அறிமுகம்:
திட்டத்தின் பெயர்: நமக்காக நாம் திட்டம்.
திட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைப்புகள்: அகம், லிற்றில் எய்ட்
நிதி வழங்கும் நிறுவனகள்: லண்டன் கற்பக விநாயகர் ஆலயம், அகிலன் பவுண்டேசன்,
பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு
இலக்குக் குழு:
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூதூர் கிழக்குப் பிரதேசத்திலுள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த
• யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்
• உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள்
• இடம் பெயர்ந்து மீழக் குடியேறியவர்கள்.
• உள்ளூர் CBOக்கள்
திட்டக் களம்:
பொருளாதார அபிவிருத்தி மையம், பாட்டாளிபுரம், மூதூர், திருக்கோணமலை, இலங்கை.
திட்டப் பிரதேச கிராம மக்கள் பின்னனி:
இப்பிரதேசமானது திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முற்று முழுதான தமிழ் மக்கள் வாழும் கிராமங்களாகும். கடந்த 2006ம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இப்பிரதேசம் LTTE இனரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசமாகும்.
இப்பிரதேசமானது அனேகமாக LTTE இனரின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால் அரச வளங்கள் முற்று முழுதாக கிடைக்கப் பெறாத நிலையிலும், கடந்த கால யுத்த அனர்த்தமும் கூடுதலாக இம்மக்களின் குறிப்பாக பொருளாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கியமான துறைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
இக்கால கட்டத்தில் எமது நிறுவனமானது தனது தூர நோக்கிற்கு அமைவாக வறுமையிலும் வறுமையான மக்களை இனம் கண்டு அவர்களுக்கான நிவாரண மற்றும் அவர்கள் சுயமாக தங்கி வாழ்தல் நிலையிலிருந்து விடுபட வைத்து சுயமாக வாழக் கூடியவர்களாக்குவதற்கான செயற்பாடுகளை 1997 ஆம் ஆண்டில் மேற்கொள்ள எண்ணியது.
அந்த வகையில் 1997ம் ஆண்டு நாம் பணிகளை மேற்கொள்ளுகின்ற கால கட்டத்தில் குறிப்பாக மூதூர் கிழக்குப் பிரதேச கிராமங்களை சேர்ந்த சுமார் 15000 மேற்பட்ட மக்கள் தங்களது பெரும்பாலான தேவைகளை முஸ்லிம் மக்கள் செறிந்து வாழுகின்ற சுமார் 6 km தொடக்கம் 18 km தூரம் கொண்ட மூதூர் மற்றும் தோப்பூர் போன்ற நகரங்களுக்குச் சென்றே நிறைவேற்றிக் கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அந்த வகையில் இம்மக்களின் நாளாந்த செயற்பாடுகளை அவதானிக்கையில் அரச போக்குவரத்து வசதிகள் கிடைக்கப் பெறாத இம்மக்கள் கால் நடையாகவும், சிலர் துவிச்சக்கர வண்டி மூலமாகவும் சென்று வருவதனால் நேரம் வீண் விரையம் ஆகுதல், தொழில் வாய்ப்புக்களை மேற்கொள்வதற்கான முதலீடு இல்லாத காரணத்தினால் நகரங்களிலுள்ள முதலாளிகளிடம் அதிக வட்டியுடனான கடன் அடிப்படையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ளல், தொழில் அறவீடுகள் ஏற்படும் போது ஏலவே கடன் பெற்ற முதலாளிகள் குறைந்த விலைகளில் விளை பொருட்களை பெற்றுக் கொள்ளல், இதனால் உரிய மக்கள் தொழில் இலாபங்கள் இல்லாத நிலையில் மீண்டும் முதலாளிகளின் வலைக்குள் சிக்கிக் கொள்ளலும் தொடர்ச்சியான வறுமை நிலைக்குள் தள்ளப்படுவதும், அதனூடாக பிள்ளைகளின் கல்வியில் அக்கரை இன்மை மற்றும் தொடர்கல்வி செயற்பாடுகளிலிருந்து பிள்ளைகளை பாடசாலை இடை நிறுத்தம் செய்தல், பெற்றார் தங்களுடன் கூலி வேலைக்கு அழைத்துச் செல்லல், என்பன பாரியதொரு பிரச்சினையாக இப்பிரதேசத்தில் இருந்து வந்தது.
இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்த மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் அவர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற விளைபொருட்களை நியாயமான விலைக்கு பெற்றுக் கொள்ளல், அவர்களை முதலாளித்துவத்திடம் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்களுக்கு தேவையான பொருட்களை கடன் அடிப்படையிலும், மானிய அடிப்படையிலும் பெற்றுக் கொடுத்தல், மற்றும் பாதிக்கப்பட்டிருந்த குறிப்பாக பெண்களை இணைத்து கூட்டுத் தொழில் (அரிசி ஆலை) நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் போன்ற செயற் திட்டங்களை 1999 தொடக்கம் 2006ம் காலப்பகுதி வரை கீழ் குறிப்பிடப்படும் மூலோபாயங்கள் ஊடாக எமது மேற்கொண்டிருந்தது.
மக்கள் குழுக்களை கிராம ரீதியாக நிறுவுதல்.
தொழில் வாய்ப்புக்களுக்கு மானிய அடிப்படையிலும், குறைந்த வட்டியுடனான கடன் வழங்கல்.
தேவையான தொழில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்கல் ( உதாரணமாக :- பசளை, கிருமி நாசினி, விதை நெல் )
விளை பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளல்
பெண்கள் இணைந்த கூட்டுமுறையிலான தொழில்களை செய்தல் ( மிக்சர் தயாரிப்பு, நெல் அவித்து அரிசாக்குதல், சிறியளவிலான மீன் கொள்வனவு செய்தலும், சந்தைகளுக்கு அனுப்புதலும்.
முந்திரிகை பருப்பு பதனிடல்
போன்ற செயற்பாடுகளை செய்து மக்களிடத்தே பொருளாதார அபிவிருத்திக்கான அடிப்படை வேலைகளை செய்து கொண்டு வருகின்ற வேளைகளில் 2006ம் ஆண்டு முதல் முதலில் மீண்டும் தொடங்கிய யுத்த அனர்த்தமானது எமது திட்டக் களக்கிராமங்களிலுள்ள மக்களை தங்களது சொந்த பிரதேசத்திலிருந்து இடம் பெயர வைத்ததுடன், அவர்களின் வீடு, பொருளாதாரம், கல்விக் கட்டமைப்பு, சமூக கட்டமைப்பு என்பனவற்றினை முழுமையாக அழிவிற்குட்படுத்தியருந்ததுடன், எமது நிறுவனத்திற்குச் சொந்தமான 90 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்ட உள்ளீடுகளையும், வளங்களையும் சேதத்திற்குட்படுத்தியது.
இதனால் இப்பிரதேச மக்கள் தங்கள் சொந்த நிலத்திலிருந்து வேறு மாவட்டமான மட்டக்களப்பு, வன்னி மற்றும் இந்தியா போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 4, 5 வருடங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்தனர்.
இந்நிலையிலுள்ள மக்களில் 80% மக்கள் 2009 தொடக்கம் 2010 ஆண்டு காலங்களில் தங்களது சொந்த நிலங்களில் மீளக் குடியேற்றப்பட்டனர். 20% மக்கள் இற்றைவரை உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் (இந்தியா) அகதி வாழ்க்கையே வாழ்கின்றனர்.
இவ்வாறு மீளக்குடியேறிய மக்களிடத்தேயும், அகதி முகாம்களிலுமுள்ள மக்களிடையேயும் தற்போது முன்னைய மாதிரியான முதலாளித்துவச் சுரண்டல் தலைதூக்கியுள்ள காரணத்தினால் இம்மக்கள் மீண்டும் வறுமைக்குட்படுகின்ற நிலை தொடருக்கின்றது.
இதனை ஓரளவேனும் தடுத்து நிறுத்துவதற்கான நிலையான பொருளாதார மேம்பாட்டுத் திட்டச் செயற்பாடுகளை மாவட்ட ரீதியாக எமது நிறுவனத்தின் சொந்த நிதியினைக் கொண்டும், இலங்கையின் தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் (NDTF) எனும் நிறுவனத்தின் கடன் நிதியினை வைத்தும் சுழற்சி முறையிலான கடன் திட்டங்களை மேற்கொண்டு வருவதுடன், மக்களை சேமிக்கவும் ஊக்குவித்து வருகின்றது.
இருந்தும் இலங்கையின் தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் ஊடாக மேற்கொள்ளுகின்ற கடன் திட்டத்திற்கான வருடாந்த வட்டி 15% ஆக நிர்ணயிக்கப்படுவதனால் தொழில்களுக்கு கடன் பெறும் பயனாளிகள் பாதிப்படையக் கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றது.
எனவே மக்கள் சேவை கொண்ட அமைப்புக்களிலிருந்து மக்கள் தொழில் நடவடிக்கைகளுக்கான நன்கொடை நிதிகள் வரும் பட்சத்தில் எம்மால் அதிக வட்டி பெற்று பெறப்படுகின்ற இலங்கையின் தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் நிறுவனத்தின் நிதியின் அளவினைக் குறைத்து, மக்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் தொகையினை வழங்கவும் வாய்ப்பாக இருக்கும்.
அதுமட்டுமன்றி இலங்கையில் தற்போது அரச தரப்பில் காணப்படும் அரசியல் மாற்றம் காரணமாக நிதி நிறுவனங்களின் உதவிகள் மக்களுக்கு குறந்து வருகின்றது. இதனால் எமது நிறுவனத்தின் மக்கள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான பணிகளும் குறைந்து செல்ல வாயப்பு இருக்கின்றது.
இந்த நிலையில் ஒரு தன் நம்பிக்கையில் சுய வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களை ஏற்படுத்தி அதனூடாக மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்குரிய திட்டங்கள் தொடர்ந்தும் எமது அமைப்பு அமுல்படுத்தி வருகின்றது.
இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகள்:
உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான நியாயமான விலை தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.
தரமான தொழில் உள்ளீடுகள் கிடைக்காமை
அதிக செலவு ஏற்படல்
தங்களுக்கு தேவையான சோற்றுக்கான அரிரியினை மீண்டும் முதலாளிகளிடம் கூடிய விலை கொடுத்து வாங்குதல்.
போக்குவரத்து வசதி மிகக் குறைவு
இழம் பெண்கள் கைம்பெண்களாக இருத்தல்
மாணவர்கள் பாடசாலைக்கு செல்வது குறைவு
கூடிய விலை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்தல்
முதலாளிகளின் சுரண்டல்
குறைந்த விலைக்கு விளை பொருட்களை விற்றல்.
திட்டச்சுருக்கம்:
திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூதூர் கிழக்கு பிரதேசத்தைச் சார்ந்த 15 கிராம மக்களும் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து விடுபட்டு தாங்கள் மேற்கொள்ளுகின்ற தொழில்கள் ஊடாக அதிகமான வருமானங்களைப் பெற்றுக் கொண்டு தங்களது குடும்பத்தினை சுபட்சகரமாக மாற்றிக் கொள்வதற்கும் தற்போதைய பொருள் விலையேற்றத்திற்கு ஈடுகொடுத்து வாழ்க்கையினை மேம்படுத்திக் கொள்வதற்காக நமக்காக நாம் எனும் திட்டத்தினை திருக்கோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே ஆரம்பித்து அதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்தும் நோக்குடன் இத்திட்டம் நகரும்.
இத்திட்டத்தில் தொழில் (மக்கள் ) குழுக்களை உருவாக்கல், சேமிப்புக்களை சேமிக்க தூண்டுதல், உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தல், தேவையான தொழில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுத்தல், தொழில்களுக்கான ஊக்குவிப்புக்களை வழங்கல், பல்வகை ஆலை அமைத்தல் விளைபொருட்களை பெறலும், சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தலும். தொழில் இணைப்புக்களை ஏற்படுத்தல் போன்றன இச்செயற் திட்டத்தில் முக்கியமாக இருக்கும்.
மேற்படி தொழில் திட்டங்களை விரைவாகவும், திறமையாகவும், உண்மைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத்துவதற்காக எமது நிறுவனத்தில் தற்போது செயற்பட்டு வருகின்ற, கட்டமைப்பு ரீதியாக பலமாக இருக்கின்ற பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தோடு இணைத்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்படும்.
இத்திட்ட அமுலாக்கத்தில் எமது பொருளாதார அபிவிருத்திக் குழுவின் முழுமையான செயற்பாடுகள் இதில் அமைவதுடன், கிராமம் தோறும் எம்மால் அமைக்கப்படும் மக்கள் தொழில் குழுக்களின் செயற்பாடுகளும் அதில் அமையும். அதுமட்டுமன்றி அகத்தின் முகாமைத்துவக் குழு மற்றும் நிறுவனத்தின் பொதுச்சபை தொடர்ச்சியாக ஆலோசனை வழங்குவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடும்.
இலக்கு:
திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூதூர் கிழக்கு கிராம மக்கள் சுயமாக வாழ வழிசமைத்துக் கொடுத்தல்.
நோக்கம்:
முதலாளித்துவத்தின் சுரண்டலிலிருந்து உரிய திட்டக் கிராம மக்களை விடுபட வைத்து வருமானத்தைக் கூட்ட முயற்சித்தல்.
தெரிவு செய்யப்பட்டுள்ள திட்டக் களக் கிராம பயனாளிகளின் வருமானத்தினை 30% இருந்து 60% மாக உயர்த்த முயற்சித்தல்.
தெரிவு செய்யப்பட்டுள்ள திட்ட கிராமங்களிலுள்ள 40% பெண்களும், 50% சிறுவர்களும் ஆரோக்கியமாக வாழும் நிலையினை 2012 ஆண்டின் இறுதிக்குள் ஏற்படுத்த முயற்சித்தல்.
செயற்பாடுகள்:
மக்கள் தொழில் குழுக்களை உருவாக்கமும் பலப்படுத்தலும்.
மூதூர் கிழக்கிலுள்ள 15 கிராமங்களிலும் உள்ள தொழிலில் ஆர்வமுள்ள ஈடுபடுகின்றவர்களை கிராம ரீதியாக ஒன்றிணைத்து தொழில் குழக்களை உருவாக்கல் செயற்பாடாகவும், உருவாக்கப்பட்ட குழக்களுக்கான தொழில்முறை விழிப்புணர்வுகள் வழங்கல் முறமையாகவே இச்செயற்பாடு அமையும். இதன் மூலம் 15 தொழில் குழுக்கள் உருவாக்கம் நடைபெற்று இருக்கும்.