யுத்தத்தில் ஈடுபட்ட முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்தில் மீள இணைக்கும் செயற்திட்டத்துக்கு பிரிட்டன் 17 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது. பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகனி கர் பீற்றர் ஹேய்ஸ் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் அப்திகெர் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட முன்னிலையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இங்கு உரையாற்றிய அமைச்சர் மிலிந்த மொரகொட, பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய த்தால் இலங்கைக்கு வழங்கப் பட்டு வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இது போன்ற செயற் திட்டங்களுக்கு பிரிட்டன் ஒத்துழைப்பு வழங்கும் என பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் கூறினார். இதற்கான நிதி மோதல் தவிர்ப்பு மையத்திலிருந்து (cpp – Conflict prevenfion pool) வழங்கப்படுகிறதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.