மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு உட்பட்ட பகுதியும் அதிகூடிய பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
150 மெகாவோட்ஸ் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்காக அமுல்படுத்தப்பட்டு வருகின்ற மேல்கொத்மலைத் திட்டப் பிரதேசம் ஏற்கனவே முக்கிய பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.