30
30
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தங்களின் முதற்கட்ட திருத்த யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அடுத்தமாம் 7ம் திகதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தங்களின் முதற்கட்ட திருத்த யோசனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பிரதமர் கிலாணி இருவரும் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அந்நாட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. லோர்ட்ஸ் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மஜீத் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் இதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.
பிரதமர் கிலாணி கூறுகையில் பாகிஸ்தான் வீரர்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர். இதுதொடர்பாக விசாரனை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு உத்தரவூ இடப்பட்டுள்ளது. வீரர்கள் மீதான புகாரில் உண்மையாகும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் விரைவில் நிறுவவுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார். இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; அடுத்த ஆண்டு முதல் ஆங்கில மொழியை ஒரு போதனா மொழியாகப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்துவதுடன் இதற்கிணங்க எமது விரிவுரையாளர்களை இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் பல்கலைக்கழகத்தின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களில் நிலவும் விரிவுரையாளர் வெற்றிடங்கள், கட்டிட நெரிசல்கள், உடற்பயிற்சிப் பீடத்தின் குறைபாடுகள் சம்பந்தமாக அமைச்சருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இதனைச் செவிமடுத்த அமைச்சர்; இக்குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு கட்டிடங்களைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை; போதனாசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்ட அமைச்சர், இதன் மூலம் அவர்களின் திறமைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். பல்கலைக்கழக பீடங்களின் பிரிவுகளை ஒரே இடத்தில் நிர்மாணிக்காது காணி வசதிகளைக் கொண்ட பகுதிகளில் அவற்றை பரவலாக அமைக்க முடியுமெனவும் இதற்கென பெறப்படும் அரச காணிகளில் மாணவர்களுக்கான விடுதிகளையும் அமைக்க முடியுமெனவும் பல்கலைக்கழக மகளிர் அபிவிருத்தி நிதியப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் இதன்போது அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.
மதுபோதையில் இளவயதுத் தாயொருவரை பாலியல் பலாத்காரம் புரிய முற்பட்டவரது பிறப்புறுப்பை பிளேட் ஒன்றினால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவமொன்று அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லலித் புஷ்பகுமார ராஜமந்திரி தெரிவித்தார்.
இருபத்து நான்கு வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இந்தப்பெண் தனியாக வீட்டில் இருந்த வேளையிலேயே மதுபோதையில் சென்றவர் இவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டுள்ளார்.
தனது நகங்களை பிளேட் ஒன்றினால் வெட்டிக்கொண்டிருந்த போதே மதுபோதையில் வந்தவர் அவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டுள்ளார். பல தடவைகள் தன்னை விட்டுவிடுமாறு கேட்டும் அதனைப் பொருட்படுத்தாது அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டதால் அவரிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கையிலிருந்த பிளேட்டினால் பலாத்காரம் செய்ய முற்பட்டவரது பிறப்புறுப்பை வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
இரத்தம் பீறிட்டு ஓட அலறல் சத்தத்துடன் நிலத்தில் வீழ்ந்தவர் பற்றி உடன் அரலகங்வில பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவரைக் கைது செய்து சிகிச்சைக்காக அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
பரந்தன் உமையாள் புரத்திலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து பெருந்தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பிராதேசம் மீள்குடியேற்ற கிராமமாகும். அங்கிருக்கும் வைரவர் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்த பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்தே சனிக் கிழமை மாலை இவை மீட்கப்பட்டுள்ளன. கிணறு நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.