(சுரேன் சுரேந்திரன் – பிரித்தானிய தமிழர் பேரவையின் முன்னால் தலைவர். தற்போது உலகத் தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய தேசிய நாளிதலான தி கார்டியன் பத்திரிகையில் http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes ஜனவரி 8ல் என்ற தலைப்பில் சுரேன் சுரேந்திரன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)
கடந்த வியாழக்கிழமை ஜ நா இன் நீதிக்கு எதிரான படுகொலைக்கான சிறப்பு வல்லுனர் பிலிப் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பற்ற சுதந்திர போர் குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜனவரி மாதம் 2009 கைதிகளை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்யும் போது எடுத்ததாக வெளியான காணொளி பதிவு உண்மையானது என அறிவித்திருந்தார்.
இந்த அறிக்கையை சிறீலங்கா அரசாங்கம் வழமை போல் உண்மையாது இல்லை என மறுத்துள்ளது. அத்துடன் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பாக நடக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எந்த விசாரணை என்றாலும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மற்றும் முன்னை நாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இரண்டு முக்கிய வேட்பாளர்கள் உட்படுத்தப்பட வேண்டும்.
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டதால் பகல்பொழுது சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை எவரும் இந்த கொலைக்காக தண்டிக்கப்படவில்லை. அத்துடன் இப்படுகொலையில் அரச தரப்பிற்க்கும் பங்குண்டு என சந்தேகிக்க படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று குறிப்பிட்டதுடன் கனடாவின் நசனல் போஸ்ற்க்கு அளித்த பேட்டியில் தான் சிறீலங்கா முற்றிலும் சிங்கள மக்களுக்கு சொந்தமானது ஆனால் அங்கே சிறுபான்மை மக்கள் இருக்கின்றார்கள் நாங்கள் அவர்களை எங்களுடைய மக்களாகவே கருதுகின்றோம். அவர்கள் எங்களுடன் இருக்கலாம் ஆனால் அவர்கள் தேவையில்லாத கோரிக்கைகள் வைக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இக்கருத்து இனவாதத்தை தூண்டுவதாக பொதுவாக கருதப்படுகிறது.
மற்றவர்களுடன் சேர்த்து இவர்கள் இருவருமே 2006ம் ஆண்டு முதல் 2009 மே மாதம் வரை 80 000கும் மேற்பட்ட போரளிகளும் பொதுமக்களும் படுகொலை செய்ய காரணமானவர்கள்.
தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களும், அரச விதிவிலக்கு நடைமுகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் வரிச்சலுகையை நிறுத்த உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நீதிக்கு எதிரான படுகொலைகள் ஆட்கடத்தல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. எட்டு வரையிலான ஊடகவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி பல ஆயுத தாங்கிய ஒட்டுக்குழுக்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னனியில் வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்கு சரிபாதியாக பிரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே தமிழ் மக்களின் வாக்கு பதிவுகளில் தான் வெற்றி தங்கியிருப்பதாக கருதப்படுகின்றது.
எனினும் 7 மாதங்களுக்கு முன்பு ஈடேறிய போரினால் தங்கள் சொந்த உறவுகளையும், நிலங்களையும், வீடு வாசல்களை இழந்த தமிழ் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை. அவர்கள் இராணுவம் மற்றும் ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுக்களின் கண்காணிப்பின் கீழ் பயத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் மனித உரிமை மீறல்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் சூழலில் வாழ்கிறார்கள்.
1977 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு சுதந்திரத்தனி நாட்டிற்கான கோரிக்கையை பெருமளவில் ஆதரித்து வாக்களித்தனர். ஆறாம் திருச்சட்டத்தை நடமுறைபடுத்தியதின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திர சூழலில் கூட பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளார்கள். அடக்கப்பட்ட பேச்சு உரிமையினால் கடும் வெறுப்படைந்த தமிழ் மக்கள் இதன் பின்பு இதுபோல் பல தேர்தல்களை மேற்கொண்டனர்.
இனப்பிரச்சினையின் தீர்வை கருத்தில் கொண்டு சுதந்திரம் கிடைத்து கடந்த 62 ஆண்டு காலமாக தமிழ் தலைவர்கள் நல்லெணத்துடன் சிங்கள தலைவர்களுடன் பல ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளனர். இவ்வரிசையில் இறுதியாக சர்வதேச மட்டத்தில் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் 2002ம் ஆண்டு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம். இவ்வொந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களும் சிங்கள கட்சிகளால் ஒரு பட்சமாக நிராகரிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டவை. தற்போது பொன்சேகா பிரதான தமிழ் கட்சியுடன் ஓர் ”ஒப்பந்தத்தில்” கைச்சாத்திட்டுள்ளார். இவ் ”ஒப்பந்ததில்” வடக்கு கிழக்கை ஒன்றினைப்பதாக கூறியுள்ளார் என்பது உத்தியோக பட்டற்ற செய்தி. முன்னைய ஒப்பந்தமான இந்தோ லங்கா ஒப்பந்தம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் கூட தாமத்திக்காமல் சிங்கள இனவாத்தை தூண்டும் வகையில் தான் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கு கிழக்கு ஒன்றிணைவதை ஒரு போதும் ஏற்க்க மாட்டேன் என அறிக்கை விட்டுள்ளார்.
”சரித்திரம் மீண்டும் திரும்புகிறதா என எண்ணத்தோன்றுகிறது.”
சில குறுகிய கால சலுகைகளுக்காக நல்லெண்ணத்துடன் தமிழ் தலைவர்களால் முன்னைய கால ஒப்பந்தங்கள் போல கைச்சாத்திடப்பட்டதே இவ்வொப்பந்தமும் ஆகும். தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவரின் விடுதலைக்காக போராடிய ஆபிரிக்க தேசிய அமைப்பின் (ANC) தலைவர்கள் சர்வதேச அழுத்தினால் சில குறுகிய கால சலுகைகளுக்காக தங்களுடைய நீண்டகால விடுதலை குறிக்கோள்களை அடைவு வைத்திருந்தார்கள் என்றால் இன்றும் தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர் தங்கள் சொந்த நிலத்தில் இரண்டாம் தர பிரையைகளாக இருந்திருப்பர்.
மேலும் சந்தேகம் எழுகிறது இந்த புதிய ஒப்பந்ததில் சிங்கள இனத்திற்க்காக கையொப்பம் இட்ட சரத் பொன்சேகா தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக கூறி உள்ளார் அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு இவ் ஒப்பந்ததை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும். மேலும் அவருடைய உத்தியோகபூர்வமான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ் ஒப்பந்தத்தில் இருக்கும் பல கருத்துக்களை உள்ளடக்கவில்லை. அது மட்டும் அல்ல சரத் பொன்சேகாவை இத்தேர்தலில் பிரதான இரு சிங்கள கட்சிகள் ஆதரித்தாலும் ஒரு கட்சியே இவ் ஒப்பந்ததில் கைச்சாத்திட்டுள்ளது.
தற்போதைய தமிழ் தலைவர்களை தேசதுரோகிகள் என சரித்திரம் எடைபோடாது என்பதே பலரின் எதிர்பாப்பாகும்.
மக்ஸ் லேர்னர் சொன்னது போல “இரண்டு அரக்கர்களில் குறைவான கொடூரம் கொண்டவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மறக்க கூடாதது அவனும் ஒரு அரக்கன் என்பதை“.