கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எந்த அணியும் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் விளையாடவில்லை. இந்த காலக்கட்டத்தை அடிப்படையாக வைத்து ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலி்ல் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் துணைத்தலைவர் ரோஹித்சர்மா 855 புள்ளிகளுடன் உள்ளார். இவர்கள் இருவரும் அசைக்க முடியாத இடத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இருந்து வருகின்றனர்.
மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம்829 புள்ளிகளுடனும், 4-வது இடத்தில் 818 புள்ளிகளுடன் நியூஸி வீரர் ராஸ் டெய்லர், 5-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ் 790 புள்ளிகளுடன் உள்ளனர்.
6 முதல் 10-ம் இடங்களில் முறையே, ஆஸி.யின் டேவிட் வார்னர்(789புள்ளிகள்), 7-வதுஇடத்தில் ஜோ ரூட்(770), 8-வது இடத்தில் ஆரோன் பிஞ்ச்(767), கேன் வில்லியம்ஸன்(765), டீ காக்(755) ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை முதலிடத்தில் நியூஸிலாந்து வீரர் டிரனட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் பும்ரா 719 புள்ளிகளுடன் உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான்(701), 4-வது இடத்தில் பாட் கம்மின்ஸ்(689), 5-வது இடத்தில் ரபாடா(665) உள்ளனர்.6 முதல் 10 இடங்களில் முறையே, கிறிஸ் வோக்ஸ், முகமது அமிர், மாட் ஹென்றி, ரஷித் கான், பெர்குசன் உள்ளனர்.
சகல துறை வீரர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 301 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ்(293) 2-வது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் இந்திய வீரர் ரவீந்ரஜடேஜா 246 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.