யாழ். தென்மராட்சி பகுதியில் கடந்த 20 வருடங்களாக செய்கைபண்ணப்படாமலிருந்த சுமார் 1700 ஏக்கர் வயற் காணிகள் செய்கை பண்ணப்படவுள்ளன.
மேற்படி வயற் காணிகளின் உரிமையா ளர்கள் 500 விவசாயிகளின் பங்களிப்புடன் அடுத்த வாரம் ஏர்பூட்டு விழாவை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
யாழ். வடமராட்சியின் தனங்கிளப்பு, மறவன்புலவு பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக மக்கள் நடமாட்டம் இன்றி விளைநிலங்கள் தரிசு நிலங்களாக கிடந்தன.
அடுத்த சிறுபோகத்தின் போது 1700 ஏக்கர் வயற்காணி யிலும் செய்கை பண்ணக்கூடிய விதத்தில் அடுத்தவாரம் ஏர்பூட்டு நிகழ்வை விழாவாக கொண்டாடவும் தீர்மானிக் கப்பட்டுள்ளது.
‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் தலைவரும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றிற்கான ஜனாதி பதியின் விசேட செயலணியின் தலைவருமான பெசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் வடமராட்சி தனங்கிளப்பு, மறவன்புலவு ஏர்பூட்டு விழா நடைபெறும்.