17

17

இலங்கை கடற்படையுடன் தமிழக மீனவர்களை தாக்கியது சீனர்கள்- இல.கணேசன்

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து சீனர்களும் தாக்கியதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை கடற்படையினரி்ன் தாக்குதல் காரணமாக கடலுக்கு செல்ல மறுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட 5 மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தமிழக அரசு கொடுத்த உறுதிமொழியின் பேரில் 300 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குத் திரும்பினர். ஆனால், அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது மூன்று பெரிய கப்பல்கள் உட்பட 9 கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

அவர்களிடமிருந்து உயிர் பிழைக்கும் நோக்கத்தில் மீனவர்கள் கரையை நோக்கி வேகமாக திரும்பினர். அப்போது அவர்களை துரத்தி வந்த இலங்கை கடற்படை 5 படகுகளில் வந்த 21 மீனவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். வெற்றிவேல், சுடலைமணி, பாண்டி, முனியசாமி ஆகிய நான்கு பேரையும் சிறைபிடித்து சென்று தலைமன்னார் நீதிமன்றத்தில் நிறுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் நான்கு பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சீனர்களும் இருந்தனர்..

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் இல.கணேசன், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இலங்கை கடற்படையினர் மட்டுமல்ல. அவர்களில் சீனர்களும் இருந்ததாக மீனவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது நாட்டின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாகும் என்றார்.

சீனாவின் நான்காவது ரொக்கட் ஏவுகணைத்தளம் 2013ல் இயங்குமென அறிவிப்பு

china.jpgசீனா ஹைனான் தீவில் வென்சாங்க் நகரில் ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைத்து வருகிறது. இது சீனாவின் 4வது ராக்கெட் ஏவுதளம் ஆகும். இந்த ஏவுதளம் எதிர்வரும் 2013ம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும்.

இந்த ஏவுதளத்தில் இருந்து செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அதன் இயக்குநர் வாங்க் வெய்ச்சாங்க் தெரிவித்தார். சீனாவின் விண்வெளித் திட்டத்தை இராணுவம் தான் செயல்படுத்தி வருகிறது. அடுத்தபடியாக அது விண்வெளி வீரர்களை விண்ணுக்கு செலுத்த இருக்கிறது.

சீனா கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி வீரரை விண்ணுக்கு செலுத்தியது. விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய 3வது நாடு சீனா தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன விண்வெளி வீரர்கள் 68 மணி நேரம் விண்வெளியில் நடந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு ஹபரனையில் – 18ஆம் திகதி ஆரம்பம்

cheif_ministers_meeting.pngமாகாண முதலமைச்சர்களின் 26ஆவது வருடாந்த மாநாடு வியாழக்கிழமை ஹபரனயில் உள்ள ஹபரன சாயா கிராமத்தில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வருட முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.

இவ்வருட மாநாட்டின்போது மாகாண சபைகளின் சுமுகமான செயற்பாட்டுக்குத் தடையாகவுள்ள சட்டமூலங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலிருந்து பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தமைக்காக ஜனாதிபதி, முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஒன்றும் இந்ந மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்காக தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளதால் அம்மாகாண முதலமைச்சர் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட முதலமைச்சர்கள் மாநாடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலிருந்து தொழிலாளர் தேசிய சங்கம் வெளியேறியது.

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி உரிய அழுத்தத்தினை வழங்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா எதிர்பார்க்கப்பட்ட போதும் 405 ரூபா சம்பளத்தினை வழங்கக்கூடிய கூட்டொப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

சவுதி அரேபிய வாகன விபத்தில் மடவளை வாசி மரணம்

மடவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து விப த்தொன்றில் பலியானார். முஹமட் ராயிஸ் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

புனித உம்ரா கடமைக்கு மக்கா நோக்கிப் பயணமான தனது மனைவி, பிள்ளை ஆகியோரை சந்திக்க வந்த சமயமே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதே விபத்தில் இலங்கையைச் சேர்ந்த பரகஹதெனியவை வசிப்பிட மாகக் கொண்ட ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

ஜெ வாங்கிய விமானம்-அரசுக்கு இழப்பு ரூ17 கோடி

09-airways-99.jpgவிமானங் களை அதிகம் பயன்படுத்தி செலவு இழுத்து வைக்கும் மற்ற அரசியல்வாதிகள் மத்தியில், விமானத்தையும் ஹெலிகாப்டரையும் முதல்வர்ருணாநிதி மற்ற விஐபிக்களோ பயன்படுத்தாத காரணத்தால் தமிழக அரசுக்கு ரூ. 17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி சுற்றுப்பயணத்துக்காக ஐந்து விமானங்களை, மூன்று ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளார். தமிழகத்தில் முதல்வர், விஐபிக்களின் பயன்பாட்டுக்காக செஸ்னா ரக விமானமும் மற்றும் பெல் ரக ஹெலிகாப்டர் ஒன்றும் உள்ளன.

இதில் செஸ்னா விமானம் கடந்த 1995ல் ஜெயலலிதா  முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதி இந்த பணத்தில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்களை வாங்கி மக்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.மேலும் அந்த செஸ்னாவிமானம் ஹெலிகாப்டரை பயன்படுத்துவதையும்கருணாநிதிதவிர்த்து வருகிறார்.

முதல்வர் கருணாநிதி  தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும்போது ரயில், காரில் தான் செல்வார். தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா தான் இதை எப்போதாவது பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 6 ஆண்டுகளில் செஸ்னா விமானம்  438.1 மணி நேரம் தான் பறந்துள்ளது. அதாவது ஒரு மாதத்துக்கு சுமார் 6 மணி நேரம் பறந்துள்ளது. 9 பேர் உட்கார்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட ஹெலிகாப்டர் இந்த ஆண்டும், 2007ம் ஆண்டும் ஒரு முறை கூட பயன்படுத்தப்படவில்லை. சோதனைக்காக மட்டுமே 10 முறை இயக்கப்பட்டுள்ளது.

ஆனால், விமான போக்குவரத்து விதிகளின்படி ஒரு விமானத்தை ஒரு மாத காலத்தில் குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது இயக்க வேண்டுமாம்.

இது குறித்து முன்னாள் விமானியும், விமான பாதுகாப்பு  நிபுணருமான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், ஹெலிகாப்டர்களை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். ஒரு மாதத்துக்கு 100 மணி நேரமாவது இயக்க வேண்டும். அப்படியில்லாத சமயத்தில் அரசு ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்திருப்பதை விட வாடகைக்கு எடுப்பதே சிறந்தது. அதே போல விமானங்கள் சும்மா நின்றாலும் பராமரிப்பு செலவுகள் மிக அதிகம் என்றார்.