (வயது53),

236. எஸ். கந்தையா, மாத்தளன், (வயது 70),

237. ஜே. கனகம்மா, மாத்தளன், (வயது 69),

238. ஆர். கிருபாகரன், மாத்தளன், (வயது 06),

239. ஆர். லக்சிகா, மாத்தளன், (வயது 08),

240. எம். நாச்சியார், கிளிநொச்சி, (வயது 75),

241. என். சுப்பிரமணியம், பரந்தன், (வயது 65),

242. எஸ். தவசிங்கம், நெடுங்கேணி, (வயது 67),

243. ரி. கங்காதேவி, நெடுங்கேணி, (வயது 57),

244. பி. வெள்ளைச்சாமி, வவுனியா, நெடுங்கேணி, (வயது 64),

245. எஸ். தர்ஷினி, வற்றாப்பளை, (வயது 31),

246. வீரசிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 70),

247. என். யோகமலர், வற்றாப்பளை, (வயது 45),

248. எஸ். சியாம் வற்றாப்பளை, (வயது 02),

249. எஸ். ரவீந்திரன், முள்ளியவளை, (வயது 60),

250. வி.சோதிலட்சுமி, புதுக்குடியிருப்பு, (வயது 64),

251. வி. அன்னலட்சுமி, புதுக்குடியிருப்பு, (வயது 74),

252. எஸ். சின்னம்மா, முருங்கன், மடுக்கரை, (வயது 74),

253. பி. சரோஜா, மடுக்கரை, மன்னார், (வயது 52),

254. என். முனுசாமி, கிளிநொச்சி, (வயது 83),

255. பி.போறோஜனி, கிளிநொச்சி, (வயது 17),

256. பி. ஜமுனாராணி, கிளிநொச்சி, (வயது58),

257. ஆர். செல்லம்மா, ஸ்கந்தபுரம், (வயது 63),

258. எஸ். வள்ளியம்மா, புதுக்குடியிருப்பு, (வயது 69),

259. ஏ. கோணேஸ்வரி, ஸ்கந்தபுரம், (வயது 65),

260. ஐ. அருணாசலம், மாத்தளன், (வயது 72),

261. என். திருநாவுக்கரசு, கிளிநொச்சி, (வயது 70),

262. எஸ். சோமசுந்தரம், புதுக்குடியிருப்பு, (வயது 71),

263. எஸ். வி.ராஜேந்திரன், கொக்குவில், (வயது 73),

264. ஆர். ராஜலட்சுமி, கொக்குவில், (வயது 72),

265. எஸ். வெற்றிவேல், முள்ளியவளை, (வயது 55),

லாகூர் தாக்குதலில் தனது தொடர்பை நிராகரிக்கிறது லஷ்கர்- இ -தொய்பா

cricket_pakisthan.jpgலாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளை அந்த அமைப்பின் பேச்சாளர் அப்துல்லா ஹாஸ்நவி மறுத்துள்ளார்.

ஸ்ரீநகரில் இனங்காணப்படாத இடமொன்றில் இருந்து தொலைபேசியில் பேசிய அவர், இந்த ஊடக செய்திகள் பிழையானவை, ஆதாரமற்றவை என்று கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திகள் தெரிவித்தன. மும்பைத் தாக்குதலிலும் தனக்கு தொடர்பில்லையென லஷ்கர் இ தொய்பா முன்னர் மறுத்திருந்தது.

“இலங்கைக் குழுவினர் மீதான தாக்குதலானது பாகிஸ்தானின் இறைமை மீது இடம்பெற்ற தாக்குதலாகும். அந்த மாதிரியானதொன்றை காஷ்மீர் போராளிகள் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்’ என்று ஹாஸ்நவி கூறியுள்ளார். காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக லஷ்கர் இ தொய்பா போராடி வருகிறது. லாகூர் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகளை இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் புகழை மாசுபடுத்தவும் அந்த நாட்டில் ஸ்திரத்தன்மையின்மையை ஏற்படுத்தவும் இந்திய பாதுகாப்பு, நிறுவனங்கள் மேற்கொண்ட வேலையே லாகூர் தாக்குதல் என்று அப்துல்லா ஹாஸ்நவி தெரிவித்துள்ளார். லாகூர் தாக்குதல் தொடர்பாக எந்த அமைப்புகளும் இதுவரை உரிமை கோரவில்லை.

ஆண்களைவிட அதிக வேலையிழப்பு பெண்களுக்கே!

thinking.jpgமார்ச் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே எதிர்பார்த்ததைவிட இன்னும் வேகமான எதிர்மறை விளைவுகளை சர்வதேசப் பொருளாதாரம் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்த நெருக்கடியில் மிக முக்கியமானது வேலையிழப்புகள். கணக்கிட முடியாத அளவுக்கு நேர்முக – மறைமுக வேலை இழப்புகளால் இந்தியா உள்பட பல நாட்டுப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ளது. இதில் பல நாடுகள் செய்கிற பொதுவான தவறு, கடைசி நிமிடம் வரை, தங்கள் நாட்டுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்பதுபோல போக்குக் காட்டிவிட்டு, வேறு வழியில்லை என்பது தெரிந்ததும், ‘எல்லாம் போச்சு…’ என மக்கள் வயிற்றில் புளி கரைப்பது.

அதைவிட ஆரம்பத்திலிருந்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, மக்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கப் பழக்க வேண்டும். இதைத்தான் இப்போது ஐநாவின் பலவேறு துணை அமைப்புகள், குறிப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) செய்து வருகிறது. இதை அந்த நிறுவனமே இன்றைய தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஐஎல்ஓவின் அறிக்கைபடி, உலகமெங்கும் இந்த மார்ச் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களில் பல லட்சம் வேலையிழப்புகள் ஏற்படுமாம். ஏற்கெனவே பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இது உச்சகட்டத்தை எட்டிவிட்டதாகவும், இப்போது அதை மேலும் மோசமாக்கும வகையில், பணியிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது ஐஎல்ஓ. இந்த மாதம் மட்டும் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பணியிழப்புக்கு உள்ளாகும் பெண்கள் எண்ணி்க்கு 22 மில்லியன்களாக இருக்குமாம். அதாவது ஆண்ளைவிட 1 முதல் 2 சதவிகிதம் வரை கூடுதல் பணியிழப்புக்கு பெண்கள் உள்ளாவதாக ஐஎல்ஓ தெரிவிக்கிறது.

குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்காதிய நாடுகளில் இனி ஆண்களை விட பெண்கள்தான் அதிக வேயிழப்புகளுக்கு உள்ளாவர்கள் என்றும், அதற்குக் காரணம் பெரும்பாலும் மேம்போக்கான பணிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்ததே என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பெண்கள் சமுதாயத்துக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.