நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அபிவிருத்தியாகட்டும், யுத்தமாகட்டும் நாம் போதிய நிதியைக் கையில் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை. உள்ளதை வைத்தே தொடங்கினோம். மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தை 500 மில்லியன் ரூபாவை வைத்தே ஆரம்பித்தோம். எனினும் இதுவரை 6000 மில்லியன் ரூபா நிதியைச் செலவு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி நேற்று அங்கு விஜயம் செய்ததுடன் மொரகஹகந்த பாலம் உட்பட பல மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதற்கான விசேட நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, எஸ். எம். சந்திரசேன, ரோஹண திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
1990ம் ஆண்டிலிருந்து நீர்ப்பாசனத் துறைக்கென முன்னிருந்த அரசு உரிய திட்டங்களை மேற்கொள்ள வில்லை. அதனால் விவசாயிகள் நம்பிக்கையிழந்து அத்துறையைவிட்டு விலகிச் சென்ற யுகமே தொடர்ந்தது. எம்மால் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க நேர்ந்தது. ‘உம ஓய’ திட்டம் இருபது வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டியது. அதேபோன்று மகா வலித் திட்டம் கூட டட்லி சேன நாயக்கவின் காலத்தில் அவர் ஆரம் பித்தது என்பதை மறக்கக்கூடாது.
500 மில்லியன் ரூபாவை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கி ஆரம் பித்த மொரகஹகந்த திட்டம் தற் போது 6000 கோடி ரூபா செலவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய நிதியில் தேசிய வரு மானத்தைக் கொண்டே நாம் இதன் முதற்கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்துள்ளோம்.
இன்று புதிதாக ஆரம்பித்து வைக் கப்பட்ட மொரகஹகந்த பாலம் 308 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை எமது நாட்டு பொறியியலாளர்களே நிர்மாணித்துள்ளனர். இந்த கங்கையிலிருந்து 726 மில்லியன் லீற்றர் தண்ணீர் தினமும் கட லில் சேர்வதை நாம் தடுத்துள்ளோம். பராக்கிரமபாகு மன்னனின் கூற்றுப்படி ஒரு துளி நீரையும் கடலில் சேர நாம் இடமளிக்கக் கூடாது.
இத்திட்டத்திற்கான பாதைகளை நிர்மாணிக்கும் போது இயற்கை வனாந்தரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்தியிருக்கின்றேன்.
நாம் யுத்தத்தையும் அபிவிருத்தியையும் சம காலத்தில் முன்னெடுத்தோம். நாடு எங்கிலும் அபிவிருத்தி, துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் என தொடர்கிறது.
பல வருடங்களாக அடிக்கல் மட்டுமே மீதமாகவுள்ள அபிவிரு த்தித் திட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம். நாம் அடிக்கல் அல்ல அபிவிருத்தியையே ஆரம்பிக்கி றோம். அரசாங்கத்துக்கு நல்லாட்சி சம்பந்தமான பயிற்சிகளை வழங்கு வதற்காக 69 மில்லியனை அரச சார்பற்ற நிறுவனத்துக்கு மாதாந்தம் வழங்கிய அரசாங்கத்தைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். இந்த நிதியில் வீதிகளை, பாலங்களை நிர்மாணித்திருக்க முடியும்.
நாடு, நாட்டு மக்கள் எனப் பார்த்தே அனைத்தையும் நாம் மேற் கொள்கிறோம். எதிர்வரும் தேர்தலின் பின்னர் அதிவேக அபிவிருத்திப் பணிகள் தொடரும். தற்போது யுத்தம் இல்லை நாம் எவ்வித தடை யுமின்றி வேகமாக அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.
அதேபோன்று சட்டத்தை நடை முறைப்படுத்தும் போது தராதரம், வகுப்பு வாதம் என பார்க்காது ஜனநாய கத்தைப் பாதுகாக்கும் முடிவுகளையே மேற்கொள்வோம். மக்கள் எம் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.