May

May

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் – விழிப்பாக இருக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள்

rain.jpgவெள்ளத் தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் தம்மை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக உணவு மற்றும் நீர் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெள்ளம் வடிந்து வரும் பிரதேசங்களில் டெங்கு மற்றும் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதால் மக்கள் கொதித்தாறிய நீரையே பருக வேண்டும் என்று சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவர்தன தெரிவித்தார்.

அதேவேளை, சுற்றாடலில் நீர் தேங்கி நிற்கும் பொருட்களைத் துப்புரவு செய்து சூழலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதன் மூலம் நோய்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் அவர் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கொதித்து ஆறிய நீர், நன்கு சமைத்த உணவுகளையே உபயோகிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்க ப்பட்ட மாணவர்களுக்குப் பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கூடாக கல்வியமை ச்சிலிருந்து தமக்கான பாட நூல்கள் மற்றும் சீருடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தேசிய பாடசாலை அதிபர்கள் நேரடியாக கல்வியமைச்சுடன் தொடர்பு கொண்டு பாடப் புத்தகங்களையும் சீருடைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

வெள்ள நிவாரணப் பணிகளில் 2000 இராணுவ வீரர்கள் – 8000 உணவுப் பொதிகள் நேற்று பங்கீடு

fo.jpgவெள்ளத் தினால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் பகுதிகளில் இராணுவத்தினர் அயராது நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பு, களுத்துறை, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவ ட்டங்களில் சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை வழங்கி வருகின்றனர். கட்டுநாயக்க பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இராணுவத்தினர் நேற்று எண்ணாயிரம் சமைத்த உணவுப் பொதிகளை பகிர்ந்தளித்த தாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

வெள்ளத்தில் மிதந்து வரும் கட்டைகள், மரங்கள் மரக் கிளைகள் மற்றும் ஏனைய குப்பைக் கூளங் களை அகற்றும் பணியில் கடற் படையினரும் இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

மூடிய அறைக்குள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அமர்வுகளை மூடிய அறைக்குள்ளேயே நடத்தவுள்ளது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த வாரம் அமைக்கப்பட்ட முன்னாள் சட்ட மா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான இந்த நல்லிணக்க ஆணைக்குழுவானது அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், ஆயுதப்படை அதிகாரிகள் என அதிகளவு எண்ணிக்கையானவர்களை நேர்காணவுள்ள நிலையில், அந்த அமர்வுகளைப் பார்வையிட,பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமர்வுகளுக்கான ஏற்பாடுகள் இல்லை. “மூடிய அறைக்குள்ளேயே சகல பதிவுகளையும் நாம் மேற்கொள்வோம்”  என்று சி.ஆர்.டி.சில்வா தெரிவித்திருக்கிறார்.

2002 பெப்ரவரி 21 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தோல்வியடைந்ததற்கான காரணங்கள் மற்றும் மேயில் போர் முடிவு வரையிலான நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர்களை கேட்டுள்ளõர்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளுமாறு பணிக்கிறேன். பகிரங்கமாக நடத்தப்படமாட்டாது என்ற தீர்மானத்தை நீங்கள் மேற்கொள்ளக்கூடும் என்று இந்த அறிவித்தல் மூலம் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கூறியுள்ளார்.

தனது அறிவித்தல் மூலம் அமர்வுகளின் தன்மையை ஆணைக்குழு தீர்மானித்துக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாகத் தென்படுகிறது.இதேவேளை, ஆணைக்குழுவானது எவரிடம் நேர்காணலை மேற்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சி.ஆர்.டி.சில்வா பலர்

ஆணைக்குழு முன் ஆஜராக ஆர்வம் கொண்டிருப்பார்கள்” என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். “ஜனாதிபதியின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களுடன் தொடர்புபட்டவர்கள் குறித்து மட்டுமே நாம் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் 2002 பெப்ரவரி 22 இல் நிரந்தர யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. விசாரணைக்குக் கடந்த 7 ஆண்டுகள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது ஏன் என்று கேட்கப்பட்டபோது, “இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட விடயம். என்னால் பதில் கூற முடியாது” என்று சி.ஆர்.டி.சில்வா கூறியுள்ளார்.

இந்த வருடம் நவம்பர் 15 இற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கையாள்வது குறித்து அரசுக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச மட்டத்திலான அழுத்தங்களையடுத்தா இந்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று சி.ஆர்.டி.சில்வாவிடம் கேட்கப்பட்டபோது, “ஆணைக்குழுவானது இவையாவற்றையும் உள்ளடக்க வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இறக்குவானையில் கைக்குண்டுத் தாக்குதல்; பத்துப் பேர் காயம்

hand-bomb.jpgஇறக்கு வானை டெல்வீன் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் காமயடைந்த 10 பேர் இறக்குவானை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்களை இறக்குவானை பொலிஸார் தேடி வலை விரித்துள்ளனர். கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற லயன் அறைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

தனிப்பட்ட குரோதம் காரணமாக ஒருவரை சந்தேக நபர்கள் தாக்கிய போது அவ்விடத்துக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் விரைந்த போதே அக்கும்பல் கைக்குண்டை வீசியுள்ளது. எட்டு ஆண்களும் 2 பெண்களும் காயமடைந்துள்ளார்கள்.

கம்பஹாவுக்கு வவுனியாவிலிருந்து நிவாரணப் பொருட்கள்

கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட் டத்திற்கென வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் இரண்டு லொறிகளில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் வெள்ள நிலைமையை கேற்வியுற்றதும் வவுனியா மாவட்டத்திலிருந்தே முதன் முதலாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவுப் பிரதேசத்திலேயே அதிகளவு மிதிவெடிகள் புலிகளால் புதைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது!

தற்போது மீளக்குடியமர்த்தப் படுவதற்காக எஞ்சியுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகள் தம்மிடமிருந்த அனைத்து மிதி வெடிகளையும் இப்பகுதியிலேயெ புதைத்துள்ளனர் எனவும். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தள்ளார். இதன் காரணமாகவே மக்களை அப்பகுதிகளில் மீள் குடியமர்த்துவது தாமதமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு 1200 இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும்,  முழுமையாக மதிவெடிகள் அகற்றப்படாமல் மக்கள் அங்கு மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் ஊடகவியலார்கள் எவருக்கும் அப்பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்தள்ள அவர்,  நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை ஊடகவியலாளர்கள் சென்று பார்வையிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முகாம்களிலுள்ள மக்களை பார்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுப்பு! : விஸ்வா

Wanni_IDP_Campவவனியா ‘மெனிக் பாம்’ முகாமிலிருக்கும் மக்களை பார்வையிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றுக் காலை (22-05-2010) கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அதன் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செட்டிக்குளம் ‘மெனிக்  பாம்’ முகாமிற்குச் சென்ற போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும், சுமார் ஒரு மணி நேரம் முகாம் நுழைவாயிலில் காத்திருந்து விட்டு திரும்பிச்செல்ல நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகதிகளுக்குச் சென்று அம்மக்களுடன் நேரடியாக உரையாடி பிரச்சினைகளை  அவதானித்தும் வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று வவுனியாவில்  இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களிலுள்ள மக்களைப் பார்வையிட அங்கு சென்றனர். ஆனால், முகாமின் உள்ளே செல்ல பாதுகாப்புத்தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டது.

தாங்கள் கொழும்பிலிருந்த புறப்படுவதற்கு முன்பாகவே வவுனியா முகாம்களைப் பார்வையிடுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதுடன், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன் தாங்கள் அங்கு செல்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என லலித் வீரதுங்க தங்களிடம் வாய்மொழியாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.  வவுனியா முகாமிலுள்ள அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதி மறுத்தயடுத்து சம்பந்தர் உடனே ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபொது, அரை மணிநேரத்தில் தாம் பதிலளிப்பதாகக் கூறினார். அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவருடன் தொடர்பு கொண்ட போது, தொலை பேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை லலித் வீரதுங்க தவிர்த்ததாகவும் கூட்டமைப்பினர் தெரித்துள்ளனர்.

இதே வேளை, இது குறித்து ஊடகத்துறை அமைச்சர் கருத்தத் தெரிவிக்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்புரி முகாம்களுக்குச் செல்லும் போது முன்னனுமதி பெற வேண்டும் எனவும், ஆனால், கூட்டமைப்பினர் அவ்வாறு எதனையும் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். முகாமிற்குள் செல்வது குறித்து ஏற்கனவே ஒரு நடைமுறை உள்ளது. பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவித்து அது தொடர்பான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மேயரும் அவரது செயலரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.!

Jaffna_Mayor_Yogeswari_Patkunamநீதி மன்றத்தை அவமதித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக நேற்று (May 21 2010) விசாரணைகளுக் குட்படுத்தப்பட்ட யாழ். மேயர் திருமதி ப. யோகேஸ்வரி மற்றும் அவரது செயலாளர் திரு கு.பற்கணராசா இருவரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவர் மீதான வழக்குகள் தனித்தனியே யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நீதவானின் சமாதான அறையில் மேயருக்கெதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.

மேயரின் செயலாளர் மீதான வழக்கு திறந்த நீதி மன்றத்தில் நடைபெற்றது.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக வழக்கைத் தொடர்ந்து நடத்தி குற்றவாளியாகக் காணப்பட்டால் 7 வருடங்களுக்கு சிவில் உரிமையை இழக்க  வேண்டி வரும் என தெரிவித்த நீதவான்  மன்னிப்புக் கேட்டு வழக்கிலிருந்து விடுபடப்போகிறிர்களா அல்லது வழக்கினைத் தொடர்ந்து நடத்தப் போகிறீர்களா என கேட்ட போது வழக்கிலிருந்து விடுபடவிரும்பவதாகத்  தெரிவித்த மேயர் நீதிமன்றத்திடம் பகிரங்க மன்னிப்பைக் கோரினார். இதனையடுத்து அவரை வழக்கிலிருந்து விடுவிடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேயருக்குத் தெரிவித்த அதே கருத்தை மேயரின் செயலாளருக்கும் நீதவான் தெரிவித்தார். அவரும் மன்னிப்புக் கோரியதன் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு வழக்கிலிருந்து அவரும்  விடுவிக்கப்படுவதாக நிதவான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து கண்காணிப்புப் பணிகளில் அதிகளவு பொலிஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து கண்காணிப்பு நடைமுறைகள் தற்போது கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன. வழமையை விடவும் அதிகளவிலான பொலிஸார் கடமையிலீபடுத்தப்பட்டு.  யாழ்.நகரின் வீதிகள் அனைத்திலும் வீதி ஒழுங்கு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் ஆவணங்கள் பரிசோனைக்குட்படுத்தப்படுவதோடு, போக்குவரத்து வீதி ஒழுங்ககளைக் கவனத்தில் கொள்ளாத சாரதிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தலைக் கவசத்திற்குள் கைத்தொலைபேசியை செருகிய படி உரையாடிக்கொண்டு செல்வது யாழ்ப்பாணத்தில் வழக்கமாகவுள்ளது. தற்பொது அவ்வாறு செல்பவர்களுக்கு தண்டம் அறிவிடப்படும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடத்தல் சம்பவங்களையடுத்து வான் முதலான வாகனங்களும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கது.

கனடா: தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

Viyoogamமே 18 2009ல் முடிவுக்கு வந்த வன்னி யுத்தம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி யுத்ததத்தில் நிகழ்ந்த மிக மோசமான மனித அவலமும் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட இலங்கை அரசு தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாரில்லாததுமான அரசியல் சூழல் இலங்கை அரசுக்கு எதிரான தொர்ச்சியான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இதன் எதிரொலியாக நீண்ட அரசியல் பின்னணியை உடையவர்களின் கூட்டு முயற்சியாக மே 18 இயக்கம் கடந்த ஆண்டு உருவானது தெரிந்ததே.

மே 22ல் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தினை நினைவுகொள்ளும் நிகழ்வு ஒன்றை மே 18 இயக்கம் கனடாவில் ஏற்பாடு செய்துள்ளது. ‘தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள் மதிப்பீடும் கலந்தரையாடலும்’ என்ற தலைப்பில் இந்நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘நடந்து முடிந்த இனப்படுகொலைகளில் இருந்து மீள் எழுச்சி கொள்ளும் நாளாக மே 18யை நினைவுகூருவோம்’ என மே 18 இயக்கம் தனது அழைப்பிதழில் கேட்டுக் கொண்டு உள்ளது. ( மேலதிக தகவல்களுக்கு: May18_Movement_Discussion )

மே 18 இயக்கம் தனது அரசியல் கொள்கை இதழாக வியூகம் சஞ்சிகையை வெளியிட்டு வருவதும் அதன் வெளியீட்டு நிகழ்வு கனடா லண்டன் பாரிஸ் ஆகிய நகரங்களில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்