தென் மேற்கு பருவ காலநிலை தீவிர மடைந்திருப்பதால் நாட்டின் பல பகுதி களிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதென காலநிலை அவதான நிலையம் நேற்று அறிவித்தது. சில இடங்களில் இன்று 100 மி.மீற்றருக்கும் கூடுதலான மழை பெய்யுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக் கப்பட்டது.
வடக்கு, கிழக்கு மேற்கு, சப்ர கமுவ, மத்திய மாகாணங்களில் பரவலான மழை பெய்யும். யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, காலி, மாத்தறை மாவட்டங்களில் நேற்று பரவலான மழை பெய்துள்ளதாகக் கூறப்பட்டது. இதேநேரம், நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் மழை பெய்யும்.
மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்குமென காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 90.6 மி.மீ மழை பெய்துள்ளது.
மலையகத்தில் நீரேந்து பகுதிகளிலும் கூடுதலான மழை பெய்துள்ளது. இதன்படி, லக்ஷபானவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக 141.8 மி.மீ மழை பெய்துள்ளது. நோட்டன் பிறிட்ஜில் 138 மி.மீ மழையும் கென்யனில் 112 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதற்கிடையில் இரத்தினபுரி மாவட்டத்தில் 139.9 மி.மீ மழை கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.