May

Sunday, September 19, 2021

May

புலிகள் தாக்கிவிட்டு ஓடுகின்ற செயற்பாடுகளைத் தொடர்வர். – இராணுவத்தளபதி

fonseka-000.jpgஇடம் பெற்று முடிந்துள்ள யுத்தத்தில் பங்குபற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு இன்று இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பேசிய இலங்கை இராணுவத்தளபதி புலிகள் தாக்கி விட்டு ஓடுகின்ற செயற்பாடுகளை முன்னெடுப்பர் என தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், நாம் புலிகளிக்கத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைத்தலைமைகளை முற்றாக அழித்தொழித்துள்ளோம். அவர்களால் எதிர்வரும் காலத்தில் ஓர் இராணுவக் கட்டமைப்பை மீழ் கட்டியெழுப்ப முடியாது. ஆனால் சிறு சிறு குழுக்களாக ஒழிந்திருக்க கூடிய ஒரு சிலர் சிறு சிறு தாக்குதல்களை நாடாத்திவிட்டு ஓடுகின்ற தந்திரோபாயங்களை கையாளமுடியும் என தெரிவித்தார்.

அங்கு பேசிய 53ம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், நடந்து முடிந்த யுத்தம் மிகவும் கடினமானதாகவே இருந்தது, ஆனால் நாம் எமது மேலதிகாரிகளின் வழிநடத்தலில் மனவுறுதியுடன் முன்னேறினோம் என்றார்.

58ம் படையணியின் தளபதி பிரிகேடியர் ஷாவேந்திர சில்வா பேசுகையில், யுத்தத்தில் மக்களை எவ்வித பாதிப்புக்களும் இல்லாமல் மீட்டெடுப்பது என்பது மிகவும் சாவாலாகவே இருந்தது, மக்களை மீட்கும் பணியில் முன்னணியில் நின்ற எமது படையினர் பலர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. ஆனால் மக்கள் குறைந்தளவு இழப்புக்ளுடன் மீட்கப்பட்டதென்பது பெரு வெற்றியே என்றார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தலைவர் இலங்கைக்கு பாராட்டு

anurapriyadarsanayapa.jpgஇலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலை முன்வைப்பதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் ஒரு முக்கியமான கட்டத்தைத் தாண்டிவிட்டது. அதுதான் ஜெனீவா நகரில் நேற்று இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை முன்வைத்த தீர்மானத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த மாநாட்டில் இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ஐரோப்பிய யூனியன் சமர்ப்பித்த பிரேரணை. அடுத்தது இலங்கை முன்வைத்த பிரேரணை.

இந்த வாக்கெடுப்பின்போது இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும் 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. கடந்த முறை 18 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தபோதும் இம்முறை அது 12 ஆகக் குறைந்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாகவே மறுத்துரைப்பதற்கும் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இந்த மாநாடு நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்தது. எமது படைவீரர்கள் இராணுவ ஒழுக்க விழுமியங்களைப் பேணி சிவிலயன்களுக்கு மிகக் குறைந்த இழப்புக்களோடு புலிகளுக்கெதிரான போரில் வெற்றி பெற்றதை உலக நாடுகள் பாராட்டியுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களை கைதுசெய்வதற்கு சர்வதேசம் உதவி

rohithaogollagama.bmp
வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைதுசெய்வதற்கு அந்தநாட்டுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையை தடுப்பதற்கு சர்வதேச நாடுகளிலிருக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் முயற்சிப்பதாகவும், எனினும், இத்தகையவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நாடுகளின் உதவி கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அநேகமான வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் இருப்பதாகவும் ரோஹித்த போகல்லாகம தெரிவித்தார்.

ஊவா மாகாணசபை இன்று கலைக்கப்படும்

sri-lanka.jpgஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வரையில் ஊவா மாகாணசபையைக் கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்தி மெத்திகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். இம்மாகாணசபையின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகின்றது.

ஊவா மாகாணசபைக்கான இறுதித் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. இது இம்மாகாணத்துக்கான நான்காவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜேர்மன் நிறுவனம் உதவி

rizad_baduradeen1.jpg வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜேர்மன் ஜொனிட்டர் சர்வதேச உதவி நிறுவனம் 6.45 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியவசியப் பொருட்களை வழங்கியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் நிறுவனத்தினூடாக வழங்கப்பட்ட இந்த அத்தியவசியப் பொருட்கள் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டது. அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஈ.என். ராஜா தலைமையிலான குழுவினர் இப்பொருட்களை அமைச்சரிடம் கையளித்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

பின்லாந்தில் இலங்கைக்கு உதவி வழங்கும் ஐநாவின் மாநாடு

finland.jpgஇலங்கையில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதிவழங்குவது தொடர்பான ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நிதி வழங்கல் நிறுவனங்களின் மாநாடு பின்லாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் 2ம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்லாந்து தலைமை வகிப்பதோடு 2 பில்லியன் யூரோக்களையும் வழங்கியுள்ளது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் அங்கத்துவ நாடுகளான 21 நிதிவழங்கல் நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி திணைக்களமும் கலந்து கொள்கின்றன.

இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகளுக்கான உதவிச் செயலர் ஜோன் கோம்ஸ் பங்குபற்றவுள்ளார். இதன் போது பாகிஸ்தானில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி புரிவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

நலன்புரி முகாம்களில் பிரிந்து வாழும் குடும்பங்களை இணைக்க நடவடிக்கை : அமைச்சர் ரிசாட் பதியூதீன்

rizad_baduradeen1.jpg யுத்தத்தினால் வன்னியிலிருந்து பல்வேறு கட்டங்களாக இடம்பெயர்ந்து வெவ்வேறு முகாம்களில் பிரிந்திருக்கும் குடும்பங்களை மீள இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

வீசா நடைமுறைகளில் இலங்கைத் தமிழர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கபடமாட்டாது – அவுஸ்திரேலியா

australia.jpgஅவுஸ்திரேலியா தனது வீசா வழங்கும் நடைமுறைகளின் போது இலங்கைத் தமிழர்கள் மற்றும் வடக்கு கிழக்கு வாழ் அகதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாதென அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை திணைக்களம் தெரிவித்துள்ளது.

யுத்த சூழ்நிலை காரணமாக அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியா வீசா வழங்கும் என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.எனினும், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இவ்வாறான விசேட சலுகைகளை வழங்கும் எவ்விதத் திட்டமும் இல்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கோர வேண்டும்

sri-lanka-parliament.jpgநீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கோர வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தற்போது கருத்து வலுப்பெற்று வருவதாக கூறபப்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ( லண்டன்)பத்மினி சிதம்பரநாதன் ( லண்டன) செல்வராஜா கஜேந்திரன் ( ஐரோப்பிய நாடுகள் ) செல்வம் அடைக்கலநாதன் ( இந்தியா) ,எம்.கே. சிவாஜிலிங்கம் ( இந்தியா ) ஆகியோர் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காமல் தொடர்ந்தும் விடுமுறை நீடிக்கப்பட்ட நிலையில் இந் நாடுகளிலேயே தங்கியிருக்கின்றார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் கட்சியின் அரசியல் ரீதியான செயல்பாடுகளை மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் இவர்களை நாடு திரும்புமாறு கட்சி கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

13 ஆவது திருத்தச் சட்டத்தி்ன் கீழ் அரசியல் தீர்வுக்கு முயற்சி – டக்ளஸ் தேவானந்தா

douglas.jpgஇனப் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டு, அதனை அரசியலமைப்பில் சேர்ப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான பாராளுமன்ற சூழல் தற்போது இல்லை. ஆகவே ஏற்கனவே உள்ள 13 ஆவது அரசியலமைப்;புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே சிறந்தது, இந்தத் திருத்தம் ஏற்கனவே இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கின்றது. அத்துடன், இந்தியாவின் உதவியோடு கொண்டு வரப்பட்ட இந்தத்திருத்தச் சட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவும் உண்டு. எனவே இந்தத் திருத்தச் சட்டத்தி்ன் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே இப்போதுள்ள ஒரேயொரு வழியாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணம் விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டதும், அங்கு உள்ளுராட்சி சபைகள் மாகாண சபை என்பவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு. அங்கு சிவில் நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இதேபோன்று வடக்கிலும் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.