August

August

மக்காவுக்கு முஸ்லிம்கள் செல்வது போன்று அதாவுல்லா கட்சியை முன்னெடுக்கின்றார் – டக்ளஸ்

epdp9999.jpgமக்காவுக்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் பயணம் போன்றது நாட்டின் சமாதானப் பயணம். அதனைப் போன்று அமைச்சர் அதாவுல்லா இக்கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-

அமைச்சர் அதாவுல்லா பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் பேசிவருபவர். இலங்கைத் தீவில் அனைத்து மக்களினதும் அபிமானத்தை பெற்றவர்.  கடந்த யாழ் மாநாகர சபைத் தேர்தலில் அவர் அங்கு வந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை நாம் குறிப்பிட வேண்டும். அத்தகைய ஒருவரை நீங்கள் தலைவராகக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

வரலாறுகள் இரத்தத்தினால் எழுதப்பட்டவை. அந்த யுகம் முடிந்தது. நமக்கு இன்று ஒரு வரலாற்றுக் கடமையுள்ளது. நாம் ஒன்று திரண்டு இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சகல இன, மத மக்களும் சரிசமமாக வாழும் சூழல் நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு சிறந்த அரசியல் தீர்வொன்று அவசியம்.கிழக்கில் இன்று சிறந்த மாகாண சபை உருவாக்கப்பட்டு ஐக்கியம் நிலவுகிறது. இங்கிருந்து தொடங்கித்தான் நாம் எமது பயணத்தை நகர்த்த வேண்டும்.

எமது எண்ணங்களை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் கட்டியெழுப்பப்படுகிறது.

புலிகளின் தலைமை பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை நன்கு உணர்ந்தவர் நமது ஜனாதிபதி. புலிகளின் யுகம் முடிந்து விட்டது. ஜனாதிபதியின் கரத்தை நாம் அனைவரும் பலப்படுத்த வேண்டும். சகல தலைவர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நானாட்டான் அபிவிருத்திக்கு ரூ. 93 மில். அரசால் ஒதுக்கீடு

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கென 93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனையின் கீழ் வடக்கின் வசந்தம் வேலைத்திட்ட செயலணி தலைவர் பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில் அமைச்சர் ரிசாத் பதியிதீன், அக்கிராம மக்களுடன் கலந்தாலோசித்து முன்வைத்த வேலைத் திட்டங்களுக்கே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 119 வேலைத் திட்டங்களுக்கு இந்த நிதி பெறப்பட்டுள்ளதுடன், இத்திட்டம் 57 கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை 11.5 மில்லியன் ரூபா செலவில் நானாட்டான் அச்சங்கேணி கிராமத் திற்கான மின்விநியோகத் திட்டமும், அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் அண்மை யில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக இப்பிரதேச மக்களின் தேவையாக இருந்து வந்த கலாசார மண் டபத்தின் முதலாவது கட்ட பணிகளுக்கென அமைச்சர் ரிசாத் பதியுதீன் 50 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்ததுடன், அதற்கான பணிகளையும் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நவீன தொழில்நுட்பத்துடன் கடற்படை பலப்படுத்தப்படும் – கடற்படைத் தளபதி தெரிவிப்பு

29-sayura00.jpgநவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக கடற்படையை முன்னேற்றவும் கடற்படையை மேலும் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று முன்தினம் தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 91 அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறினர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கடற்படை தளபதி மேற்கண்டவாறு கூறினார்.

கடற்படை தளபதி மேலும் கூறியதாவது :-வினைத்திறனும், ஒழுக்கமும் நிறைந்தவர்களாக கடற்படை வீரர்களை மாற்றுவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கடற்படை ஏனைய படைப் பிரிவுகளைவிட மாறுபட்டதாகும். ஏனைய படைப் பிரிவுகள் உள்நாட்டுக்குள்ளேயே இயங்குகின்ற போதும் கடற்படையினர் கடல் எல்லை தாண்டி வெளிநாடுகளிலும் செயற்படுகின்றனர். கடற்படையினர் இலங்கை தூதுவர்களாகவே செயற்படுகின்றனர்.

யுத்த காலத்தில் போலவே தற்பொழுதும் கடற்படையினருக்கு தொடர்ந்து கூடுதலான பயிற்சிகள் வழங்க உள்ளோம். அவர்களுக்கு துறைசார் பயிற்சி வழங்கவும் ஆங்கில அறிவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிகழ்வில் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியல் எட்மிரல் எஸ். எம். பி. வீரசிங்க இராணுவத்தின் 22 ஆவது படைப் பிரிவு கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். கண்கவரும் விதத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வாத்திய அணி வகுப்பு, நடனம், கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இலங்கை மீனவர்கள் ஐவரும் விடுதலை

இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததன் காரணமாக கைதாகி தமிழ் நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தெவிநுவரவுக்கு திரும்பி வந்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று கூறியது.

கடந்த ஏப்ரல் மாதம் தெவிநுவர மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் இருந்து இவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு நடுக்கடலில் வைத்து விபத்துக்குள்ளானதால் இவர்கள் 22 நாட்கள் கடலில் தத்தளித்துள்ளதோடு பங்களாதேஷ் கடற்படையினர் இவர்களை மீட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் படகு பங்களாதேஷில் வைத்து திருத்தப்பட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தியக் கடலுக்குள் நுழைந்தபோது இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மீன்பிடித் திணைக்களத்தின் தலையீட்டையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

96 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது இலங்கை

srilanka0000.jpgகொழும்பில் நடைபெற்ற இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 96 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

கடந்த 26ஆம் தேதி தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழந்த நிலையில், நியூசிலாந்து அணியை 234 ரன்களுக்கு முதன் இன்னிங்சில் சுருட்டியது.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை ஆடிய இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

494 ஓட்ட வெற்றி இலக்குடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 397 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை அணி 96 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

SRI LANKA 416 and 
311-5 dec

 NEW ZEALAND      
First Innings 234

NEW ZEALAND      
Second innings       
overnight 182-6)

T. McIntosh b Prasad      7
M. Guptill c P. Jayawardene b Herath   28
D. Flynn lbw Herath     50
R. Taylor C M Jayawardene b Herath   27
J. Ryder lbw Herath     38
B. McCullum b Muralitharan    13
J. Oram c Sangakkara b Dilshan    56
D. Vettori c Herath b Muralitharan  140
J. Patel c Kapugedera b Muralitharan   12
I. O’Brien c P. Jayawardene b Herath   12
C. Martin  not out        0

EXTRAS: (13-lb, 1-nb)     14
TOTAL: (all out, 123.5 overs)   397
FALL OF WICKETS: 1-36, 2-41, 3-97, 4-131, 5-158, 6-176,  7-300, 8-318, 9-387, 10-397
BOWLING: Paranavitana 1-0-2-0, Thushara 23.3-1-78-0 (1-nb),
 Prasad 15-1-56-1, Herath 48-9-139-5, Muralitharan 28.2-2-85-3,
 Dilshan 6-0-15-1, Kapugedera 2-0-9-0

Result: Sri Lanka won by 96 runs to seal a 2-0 series
victory.
 

மருந்துகள் வழங்கப்படும் 25 மில். பொலித்தீன் உறைகளும் ‘டெங்கு’ பரவலுக்குக் காரணமென ஆய்வு மூலம் தகவல்

இலங்கையிலுள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களை வழங்கவென பயன்படுத்தப்படும் சுமார் 25 மில்லியன் பொலித்தீன் உறைகளும் கழிவுப் பொருட்களாக வருடாந்தம் சுற்றாடலில் சேர்வதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கழிவுப் பொருட்களாக சுற்றாடலில் சேரும் பொலித்தீன் உறைகள் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கும் பாரிய பங்களிப்பு செய்து வருவதும் அந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.

இதனை அடிப்படையாக வைத்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மருந்துப் பொருட்களை வழங்கவென பொலித்தீன் உறைகளைப் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கடதாசி உறைகளைப் பயன்படுத்துமாறும் தனியார் மருந்தக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

நாட்டில் சுமார் 6000 தனியார் மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் நுகர்வோருக்கு மருந்துப் பொருட்களை வழங்கவென வருடத்திற்கு சுமார் 25 மில்லியன் பொலித்தீன் உறைகள் பயன்படுத்தப்படுகின்றன.  அவை கழிவுப் பொருளாக சுற்றாடலில் சேருகின்றன. இது டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்குப் பாரிய பங்களிப்பு செல்வதுடன், சுற்றாடலுக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களை நுகர்வோருக்கு வழங்கவென பொலித்தீன் உறைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக சுற்றாடல் அமைச்சரிடம் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காணத் திட்டமிட்டிருக்கின்றேன் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்துவது, சந்தைப்படுத்துவது தொடர்பான ஒழுங்குமுறைகள் குறித்து கொழும்பிலுள்ள 1500 தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வின் போதே அமைச்சர் மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.

எகுத் ஒல்மர்ட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

olmert222.jpgஇஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட் மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்க வியாபாரி ஒருவரிடம் இருந்து பணம் நிரப்பப்பட்ட அஞ்சல் உறைகளை பெற்றது, பிரயாண செலவுகளை அதிகமாக கணக்கு காண்பித்து இஸ்ரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய அட்டர்னி ஜெனரல் எகுத் ஒல்மர்ட் மீது பதிவு செய்துள்ளார்.

ஜெருசலேத்தின் மேயராக இருந்த போதும், பின்னர் காபினட் அமைச்சராக இருந்த போதும் இவர் இந்த தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தான் எவ்வித தவறையும் செய்யவில்லை என எகுத் ஒல்மர்ட் கூறி வருகின்றார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு உடன் இடமாற்றம்

அம்பலாங்கொட பகுதி வியாபாரி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய அம்பலாங்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அடங்கலான நால்வர் உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி பொலிஸாரின் தாக்குதல் காரணமாக அம்பலாங்கொட பகுதி வியாபாரியான எச். ஜி. அநுர கிரிசாந்த காயமடைந்து பலப்பிட்டிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரி அடங்கலான 4 பொலிஸார் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் பொறுப்பதிகாரி அநுர இரத்தினபுரிக்கும், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் ஹம்பாந்தோட்டைக்கும், மற்றொருவர் பதுளைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் எல்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

தனது சகோதரியுடன் மரண வீடொன்றுக்குக் காரில் சென்ற மேற்படி வியாபாரியை களுவடுமுல்ல பகுதியில் வழிமறித்து பொலிஸார் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகவும் காரில் கஞ்சா கடத்துவதாகவும் குற்றஞ்சாட்டி விசாரித்துள்ளனர். பின்னர் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். ஆனால் காரில் கறிவேப்பிலை கட்டுகளே எடுத்துச் செல்லப்பட்டதாக வியாபாரியின் சகோதரி பொலிஸில் முறையிட்டிருந்தார்.

இதன்படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்பலாங்கொட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கைப்படி 4 பொலிஸாரும் இடமாற்றப்பட்டனர்.
 

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்த இந்தியாவுடன் இணைந்து இலங்கை செயற்படும்: ரொமேஸ் ஜயசிங்க

romesh-jayasinghe.jpgஇந்தியா வுடன் இணைந்து, இடம்பெயர்ந்த மக்களின் மீள குடியமர்த்தல் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஐ.ஏ.என்.எஸ்.செய்தி சேவைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள 300,000 மக்களை மீள குடியமர்த்துவதற்காக, அரசாங்கம் தற்போது துரித கெதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் முன்பிருந்த சிறந்த உறவுகள் பேணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஒத்துழைப்புடன், இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளை அடைய கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் துரித வாக்களிப்பு – அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் எதிர்க்கட்சி நம்பிக்கை

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. காலநிலை மோசமாக இருந்தபோதும் பெருமளவான மக்கள் வாக்களித்தனர். தொழிற்கட்சியின் ஐம்பது வருட ஆட்சி முடிவுக்கு வந்து நீண்ட காலங்களாக எதிர்க்கட்சியாகவுள்ள ஜனநாயகக் கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்குமென பெரும்பானலான மக்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.

 அண்மைக் காலமாக ஜப்பானில் நிலையான ஆட்சி இருக்கவில்லை. ஆளும் கட்சிக்குள் உண்டான கருத்து மோதல் களால் அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். உலக நிதி நெருக்கடியால் கடுமையாக ஜப் பான் பாதிக்கப்பட்டமை, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் பாராளுமன்றத்தின் மேல் சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநா யகக் கட்சி வென்றமை போன்ற காரணங்களைக் காட்டி எதிர்க்கட்சியின் வெற்றி நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னூறுக்கும் மேலான ஆசனங்களை எதிர்க்கட்சி பெறுமென எதிர்பார் க்கப்படும் நிலையில் சிலர் இதை அளவுக்க திகமான மிகைப்படுத்தல் எனவும் கூறி யுள்ளனர். ஆளும் கட்சியான தொழிலாளர் கட் சியும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற கடும் பிரயத்தனம் செய்கின்றன.

 நாட்டில் என்ன நடக்கப் போகிற தென்பதைக் கூற முடியாது. ஆனால் ஒரு மாற்றத்துக்காக ஜனநாயக கட்சிக்கு வாக்களித்தேன். இவ்வாறு கூறினார் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர். வாக்குறுதிகள் அளித்தாற் போல் அனைத்தையும் ஜனநாயகக் கட்சியினர் செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

தொழிற் கட்சியைவிட ஜனநாயகக் கட்சி சிறந்தது. என உணர்ந்து வாக்களித்ததாகக் கூறினார். மற்றொரு வாக்காளர். சிறுவர்களுக்கான முற்பணக் கொடுப்பனவு வீட்ரிமையாளர்களுக்கான கடன்கள் விவசாயிகள் ஹய்வூதியத் திட்டம் போன்ற பல நலத் திட்டங்களை ஜனநாயகக் கட்சி முன்மொழிந்துள்ளது.

நீண்ட கால (ஐம்பது வருட) ஆட்சியில் வெறுப்படைந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கருத்துக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதி வரியை ஐந்து வீதத்துக்கு மேல் அதிகரிப்பதில்லை என்றும் சனத்தொகை வளர்ச்சிக் கேற்ப வீணான செலவுகளைக் குறைக்கவுள்ள தாகவும் தொழிலாளர் கட்சி விஞ்ஞாபனம் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கட்சிகளின் வாக்குகள் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.