25

25

பிரபஞ்ச அழகுராணி

stefania-fernandez.jpgஇவ் வருடத்துக்கான பிரபஞ்ச அழகு ராணியாக வெனிசுவேலா நாட்டின் அழகுராணியான ஸ்டெபானியா பெர்னான்டஸ தெரிவுசெய்யப்ட்டுள்ளார்.

கடந்த வருடம் 2008 இன் பிரபஞ்ச அழகியாகத் தெரிவு செய்யப்பட்டடிருந்த தயானா மொண்டோசா ஸ்டெபானியாவுக்கு வெற்றிக் கிரீடத்தை அணிவித்தார்.

சி.ஐ.ஏ. செய்த கைதிகள் துஷ்பிரயோகம்: வழக்குகளை மீண்டும் நடத்த அமெரிக்க நீதித்துறை பரிந்துரை

guantanamo.jpgஅமெரிக் காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வினர் சிறைக் கைதிகளை விசாரிக்கும்போது நடைபெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பலவற்றை மீண்டும் தொடங்குவதற்கு அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சி ஐ ஏ வின் ஊழியர்களும், அதனுடனான ஒப்பந்தக்காரர்களும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

அமெரிக்க நீதித்துறையின் இந்த பரிந்துரையானது, முன்னர் அதிபராக இருந்த புஷ் அவர்களின் நிர்வாகம் எடுத்த கொள்கையினை மாற்றியைக்கும்.

தீவிரவாதம் தொடர்பான சந்தேக நபர்களை சி ஐ ஏ நடத்திய விதம் குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படவுள்ளது.

கடந்த ஆண்டு இது தொடர்பான மூல அறிக்கை வெளியான போது, இந்த துஷ்பிரயோகங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் தடுக்கப்பட்டன.

புதிய தகவல்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது போல போலியாக செய்து காட்டியது குறித்தும், மின்சார துளையிடும் கருவியைக் கொண்டு அச்சுறுத்தியது குறித்தும் புதிய விபரங்களை வெளிக் கொண்டுவரக்கூடும் என அமெரிக்க பத்திரிகைகள் எதிர்வு கூறுகின்றன.

எதிர்காலத்தில், வெள்ளை மாளிகையின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத சந்தேகநபர்கள் மீது விசாரணைகளை நடத்துவதற்கான ஒரு புதிய துறை உருவாக்கப்படுவதற்கு அதிபர் ஒபாமா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எரித்திரியாவில் புலிகளின் 10 சிறிய ரக விமானங்கள் – “லங்காதீப’ செய்தி

2408.jpgதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக விமானங்கள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள நாளேடான “லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விமானங்களை பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய விமான நிலையத் தரப்பு மேற்கொண்டு வருவதாகவும், இந்த விமான நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  மலேசியாவில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வினாத்தாள்கள் குறைந்தமையால் 40 நிமிடங்கள் பரீட்சை ஒத்திவைப்பு

sri-lankan-students.jpgபரீட்சை வினாத்தாள்கள் நெருக்கடி தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்று 23ஆம் திகதி ஆரம்பமான 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையிலும் காலி மாவட்டத்தில் ஒரு பாடசாலைக்கு 40 வினாத்தாள்கள் குறைந்ததால் 40 வினாடிகள் பரீட்சையை ஒத்திவைக்க நேர்ந்துள்ளது.

எனவே, பரீட்சைகள் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிகளைத் தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்க முடியாது

vote000.jpgஆப்கா னிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை செப்டம்பர் மாதம் 03ம் திகதிக்குப் முன்னர் எதிர்பார்க்க முடியாதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஹமீத் அல்கர்ஸாயியும் மற்றொரு வேட்பாளரான முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லாவும் அறிவித்துள்ளதால் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

முதல் சுற்றில் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக இவ்விருவரும் உரிமைகோரியுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல் திணைக்களம் இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளது முதலாம் சுற்றில் இருவரும் சம அளவான வாக்குகளைப் பெற்றால் அல்லது வெற்றி தெளிவில்லாமல் இருந்தால் மாத்திரமே இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டும்.

தேர்தல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இவ்விரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும். இதை வைத்து வெற்றி தங்களுக்கேயென இரண்டு வேட்பாளர்களும் உரிமை கோருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்யோக பூர்வ முடிவுகள் வரும் வரை வெற்றிச் செய்திகளை பொது மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டாமென இரு வேட்பாளர்களையும் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கமான நேச நாடுகள் கேட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் தேர்தல்கள் (ஜனாதிபதி மாகாண சபை) வன்முறைமிக்கதென்றும் மோசடியானதென்றும் தெரிவித்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வாக்குப் பெட்டிகளைக் கைமாறும் விடயத்திலுள்ள அதிகாரங்கள் மாற்றப்படவேண்டும். இதைச் செய்ய அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவையென்றும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2001ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் இது. தலிபானிகளின் அச்சுறுத்தல் வன்முறைகளுக்கு மத்தியிலும் மக்கள் வாக்களித்துள்ளமை ஆப்கான் வரலாற்றின் முக்கிய மைல்கல் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளால் பெரும் வன்முறைகள் எழவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

அகதிகளுக்கு உதவியளிக்க மலேசியாவில் நிதிதிரட்டும் நடவடிக்கையில் கோபியோ

IDP_Camp_Aug09யுத்தத் தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள இலங்கை மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வுக்கு சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் பெ.சந்திரசேகரனை அனுப்பியதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக கோபியோ (GOPIO) அமைப்பு தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

அண்மைக் காலமாக இலங்கையில் யுத்த அகதிகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதி திரட்டுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இராப்போசன வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் பொருட்டு அமைச்சர் பெ.சந்திரசேகரனை மலேசியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தியதற்கு உங்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்வு அண்மையில் மலேசியா, பெட்டாலிங் ஜாயாவிலுள்ள பிளான்டேசன் இல்லத்தில் இடம்பெற்றது.

யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி உலகெங்கும் வாழும் மனிதநேயம் கொண்ட மக்களின் உணர்வுகளுடன் மலேசியா வாழ் மக்களின் மனிதநேயம் சங்கமித்ததன் காரணமாக வெற்றிபெற்றுள்ளது. கோபியோ, மலேசியாவில் வதியும் இந்திய தமிழ் வம்சாவளியினர், இலங்கைத் தமிழ் வம்சாவளியினர் மற்றும் மனிதநேயம் மிக்க மலேசியர்கள் ஆகியோர்கள் தமது கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட போது மனிதநேயம் மிக்க மலேசியர்களின் பாரிய பங்களிப்பு காரணமாக இந்நிதி வெற்றிகரமாகத் திரட்டப்பட்டது.

இந்த விருந்துபசாரத்தில் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் சிறப்பு விருந்தினராக பிரசன்னமாகியிருந்ததோடு மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி திருமதி டபிள்யூ.எல்.பெரேரா விசேட விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், சுமார் 450 பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதன் முதற்கட்டத்தின் போது ஒரு இலட்சத்து இருபதாயிரம் மலேசிய றிங்கிற் திரட்டியுள்ளதுடன் இரண்டாம் கட்டத்தில் இரண்டு இலட்சம் ரூபாவைத் திரட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம். நிதி சேர்ப்பதன் நோக்கம் இராப்போசன வைபவத்தின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்பார்ப்பது என்னவெனில் முரண்பாடுகள் நிமித்தம் அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு இந்நிதி பயன்படுத்த வேண்டுமென்பதாகும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு மேலே குறிப்பிட்ட முயற்சி மூலம் எங்களது முழு ஆதரவையும் நாங்கள் நல்குவதுடன் இவ்வரிய சந்தர்ப்பத்தை பாவித்து நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கானதோர் நீண்டகால நட்புறவை ஏற்படுத்த விரும்புகின்றோம்.

ஒழுங்கமைக்கப்பட்ட குழுவானது இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு முதலீடுகள் மற்றும் பரஸ்பரம் செயற்பாடாக்கக் கூடியதான பொருளாதாரக் கருத்திட்டங்களை இனங்காண்பதற்கான விஜயமொன்றை இலங்கைக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு மேற்கொள்வதென்பதானது மலேசியாவின் முதலீட்டாளர்களின் கோரிக்கைக்கு “கோபியோ’ இணங்குகின்றது. புதிய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு அவர்களின் பரந்த முயற்சியாண்மை உதவியளிக்குமென நம்புகின்றோம்.

இரு நாடுகளுக்குமிடையே புதிய சமூக மற்றும் நல்லுறவுப் பாலத்தை அமைச்சரின் பிரசன்னம் கட்டியெழுப்பியதோடு கோபியோ (GOPIO) மற்றும் பி.ஐ.ஒ. (PIO) ஆகிய அமைப்புகள் வருகைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றன. இவ்வாறான முயற்சிகள் இரு நாடுகளுக்குமிடையே நிலவும் இருதரப்பு சினேகபூர்வ உறவுகளை மேலும் வலுவூட்டுமென நாம் திடமாக நம்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.