30

30

கிழக்கில் இடம்பெயர்ந்த அனைவரும் மீள்குடியேற்றப்பட்டனர்

கிழக்கில் இடம் பெயர்ந்து நலன்புரிக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் அரசாங்கம்  மீள்குடியர்த்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் 112 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் படிப்படியாக மீள்குடியர்த்தப்பட்டனர். இவர்களுள் இறுதியாக கொக்குவில் நலன்புரி கிராமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 91 குடும்பங்கள் நேற்று அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். 

149 இலங்கை மீனவர்கள் இந்திய சிறையில்

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 149 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

இவர்களில் 46 மீனவர்கள் கடந்த ஞாயிறன்று இரு படகுகளுடன் கைதானதாக மீன் பிடித் திணைக்கள பணிப்பாளர் எஸ். டபிள்யு. பதிரண தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலயத்தினூடாக இவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.