06

06

எஸ்.பி. – உடுநுவர அமைப்பாளர் : கண்டி மாவட்டத்தில் தேர்தலில்.

sb-dissanayake.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவிருந்த எஸ்.பி. திஸாநாயக்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு ஐ.தே. கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.

இவர் உடுநுவர பிரதேசத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும்  எதிர்வரும் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ ல. சு. கட்சி சார்பாக அவர் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது

ரஷ்யாவுக்கு ஜனாதிபதி விஜயம்

mahindaஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இரண்டாவது பதவிக்காலத்துக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி, தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகும்  ஜனாதிபதியின் விஜயத்தின் போது இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன என்று ஜனாதிபதி ராஜபக்ஷவின் நெருங்கிய உதவியாளர் இந்து பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் முதலாவது பதவிக்காலமான 4 வருடங்களில் தனது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக மரபு ரீதியான கொள்கை கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை. 2006 2009 இதற்கிடையிலான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை துரிதப்படுத்துவதற்கு வழிகாட்டுவதாகவே வெளிநாடுகளுடன் ஜனாதிபதி முன்னெடுத்த உறவுகள் அமைந்திருந்தன.

முதலாவது பதவிக்காலத்தில் எஞ்சியிருக்கும் ஒரு வருடமும் மற்றும் இரண்டாவது பதவிக்காலத்துக்கான 6 வருடங்களும் போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிப்பதற்கான முக்கியமான உள் சார் கட்டமைப்புக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வலுப்படுத்துவதில் அவர் கவனஞ் செலுத்துவதாகவே வெளிநாட்டுக்கொள்கை அமைந்திருக்கும் அந்த இலக்கில் முன்னேற்றமடைவதற்காக உதவிக்கரம் நீட்டும் உலகிலுள்ள எந்தவொரு நாட்டையும் அவர் பற்றிக் கொள்ளக் கூடும் என்று அந்த உதவியாளர் கூறியுள்ளார்.

ராஜபக்ஷவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான சில முன்நகர்வுகள் தொடர்பாகப் பொதுவாக மேற்குலகம் குறிப்பாக அமெரிக்காவும் விமர்சனத்தைக் கொண்டிருந்தன. உதாரணமாக அவரின் ஈரான், லிபியா விஜயங்கள் எதிர்ப்புணர்வின் சமிக்ஞையாக உள்வாங்கப்பட்டிருந்தது. ஆயினும் இலங்கையின் தேசிய நலனைக் கொண்ட உறவுகளையே ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னெடுத்ததாக அவரின் அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

ஹக்கீம் தலைமையிலான மு.காவை அரசுடன் இணைப்பதில்லையென ஜனாதிபதி எம்மிடம் உறுதி – ரிஷாத் பதியுதீன்

ரவூப் ஹக்கீம் சார்ந்த முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்ததாக கட்சியின் தலைவரும் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நிப்போன் ஹோட்டலில் நடை பெற்றது. இதன்போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் நிஜாமுதீன், கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஸஹீட் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கணிசமான முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது வாக்குகளை அளித்துள்ளனர். வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காது நிராகரித்துவிட்டதாக ஸ்ரீல.மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்லித் திரிகின்றார். இதன் மூலம் முஸ்லிம்கள் ஜனாதிபதியை வெறுப்படையச் செய்து அவர்களுடைய வாக்கை தாம் பெற்றுக் கொள்ளச் செய்யும் சூழ்ச்சியாகும்.

வடக்கு, கிழக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 56 சதவீதமான வாக்குகளை முஸ்லிம்கள் அளித்துள்ளனர். திகாமடுல்ல மாவட்டத்தில் 58 ஆயிரம் வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 ஆயிரம் வாக்குகள், திருகோணமலை மாவட்டத்தில் 25 ஆயிரம் வாக்குகள், வன்னி மாவட்டத்தில் 15 ஆயிரம் வாக்குகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 500 வாக்குகளை முஸ்லிம்கள் அளித்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் எட்டு வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கப் போகின்றார். அவர் முஸ்லிம் நாடுகளுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றார். பலஸ்தீன மக்களுக்காக குரல்கொடுத்து வருகின்றார்.

இவ்வாறான சிறந்த தலைவருக்கு பின்னால் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தேசியக் கொடி இன்று பறப்பதற்கு அவரே காரணகர்த்தா.

ஸ்ரீல.மு. காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வலையில் முஸ்லிம்களும் தமிழர்களும் இனியும் நம்பிக்கை வைக்காது அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதியின் அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு அனைத்து மக்களும் ஒன்றுதிரள வேண்டும்.

எதிரணியினர் பொய் வதந்திகளைப் பரப்புகின்றனர் – அநுரபிரிய தர்ஷன யாப்பா

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பினால் ஒன்றும் செய்ய முடியா நிலை ஏற்பட்டதனால்,  மக்கள் விடுதலை முன்னணி உட்பட சகல எதிரணிக் கட்சிகளும் தேர்தல் முடிவுகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பொய் வதந்திகளைப் பரப்பிவருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்ää

ஜனாதிபதித் தேர்தல் முறையாகää அமைதியாக நடைபெற்றதாக எதிக்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார். தேர்தல் முடிவுகளில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என தேர்தல் ஆiணாயளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் தேர்தல் சமயத்தில் எதிரணியினர் எமது அரசியல் கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டனர். எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லை. பழிவாங்கும் அரசியல் கொள்கையுடையவராகவே அவர் காணப்பட்டார் என்றும் அமைச்சர் கூறினார்

பிரிட்டனின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்கு

mp_composite.jpgபிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்குபேர் தங்களின் செலவினங்களுக்காக அரசிடமிருந்து பெற்ற தொகையில் தவறு செய்ததாக கூறப்பட்டு, இதற்காக அவர்கள்மீது குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தங்களின் செலவினங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதாக வெளியான செய்திகளை தொடர்ந்து பிரிட்டிஷ் பொதுமக்கள் மத்தியில் இவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவுக்கு கோபம் உருவானது.

இது தொடர்பில் ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், பிரதான எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் அரசு தரப்பு வழக்குகளுக்கான இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.  ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற நடைமுறைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்க முடியாது என்கிற நாடாளுமன்ற உரிமைகள் தொடர்பான விதியின் கீழ் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை இருந்துவரும் பாதுகாப்பு நடைமுறையும், இந்த நான்குபேர் மீதான வழக்குகளின் போது நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
BBC