2010

2010

தேர்தல் முறையை மாற்றியமைக்க ஐ.ம.சு.முவிலுள்ள கட்சிகள் ஏகதீர்மானம்

2010 பொதுத் தேர்தல் முடிவடைந்த வுடன் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கப்படும் பாராளுமன்றத்தில் தேர்தல் முறையை மாற்றும் நடவ டிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தீர்மானமும் செய்து கொண்டுள்ளன.

விருப்பு வாக்குகள் முறையிலான விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நட த்தப்படும் இறுதியான தேர்தல் இதுவாகத் தான் இருக்கப் போகிறது என அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். நாட்டிற்கு பெரும் கேடாக இருக்கின்ற இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றித் தாருங்கள் என்றும் மக்கள் உங்களிடம் கேட்கின்றனர்.

தொகுதிவாரியான தேர்தல் முறையில் நிச்சயமாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உறுப்பினர் இருப்பார். அவர் அந்த தொகுதிக்கு பொறுப்பு கூறக்கூடியவராக, பொறுப்பு கூற வேண்டியவராக இருப்பார். குறிப்பாக அவர் கண் ணாடி வீட்டிற்குள் இருப்பவர் போன்று இருக்க வேண்டியவராக இருப்பார்.

எமது நாட்டிற்கு ஒரு தொல்லை யாக இருந்த பயங்கரவாத ஒழிக் கப்பட்டு விட்டது. அதே போன்று மிகப் பயங்கர விளைவுகளை தந்து கொண்டிருக்கும் விகிதாசார தேர்தல் முறையிலும் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றார். தேர்தல் மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு க்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் முதற்கட்டமாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்பதை உறுதி செய்தார்.

வெற்று வாக்கு பெட்டிகளுக்குள் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதி

வெற்று வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் போது அதன் உட்பகுதியில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு கட்சிகள்/ சுயேச்சைகளுக்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வெற்று வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்படும் போது, கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களின் தேர்தல் முகவர்கள் தாங்கள் விரும்பிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை உட்பகுதியில் ஒட்ட முடியும்.

வாக்குப் பெட்டிகளில் மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளதாக தேர்தல் திணைக்கள உயர் அதிகாரியொருவர் கூறினார். வாக்கு எண்ணும் நிலையங்களில் தேர்தல் முகவர்கள் இதனைப் பரிசோதித்து அறிந்துகொள்வதற்கு அனுமதிக்கப் படுவார்கள்.

1365 பேர் ஒப்படைப்பு: பெற்றோருக்கு உதவும் வகையில் பம்பைமடுவில் விசேட கருமபீடம்

புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து கடந்த முதலாம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1365 பேரினதும் பெற்றோர் மற்றம் உறவினர்களுக்கு உதவும் வகையில் வவுனியா பம்பைமடுவில் இன்றும் நாளையும் விசேடமாக இரண்டு கருமபீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பம்பைமடு பெண்கள் விடுதி மற்றும் பம்பைமடு தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரு இடங்களிலுமே இவ் விசேட கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் இயங்கவுள்ள இக் கருமபீடங்களுக்கென தனித்தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்வரெனவும் அவர் கூறினார்.

குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் ஒவ்வொருவருக்கும் தமது தேவைகளை இலகுவாக்கும் வகையில் கையேடுகள் அடங்கப்பெற்ற கோப்பும் அவர்கள் முழுமையான புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் ஏனைய பிரஜைகளைப் போல் வாழ தகுதி பெற்றவர்கள் என்பதற்கான சான்றிதழும் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வழங்கப்படும் கோப்பில் மருத்துவர்களால் பரித்துரைக்கப்பட்ட மருந்துகள், சிகிச்சை முறைகள், கலந்தாலோசிக்கப்பட வேண்டிய வைத்திய நிபுணர்கள் பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இவர்கள் நாட்டின் எந்தவொரு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற முடியும்.

தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் விரைவில் மீளப் பெற்றுக் கொடுப்போம் – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

president.jpgதமிழ் மக்கள் கடந்த 30 வருடகாலங்களில் இழந்த அனைத்தையும் நாம் விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டர ங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றிய ஜனாதிபதி;

வடக்கை வளமாக்கும் திட்டம் எம்மிடமுண்டு. பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப நாம் இன, மத, குல, பிரதேச பேதமின்றி இணைந்து செயற்படுவோ மெனவும் தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து எனது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கும், வேறு எந்தக் கட்சிக்கு வாக்களித்தாயினும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று ஜனநாய கத்தை நிலை நிறுத்தியமைக்காகவும் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. அந்த ஜனநாயக உரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது முக்கிய நோக்கமாக இருந்தது. அதனைச் செயற்படுத்திய மக்களுக்கு மீண்டுமொரு முறை பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 30 வருடகாலம் வடக்கு மக்களுக்குக் கிட்டாத அபிவிருத்தியினை மீளப் பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே எமது முக்கிய நோக்கமாகும்.

வடக்கு மக்களின் விவசாயம், ஏனைய தொழில்துறைகளை மேம்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போதே ஆரம்பித்துவிட்டோம் என்பதை நான் குறிப்பிடவிரும்புகின்றேன். தெற்கிலிருந்து வாய்க்கால்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொள் வதற்கான திட்டமொன்றை நாம் விரைவில் நடைமுறைப்படுத்தத் தீர்மா னித்துள்ளோம். மக்களுக்கு குடி நீரும் விவசாயத்திற்கான நீரும் இதன் மூலம் கிட்டுவது உறுதி.

இரணை மடுக் குளத்தினூடாக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதுடன் மகாவலி கங்கை நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வருவதற்கான மற்றுமொரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சகல இன, மத, குல மாகாண மக்களையும் நாம் ஒன்றாகவே பார்க்கிறோம். எம்மிடம் எவ்வித வேறுபாடும் ஒருபோதுமில்லை. சகலருக்கும் ஒரே அகப்பையிலேயே அளக்கிறோம் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது.

இந்நாட்டினைப் பீடித்திருந்த 30 வருட பயங்கரவாதம் இன்றில்லை. சகல மக்க ளும் பயம் சந்தேகமின்றி சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கப்பட்டுள் ளது. மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கும், பாடசாலை, சந்தை என சகல இடங்க ளுக்கும் அச்சமின்றி போய்வரமுடியும். எம்மிடம் தமிழ், சிங்கள இனம் மற்றும் மாகாண பேதங்கள் இல்லை.

நாம் ஒரு தாய் மக்கள். இன ரீதியான அரசி யல் நோக்கங்கள் இனியும் இருக்கக்கூடாது. நாம் எதிர்காலத்தில் கிராம சபைகள் மற்றும் மக்கள் சபைகள் மூலம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இவற்றில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் பிரதிநிதிகளே உள்ளனர். அவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள். வடக்கில் பல வருடகாலம் பின்னடைவு கண்டிருந்த அபிவிருத்தி இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, நீர், போக்குவரத்து வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் என்ன செய்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். ஆசியாவின் பிரபல நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இது இந்நாட்டின் எதிர்கால சந்ததிக்குச் செய்யப்பட்ட பெருந்துரோகமாகும். இன்னும் பலர் புலிகளின் வலையில் சிக்கி செயற்படுகின்றனர்.

30 வருட துயர வாழ்க்கை இனியும் வேண்டுமா என நான் கேட்க விரும்புகிறேன். நாட்டி னதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலம் பற்றி சிந்தித்து புத்தியுடன் தீர்மானம் எடுப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். எமது முன்னணியில் தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர். உங்கள் பிரதேசம் இன்னும் வளமாக மாறும். குறுகிய எண் ணம் வேண்டாம். ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை மாற்றும் நோக்கில் நீங்களும் பங்காளர்களாகுங்கள். பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டை நாம் இணைந்து கட்டியெழுப்புவோம். தவறான பொய்ப்பிரசாரங்களுக்கு துணைபோக வேண்டாம். வெற்றிலைச் சின்னம் உங்களினதும், உங்கள் பிள்ளைகளினதும் நாட்டினதும் வெற்றியாகுமெனவும் தெரிவித்தார்.

‘தோல்வியுறுவோருக்கு தேசிய பட்டியல் ஊடாக இடமில்லை’

பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படும் எவரும் தேசியப்பட்டியலூ டாக மீண்டும் உள்வாங்கப்படமாட்டார்கள் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள். எமது கட்சி இந்த கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 44 சட்டத்தரணிகள், ஐந்து வைத்திய கலாநிதிகள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், தொழிற் சங்கவாதிகள், வர்த்தகர்கள் என அனைத்து துறைகளையும் சார்ந்த இளம் வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். அவர்களுக்கு எமது கட்சி சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறது என்றும் கூறினார்.

பிரிட்டன் மேலும் ஒரு மில்லியன் பவுண் மனிதாபிமான உதவி

மனிதாபிமான உதவியாக மேலும் ஒரு மில்லியன் பவுண் நிதியை இலங்கைக்கு வழங்குவதாக பிரிட்டன் நேற்று அறிவித்தது. ஏற்கனவே கடந்த 18 மாத காலத்தில் பிரிட்டன் மொத்தம் 12.5 மில்லியன் பவுண் நிதியை மோதலினால் இடம்பெயர்ந்த மக்களின் ஆதரவுக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வன்னியில் நிலக்கண்ணி அகழ்வு நடவடிக்கைகளுக்கும் பிரிட்டன் உதவியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மேலதிக ஒரு மில்லியன் பவுண் நிதி நலிவடைந்த குடும்பங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மீளப் பெறுவதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.

மிலிபான்டின் அறிக்கைக்கு அரசு விரைவில் பதிலளிக்கும் – அமைச்சர் கெஹெலிய அறிவிப்பு

keheliya-rambukwella.jpgநாடாளு மன்ற பொதுத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இவ்வேளையில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கை பற்றி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதால் பிரிட்டனின் செயற்பாடு குறித்து இலங்கைக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட இந்த விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் புலிகளைத் தோற்கடித்து ஈட்டிக்கொண்ட வெற்றியை பிரிட்டன் புறக்கணிக்க முயற்சி செய்வதாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:

பிரிட்டன் பாரபட்சம் காண்பிக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலநேரம் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பிரிட்டன் மிக நீண்ட காலமாக இலங்கையின் மனித உரிமை பேணல் பற்றி மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் வெற்றியை ஒடுக்குவதற்காகவே அவர்கள் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அமைச்சர் மிலிபான்டின் அறிக்கைக்கு விசேட அரசாங்க தூதுக்குழு ஒன்று விரைவில் பதிலளிக்கும் இவ்வாறு அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

துரையப்பா விளையாட்டரங்கில் திரளான மக்கள்

president.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ். வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 437வீடுகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்த வீடுகளை உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைப்பார். வீடுகள் கையளிக்கும் நிகழ்வு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

மீளக் குடியேற்றப்பட்டவர்களுள் மிகவும் வறுமை நிலையிலுள்ளவர்களுக்காகவே விசேடமாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் இந்த வீடுகளை தென்பகுதி வர்த்தகர்களின் உதவியுடன் நிர்மாணித்துள்ளனர். வீடுகள் அவரவர் சொந்தக் காணிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடக்கின் மீள் கட்டுமானப் பணிகள்: 4 இலட்சம் சீமெந்து மூடைகள் இந்தியாவினால் கையளிப்பு

ind.jpgவடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்கென இந்திய அரசு 200 மில் லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சம் சீமெந்து மூடைகளை நேற்று கையளித்தது.

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த், தேச நிர்மான, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செய லாளர் டபிள்யூ. கே.கே. குமாரசிறியிடம் சீமெந்து மூடைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கொழும்பு பேலியாகொடையிலுள்ள அல்ரா டெக் சிமென்ட் லங்கா நிறுவனத்தில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வீடு வாசல்களை இழந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மீளக் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 சீமெந்து மூடை கள் வீதம் வழங்க தேச நிர்மான அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசு ஏற்கனவே 2600 மெற்றிக் தொன் கூரைத் தகடுகளை வழங்கியிருந்தது. அதற்கு மேலதிகமாகவே 20,000 மெற்றிக் தொன் கொண்ட நான்கு இலட்சம் சீமெந்து மூடைகளை வழங்க முன் வந்துள்ளது.

மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு அந்தந்த பகுதி யிலுள்ள பிரதேச செயலாளரின் சிபாரி சுகளுக்கு அமைய சீமெந்து மூடைகள் வழங் கப்படும். இந்திய அரசு இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் சமைய லறை பாத்திரங்கள் என இலங்கை நாணயப்படி 610 மில்லியன் ரூபா பெறுமதி யான பொருட்களையும் முன்பே கையளித் திருந்தது.

மீளக் குடியமர்த்தவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை செய்யும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.

யாழ் – பூநகரி படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

poonary.jpgஅரச ஊழியர்கள் பெரும் சிரமமின்றி யாழ் சென்றுவர யாழ்ப்பாணத்துக்கும் பூநகரிக்குமிடையில் படகுச் சேவையொன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தரை மார்க்கமாக பூநகரிக்கு வந்து சேர குறைந்தது இரண்டரை மணி நேரம் செல்கின்றது. இப்பயணத்தில் ஆனையிரவு பரந்தன், ஜயபுரம், ஆகிய இடங்களைத் தாண்டிவரவே இவ்வளவு நேரம் செல்கின்றது.

எனினும் யாழ். பூநகரி படகுச் சேவை மூலம் நேரத்தை மீதப்படுத்த முடிவதோடு வீண் சிரமங்களையும் குறைக்க முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்

ஆசிரியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் மாகாண சபை அதிகாரிகள், போன்றோர் இந்த படகுச் சேவை மூலம் நன்மையடையவுள்ளனர்.

யாழ் மற்றும் பூநகரி மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் படகுகள் இச்சேவையிலீடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது