17

17

58வது படையணி இரணைப்பாலை சந்தியை அடைந்தது

army-s-l.jpg58வது படையணி சேர்ந்த 20வது கஜபா படைப் பிரிவினரும் 7வது சிங்கப் படைப் பிரிவினரும் 11வது இலகு காலாற்படையினரும் இணைந்து புதுகுடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இரணைப்பாலை சந்தியை அடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் புலிகளை மேலும் மிகச்சிறிய ஒரு நிலப்பகுதிக்குள் முடக்கியுள்ளனர்.

திருமலைச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியளிக்கிறது : ரி. எம். வி. பி.

tmvp.jpgகடந்த 11ம் திகதி திருமலையில் இடம் பெற்ற வர்ஸா என்கின்ற சிறுமியின் கொலையானது எம்மை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனித நாகரிகமற்ற இச்செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இது குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இக்கொலையில் சம்பந்தப்பட்ட கும்பல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது என்பதோடு கைது செய்யப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் ஒருவர் எமது அமைப்பின் ஆதரவாளர் என்பது எமக்கு பெரும் வேதனையளிக்கும் செய்தியாகும்.

இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதக் கும்பலுடன் எமது ஆதரவாளரான ஜனா என்பவர் கொண்டிருந்த தொடர்புகள் அவரது தனிப்பட்ட நடவடிக்கையாகும். இதற்கும் எமது கட்சிக்கும் எந்தவித சம்பந்தமோ, தொடர்புகளோ கிடையாது என்பதை மக்களுக்கு தெளிவுறுத்த விரும்புகிறோம்.

கிழக்கு மாகாணமெங்கும் பரந்துபட்ட ஆதரவாளர்களைக் கொண்டுள்ள எமது கட்சி எனும் வகையில் இது போன்ற சமூக விரோதிகளின் ஆதரவுகளை பெறுவது குறித்து எதிர்காலத்தில் எமது கட்சி மிக அவதானமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்படி சந்தேக நபர்கள் எதுவித பாரபட்சமுமின்றி விசாரிக்கபட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவும் இருப்பதோடு அதற்கு பூரண ஒத்தாசை வழங்கவும் எமது கட்சி சார்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் அச்சநிலையை தவிர்த்து பொது மக்களுக்கான ஜனநாயக சூழலை மேம்படுத்த எமது கட்சி உளசுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்ற இவ்வேளையில் இது போன்ற சம்பவங்கள் எம்மை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்றன. எனவே குறித்த கொலைச் சம்பவத்தை பயன்படுத்தி எமது கட்சிமீது சேறு பூசுவதையும் அவதூறு பொழிவதையும் நோக்காகக் கொண்டு திரிபுபடுத்தப்பட்டு வெளிவருகின்ற செய்திகளையிட்டு மக்கள் அவதானமாக இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். அத்தோடு சிறுமி வர்ஸாவின் குடும்பத்தினருக்கும் பொது மக்களுக்கும் எமது கட்சி சார்பில் ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
(ஒப்பம்)
எ. கைலேஸ்வரராஜா
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
16/03/2009

tmvp.jpg

புலிகளின் கதை முடிந்து விட்டது சிறிய ஆயுதங்களால் மட்டுமே அவர்களால் தாக்க முடியும்: அமைச்சர் கருணா

karuna1.jpgநான் தேசிய அரசியலில் ஈடுபடுவதனையே விரும்புகிறேன். மாகாண சபை ஒன்றின் முதலமைச்சராவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதே போன்று சிறியதொரு கட்சியை வழி நடத்தவும் விரும்பவில்லை. இவ்வாறு தெரிவிக்கிறார் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன். (கருணா அம்மா) ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எனது அமைச்சுப் பொறுப்பினை நான் திறம்படச் செயற்படுத்துவேன். எந்தப் பிரச்சினையையும் முகங்கொள்ளத் தயாராகவிருக்கிறேன். அதேபோன்று அதற்கான தீர்வினையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த போது எதற்கும் முகங்கொடுக்கக் கூடிய சக்தியை நான் பெற்றுக்கொண்டேன். நான் பிரிட்டனில் எட்டு மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்தேன.; அப்போது பல ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். தற்போது நான் சிங்கள மொழியைக் கற்று வருகிறேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் அவர்களால் இனி ஒருபோதும் எழுந்திருக்க முடியாது. அவர்கள் முடிந்துவிட்டார்கள். சிறிய ஆயுதங்களைக் கொண்டு மட்டும்தான் அவர்களால் தாக்குதல்களை நடத்த முடியும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடொன்றைப் பெறலாமென்பது நடக்க முடியாத காரியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் இனப் படுகொலையை கண்டித்து நேற்று முன்நாள் தீக்குளித்த இருவரும் மரணம்

நேற்று முன்தினம் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் ராஐசேகரன், தஞ்சை மருத்துவமனையில் இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு, கடலூரில் தீக்குளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான ஆனந்த் (23) என்கிற ஆனந்தராஜ் புதுவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் பொதுமக்களே ஆஜராகி தமிழில் வாதாடினார்கள்

chennai-highcourt.jpgகாக்கிச் சட்டைகள்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஒரு மாதமாக வழ‌க்க‌றிஞ‌‌ர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வழக்குகள் தகுதி அடிப்படையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பினைக் கண்டித்து பல வழ‌க்க‌றிஞ‌ர்கள் தாங்கள் வழக்குகளின் வக்காலத்துக்களை வாப‌ஸ் பெற்று வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தற்போது சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் பொதுமக்களே ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் ஆஜராகி தமிழில் வாதாடி வருகிறார்கள். விசாரணையும் தமிழில் நடைபெற்றது. நீதிபதி கலிபுல்லா மற்றும் ‌நீ‌திப‌தி ‌பி.ஆ‌ர்.சிவகுமா‌ர் தமிழிலேயே 146 வழக்குகளை விசாரித்து முடித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்கு விசாரணை நடப்பது இதுவே முதன்முறையாகும்.

48 மணித்தியாலத்தில் கிழக்கே பல ஆயுதங்கள் மீட்பு

கிழக்கு மாகாணத்தில் கடந்த 48 மணித்தியாலத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கபப்டும் ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச்திலுள்ள பொறுகாமத்தில் 60 எம் .எம். மோட்டார் – 3 ,சி 4 வெடிப் பொருள் – 250 கிராம் ,விடுதலைப் புலிகளின் கொடி – 01 ஆகியவற்றுடன் துப்பாக்கி ரவைகளும் மகசின்களும் வெடிக்க வைக்கும் கருவிகளும் அடங்கலாக வேறு சில பொருட்களும் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள ஒல்லிக்குளத்திலும் கிளேமோர் குண்டு – 01, விடுதலைப் புலிகளின் கொடி – 01 ,வெடிக்க வைக்கும் கருவி – 01 ஆகியன இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

இதே வேளை அம்பாறை மாவட்டம் பாணம பிரதேசத்திலுள் பக்கிமிட்டியாவவிலும் ஒரு தொகுதி ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் நேற்று முன் தினம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எம்.பி.எம்.ஜி ரக துப்பாக்கி – 01 ,எல்.எம்.ஜி;. ரக துப்பாக்கி – 01 ,ரி 56 ரக துப்பாக்கி – 01 ,கைக்குண்டு – 01 ,மிதிவெடிகள் – 05 உட்பட துப்பாக்கி ரவைகள் ,மற்றும் மகசீன்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களும் இதில் அடங்குவதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது 

முல்லைத்தீவிலிருந்து திருமலைக்கு கப்பலில் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டோர் விபரம் (நேற்றைய தொடர்ச்சி)

navy_civilians.jpg186. ராசநாயகம், கிளிநொச்சி, (வயது 51),
187. விதுஷங்கா, கிளிநொச்சி(வயது 3.5),
188. மஞ்சுளா, கிளிநொச்சி(வயது 28),
189. இந்திரவதனி, கண்டாவளை(வயது23),
190. லோகேஸ்வரி, முல்லைத்தீவு(வயது66),
191. வள்ளியம்மா, விசுவமடு(வயது 58),
192. பிரதீபா, முள்ளியவளை(வயது22),
193. டெஸ்மி, முள்ளியவளை(வயது1),
194. கிறிஸ்ரி, முள்ளியவளை(வயது27),
195. அன்னம்மா, புளியங்குளம்(வயது70),
196. கிரிஸாந்த், பளை(வயது 4மாதம்),
197. கீதாஜலா, பளை(வயது27),
198. சந்திராதேவி, பரந்தன்(வயது51),
199. சேனாதிராஜா, கிளிநொச்சி(வயது65),
200. ஆர்.நிர்மலா, கிளிநொச்சி(வயது42),
201. மதுரகன், கிளிநொச்சி(வயது2.5),
202. ஐங்கரன், கிளிநொச்சி(வயது38).
203. கனகலிங்கம், பூநகரி(வயது53),
204. சகிலாதேவி, முழங்காவில்(வயது10),
205. இந்திராணி, முழங்காவில்(வயது44),
206. சஞ்ஜீவன், புதுக்குடியிருப்பு(வயது 2மாதம்),
207. கிருஷாந்தி, புதுக்குடியிருப்பு(வயது23),
208. சூரியநாதன், முள்ளியவளை(வயது68),
209. பதுஜன், பொக்கணை(வயது16),
210. பி.ஸ்ரீதரன், பொக்கணை(வயது43),
211. சுதாமதி, கிளிநொச்சி(வயது33),
212. அபிஷயா, கிளிநொச்சி(வயது2.5)
213. நாகராஜா, புளியங்குளம்(வயது37),
214. மிதுஷன், புளியங்குளம்(வயது7),
215. கஜனி, புளியங்குளம்(வயது10),
216. ரவீந்திரகுமார், கிளிநொச்சி(வயது30),
217. நவிஷன், கிளிநொச்சி(வயது3),
218. திருகாதேவி, கிளிநொச்சி(வயது28),
219. ரேணுஜன், கிளிநொச்சி(வயது4),
220. செல்வமலர், கிளிநொச்சி(வயது43),
221. டிலாஷன், கிளிநொச்சி(வயது8),
222. பொன்வர்ணன், முல்லைத்தீவு(வயது65),
223. ரி.விதுஷன், முல்லைத்தீவு(வயது7),
224. ரி.சரோஜினி, முல்லைத்தீவு(வயது35),
225. ரி.தினுஷன், முல்லைத்தீவு(வயது10),
226. புவனேஸ்வரி,
227. சிவசங்கர்(வயது32),
228. குகனேந்திரன், பரந்தன்(வயது59),
229. பூவேந்திரன், கிளிநொச்சி,
230. வடிவேல், கிளிநொச்சி(வயது55),
231. எஸ். கிருபா, கிளிநொச்சி(வயது 7மாதம்),
232. எஸ்.புஷ்பகாந்தி, கிளிநொச்சி(வயது25),
233. ரஜீவன், கிளிநொச்சி(வயது5),
234. கீதாலட்சுமி, மாத்தளன்(வயது45),
235. ஏ.மல்லிகா, மல்லாவி(வயது30),
236. ஏ.சஜீவன், மல்லாவி(வயது11),
237. எஸ்.மாலினி, முல்லைத்தீவு(வயது36),
238. துரைராஜா, கிளிநொச்சி(வயது 47),
239. அகல்நிலா, பரந்தன்(வயது 4மாதம்),
240. வி.யுகனேஸ்வரி, பரந்தன்(வயது19),
241. விக்னேஸ்வரன், பரந்தன்(வயது27),
242. ஜி.பிரதீபா, கிளிநொச்சி(வயது12),
243. ராஜலட்சுமி, கிளிநொச்சி(வயது53),
244. தமிழின்பன், கிளிநொச்சி(வயது2.5),
245. எஸ்.சிவகுமார், திருநகர்(வயது34),
246, கே.மதுரா, மல்லாவி(வயது16),
247. சுகந்தி, கிளிநொச்சி(வயது32),
248. ரி.திவ்யா, கிளிநொச்சி(வயது9),
249. எம்.வினுஜன், கிளிநொச்சி(வயது4),
250. நிகேதினி, முல்லைத்தீவு(வயது33),
251. ராஜேந்திரன், மாங்குளம்(வயது51),
252. எம்.ஸ்ரீஸ்கந்தராஜா, யாழ்நகர்(வயது32),
253. கவிப்பிரியா, விசுவமடு(வயது7),
254. தேசமலர், கிளிநொச்சி,
255. சிவபாஸ்கரன், மல்லாவி(வயது63),
256. சரஸ்வதி, மல்லாவி(வயது60),
257. ஸ்ரீதரன், மல்லாவி(வயது26),
258. கந்தசாமி, கொக்குத்தொடுவாய்(வயது54),
259. பிரசாந்தன், முல்லைத்தீவு(வயது30),
260. அகஸ்யா, முல்லைத்தீவு(வயது2.5),
261. நிஷாந்தினி, மாத்தளன்(வயது23),
262. கதிர், கிளிநொச்சி(வயது33),
263. பி.ஏ.கிரிஷ்வாணி, கிளிநொச்சி(வயது1),
264. ஆர்.கிரிஷ்ணவாணி, கிளிநொச்சி(வயது32),
265. மேஷ்வரன், கொக்குவில்(வயது49),
266. பெயர்தரப்படவில்லை,
267. சுசிலாதேவி, கிளிநொச்சி(வயது53),
268. எஸ்.பிரேமிளாதேவி, கிளிநொச்சி(வயது20),
269. தர்ஷினி, கிளிநொச்சி(வயது2),
270. திருமுகம், கிளிநொச்சி(வயது26),
271. சுகிர்தா, கிளிநொச்சி(வயது23),
272. வி.இதயராஜன், கிளிநொச்சி(வயது56),
273. நவரூபவதி, கிளிநொச்சி(வயது55),
274. டிரோனிக்ஷன், முல்லைத்தீவு(வயது17),
275. புகழ்நிலா, மல்லாவி(வயது01),
276. நிலாஜினி, மல்லாவி(வயது31),
277. ஆனந்தரசி, முல்லைத்தீவு(வயது45),
278. ஜெகதீஸ்வரன், மன்னார்(வயது30),
279. ரானிதா, மன்னார்(வயது28),
280. கே.சசிகரன், மல்லாவி(வயது35)
281. பூதி, மல்லாவி (வயது 3),
282. சரஸ்வதி, கிளிநொச்சி (வயது 40),
283. லிதுஷன், யாழ்ப்பாணம் (வயது 3),
284. சிந்துஜா, யாழ்ப்பாணம் (வயது 23),
285, லிதுஷா, யாழ்ப்பாணம் (வயது 1),
286. பத்மாவதி, கிளிநொச்சி (வயது 68),
287. அடையாளம் தெரியாதவர்,
288. டினோன் ஜோர்ஜ், யாழ்நகர் (வயது 10),
289. வசந்தன், கிளிநொச்சி (வயது 26),
290. சௌத்ரி, புங்குடுதீவு (வயது 51),
291. கலையரசி, கிளிநொச்சி (வயது 2),
292. தர்மபாலன், கிளிநொச்சி (வயது 21),
293. வி.ஜெயந்தி, கிளிநொச்சி (வயது 21),
294. சிவரூபன், கிளிநொச்சி (வயது 3),
295. பூமாலட்சுமியம்பாள், புங்குடுதீவு (வயது 68),
296. கவிதா, கிளிநொச்சி (வயது 22),
297. தருன்சிகா, கிளிநொச்சி (வயது 2),
298. தனுஷா, கிளிநொச்சி (வயது 3 மாதம்),
299. சுரேஷ், கிளிநொச்சி (வயது 30),
300. கிருஷ்ணசாமி, முல்லைத்தீவு (வயது 56),
301. கணபதி, உருத்திரபுரம் (வயது52),
302. அமிர்தலிங்கம், நெடுங்கேணி (வயது55),
303. கோகிலதாஸ், கிளிநொச்சி (வயது 31),
304. பத்மநாதன், கிளிநொச்சி(வயது65),
305. இன்பராணி, யாழ்நகர்(வயது37),
306. ஜெமிலா, முல்லைத்தீவு(வயது28),
307. ரோஸ்மேரி, முல்லைத்தீவு(வயது64),
308, காஜா, யாழ்ப்பாணம்(வயது9),
309.கஜாலினி, யாழ்நகர்(வயது3),
310. லக்ஸிகா, பளை(வயது22),
311. கணேந்திரராஜா, முல்லைத்தீவு(வயது34),
312. திவாகர், கிளிநொச்சி(வயது7),
313. புஷ்பலதா, கிளிநொச்சி(வயது36),
314. ரஜீவன், கிளிநொச்சி(வயது01),
315. டினோஜன், கிளிநொச்சி(வயது8),
316. சஞ்சீவன், கிளிநொச்சி(வயது22),
317. திஷாந்தன், நெடுங்கேணி(வயது13),
318. சிந்துஜா, பளை(வயது24),
319. சுபாஜினி, மூதூர்(வயது23),
320. ஜதுஸிகா, மூதூர்(வயது1.5),
321. சுரேஷ், மூதூர்(வயது24),
322. யசோதா, கிளிநொச்சி(வயது21),
323. சன்மிஜா,திருவையாறு(வயது3),
324. அன்புமலர், திருவையாறு(வயது30),
325. மயில்வாகனம், மீசாலை,
326. மங்களதாஸ், வலையர்மடம்(வயது43),
327. அந்தோனிப்பிள்ளை, முல்லைத்தீவு(வயது71),
328. அன்னலட்சுமி, முரசுமோட்டை,
329. குணேஸ்திரன், முரசுமோட்டை(வயது36),
330. சருஜன், கிளிநொச்சி(வயது8),
331. அமராவதி, கிளிநொச்சி(வயது52),
332. சரவணமுத்து, நெடுங்கேணி(வயது80),
333. அடையாளம் தெரியாதவர்,
334. வள்ளிப்பிள்ளை, நெடுங்கேணி(வயது80),
335. சுஜந்தன், யாழ்நகர்(வயது23),
336. நாகம்மா, முல்லைத்தீவு(வயது60),
337. ரட்ணசிங்கம், கிளிநொச்சி(வயது59),
338. நடராஜ், யாழ்நகர்(வயது64),
339. லன்சிகா, யாழ்நகர்(வயது11),
340. சரோஜாதேவி, முல்லைத்தீவு(வயது36).
341. மதுஷா, மல்லாவி(வயது1.5),
342. ஜெயமலர்தேவி, மல்லாவி(வயது58),
343. ஜொனரோ சந், கிளிநொச்சி(வயது13),
344. எலிசபத், கிளிநொச்சி(வயது58),
345. சிவனேஸ்வரி, பாலமோட்டை(வயது47),
346. டிலாக்ஷன், துணுக்காய்(வயது14),
347. ஜெயஸ்யா, புங்குடுதீவு(வயது53),
348. சிவபாலன், புங்குடுதீவு(வயது47),
349. ஆர்.முருகையா, ஓமந்தை(வயது68),
350. பிரஜலா, மல்லாவி(வயது28),
351. பேரானந்தசிவம், பூநகரி(வயது64),
352. ரி.பவித்திரன், பூநகரி(வயது9),
353. கௌசல்யா, பூநகரி(வயது9),
354. பூவாஜி, கிளிநொச்சி(வயது70),
355. கமலாதேவி, சுதுமலை(வயது49),
356. பார்த்தீபன், புங்குடுதீவு(வயது30),
357. குகதீபா, புங்குடுதீவு(வயது25),
358. சஜீவனா, புதுக்குடியிருப்பு(வயது10),
359. கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரம்(வயது14),
360. ஜோகிஸ்வரன், தர்மபுரம்(வயது14),
361. முத்தையா, தர்மபுரம்(வயது2),
362. சஞ்சீவன், புதுக்குடியிருப்பு,
363. மரியரோஸ், உதயபுரம்(வயது64),
364. சாருஜன், புதுக்குடியிருப்பு(வயது11),
365. கமலநாதன், கிளிநொச்சி(வயது30),
366. ஏ.லூர்தம்மா, புதுக்குடியிருப்பு(வயது69),
367. திருஜன், கிளிநொச்சி(வயது9),
368. லதுமீரா, கிளிநொச்சி(வயது5),
369. ஆர்.திவாணிப்பிள்ளை, உடையார்கட்டு(வயது66),
370. சுபாஜினி, முள்ளியவளை(வயது32),
371. செல்வநாயகம், முல்லைத்தீவு(வயது53),
372. கிங்ஸ்லி, கிளிநொச்சி(வயது28),
373. ஐ.மகேந்திரராஜா, யாழ்நகர்(வயது 55),
374. ஏ.மஸ்ரலா, புதுக்குடியிருப்பு(வயது 11),
375. கிருஷ்ணன், மிருசுவில்(வயது 62),
376. கற்பகம், புதுக்குடியிருப்பு(வயது 65),
377. கோபிகா, புதுக்குடியிருப்பு(வயது 12),
378. ஜெயசுதாஸ், புதுக்குடியிருப்பு(வயது6),
379. எஸ். கிருஷ்ணன், கொடிகாமம்(வயது 62),
380. கபிலன், புதுக்குடியிருப்பு(வயது 16),
381. ராசமணி, ஒட்டுசுட்டான்(வயது 67),
382. விபிஷணா, ஒட்டுசுட்டான்(வயது01),
383. வினுஷியா, ஒட்டுசுட்டான்(வயது 03),
384. தேவரூபி, மல்லாவி(வயது10),
385. பிரகாஷ், முள்ளியவளை(வயது18),
386. மங்களேஸ்வரன், உடையார்கட்டு(வயது12),
387. யோகன், உடையார்கட்டு(வயது11),
388. இளையம்மா, உடையார்கட்டு(வயது46),
389. பிரசாத், கிளிநொச்சி(வயது13),
390. நவமணி, கிளிநொச்சி(வயது17),
391. சசிரேகா, கிளிநொச்சி(வயது10),
392. புஷ்பதேவி, கிளிநொச்சி(வயது 47),
393. சிவநாயகி, ஒட்டுசுட்டான்(வயது36),
394. கனகசபை, முள்ளியவளை(வயது69),
395. சீதாப்பிள்ளை, முள்ளியவளை(வயது62),
396. பித்னுஷன், முள்ளியவளை(வயது02),
397. கலாநிதி, கிளிநொச்சி(வயது27),
398. துரைராஜ், பூநகரி(வயது56),
399. தர்மகுலசிங்கம், உடையார்கட்டு(வயது55),
400. பாக்கியநாதன், கிளிநொச்சி(வயது64),
401. அந்தோனிப்பிள்ளை, கிளிநொச்சி(வயது75),
402. எம்.மாலினி, கிளிநொச்சி(வயது55),
403. ஏ.பராசக்தி, முல்லைத்தீவு(வயது33),
404. வி.மாடசாமி, உடையார்கட்டு(வயது48),
405. எம்.சிவகுமார், ஓமந்தை, ‘
406. ரி.சியாந்தன், பாலமோடை(வயது16),
407. லோகேஸ்வரி, பூநகரி(வயது37),
408. பௌசிகன், நெடுங்கேணி(வயது10),
409, ராசேந்திரன், நடுகனி(வயது45),
410. கிரித்ரஞ்சன், பரந்தன்(வயது50),
411. முருகேசு, நெடுந்தீவு(வயது74),
412. மேரி அட்ஸ்ரினா, முல்லைத்தீவு(வயது10),
413. அவசரசிகிச்சைப்பிரிவில் பெயர் தரப்படவில்லை,
414. ஜெயதிஸ்வரம், பரந்தன்(வயது13),
415. பி.மார்க்கண்டு, பரந்தன்(வயது57),
416. அந்தோனிப்பிள்ளை, புதுக்குடியிருப்பு(வயது73),
417. லட்சத்தீபன், யாழ்நகர்(வயது13),
418. ஆறுமுகம், கிளிநொச்சி(வயது59),
419. கலாநிதி, கிளிநொச்சி(வயது18),
420. பெயர்தரப்படவில்லை,
421. துவாரகன், முல்லைத்தீவு(வயது11),
422. எஸ்.கோபாலராசா, முல்லைத்தீவு(வயது41),
423. எம்.மார்கரட், கிளிநொச்சி(வயது63),
424. எஸ்.இளைதீபன், கிளிநொச்சி(வயது10),
425. தர்சன், கிளிநொச்சி(வயது13),
426. மனுவேல்பிள்ளை, புதுக்குடியிருப்பு(வயது62),
427. கே.தயாளினி, முறிகண்டி(வயது30),
428. இறப்பு,
429. கே.கௌதம், முறிகண்டி(வயது01),
430. தேவவதனி, நல்லூர்(வயது26),
431. ஆனந்தராஜ், நல்லூர்(வயது31),
432. டனுஷன், நல்லூர்(வயது2.5),
433. தியாகராஜா, புதுக்குடியிருப்பு(வயது23),
434. பாலம்மா, புதுக்குடியிருப்பு(வயது70),
435. மாணிக்கம், கிளிநொச்சி(வயது67),
436. விஜேலதா, பொக்கணை(வயது36),
437. பரூபன், பொக்கணை(வயது02),
438. சிவபாதம், ஓமந்தை(வயது62),
439. சகாயமலர், பொக்கணை(வயது50),
440. வினோதன், பரந்தன்(வயது24),
இறந்தவர்களில் ஒருவர் கிறிஸ்டி, முள்ளியவளை(வயது27).
மற்றவர் அடையாளம் காணப்படவில்லை.

அக்குரஸ்ஸ தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் ஆணைக் குழு கவனம்!

akkurassa-02.jpgமாத்தறை, அக்குரஸ்ஸவில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் ஆணைக் குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அக்குரஸ்ஸ,  கொடபிட்டிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் விழா வைபவத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பாக விசாரணைகளை நடத்தி,  குற்றச்சாட்டுக்கள் ஏதுமிருப்பின் அவற்றை உடனடியாகத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் ஆணைக் குழு பொலிஸ்மா அதிபரைப் பணித்துள்ளது. இந்த வைபவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வைபவத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொண்டார்களா என்பது குறித்தும் பொலிஸ் திணைக்களம் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  இந்தத் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இது வரை 99 பேர் கைது செய்யப்பட்டு விசாரணகளுக்குட் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். 

பிரபாகரனை அழிக்க நினைத்தால் கடும் விளைவு-வைகோ

vaiko.jpgபிரபா கரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி புதுவை சிங்கார வேலர் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கிய இக் கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

இதில் வைகோ பேசுகையில், இலங்கை தமிழ் மக்களின் தலைவராக பிரபாகரன் போன்று யாரும் தோன்ற முடியாது. விடுதலைப் புலிகளுக்கு நிகர் உலகத்தில் யாரும் இல்லை. பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு ஏன் கூறவில்லை? தமிழக சட்டசபை தீர்மானம் என்ன ஆனது? தமிழன் என்ற முகவரியை உலகத்திற்கு தந்தவர் பிரபாகரன்தான். தேசிய பாதுகாப்பு சட்டத்தை காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்றார்

“முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன்”‘: வருண் காந்தி

varun-gandhi.jpg‘இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும்”  என மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசிய பேச்சால் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் எனத் தெரிகிறது.

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.

இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில்,  இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும் ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.

ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான். வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.

வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.

முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.