22

22

உமா ஆறு நீர்ப்பாசன திட்டம் 2014 ஆம் ஆண்டு பூர்த்தி

26parliament.jpgஉமா ஆறு நீர்ப்பாசனத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கும் வடிவமைப்பதற்கும் தேவையான அளவீடுகள் புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீர நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்கு 590 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதோடு 2014 ஆம் ஆண்டு திட்டம் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜே. வி. பி. பாராளுமன்ற எம். பி. யான கே. வி. சமந்த வித்யாரத்ன எழுப்பிய வாய் மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

உமாஆறு நீர்ப்பாசன திட்டத்திற்கு 2008  4 ஆம் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கான முழுச் செலவில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈரான் அரசு கடனுதவியாக வழங்கியுள்ளதோடு அரசு 140 மில்லியன் டொலர் ஒதுக்கியுள்ளது.
 
 

கையடக்கத் தொலைபேசி ஆசியர்களுக்குத் தடையில்லை – கல்வி அமைச்சு தெரிவிப்பு

hand-phone.jpgபாடசா லைகளில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதற்கு சுற்று நிருபம் மூலம் மகணவர்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆசியர்களுக்கு எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

எனினும் பாட நேரங்களின் போது கடமையில் உள்ள ஆசிரியர்கள் தொலைபேசி அழைப்புக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் 31 பாடசாலைகளை தரமுயர்த்த ரூ. 1035 மில். ஒதுக்கீடு -கல்வி அமைச்சர்

26parliament.jpgயாழ் குடாவில் உள்ள 31 பாடசாலைகளை இசுரு பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 1035 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 32.5 மில்லியன் ரூபா வீதம் வழங்க உள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

இது தவிர வடக்கிலுள்ள 75 பாடசாலைகளுக்கு கணனிப் பிரிவுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு வடக்கிலுள்ள 200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற தவறுகள் மற்றும் குறைபாடுகள் தொடர் பாக ஐ.தே.க. முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, வடபகுதியில் கல்வித் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை கிடையாது. அண்மையில் 400 ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்ட னர். கிழக்கில் 3500 ஆசிரியர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டனர்.

தவணைப் பரீட்சைகளில் இடம்பெற்ற தவறுகள் தொடர்பாக கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை நடத்தியது. இந்தத் தவறுகளுக்கு 12 அதிகாரிகள் முழுமையாக பொறுப்பு கூற வேண்டும். இவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம். அதிகாரிகளின் கவனயீனம் மற்றும் தவறினாலேயே இந்தப் பிழைகள் நடந்தன. 9 மாகாணங்களிலும் தவணைப் பரீட்சை நடத்த 90 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்களை அச்சிடத் தேவையான பணத்தை கல்வி அமைச்சு வழங்க முடிவு செய்துள்ளது. அடுத்த வருடம் முதல் நிதி ஆணைக் குழுவினூடாக தேவையான பணம் வழங்கப்படும். வினாத்தாள்கள் தயாரிப்பது தொடர்பாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி அறிவூட்ட உள்ளோம்.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்ட தவறுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பேராசிரியர்கள் தலைமையிலான குழுக்களே வினாத்தாள்களை தயாரித்தன.

இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்காக பொறுப்பேற்கப்பட்ட 17 பாடசாலைகளிலும் அடுத்த தவணையின் போது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். செப்டம்பர் முதல் வாரம் முதல் முகாம்களில் உள்ள சாதாரண தர மாண வர்களுக்கு விசேட வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

அதிக ஓட்டமற்ற ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர் – முரளிதரன் சாதனை

murali.jpgஅதிக ஓட்டமற்ற ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பினை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 37 வயதான முரளிதரன் நேற்று முன்தினம் பெற்றார். இதுவரை அப்பெருமையை தக்க வைத்திருந்த அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன்வோர்ன் 145 டெஸ்ட் விளையாடி மொத்தம் 1761 ஓவர்களை மெய்டன்களாக வீசியிருந்தார்.

முரளிதரன் நேற்றைய டெஸ்டில் 9 ஓவர்களை ஓட்டமற்ற ஓவராக வீசி அதன் மூலம் வோர்னின் சாதனையை கடந்தார். 128 வது டெஸ்டில் இறஙகி உள்ள முரளிதரன் இதுவரை 1763 ஓட்டமற்ற ஓவர்கள் வீசி இருக்கிறார்.

ஆட்டத்தின் 79-வது ஓவரை முரளிதரன் ரன்கள் கொடுக்காமல் மைடன் ஓவராக வீசி இந்த சாதனையை நேற்று முன்தினம் முரளி நிகழ்த்தினார்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனையை வைத்துள்ள முரளிதரன் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கவுதம் கம்பீர் விக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வீழ்த்தி 503 விக்கெட்டுகளை வீழ்த்தி வாசிம் அக்ரமின் ஒரு நாள் கிரிக்கெட் வாழ் நாள் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெனியாயவில் காலநிலை மாற்ற கண்காணிப்பு ராடர் இயந்திரம் – ரூ. 400மில். செலவில் நிறுவ திட்டம்

நாட்டின் காலநிலையை குறுகிய நேரத்துக்குள் கணிப்பீடு செய்யும் காலநிலை மாற்ற கண்காணிப்பு ராடர் இயந்திரமொன்றை தெனியாய கொங்கலவில் நிறுவுவதற்கு காலநிலை அவதான நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக காலநிலை அவதான நிலைய சம்மேளன நிபுணர்களின் உதவியுடன் இந்த இயந்திரம் நிறுவப்படவுள்ளதுடன் இதனை நிறுவும் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜீ. பி. சமரசிங்க தெரிவித்தார்.

டொப்லர் ராடர் என அழைக்கப்படும் இவ்வியந் திரத்தை தெனியாயவில் நிறுவுவதற்கான பொறு ப்பை அமெரிக்காவின் என் டர்பிரைஸ் எலக்ட்ரோனிக் கோபரேசன் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இயந்திரத்தின் மூலம் மிகக்குறுகிய காலத்தில் கடும் மழை, மழை பெய்யக் கூடிய பிரதேசம், காற்றின் வேகம், காற்று பயணிக்கும் திசை என்ப வற்றைக் கண்டறியமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையுடனான டெஸ்ட்: நியூஸிலாந்து அணிக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்கு:

dilshan.jpgநியூஸி லாந்து அணி 413 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என 2 வது இன்னிங்ஸிற்காக விளையாடிய அவ்வணி 1 விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்களைப் பெற்றபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் திலகரட்ன டில்ஷான் ஆட்டமிழக்காமல் பெற்ற 123 ஓட்டங்களால் 4 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டத்தை இடை நிறுத்துவதாக அறிவித்தார்கள்.

பின்னர் நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாட வரும் போது மழை குறுக்கிட்டதால் போட்டி சில நிமிடங்கள் தாமதமாக ஆரம்பமானது.

இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார 46 ஓட்டங்களையும் ஜயவர்தன 27 ஓட்டங்களையும் சமரவீர 20 ஓட்டங்களையும் பிரசன்ன ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஒப்ரைன், விட்டோரி, பட்டேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கை- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 452 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டிம்மெக் இன்தோஷ் 36 ஓட்டங்களுடனும், ஜீத்தன் பட்டேல் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தார்கள்.

இந் நிலையில் தொடர்ந்து 3வது நாளான நேற்றுமுன்தினம் காலையும் மழை பெய்தது. இதனால் 90 நிமிடங்கள் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. மெக் இன்தோஷ் பொறுமையாக ஆடினார். துஷாராவின் வேகப் பந்து வீச்சில் ஒரு முறை ஹெல்மெட்டையும், மற்றொரு முறை தோள்பட்டையையும் தாக்கியது. அவற்றை சமாளித்து தனது முதலாவது அரைசதத்தை மெக்இன்தோஷ் கடந்தார்.

முந்தைய நாள் விக்கெட் காப்பாளராக இறக்கி விடப்பட்ட ஜீத்தன் பட்லேட் 26 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ரோஸ் டெய்லர் இரண்டு முறை பிடியில் இருந்து தப்பித்ததால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்த நியூசி லாந்து மேற்கொண்டு 43 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் மேலும் 4 விக்கெட்டுகளை இழந்து சிக்கலுக்குள்ளானது. டெய்லர் 35 ஓட்டத்துடனும், மெக்இன்தோஷ் 69 ஓட்டங்ளுடனும் (226 பந்து), மெக்கல்லம் ஒரு ஓட்டங்களிலும், ஓரம் 12 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

பாலோ-ஆனை தவிர்க்க 253 ஓட்டங்களை தொடவேண்டிய நிலையில், 8வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெஸ்ஸி ரைடரும், கப்டன் வெட்டோரியும் அணியை பாலோ-ஆன் ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்கள். ரைடர் தனது பங்குக்கு 42 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

3வது நாள் ஆட்ட நேரமுடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் எடுத்திருந்தது. விட்டோரி 33 ஓட்டங்களுடனும், ஓ பிரையன் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் துஷாரா, முரளிதரன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதேவேளை 4வது நாள் ஆட்ட நேரத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி 299 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

SRI LANKA
1ST INNINGS 452

NEW ZEALAND
1ST INNINGS
(overnight 281-8)

J. Oram c sub b Muralitharan   12
D. Vettori b Thushara    42
I. O’Brien c P. Jayawardene b Muralitharan  9
C. Martin not out     2
Extras: (b6, lb5, w1, nb11)   23
Total (all out, 116 overs)   299
Fall of wickets: 1-45, 2-80, 3-129, 4-180, 5-188, 6-195, 7-223, 8-259, 9-290, 10-299.
Bowling: Kulasekara 10-2-41-1 (nb1), Thushara 23-2-81-4 (nb6, w1),
Mendis 39-8-85-1 (nb4), Muralitharan 42-10-73-4, Paranavitana 2-0-8-0.

SRI LANKA
2nd innings
T. Paranavitana c Taylor b O’Brien  5
T. Dilshan not out   123
K. Sangakkara run out   46
M. Jayawardene c and b Patel  27
T. Samaraweera c Taylor b Vettori 20
P. Jayawardene not out  30
Extras: (b5, lb3)    8
Total (for 4 wkts decl,49 overs) 259
Fall of wickets: 1-19, 2-120, 3-174, 4-205.
Bowling: Martin 5-1-25-0, O’Brien 8-1-45-1, Oram 5-0-31-0, Vettori 19-3-81-1, Patel 12-0-69-1.

NEW ZEALAND
2ND INNINGS

M. Guptill not out    17
D. Flynn c M. Jayawardene b Kulasekara   0
R. Taylor not out     8
Extras: (b4, lb1)     5
Total (for one wkt, 13 overs)   30
Fall of wicket: 1-1 (Flynn).
Bowling: Kulasekara 3-0-10-1, Thushara 2-2-0-0, Mendis 4-1-9-0, Muralitharan 4-2-6-0.

இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேட்டி

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 63 வது சுதந்திர தின விழா கடந்த 15ம் திகதி டில்லியில் நடந்தது. அப்போது டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமரின் பேச்சை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. அது தொடர்பாக தகவல் இருந்தால் எங்களிடம் சொல்லலாம்.

நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தனது நாட்டு தூதரகம் மூலம் டில்லிக்கு தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கும் பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே இது தொடர்பாக நம்பத் தகுந்த தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்கள் அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் தங்களது கடுமையான உணர்வுகளையும் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு குரேஷி தனது நாட்டு வெளியுறவு செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று மீண்டும் ஒருமுறை அவர் வலியுறுத்தி கூறினார். எனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றி தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்களிடம் கொடுக்கலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 45 பேர் பலி

10092009.jpgஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 10 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நேற்று முன்தினம் வரை 45 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

கடநத 36 மணி நேரத்தில் கர்நாடகத்தில் நால்வர், டில்லியில், குஜராத்தில் தலா இருவர், சென்னையில் இருவர், புனேவில் ஒருவர் மரணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவுக்கு அடுத்து பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரில் அநேகமானோர் கர்நாடகத்தில்தான் உள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 24 பேர் இறந்துள்ளனர். இதில் புனேவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத்தில் ஐந்து பேரும், தமிழகம், டில்லியில் தலா இருவரும், கேரளத்தில் ஒருவரும் இறந்துள்ளனர். மொத்தம் 45 பேர் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மட்டும் 159 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாடு முழுதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,401 ஆக உயர்ந்துள்ளது.

“குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமானால் அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்’

உள்ளூராட்சி மன்றங்களினால் பல செயற்திட்டங்கள் நடைபெறுகின்றது. ஆனால், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கே இருக்கின்றது என்று அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் தெரிவித்தார்.

ஆசிய நிலையமும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் இணைந்து மாகாண உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு “உள்ளூராட்சியில் ஊடகங்களின் வகிபங்கு’ எனும் தலைப்பிலான செயலமர்வு அம்பாறை மொன்டி ஹோட்டலில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் லயனல் குருகே தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் தொடர்ந்து பேசுகையில்; உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் தேவைகளை இனங்கண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அச் செயற்பாடுகள் ஏனைய பிரதேச மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

இன்று இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, நாட்டிலுள்ள மக்களுக்கு இருக்கின்ற பாரியதும் முக்கியமானதுமான பிரச்சினை குப்பை அகற்றல். அந்தப் பணியை திண்மக்கழிவு முகாமைத்துவம் எனும் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய மகாஓயா,தெய்யத்தைகண்டி பிரதேசத்தில் 30 கிராமங்களுக்கு மிகவும் சிறந்த நீர்விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த செயற்திட்டங்கள் இந்த மாவட்ட மக்களுக்கே தெரியாத நிலையுள்ளது. எனவே, இச் செயற்திட்டங்களை மக்களின் முன் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமானால் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும்.

உள்ளூராட்சி மன்றங்களின் சகல செயற்பாடுகளும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. ஆனால், அது கிராமிய மட்ட மக்களுக்கோ ஏனைய பிரதேச மக்களுக்கோ தெளிவுபடுத்தப்படுவதில்லை. இந்த மன்றங்கள் பலதரப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஆனால், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமாயின் அவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கே இருக்கின்றது.

அந்த வகையில் இந்த மாவட்டத்தில் நூலகங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. நாங்கள் நூலகங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பல முயற்சி செய்தும் அது பயனளிக்கவில்லை.

இன்று எமது நாட்டை மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகப் பார்த்தால் தொழில்நுட்ப அறிவும் தொடர்பாடல் நிலை மிகவும் விசாலமான முறையில் பரந்துபட்டுள்ளது. ஆனால், கிராமிய மட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, கிராமிய மட்டத்திலுள்ள மக்களுக்குத் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கும் செய்திகளைப் பரிமாற்றம் செய்வதற்கும் ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இடம்பெயர் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை – ரவூப் ஹக்கீம்

akime-2.jpgஇடம் பெயர் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறிப்பாக மன்னார் முசொலிப் பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், முஸ்லிம்கள் தமது சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. யுத்த காலத்தில் வடக்கு பகுதி முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களைத் தற்போது மீளக் குடியமர்த்த முடியும்.

ஆனால், என்ன காரணத்திற்காக முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது புதிராகவே உள்ளது.

பெருந் தொகையான முஸ்லிம்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்றார்.