21

21

தேசியப் பட்டியலில் விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna.jpgதேசிய நல்லிணக்க, ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும்கட்சி சார்பில் கணேசமூர்த்தி, குணம் (களுதாவளை) , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமன், ரமேஷ் ஆகியோர் தமிழர்கள் தரப்பில் போட்டியிட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம்கள் சார்பில் ஆளும் தரப்பில் அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா ஆகியோர் போட்டியிடவுள்ளதாகவும், இன்னுமொரு தமிழ் வேட்பாளன் பெயர் இன்று சிபார்சு செய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

தேர்தலின் பின் அனைத்து கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை – இந்துவுக்கு ஜனாதிபதி பேட்டி

he_the_president.jpgஇனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பொதுத்தேர்தலின் பின்னர் சகல கட்சிகளு க்கும் அழைப்பு விடுக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘இந்து’ பத்திரிகைக்கு விசேட பேட்டியொன்றை வழங்கிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் சகல கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துப் பேச்சு நடத்துவேன். தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கு கொள்வார்கள். தமிழ், முஸ்லிம் தலைவர்களை அழைத்துப் பேசுவதற்கு கூடுமானவரை முயற்சி செய்திருக்கிறேன். பிரபாகரன் இருக்கும் வரை அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களில் ஆர்வம் காட்டவில்லை.

இப்போது காலம் கனிந்திருக்கிறது. நான் ஜனாதிபதி என்ற வகையில் அவ ர்கள் என்னோடு பேசவேண்டும். என்னோடு அவர்களுக்கு பேச முடியாது விட்டால், புதிய தலைவர்களுடன் நான் பேசுவேன்.

13 வது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அது ஏற்கனவே அமுல்படுத்தப்பட் டுள்ளது. இதன்படி பொலிஸ் அதிகாரங்களைத் தவிர அனைத்தும் அமுலிலுள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன். இப்போது நிவாரணக் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் பேரே இருக்கின்றனரென்றார்.

ஐ.தே.க – ஜே.வி.பி மோதல்

ஐ.தே.கவுக்கும், ஜே.வி.பிக்கும் இடை யிலான கருத்து முரண்பாடுகள் உக்கிர மடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இரு சாராரும் இப்போது நேரடி மோத லில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தால் ஜே.வி.பிக்குத் தேசியப் பட்டியலில் மூன்று இடங்களை ஒதுக்கித்தர முடியும் என ஐ.தே.க தெரிவித்துள்ளதால் அந் தக் கட்சி மீது ஜே.வி.பி. கொதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“பொதுத் தேர்தலில் யானைச்சின்னத் திலேயே ஐ.தே.க போட்டியிடும். ஜே.வி.பி. விரும்பினால் யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடலாம். இல்லையேல் எமக்கு ஆதரவளித்தால் அவர்களுக்கு தேசிய ப்பட்டியலில் மூன்று ஆசனங்களை வழங்க முடியுமென்று ஐ.தே.க.வின் காலி மாவ ட்ட அமைப்பாளர் வஜிர அபேவர்தன கூறி யிருக்கின்றார். இதனையடுத்து ஜே.வி.பி. அதன் அனைத்துக் கூட்டங்களிலும் ஐ.தே.க.வை கடுமையாகச் சாடி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

“வேறு கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்ற த்துக்குச் செல்லும் அவசியம் கிடையாது. ஒவ்வொரு கட்சியினதும் தேசிய பட்டியலில் செல்ல வேண்டிய தேவையும் எமக்கு இல்லை” என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பகிரங்கமாகவே ஐ.தே.க.வை விமர்சித்து வருகிறார்.