September

September

வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் அதிக வருவாயைப் பெறுவது இந்தியா

workers.jpgவெளிநாடு சென்று வேலைபார்க்கும் தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கும் பணத்தின் அளவை வைத்துப் பார்க்கையில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா தான் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

கடந்த ஓர் ஆண்டில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பிரஜைகளிடம் இருந்து இந்தியா 4500 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளதாம். இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனாவும் அதைத் தொடர்ந்து மெக்ஸிகோவும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.

கிழக்கு உதயம் அபிவிருத்தி – நிதி திரட்டும் வகையில் சமாதான வாகன ஊர்வலம்

கிழக்கு உதயம் அபிவிருத்தித்திட்டத்திற்கென நிதி சேகரிக்கும் வகையில் சமாதான வாகன ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சும் இலங்கை விமானப் படையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

இதற்கான அனுசரணையினை 4×4 எட்வன்சர் கழகம் மற்றும் ஜோன் கீல்ஸ் ஓட்டோ மேஷன் தனியார் நிறுவனம் வழங்குகின்றது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள திவுல்வெவ கிராமத்தில் சகல வசதிகள் கொண்ட பாடசாலையொன்றை நிறுவப் பயன்படுத்தப்படும். புலிகளால் பாதிக்கப்பட்டு பல. இன்னல்களுக்கு முகம் கொடுத்த 160 குடும்பங்கள் தற்பொழுது இப்பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்களாக நடைபெறும் இவ்வாகன ஊர்வலம், இம்மாதம் 19ம் திகதி காலை கொழும்பிலிருந்து ஆரம்பமாகி, அவிசாவளை, இரத்தினபுரி, பெல்மதுளை, எம்பிலிப்பிட்டி ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம ஊடாக அறுகம்பே சென்றடையும். முதல்நாள் இரவை களிப்பதற்கென அறுகம்பே கடலோரப் பகுதியில் முகாமொன்று அமைக்கப்படும். இரண்டாம் நாள் ஊர்வலம், பொத்துவில், கோமாரி, திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர், பாசிக்குடா, மூதூர் மற்றும் கிண்ணியா ஊடாக திருகோணமலை சென்றடையும். இறுதி நாள் நிகழ்வில் ஏற்பாட்டுக்குழுத் தலைவரும், அமைச்சருமான புஞ்சிநிலமே, தேசத்தைக் கட்டியெழுப்புதல் அமைச்சின் அதிகாரிகள் உட்பட அப்பகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பங்கு கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அமெரிக்கா அறிவித்துள்ளதாக திவயின தகவல்

உரிய சாட்சிங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை உருத்திரகுமாரன் மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
 
குறித்த நபரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது. உருத்திரகுமாரன் எல்லைகடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவராக கடமையாற்றி வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நான்கு மாவட்டங்களைச் சேர்ந்தோரை மீள்குடியேற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

101009displacedidps.gifவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9920 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 74 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட முதல் தொகுதியினர் இன்று வவுனியா நகரசபை சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலிருந்து பஸ்களின் மூலம் அனுப்பி் வைக்கப்பட்டனர்.

மேற்கு நாடுகள் இலங்கையை விமர்சிப்பதை விடுத்து உதவ முன்வரவேண்டும் – பிரான்ஸ் சஞ்சிகைக்கு ஜனாதிபதி பேட்டி

slpr080909.jpgமேற்கு நாடுகள் எம்மை நியாயமற்றமுறையில் விமர்சிப்பதைவிடுத்து எமக்கு உதவ முன்வர வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலிப்பயங்கரவாதிகளுக்கெதிரான போர் வெற்றியின் பின்னர் முன்னணி ஐரோப்பிய சஞ்சிகையொன்றுக்கு முதற்தடவையாக வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் கடந்த 30 வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகளுக்கு மேற்கு நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மனித உரிமை விடயங்களில்; கவனயீனமாக இருப்பதாக மேற்கு நாடுகள் அவர் மீது முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் இப்பேட்டியின்போது பதில்களை வழங்கியுள்ளார்.

நாட்டில் சமாதானத்தை எவ்வாறு மீளக் கட்டியெழுப்பப்போகின்றீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி,  வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கே மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்று தங்களது நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஏற்றவகையில் அப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கும் மிதி வெடிகளை அகற்றுவதே முதலாவது தேவையாகும். பின்னர் நாம் இந்த நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் ஏன் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கேட்கப்பட்டபோது புலிகளே அவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். நாம் அவர்களின் பாதுகாப்பிலே கூடுதல் கவனம் செலுத்திவருகின்றோம். அவர்களை வெளியே செல்லவிட்டு மிதிவெடிகளுக்கு சிக்கவைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டருக்கு பிணை

110909dayamasterltteold.gifவிடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை இலங்கை நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது.

இவர்கள் இருவரும், தலா 25 லட்சம் ரூபாய் தனிநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், நீதிமன்ற அனுமதி இன்றி வெளிநாடு செல்லக் கூடாது, கடவுச் சீட்டுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், மாதம் ஒரு முறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

புலிகளுக்கு சார்பான சில சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக சதி: ஜீ.எல்.பீரிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிரான சதித் திட்டங்களை தீட்டி வருவதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பு அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய சதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
லண்டன் ஆர்ஜன் மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியாக வழிநடத்திய சில முக்கியஸ்தர்களை கைது செய்ததன் மூலம் இந்த நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்திற்கு எதிராக போலியான பிரசாரங்களை சில அமைப்புக்கள் முன்னெடுத்து வருவதாகவும், இதனை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்க்கமான போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது

110909-india.jpgகொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இப்போட்டியில் முக்கிய நிகழ்வுகளை இதே பக்கத்தில் பின்னூட்டமாக இணைக்க தேசம் நெட் விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பு தக்கவைத்துக்கொள்ள இன்றைய தினம் கட்டாயம் வெற்றிபெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியூஸிலாந்து இன்றைய தினம் தோல்வி அடைந்தால் இலங்கை இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இந்திய அணி தனது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமல் இன்று களமிறங்குகிறது. இதனால் நியூஸிலாந்துடனான போட்டியில் சச்சின் டென்டுல்கர் மற்றும் டினேஷ் கார்த்திக் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

அத்துடன் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஒருநாள் அணிக்காக விளையாட இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

New Zealand 155 (46.3 ov)
Compaq Cup – 2nd Match

  New Zealand innings (50 overs maximum)
 BB McCullum†  lbw b Nehra  3 
 JD Ryder  lbw b Nehra  0 
 MJ Guptill  c Dravid b Yuvraj Singh  22
 LRPL Taylor  c †Dhoni b Singh  11 
 GD Elliott  c †Dhoni b Yuvraj Singh  22 
 JDP Oram  c & b Sharma  24 
 NT Broom  c Raina b Yuvraj Singh  21
 DL Vettori*  b Sharma  25
 KD Mills  b Singh  6 
 IG Butler  c Harbhajan Singh b Nehra  6 
 SE Bond  not out  10 
 
 Extras (lb 4, w 1) 5     
      
Total (all out; 46.3 overs) 155 (3.33 runs per over)
Fall of wickets1-1 (Ryder, 0.3 ov), 2-4 (McCullum, 2.2 ov), 3-19 (Taylor, 5.5 ov), 4-51 (Guptill, 14.6 ov), 5-66 (Elliott, 20.3 ov), 6-101 (Oram, 28.1 ov), 7-116 (Broom, 32.1 ov), 8-134 (Mills, 37.6 ov), 9-142 (Vettori, 42.3 ov), 10-155 (Butler, 46.3 ov) 
        
 Bowling
 A Nehra 8.3 0 24 3
 RP Singh 8 2 22 2 (1w) 
 I Sharma 10 2 26 2
 Yuvraj Singh 10 0 31 3
 Harbhajan Singh 8 0 39 0
 SK Raina 1 0 4 0
 YK Pathan 1 0 5 0

கொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி- நியூஸிலாந்து அணியை 6 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியது

முதல் போட்டியிலும் இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பு இழக்கிறது.

இலங்கை இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டன

India innings (target: 156 runs from 50 overs)
 
 KD Karthik  lbw b Mills  4
 SR Tendulkar  c Guptill b Vettori  46
 R Dravid  lbw b Oram  14 
 Yuvraj Singh  c Guptill b Vettori  8
 MS Dhoni*†  not out  35
 SK Raina  not out  45 
 
 Extras (lb 3, w 1) 4     
      
Total (4 wickets; 40.3 overs) 156 (3.85 runs per over)

To bat YK Pathan, Harbhajan Singh, RP Singh, A Nehra, I Sharma 
Fall of wickets1-7 (Karthik, 2.3 ov), 2-67 (Dravid, 18.1 ov), 3-71 (Tendulkar, 19.2 ov), 4-84 (Yuvraj Singh, 23.6 ov) 
        
 Bowling
 KD Mills 5.3 1 25  
 SE Bond 10 3 30 0  
 IG Butler 4 0 25 0  
 DL Vettori 10 0 33 2
 JDP Oram 7 1 19 1
 GD Elliott 2 0 9 0
 MJ Guptill 2 0 12 0

India won by 6 wickets (with 57 balls remaining)

பிக் பிரதர் நிகழ்ச்சி என மோசடி – துருக்கியில் 9 இளம் பெண்கள் மீட்பு

11-big-brother-girls.jpgபிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல நடத்துவதாக கூறி 9 இளம் பெண்களை மோசடியாக வரவழைத்து ஒரு வீட்டில் தங்க வைத்து அவர்களை கேமரா மூலம் ரகசியமாக ஆபாச படம் பிடித்து வந்துள்ளது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 மாத வீட்டுச் சிறைக்குப் பின்னர் அந்தப் பெண்களை போலீஸார் மீட்டுள்ளனர்.

இஸ்தான்புல் அருகே உள்ள ஒரு வீட்டில்தான் இந்தப் பெண்களை அடைத்து வைத்திருந்தனர். பிக் பிரதர் நிகழ்ச்சி போல என்று கூறி இவர்களை வரவழைத்து வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டனர். பின்னர் ரகசியக் கேமரா ஒன்றின் மூலம் இவர்களது செயல்பாடுகளை ரகசியமாக படம்  பிடித்து அவற்றை இன்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பாக காட்டி பணம் பார்த்துள்ளனர். இதில் அவர்களது பாத்ரூம் ஆபாச காட்சிகளும் படுக்கை காட்சிகளும் அடக்கம். அதை இன்டர்நெட்டில் வி்ற்றுள்ளது அந்தக் கும்பல்.

முதலில் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்கள் தேவை என்று இந்த கும்பல் விளம்பரம் கொடுத்துள்ளது. அதைப் பார்த்து நிறையப் பெண்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு குரல் தேர்வு, முக அழகுத் தேர்வு என நிறைய நடத்தி பின்னர் 9 பேரை தேர்வு செய்து வீட்டுக்குள் அனுப்பி விட்டனர். இந்த நிலையில், இந்தப் பெண்களின் பெற்றோர்கள், தங்களது பெண்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் பெரும் குழப்பமடைந்து போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸ்  விசாரணையில், பிக் பிரதர் நிகழ்ச்சி என்ற பெயரில் 9 பெண்களும் சிக்கிய விவரம் தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று அடைபட்டிருந்த 9 பெண்களையும் மீட்டனர்.

இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

110909rahul_gandhi.jpgஅகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்தியாவின் தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதென்பது ஆபத்தான யோசனை என்றார்.

அத்தகைய திட்டங்களின் பாரதூர விளைவுகள் பற்றி சிந்திக்கப்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்ற அவர் இயற்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடவேண்டும் என்றும் அதனுடன் விளையாடுவது பேரழிவினை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதி நதிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக அனைத்து நதிகளையும் இணைக்கலாம் என்கிறாரே என்று கேட்டபோது, அத்தகைய இணைப்பு ஆபத்தானது என்பது தனது சொந்தக் கருத்து என்றும், மேலும் மாநிலங்கள் நதி நீர் பங்கீடு குறித்த பிரச்சினைகளை வேறு வழிகளிலே தீர்த்துக்கொள்ள முயலலாம் என்றும் ராகுல் காந்தி பதிலளித்தார்.