இந்தியா தடுத்து வைத்துள்ள 107 இலங்கை மீனவர்களையும், அவர்களின் 21 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் கங்கிரஸ் கட்சித் தலைவரும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான தொண்டமான், முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் உடன் இருந்தார்.
மேலும் இலங்கை நிலவரம் குறித்தும், தமிழர் பிரச்சினை குறித்தும் தொண்டமான் முதல்வருடன் பேசினார். இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சினைகள், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் குறித்தும் இதளன்போது விவாதிக்கப்பட்டது.
வன்னிப் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி தொண்டமானிடம் கேட்டறிந்தார். சில நாட்களுக்கு முன் சென்னை சென்ற தொண்டமான் கனிமொழியைச் சந்தித்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து விவாதித்திருந்தார். இந்த நிலையில் முதல்வரை அவர் நேற்று சந்தித்தார