வருங்கால பிரதமராக தன்னை நினைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எவராலும் கணிக்க முடியாது. அப்படியிருக்க வருங்கால பிரதமராக எப்படி என்னை நினைக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். விஜயவாடாவில் புதன்கிழமை கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். அப்படியிருக்கையில் தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம் என்றார். தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். சிறந்த பிரதமர் நிறைவேற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்” என்றார்