13

13

காங். எதிராக பிரசாரம் செய்த சீமான் விரட்டியடிப்பு

india-elc.jpg
காரைக்குடியில் ஒரு வாக்குச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரஸாரும் விரட்டியடித்தனர்.

வாக்குச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்காதீர்கள், அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அங்கிருந்த மக்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் பொலிஸார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூர இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூர் சென்று வாக்களித்தார் சீமான்.

அமீருக்கு வாக்கு இல்லை…

அதே போன்று இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர். ஆனால் இம்முறை வாக்காளர் பட்டியலில் அமீரின் பெயர் இல்லை. இதனால் வாக்களிக்க வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

தற்போது கிடைத்த செய்தி: கிளேமோர் மீட்பு

claymore.jpgகொழும்பு, கிராண்டன்பாஸ் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட தொட்டலங்க லூக்கஸ் வீதியிலுள்ள கராஜ் ஒன்றிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த 18 கிளேமோர்களைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

புலிகளின் முயற்சி படையினரால் முறியடிப்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபடையினரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் முல்லைத்தீவு, சரவாத்தோட்டம் பிரதேசத்தைக் மீண்டும் கைப்பற்றுவதற்காக விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை மேற்கொண்ட முயற்சி இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில படகுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது சரவாத்தோட்டம் பகுதியில் நிலைக்கொண்டுள்ள படையினரின் பாதுகாப்பு அரணைத் தகர்த்து அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியிலேயே விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை முயற்சித்தனர். இதில் நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று இரவு 9 மணிமுதல் அதிகாலை 1.30 வரையான சுமார் நான்கு மணிநேரமாக இடம்பெற்ற படையினரின் இந்த முறியடிபபுத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஷெல் தாக்குதலில் பலி

medical_lorry.jpgசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் மோதல் இடம்பெறும் பகுதியில் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.ஷெல் தாக்குதலில் உயிரிழந்தவர் நீர் விநியோகம் தொடர்பான தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றியவர் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான இவரும், இவரது தாயாரும் ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் வலயத்தில் இதுவரை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 3 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற நிலைமைகளினால் பொதுமக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது – போல் கஸ்டல்லா

paul_castella.jpgவன்னி யுத்த சூன்ய பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் யுத்த சூன்ய பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் போல் கஸ்டல்லா தெரிவித்துள்ளார்

பிரித்தானியாவில் 168 மணித்தியால அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு

uk-pas.jpg
பிரித்தானியாவில்168 மணித்தியால பட்டினி போராட்டத்தை ஒரு மாணவர் உட்பட 6 தமிழ் மக்கள் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஆரம்பித்துள்ளனர்

ஜ.நா மூலம் வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பவேண்டும், வன்னி மக்களின் நிலையை அறிய ஜ.நா ஒரு செயற்குழு அமைக்கவேண்டும், மற்றும் உடனடி நிரந்தர சமாதானத்தை அமுல்படுத்தவேண்டும் ஆகிய மூன்று உடனடி தேவைகளை கோரிக்கைகளாக முன்வைத்து 168 மணித்தியால பட்டினி போராட்டத்தை ஒரு மாணவர் உட்பட 6 தமிழ் மக்கள் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆரம்பித்துள்ளனர்

மோதல் வலயங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு ஹிலாறி – மிலிபண்டும் மீண்டும் அழைப்பு

david-miliband-and-hillar.jpgஇலங்கையின் வடக்கே இடம்பெற்று வரும் மோதல்களை உடனடியாக நிறுத்தி மோதல் வலயங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாறி கிளிண்டனும், பிரிட்டன வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையில் மனிதாபிமான நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் நிறைய செய்ய வேண்டியிருப்பதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ஹிலாறி கிளிண்டன் அங்கு நடக்கின்ற மோதல்களில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவ முயற்சிக்க வேண்டியுள்ளது”எனத் தெரிவித்தார். அத்துடன் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு சகல இலங்கையர்க்கும் கிடைக்க வேண்டும். தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்க்கு அர்த்தமுள்ள அரசியல் வாழ்க்கை கிடைபதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் ஓராண்டு நினைவு.

miss-mageswari.jpgசட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலரும் ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

தமிழ் பேசும் சமூகத்திற்குள் சமூக சிந்தனையும் சுய ஆளுமையும் கொண்ட ஒரு சில பெண்களில் மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும் ஒருவர். தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற உந்துதலால் பொது வாழ்வுக்குள் காலடி வைத்தவர். மூன்று தசாப்த காலமாக மக்களின் துயர் தீர்க்கும் வாழ்வில் தம்மை அர்பணித்து வாழ்ந்தவர்.

இறந்தும் இறவாது வாழ்பவர் என்பதற்கு உதாரணமாக இன்று ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியமானது பாராளுமன்றத்தின் சட்ட அங்கீகாரத்தின் மூலம் உதயமாகியுள்ளது. மகேஸ்வரி வேலாயுதம் உயிருடன் இருந்தபோது ஆற்றிய பணிகளை மகேஸ்வரி அறக்கட்டளை நிதியம் தொடர்ந்தும் முழுமையாக மேற்கொள்ளும் என அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கிறின் ஓசோன் கப்பல் மீண்டும் முல்லைத்தீவு சென்றுள்ளது

ship.jpgபாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்களுடன் கிறீன் ஓசோன் கப்பல் இன்று (13.05.2009) புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றுள்ளதாக சென்சிலுவை சங்க ஊடகப் இணைப்பாளர் சரசிவிஜயரத்தன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கடற்பிராந்தியத்திற்குள் கப்பல் பிரவேசித்த போதும் அங்கு பொருட்களை இறக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாகவும் இது குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் நேற்றும் அந்த பகுதிக்கு சென்று பொருட்களை இறக்க முடியாது புல்மோட்டைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனுக்கும், பொட்டு அம்மானுக்கும் பகிரங்க பிடியாணை

Pirabakaran_V_2008புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுக்கும் உயர் நீதிமன்றம் இன்று பகிரங்க பிடியாணையை பிறப்பித்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பான விசாரணை இன்று நீதி மன்றத்தில் எடுக்கப்பட்டபோதே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்  தமது இல்லத்தில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாகவும் இந்த இருவருக்கும் இந்திய உயர் நீதிமன்றனத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.