29

29

கவிஞர் முருகையன் காலமானார்

Kvingar Murugaiyan Photo - Thamayanthyதிறனாய்வாளரும் கவிஞருமான இ. முருகையன் 27 June 2009 காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 75 ஆகும். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக்கொண்ட, கொழும்பில் வசித்துவந்த இவர் திடீரென காலமானார். இறுதிக் கிரியைகள் இன்று காலை 8.30 அளவில் கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, 3 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் இவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.

ஆதிபகவன், அது அவர்கள், நாங்கள் மனிதர், மாடும் கயிறறுக்கும் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், சிறந்த திறனாய்வு ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.

வெறியாட்டு, கடூழியம், மேற்பூச்சு, இரு துயரங்கள் போன்ற பா. நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். பேராசிரியர் கைலாசபதி, மகாகவி உருத்திரமூர்த்தி ஆகியோருடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி பல்வேறு ஆக்கங்களை மேற்கொண்டுள்ளார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராகப் பணியாற்றிய இவர், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளராக இருந்த இவருக்கு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தது.

(படம் – தமயந்தி)

வவுனியா தேர்தல் பிரசாரத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்கள்

images-elc.jpgவவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

வேட்பாளர்களுக்கு அவர்களின் இலக்கம் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்டதும் இந்த கருத்தரங்குகள் நடைபெறும் எனவும் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதுடன் வவுனியா நகர சபையின் பல பகுதிகளிலும் பிரசாரங்களில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.  இதன் முக்கிய கருத்தரங்கு அடுத்தவாரம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. இதேவேளை, வவுனியா பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய தமிழ்க்கட்சிகளும் பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளன.

தடுத்து வைத்துள்ளவர்களை இரான் விடுவிக்க வேண்டும் – பிரிட்டன்

miliband_.jpgஇரான் அரசால் கைது செய்யப்பட்ட தெஹ்ரானில் இருக்கின்ற பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்த இரான் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இரான் அதிபர் தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலைக்கு இவர்கள் காரணம் என்று குற்றம் சுமத்தி இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஒன்பது பணியாளர்கள் பிடிக்கப்பட்டதாகவும், இவர்களில் எத்தனை பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை என்று டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.

இரானின் இந்த செயல் சற்றும் ஏற்க முடியாத ஒன்று என்றும் இது வம்புக்கிழுக்கும் ஒரு செயல் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறைக்கு அடித்தளமிட்டவர்கள் மேற்கத்தைய நாடுகள் தான் என்று இரானிய அதிகாரிகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

adb.jpgஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் இக்சியோயு ஸாஓ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித் இருவரும் கருத்துக்களைப் பரிமறிக்கொண்டனர்.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  இலங்கை மத்திய வங்கியின் ஆணையாளர் அஜீத் கப்ரால், நிதியமைச்சின் செயலாளர் சுமித் அபேசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரான்ஸ் கூட்டுப்படைகளின் தளபதி- ஜெனரல் சரத் பொன்சேகா சந்திப்பு!

france_force_.jpgஇந்து சமுத்திரப் பிரதேசத்தின் பிரான்ஸ் கூட்டுப்படைகளின் தளபதி வைஸ் எட்மிரல் ஜெராட் வலின் இன்று காலை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மைக்கல் லுமாக்ஸ{ம் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். இலங்கையின் சம கால பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

வன்னியில் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக படையினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இச்சந்திப்பின்போது விளக்கமளித்தார். இருவரும் நினைவுப் பரிசுகளையும் பரிமாறிக்கொண்டனர். 

இடம்பெயர் மக்களுக்கு ‘நீர்’ வசதி – மேலுமொரு நீர் வழங்கும் திட்டம் விரைவில் ஆரம்பம்

tap_water.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போருக்கு போதுமானளவு நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக மேலும் ஒரு நீர் வழங்கும் செயற்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மல்வத்தை ஓயாவிலிருந்து நாளொன்றுக்கு 5 மில்லியன் லீற்றர் நீரை பெற்றுக் கொள்ளும் வகையிலான இந்த செயற்திட்டத்தை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

வலயம் 4 மற்றும் வலயம் 5 லுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரின் உபயோகத்துக்கு போதுமான அளவு நீர் கிடைப்பதில்லையென்ற பெரும் குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாகவே மேற்படி இரு வலயங்களிலும் தங்கியிருப்போருக்காக மல்வத்து ஓயாவிலிருந்து நாளொன்றுக்கு 5 மில்லியன் லீற்றர் நீர் பெற்றுக் கொடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மல்வத்து ஓயாவிலிருந்து நாளொன்றுக்கு 5 மில்லியன் லீற்றர் நீரைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது செயற் திட்டம் அமைச்சர் ரிசாட் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் 1ம், 2ம் திகதிகளில் நடமாடும் சேவை

idp-100609.jpgஇடம் பெயர்ந்த வடபகுதி மக்களுக்கு அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் வகையில் நிவாரணக் கிராமங்களில் நடமாடும் சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் படி எதிர்வரும் முதலாம், இரண்டாம் திகதிகளில் கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் நடமாடும் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்தது.

கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் சுமார் 19 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் தினங்களில் ஏனைய நிவாரணக் கிராமங்களில் ஆள் அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான நடமாடும் சேவைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிவாரணக் கிராமங்களில் நடமாடும் சேவைகள் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் பெறுவது தொடர்பாக மக்களை அறிவூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் கூறியது.பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டலுடன் இந்த நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த வயோதிபர்கள்: அன்பகம் முதியோர் இல்லம் பம்பைமடு

rg-camp.jpgதொடர்பு: சகோதரி லிஸ், தொடர்பு இல. 0244 923580
1. வேலுச்சாமி நாராயணசாமி- 61, 3 ஆம் கட்டை, இளங்கோபுரம், விஸ்வமடு
2. தோமஸ் சூசை -73, திருவையாறு- கிளிநொச்சி
3. கறுப்பையா ராமசமி – 71, 5ஆம் பிரிவு மல்லாவி- முல்லைத்தீவு
4. சோமசுந்தரம் விக்னேஸ்வரன் – 64, மீனாட்சி அம்மன் கோவில்- சங்கத் தானை – சாவகச்சேரி.
5. சங்கரப்பிள்ளை- தாமோதரம்- 81, ஒட்டுசுட்டான்- முல்லைதீவு.
6. இராசையா இராசநாயகம்- 72, வன்னேரி- முதியோர் இல்லம்
7. நாகலிங்கம் சுப்பையா- 75, உருத்திரபுரம்- கிளிநொச்சி
8. நாகலிங்கம் நாகரத்தினம்- 90, ஊர்காவற்றுறை – மன்டைதீவு
9. அரசன் பழனியாண்டி- 61, திருவையாறு- கிளிநொச்சி
10. பழனியாண்டி வேலு- 80, புளியம்பொக்கணை- முல்லைத்தீவு
11. ஜோசப் அன்ரன்- 68, ஸ்ரேசன் வீதி, யாழ்ப்பாணம்
12. ஆறுமுகன் சுப்ரமணியம்- 79, 4ஆம் பிரிவு, முதலிக்குளம், பண்குளம்-திருகோணமலை
13. பண்டாரி வள்ளிபுரம்- 82, பிராமணத்தாறு- கிளிநொச்சி
14. கந்தவேலு முத்தையா- 78, சாந்தபுரம் தெரு, கிளிநொச்சி
15. கந்தசாமி முத்துசாமி- 74, சாமிமலை- நுவரெலியா
16. சுப்ரமணியம் முத்துலிங்கம்- 89, 5ஆம் வாட், மண்டைதீவு, யாழ்ப்பாணம்.
17. சின்னத்தம்பி தம்பியப்பா- 85, வன்னேரிகுளம் முதியோர் இல்லம், கிளிநொச்சி.
18. வெங்கடாச்சரம் கருப்பையா- 64, சாந்தபுரம் அம்பாள்நகர்- கிளிநொச்சி
19. சவரிமுத்து பிள்ளைநாயகம்- 99, முழங்காவில்- கிளிநொச்சி
20. செபமாலை அன்ரனிப்பிள்ளை- 70, நாச்சிக்குடா- மன்னார்
21. சிறிதர் நடேசன்- 89, செல்வாநகர்- கிளிநொச்சி
22. சூசை பர்ணாந்து- 77, கன்னடி- அடம்பன்
23. பண்டாரம் கருப்பையா- 70, செட்டிகுளம்- வவுனியா
24. பொன்னையா ராசையா- 79, அட்டியவளை- கிளிநொச்சி
25. பழனியாண்டி பூசராசன்- 81, துன்னாலை- யாழ்ப்பாணம்
26. வாசு சந்தானம் – 65, வேணாவில் 1ஆம் வாட்டு- புதுக்குடியிருப்பு
27. மகாராஜா கணபதிப்பிள்ளை- 79, பூநகரி- கிளிநொச்சி
28. ராமசாமி ஸ்ரீரங்கன்- 90, விஸ்வமடு- கிளிநொச்சி
29. தங்கராசா கணேசலிங்கம்- 60, புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு
30. வள்ளிபுரம் நானசிங்கம்- 73, தண்ணீருற்று- முள்ளியவளை
31. சின்னசாமி நல்லையா-90, மூங்கிலாறு- கிளிநொச்சி
32. சின்னத்தம்பி தர்மலிங்கம் – 67, ஒட்டுசுட்டான்- முல்லைத்தீவு
33. சின்னையா செல்லத்துரை- 61, கிண்ணியா- திருகோணமலை
34. வேலுப்பிள்ளை சின்னத்தம்பி- 60, இல.9, சின்னக்கரை, திருகோணமலை
35. கந்தசாமி குணநாயகம்- 75, புலோலி வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
36. கந்தையா கந்தசாமி- 69, பளை- கிளிநொச்சி
37. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை- 70, ஆலங்குளம், துணுக்காய்
38. வெங்கடாச்சலம் அருமைச்சந்திரன், 63, வல்வை மத்தி- யாழ்ப்பாணம்
39. அன்ரனி ஆரோக்கியம்- 69, வீரபுரம், செட்டிகுளம்- வவுனியா
40. லாசரஸ்சுவக்கின்- 87, புலோப்பளை வடக்கு, பளை- கிளிநொச்சி
41. தம்பையா மயில்வானம்- 74, கறுக்காதீவு- பூநகரி
42. காந்தன் சண்முகம்- 77, நவாந்துறை, யாழ்ப்பாணம்
43. நாகமுத்து ராசேந்திரன்-75, உரும்பிராய்- யாழ்ப்பாணம்
44. ஆரோக்கியம் செபஸ்ரியன்-75, வட்டக்கண்டல்- அடம்பன்
45. முருகேசு இலட்சுமணன்- 63, துறைநீலாவணை- மட்டக்களப்பு
46. சின்னையா ஜோசப் செல்லதுரை- 78, மருதங்கேணி- பளை
47. கபியல் பிலோமன்- 71, 4 ஆவது கட்டை- பூநகரி
48. நாகலிங்கம் முத்துக்குமார் – 68, கட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை- யாழ்ப்பாணம்
49. செல்லத்துரை ஏகாம்பரம்- 64, மண்டடைதீவு- யாழ்ப்பாணம்
50. கதிர்வேலு மாரிமுத்து- 60, வன்னேரி- கிளிநொச்சி
51. நாகன்ராமன்- 69, காரைநகர், மருதபுரம்- யாழ்ப்பாணம்
52. மூக்கன் பெருமாள்- 69, வள்ளிபுனம்- புதுக்குடியிருப்பு
53. வேலன் பண்டாரி- 72, கொட்டாக்கட்டியகுளம், அக்கராயன்- முல்லைத்தீவு
54. முனிசிங்க முருகேசு- 74, முறிகண்டி- கிளிநொச்சி
55. சிவபால சுந்தரம்பிள்ளை கணேசன்- 61, பொன்னாவெளி- பூநகரி
56. வேரன் சிறிரங்கன்- 75, அப்புத்தளை, பெரகல
57. பாலசிங்கம் ராஜேந்திரம்- 67, கனகபுரம்- கிளிநொச்சி
58. அண்ணாமலை பழனி- 90, ஒட்டுசுட்டான்- முல்லைத்தீவு
59. கணபதிப்பிள்ளை தட்சணாமூர்த்தி-80, பெரியபளை- யாழ்ப்பாணம்
60. சிதம்பரப்பிள்ளை நகுலேஸ்வரன்- 67, நவவி- யாழ்ப்பாணம்
61. தங்கவேலு கந்தையா- 84, 3ஆம் வாய்க்கால்- கிளிநொச்சி
62. கந்தையா இராசலிங்கம்- 75, திருகோணமலை
63. சரவணமுருகேசு- 80, வேளாங்குளம்- மன்னார்
64. ராமு முத்தையா- 80, அளம்பில்- முல்லைத்தீவு
65. அருணா புஸ்பலீலாவதி- 76, உக்குளாங்குளம்- வவுனியா
66. வீரபுத்திரன் உமையம்மா- 79, பரந்தன்- கிளிநொச்சி
67. சங்கரட்டி அழகம்மா- 80, உருத்திரபுரம்- கிளிநொச்சி
68. ராமசாமி சூக்காயி- 72, வட்டக்கச்சி- கிளிநொச்சி
69. ராமையா வள்ளியம்மா- 61, ஜயபுரம் பல்லவராயன்கட்டு- பூநகரி
70. கணேசன் புனிதவதி- 71, முழங்காவில், கிளிநொச்சி
71. செல்வரத்தினம் சரஸ்வதி- 60, இயக்கச்சி- முகமாலை
72. கன்னிபாக்கியம்- 76, சுன்னாகம்- யாழ்ப்பாணம்
73. முத்தையா பொன்னம்மா- 74, பாரதிபுரம்- விஸ்வமடு
74. ராசேந்திரம் புஸ்பராணி- 61, கனகபுரம்- கிளிநொச்சி
75. ராசையா லெட்சுமி- 62, ஸ்கந்தபுரம்- கிளிநொச்சி
76. ஆறுமுகம் பொன்சிவபாக்கியம்- 61, புன்னைநீராவி- விஸ்வமடு
77. கார்த்திகேசு சின்னம்மா- 67, மாசார், சோரன்பற்று- பளை
78. சூசைசாந்தமரி- 66, உடையார்கட்டு- முல்லைத்தீவு
79. அழகையா சரஸ்வதி- 70, நெடுங்கேணி- வவுனியா
80. நடராஜா லட்சுமி- 64, சுதந்திரபுரம்- முல்லைத்தீவு
81. பழனியாண்டி செல்லையா- 72, உடையார்கட்டு தெற்கு
82. செல்லையா அன்னலட்சுமி-78, புதுக்குடியிருப்பு –முல்லைத்தீவு
83. கதிரவேலு வள்ளிப்பிள்ளை- 81, வன்னேரி- கிளிநொச்சி
84. ராகவன் பார்வதி- 79, தேவிபுரம்- முல்லைத்தீவு
85. சண்முகராசா லட்சுமி- 89, தேவிபுரம்
86. பொன்னன் பொன்னம்மா- 64, காரைநகர், யாழ்ப்பாணம்
87. பொன்னன் பொன்னையா- 80, முள்ளியவளை, முல்லைத்தீவு
88. சுப்பையா அன்னம்மா- 80, வன்னேரிக்குளம்- யோகேஸ்வரி முதியோர் இல்லம்
89. சின்னராசா நாகம்மா- 72, புதுக்குடியிருப்பு- கிளிநொச்சி
90. வேலு அழகையா- 76, புளியம்பொக்கணை- கிளிநொச்சி
91. நாகலிங்கம் வள்ளியம்மை- 69, மீசாலை, சாவகச்சேரி- யாழ்ப்பாணம்
92. இராசையா இராசலட்சுமி- 80, நுவரெலியா ரவுண்
93. தொப்பிலான் வேலம்மா- 64, வன்னேரி- கிளிநொச்சி
94. மாயாண்டி மரியாய்- 78, மலையாளபுரம்- கிளிநொச்சி
95. சபாரத்தினம் பசுபதி- 75, இராமநாதபுரம்- வட்டக்கச்சி
96. கதிர்வேல் கண்ணியம்மா- 61, நைனாமடு-வவுனியா
97. நித்தியா னந்தசாமி பரமேஸ்வரி- 73, உன்னாப்பிரிவு- முல்லைத்தீவு
98. தர்மராசா சிவசக்தி- 60, களபூமி, காரைநகர்- யாழ்ப்பாணம்
99. பெருமாள் சங்கரம்மா- 65, முல்லைத்தீவு
100. ராமசாமி பாளையம்மா- 68, பொக்கனை- முல்லைத்தீவு
101. சரஸ்வதி கணபதிப் பிள்ளை – 68, ஒதிகைவளை, நெடுங்கேணி
102. பொன்னையா லட்சுமி- 80, முள்ளியவளை- முல்லைத்தீவு
103. கந்தையா ராசாத்தியம்மா- 69, முல்லைத்தீவு
104. மனுவல் எலிசபெத்- 77, பெரிய பண்டிவிரிச்சான்- மன்னார்
105. பகவதி நாகநதி- 73, வன்னேரி, பளை- யாழ்ப்பாணம்.
106. இராயப்பு ஞானம்மாள்- 73, வவுனிக்குளம் கோளவேளாண்குளம்.
107. தம்பூரணம்- 80, கொடிகாமம்- யாழப்பாணம்
108. சின்னையா இரா ஜேஸ்வரி- 81, கண்டாவளை
109. தியாகராசா கனம்மா- 72, உருத்திரபுரம்- கிளிநொச்சி
110. நாக்கமையா நீலம்மா- 81, பஸ்லியாய், மன்னார்
111. வெங்கராசன் பவளம்- 70, யாழ்ப்பாணம்
112. கந்தையா நாகலட்சமி- 67, பாலாவி- பூநகரி
113. சந்திரக்குமார் தனபதி-60, குப்பிளான்- யாழ்ப்பாணம்
114. கந்தையா செல்லம்மா- 80, 1 ஆம் பிரிவு- முள்ளியவளை
115. வைரப் பெருமாள் மாணிக்கம்- 71, முள்ளியவளை- முல்லைத்தீவு
116. நடேசன் மீனாட்சி- 88, வட்டகச்சி- கிளிநொச்சி
117. முருகையா அருணாச்சலம்- 85, பரந்தன்- கிளிநொச்சி
118. சுப்பையா மரியாய்- 76, அவிசாவளை, கண்டி
119. மூக்கன் பெரியசாமி- 80, பம்பைமடு- வவுனியா
120. கந்தசாமி சரஸ்வதி- 65, அடம்பன்- மன்னார்
121. பெருமாள் பழனியாயி- 80, மாத்தளன்
122. முத்துக்குமார் குஞ்சுப்பிள்ளை-85, வண்ணாங் குளம்- கிளிநொச்சி
123. ராமசாமி தனலட்சுமி – 75, தர்மபுரம்- கிளிநொச்சி
124. பெர்னாந்து பூலோவியம்மா- 82, தண்ணீரூற்று- முள்ளியவளை
125. வைரமுத்து மரியாய்- 75, தட்சணாமடு- மன்னார்
126. வீரையாதேவி- 85, ஓமந்தை- வவுனியா
127. நல்லதம்பி வள்ளியம்மை- 73, மீசாலை கிழக்கு மீசாலை- யாழ்ப்பாணம்
128. கறுப்பையா கந்தசாமி- 71, அடம்பன்- மன்னார்
129. கந்தையா செல் லம்மா- 69, முள்ளியவளை- முல்லைத்தீவு
130. சின்னக்குட்டி சுப்ரமணியம்- 80, கரைச்சி குடியிருப்பு- முல்லைத்தீவு
131. ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை- 74, கிளிநொச்சி
132. தம்பு கந்தசாமி- 69, துன்னாலை வடக்கு, கரவெட்டி யாழ்ப்பாணம்
133. சின்னாள் அன்னப்பிள்ளை- 69 சிவன்சோலை- கிளிநொச்சி
134. சின்னதுரை செல்வராசா- 72, பருத்தித்துறை- யாழ்ப்பாணம்
135. சந்தானம் செல்லாட்சி- 78, குப்பிளான்குளம்- வவுனியா
136. சண்முகநாதன் ராஜே ஸ்வரி – 69, பருத்தித்துறை- யாழ்ப்பாணம்
137. சின்னத் துரை பத்மாவதி- 81, தண்ணீரூற்று- முள்ளியவளை
138. நடராசா பூரணம்- 70, பூநகரி 4ஆம் மயில்கட்டை
139. சுப்பிரமணியம் நாகம்மா- 70, உதயநகர்- கிளிநொச்சி
140. செல்லன் விசாலாட்சி-70, பாடசாலை பின்புறம்- விஸ்வமடு
141. கதிர்காமர் மகேஸ்வரி- 74, முருங்கன்- மன்னார்
142. கிருஷ்ணபிள்ளை செல்லாட்சி- 72, வடமராட்சி- யாழ்ப்பாணம்
143. ஆறுமுகம் செல்லம்மா- 81, கனகபுரம்- கிளிநொச்சி
144. இராசலிங்கம் செல் லம்மா- 85, வன்னேரிகுளம் முதியோர் இல்லம்
145. செல்லை ஆறுமுகம் – 77, வன்னேரி- கிளிநொச்சி
146. சாந்தையா கறுப்பையா- 80, மதகுவைத்தகுளம்- வவுனியா
147. இராசா இராமச்சந்திரன்- 73, முள்ளி வாய்க்கால்- முல்லைத்தீவு
148. அருளந்து சபேரியர்- 61, நாவலப்பிட்டி
149. நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை- 80, மீசாலை வடக்கு- யாழ்ப்பாணம்
150. சிவஞானம் செல்லம்மா- 60, திருவையாறு- கிளிநொச்சி
151. இராச லிங்கம் செல்லம்மா- 70, கோப்பாய்- யாழ்ப்பாணம்
152. தேவதாஸ் வேலம்மா- 70, கோப்பாய்- யாழ்ப்பாணம்
153. இராஜேந்திரம் பொன்னம்மா- 68, பூநகரி தெற்கு- கிளிநொச்சி
154. மாணிக்கம் சின்னத்தம்பி- 75, கரணவாய்- யாழ்ப்பாணம்
155. நல்லதம்பி நாகலிங்கம்- 81, பூகரி- கிளிநொச்சி
156. பாக்கியநாதன் தங்கரத்தினம்- 60, ஆழியவளைபற்று- யாழ்ப்பாணம்
157. செபஸ்ரியான் பிள்ளை அருளானந்தம்- 80, பண்டத்தரிப்பு- யாழ்ப் பாணம்
158. முருகன் சம்பந்தமூர்த்தி- 63, வசந்தபுரம், இளவாலை- யாழ்ப்பாணம்
159. கருப்பையா சுப்ரமணியம்- 79, இரணைமடு- கிளிநொச்சி.

வடக்கில் ரயில் பாதைகளைப் புனரமைக்க பாகிஸ்தான் நிதியூதவி

train_.jpgவடக்கில் புலிகள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சேதமடைந்துள்ள ரயில் பாதைகளைப் புனரமைப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் 2 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இந்த நிதியுதவி தொடர்பான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ரயில்வே ஆலோசனை சபையும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இவ்வொப்பந்தத்தின்படி பயங்கரவாத நடவடிக்கைகளால் சேதமுற்ற 250 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதை மற்றும் 600 பயணிகள் பயணம் செய்யக்கூடிய ரயில் பெட்டிகள் ஆகியவற்றை மீளத்திருத்தியமைக்க பாகிஸ்தான் ரயில்வே ஆலோசனை சபை உதவும் என அதன் நிர்வாக இயக்குநர் மொஹமட் ரசீட் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களை ஏற்றும் 4 சில்லுகள் கொண்ட ரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்தும் பணிக்கும் உதவி வழங்கப்படவுள்ளதோடு,  இலங்கை ரயில்வேயை நவீனமயப்படுத்தவும் அதன் ஊழியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கவும் இந்த ஒப்பந்தந்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரப் பாவனையாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க மக்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

bulbs.jpgமின்சாரப் பாவனையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து மின்சாரப் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விசேட திட்டம் ஒன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்தார். நாட்டில் மின்சாரப் பாவனையாளர்களாக உள்ள சுமார் 4.5 மில்லியன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் ஒன்று இல்லாததால் மக்கள் பெரும் அவலநிலைக்கு ஆளாவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது.

புதிதாக மின் இணைப்புப் பெறுவதில் தாமதம் ஏற்படல்,  ஆபத்தான மின் விநியோக கம்பிகளை அகற்றுதல், மின்கட்டணத்தை முறையாக பதிவு செய்யாமை, பராமரிப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாமை, போன்ற பலதரப்பட்ட நெருக்கடிகளை பாவனையாளர்கள் எதிர்நோக்குகின்றனர். இதன் பின்னர் இவ்வாறான குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும்  என ஆணைக்குழு தெரிவிக்கின்றது.