August

August

அகதி முகாம்களிலுள்ள மக்களுக்கு வெப்ப நோய்கள் பரவுகின்றன.

IDP_Campஅகதி முகாம்களிலுள்ள மக்கள் தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு ஆளாகி வருகின்றனர். வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் வவனியா, யாழ்;ப்பணம் அகிய பகுதிகளிலுள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தோல்நோய், அம்மைநோய், கண்நோய் முதலான நோய்த் தாக்கங்களுக்குள்ளாகியுள்ளனர்.

IDP_Campயாழ்.குடாநாட்டில் இராமாவில், மணற்காடு ஆகிய முகாம்களிலுள்ள வடமராட்சிக் கிழக்குப்பகதிகளைச் சேர்ந்த மக்களும் இந்நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

”வெற்றி எவ்.எம் வானொலி நிலையம் மீதான தாக்குதலில் அரசாங்கத்திற்கோ அதன் ஆதரவாளர்களுக்கோ தொடர்பில்லை” அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

rambukella.jpgவெற்றி எவ்.எம் வானொலி நிலையத்தின் மிதான தாக்குதலுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் கெஹலியரம்புக்வெல தெரவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆதரவு குழுவொன்றே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வர்த்தகப் போட்டிகள் காரணமாக எவரும் இதனைச் செய்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். வெற்றி எவ்.எம், சியத எவ்.எம் ஆகிய வானொலிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுபவை அதனால் அரசாங்கமோ அதன் ஆதரவாளர்களோ இத்தாக்குதலை மேற்கொள்வில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்ட பிரபா கணேசன், திகாம்பரம் ஆகியோர் ஆளும் கட்சியில் இணைந்தனர்!!!

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மனோ கணேசனின் சகோதரருமான பிரபா கணேசன் மற்றும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் ஆகியோர் August 04 2010 ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். இன்று காலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதுடன், August 04 2010  நாடாளுமன்றத்தில் அரசாங்க வரிசையிலும் அமர்ந்து கொண்டனர்.

பிரபா கணேசன் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார் என்ற செய்தியை முதலில் ஜனநாயக மக்கள் முன்னணி மறுத்த போதும், தற்போது இந்தியா சென்றிருக்கும் மனோ கணேசன் பிரபா கணேசனை கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் செயலாளர் ந.குமரகுருபரனுக்கு இது குறித்து தாம் அறிவித்துள்ளதாகவும், தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபா கணேசன் தமது முதுகில் குத்திவிட்டதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கியதேசிய கட்சியோடு இணைந்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் மாநாடு யாழ்ப்பாணத்தில்.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் மாநாடு ஒன்று நாளை மறுதினம் சனிக்கிழமை (August 07 2010) நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த தொழில் வாயப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தினிது சமன் ஹென்னாயக்க யாழ்.மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2005ம் ஆண்டு மகிந்த சிந்தனையின் ‘தருண அருண’ என்ற திட்டத்தின் அடிப்படையில் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு Nவைலைவாயப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்தும் எதுவும் நடைபெறவில்லை என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்யுள்ளார்.

மகாசபை செயலாளர் பதிவிகளுக்கு பட்டதாரிகள் 14 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்கவதாகவும், ஆயுர்வேத மருத்துவர்கள் 900 பேருக்கும், அழகியல் பாடத்திற்கான ஆசிரியர் நியமனம் மூவாயிரத்து 174 பேருக்கும் இவ்வருட வரவு செலவு திட்டத்தின் கீழ் நியமனங்கள் வழங்குவதாகவும் கூறப்பட்ட போதும், இது வரை இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே நாட்டிலுள்ள பட்டதாரிகள் அனைவரும் இணைந்து அரசாங்கத்திற்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், அதற்காகவே யாழ்ப்பாணத்தில் இம்மாநாட்டை நடத்துவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

மத்திய கிழக்கு செல்லும் இலங்கையர் நலனில் கூடுதல் கவனம் – அமைச்சர் ஜீ.எல்

parliament.jpgமத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில்வாய்ப்புக்காக செல்லும் இலங்கையரின் பாதுகாப்பு, தொழில் உரிமையைப் பலப்படுத்தும் வகையில் காத்திரமான திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்காவின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், தொழில் வாய்ப்புக்காகச் செல்வோரின் நலன் கருதி முத்தரப்பு உடன்படிக்கை யொன்றை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் ஜே. வி. பி. எம்.பி. அனுர குமார திசாநாயக்க விசேட கவனயீர்ப்புப் பிரேரணையொன்றைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அவர் தமது பிரேரணையில், சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்களாகச் சென்ற 41 பேர் அநாதரவான நிலையில் தொழிலின்றி, சம்பளமின்றி, மருத்துவ சிகிச்சைகளின்றி விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என வினவினார்.

இதற்குப் பதிலளித்த வெளிநாட்டமைச்சர் ஜீ. எல். பீரிஸ்; மேற்படி 41 இலங்கையரும் நிறுவனமொன்றின் விடுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. இதற்கிணங்க அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 680 ரியால் சம்பளப் பணமாக வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆறு பேர் சுகவீனமுற்று சிகிச்சை பெற்று வருவதுடன் முதலில் ஒருவரை இலங்கைக்கு அழைத்து வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஏனைய ஐவரையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுக்கு மீளதொழில்களைப் பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்துடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் பொறுப்பேற்கப்பட்டு பணியக உயரதிகாரியொருவர் முன்னிலையில் நிபந்தனைகளுடனான உடன்படிக்கையொன் றில் கைச்சாத்திட வேண்டும். இவர்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்கான முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிரதேச மட்டத்தில் பயிற்சிகள் வழங்கப் படவுள்ளன. அத்துடன் அவர்களுக்குக் காப்புறுதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தொழிலுக்காகச் சென்றுள்ள இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் கட்டார், பஹ்ரேன், லிபியா போன்ற நாடுகளுடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் மேற்படி 41 பேர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தளையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை

ctb-bus.jpgஇ.போ.ச.  பஸ் வண்டிகளுக்கு தேவையான டயர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்று விரைவில் மாத்தளை களுதாவளை யில் அமைக்கப்படும் என்று பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோகண திஸாநாயக்கா தெரிவித்தார்.

இத்தொழிற்சாலை மூலம் மாதத் திற்கு 700 டயர்களை உற்பத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிரு ப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப் பிட்டார்.

3 ஆவது ரெஸ்ட் போட்டி – இலங்கை 425 ஓட்டங்கள்

samaraweera.jpgஇலங்கை இந்திய அணிகளுக்கிடையேயான 3 ஆவது ரெஸ்ட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணியினர் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 425 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் டி.எம்.டில்ஷான் 48 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரன்னவுட் முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது, சங்கக்கார 75 ஓட்டங்களையும் ஜயவர்தன 56 ஓட்டங்களையும் சமரவீர ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டனில் கடத்தப்பட்ட மாணவிகள் கம்பளையில் காயங்களுடன் கண்டுபிடிப்பு கடத்தல் பின்னணியில் வயோதிபப் பெண்

ஹட்டன் ரியல்தோட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் நின்றிருந்த போது கடத்தப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க இரண்டு மாணவிகளும் கம்பளை சிங்காவத்த பகுதியில் சிறுசிறு காயங்களுடன் விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 7.00 மணியளவில் ஹட்டன் ரியல் தோட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் மாணவிகள் இருவரும் பாடசாலை செல்வதற்காக காத்து நின்றனர்.

பஸ் தரிப்பு நிலையத்தில் நின்ற வயோதிப மாது ஒருவர் மயங்கி விழுவது போன்ற பாசாங்கு காட்டியுள்ளார்.இதனை உண்மையென நம்பிய இரு மாணவிகளும் அந்த பெண்ணை தாங்கிப் பிடித்தவுடன் வானில் வந்த சிலர் அந்தப் பெண்ணுடன் சேர்த்து இரண்டு மாணவிகளையும் கடத்திச் சென்றுள்ளனர்.

வானில் ஏற்றிய சில நிமிடங்களிலேயே மாணவிகள் மயக்க முற்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி தமக்கு தெரியாது எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். கம்பளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு மாணவிகளுள் ஒருவரின் தந்தை பொலிஸ் அதிகாரி என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

sunnagam.jpgயாழ்.  மாவட்டத்திலுள்ள சுன்னாகம் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுன்னாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கார்த்தீபனின் நேரடி மேற்பார்வையில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொலிஸார் இந்நடவடிக்கைகளுக்கு பேராதரவு வழங்கினர். பொதுமக்கள், பொலிஸார், மாணவர்கள், அரச ஊழியர்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் இந்நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

வட அமெரிக்காவுக்கு அகதிகள் கப்பல்அகதிகள்

200 பேருடன் கனடா நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்று எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த எம்.வீ.சன்.சீ என்கிற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் வட அமெரிக்காவையே சென்றடைய உள்ளது என்று அமெரிக்காவின் அரச உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி ஒன்று கசிந்துள்ளது.