12

12

இராஜாங்க அமைச்சு மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களுக்கு கீழ் இயங்கும் திணைக்களங்கள் விபரங்கள் !

அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இராஜாங்க அமைச்சு மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களுக்கு கீழ் இயங்கும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் பின்வருமாறு,

1.0 பாதுகாப்பு அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)

1. பாதுகாப்புப் பதவிநிலைத் தலைவரின் அலுவலகம்
2. இலங்கைத் தரைப்படை
3. இலங்கைக் கடற்படை
4. இலங்கை வான்படை
5. ரக்னா ஆரக்சன லங்கா லிமிட்டெட்
6. இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தைச் செயற்படுத்தும் தேசிய அதிகாரசபை
7. சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
8. அரச இரகசிய தகவல் சேவை
9. இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்
10. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை
11. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
12. பாதுகாப்புச் சேவைகள்; கட்டளை, பதவிநிலைக் கல்லூரி
13. பாதுகாப்புச் சேவைகள் பாடசாலை
14. தேசிய பயிலிளவல் சிறப்பணி
15. தேசிய பாதுகாப்பு நிதியம்
16. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
17. இலங்கை தேசியப் பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்
18. இலங்கை தேசியப் பாதுகாப்புக் கல்லூரி
19. ரணவிருசேவை அதிகாரசபை
20. அபி வெனுவென் அப்பி நிதியம்
21. பல்செயற்பாட்டு அபிவிருத்தி செயலணி திணைக்களம்
22. தொல்பொருளியல் திணைக்களம்
23. மிலோதா நிறுவனம் (ACADEMY OF FINANCIAL STUDIES)

1.1 உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)

1. சகல மாவட்டச் செயலகங்களும் சகல பிரதேச செயலகங்களும்
2. இலங்கை பொலிஸ்
3. தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம்
4. பதிவாளர் நாயகத் திணைக்களம்
5. ஆட்பதிவுத் திணைக்களம்
6. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
7. அரச சார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம்
8. அனர்த்த முகாமைத்துவ தேசிய மன்றம்
9. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
10. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்
11. வளிமண்டலவியல் திணைக்களம்
12. தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி அமைப்பு

2.0 நிதி அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)

பொதுத் திறைசேரி நடவடிக்கைகள்
1. பொதுத் திறைசேரி
2. தேசிய திட்டமிடல் திணைக்களம்
3. அரச நிதிக் கொள்கைகள் திணைக்களம்
4. தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களம்
5. முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
6. அரச தொழில்முயற்சிகள் திணைக்களம்
7. வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
8. அரச நிதிக் கணக்குகள் திணைக்களம்
9. திறைசேரி நடவடிக்கைத் திணைக்களம்
10. அரச நிதிக் கணக்குகள் திணைக்களம்
11. வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள்திணைக்களம்
12. தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களம்
13. நீதி அலுவல்கள் திணைக்களம்
14. முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம்
15. கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
16. அபிவிருத்தி நிதித் திணைக்களம்
17. கொம்பிரோலர் ஜெனரால் அலுவலகம்

அரச வருமானம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள்
1. உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
2. இலங்கைச் சுங்கம்
3. மதுவரித் திணைக்களம்
4. தேசிய லொத்தர் சபை
5. அபிவிருத்தி லொத்தர் சபை
6. மதிப்பீட்டுத் திணைக்களம்

வங்கி நிதிகள் மற்றும் முதலீட்டு சந்தைக்கொள்கைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை அலுவல்கள்
1. இலங்கை மத்திய வங்கி
2. சகல அரச வங்கிகள் மற்றும் அவற்றின் நிருவாகத்துக்குட்பட்ட கம்பனிகள் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்கள்
3. இலங்கைக் காப்புறுதிச் சபை
4. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் இதன் நிருவாகக் கம்பனிகளும் இணைக் கம்பனிகளும்
5. கடன் தகவல் பணியகம்
6. கம்பனி பதிவாளர் திணைக்களம்
7. இலங்கை பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழு
8. இலங்கை கணக்குகள் மற்றும் கணக்காய்வு தர மீளாய்வுச் சபை
9. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு
10. இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

புள்ளிவிபரவியல் தகவல்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகள்
1. தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம்
2. கொள்கை கற்கைகள் நிறுவனம்
3. நிலைபேறான அபிவிருத்தி மன்றம்

நலன்புரி மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள்
1. நலன்புரி பயனுறுதிச் சபை

நிதிய ஒதுக்கீட்டு நடவடிக்கைகள்
1. லோகோர் சீமாட்டி நிதியம்
2. வேலைநிறுத்தங்கள், கலவரம், சிவில் பிரச்சினை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நிதியம்
3.காப்புறுதி பொறுப்பு நிதியம் நிதியம்
4. ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்
5. சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்
6. சிரம வாசனா நிதியம்
7. தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியம்
8. சிறுநீரக நிதியம்
9. தேயிலை சக்தி நிதியம்
10. கப்புருக நிதியம்
11. அரச சேவைகள் ஓய்வூதியர்களின் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்
12. புத்த சாசன நிதியம்
13. பௌத்த புத்தெழுச்சி நிதியம்
14. வரையறுக்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிதியம்
15. மஹபொல நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்
16. உள்நாட்டுக் கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம்
17. புத்தாக்குநர் நிதியம்
18. துருசவிய நிதியம்
19. தோட்டத்துறை சுயதொழில் சுழற்சி நிதியம்
20. மத்திய கலாசார நிலையம்

ஒழித்துக்கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
1. தொலைத்தொடர்புகள் திணைக்களம்
2. வனசீவராசிகள் நிதியம்
3. இலங்கை வெகுசன ஊடகப் பயிற்சி நிறுவனம்
4. உள்ளக வர்த்தகத் திணைக்களம்

2.2 நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)

1. அரச தொழில் முயற்சித் திணைக்களம்
2. கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
3. தேசிய நடவடிக்கை அறை
4. வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்
5. அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி
6. ஏற்றுமதி இறக்குமதி திணைக்களம்
7. கீழ் உழைப்பு இயக்க தொழில் முயற்சிகள் அல்லது கீழ் உழைப்பு உபயோகச் சொத்துக்கள் (அகற்றதல்) சட்டத்தின் கீழ் திறைசேரியின் செயலாளரின் கீழ்உள்ள நிறுவனங்கள்

2.3 சமூர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)

1. அரச வளங்கள் முகாமைத்துவக் கூட்டுத்தாபனம்
2. சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்
3. பிரதேச அபிவிருத்தி வங்கி
4. தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை
5. சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சி மூலதனக் கம்பனி
6. சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகள் அதிகாரசபை
7. கிராம சக்தி செயலகம்
8. தேசிய சமூக அபிவிருத்திச் சங்கம்
9. கிராம அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
10. சமூகப் பாதுகாப்புச் சபை
11. வலது குறைந்தோருக்கான தேசிய பணியகம்
12. வலது குறைந்தோருக்கான தேசிய பொதுச்செயலகம்

3. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
1. பௌத்த அலுவல்கள் திணைக்களம்
2. இந்து மத, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
3. கிறித்தவ மத அலுவல்கள் திணைக்களம்
4. முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
5. கலாசார அலுவல்கள் திணைக்களம்
6. தேசிய நூதனசாலைத் திணைக்களம்
7. பகிரங்க அரங்காட்டுகைச் சபை
8. தேசிய சுவடிக்காப்புத் திணைக்களம்
10. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்
11. எஸ். டப். ஆர். டி. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மன்றம்
12. ஜே. ஆர். ஜயவர்த்தன கேந்திர நிலையம்

4. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)
1. தேசியப் பௌதீகத் திட்டமிடல் திணைக்களம்
2. ஹோடெல் டிவலப்பர்ஸ் (லங்கா தனியார் கம்பனி PQ 143)

4.1 நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)
1. நகர அபிவிருத்தி அதிகாரசபை
2. இலங்கை காணிகள் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ்உள்ள கம்பனிகள் மற்றும் இணை கம்பனிகள்
3. நகர குடியிருப்பு அதிகார சபை
4. கூட்டாதன முகாமைத்துவ அதிகாரசபை (பொதுவசதிகள் சபை)
5. சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை
6. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம்

4.2 கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)
1. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை
2. வரையறுக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்
3. கட்டிடத் திணைக்களம்
4. அரசாங்க தொழிற்சாலைத் திணக்களம்
5. நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை
6. அரச பொறியியல் கூட்டுத்தாபனம்
7. அரசாங்க அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம்
8. தேசிய உபகரணங்கள் மற்றும் பொறித்தொகுதிகள் அமைப்பாண்மை
9. ஓஷன் வியுவ் டிவெலப்மென்ட் (பிரைவேட் லிமிட்டட்)

4.3 தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)
1. பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அதிகாரசபை
2. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கைப்பொறுப்பு
3. சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம்
4. தோட்டத்துறையின் சுயதொழில் சுழற்சி நிதியம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் , மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்கள் முழுமையான விபரம் இதோ!

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் ராமநாதனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியாவிற்கு கே.திலீபனும், மன்னார் மற்றும் முல்லைத்தீவிற்கு கே.காதர் மஸ்தானும், அம்பாறை மாவட்டத்திற்கு வீரசிங்கமும், திருகோணமலை மாவட்டத்திற்கு கபில அத்துகோரலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ஏனைய மாவட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக

கொழும்பு – பிரதீப் உதுகொட

கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான

களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன

கண்டி – வசந்த யாப்பா பண்டார

மாத்தளை – எஸ். நாமக்க பண்டார

நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க

காலி – சம்பத் அத்துகோரள

மாத்தறை – நிபுண ரணவக்க

ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி

குருநாகல் – குணபால ரத்னசேகர

புத்தளம் – அசோக பிரியந்த

அநுராதபுரம் – எச். நந்தசேன

பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள

பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய

மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க

இரத்தினபுரி – அகில எல்லாவல

கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து பின்னர், 40 இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

01. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசாரம்.

02. நிமல் சிறிபால டி சில்வா – தொழில்.

03. ஜீ.எல்.பீரிஸ் – கல்வி.

04. பவித்ரா வன்னியாராச்சி – சுகாதாரம்

05. தினேஸ் குணவர்தன – வௌிநாட்டு.

06. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

07. காமினி லொக்குகே – போக்குவர்த்து.

08. பந்துல குணவர்தன – வர்த்தகம்.

09. ஆர். எம். சீ. பீ. ரத்னாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு

10. ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாண சேவைகள் மற்றும் உள்ளூராட்சி

11. கெஹெலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகத் துறை

12. சமல் ராஜபக்ஷ – நீர்பாசனத் துறை

13. டலஸ் அழகப்பெரும – மின் சக்தித் துறை

14. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ – நெடுஞ்சாலைகள்

15. விமல் வீரவன்ச – கைத்தொழில்

16. மஹிந்த அமரவீர – சுற்றாடல்

17. எஸ். எம். சந்திரசேன – காணி

18. மஹிந்தானந்த அலுத்கமகே – கமத்தொழில்

19. வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல்

20. உதய பிரபாத் கம்மன்பில – வலுசக்தி

21. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டம்

22. பிரசன்ன ரணதுங்க – சுற்றுலா

23. ரோஹித்த அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்

24. நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டு

25. அலி சப்ரி – நீதி

இலங்கையின் புதிய அமைச்சரைவையின் அமைச்சர்களின் முழுமையான விபரம்!

இம்முறை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றியது. அதன்படி, கடந்த 10 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் புதிய அமைச்சரவையில் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்கள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முற்பகல் 8.30 மணிக்கு கண்டி மகுல்மடுவவில் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு ஆரம்பித்திருந்தது.

புதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.

கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,

01. சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்.

02. பியங்கர ஜெயரட்ன – வௌிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைபடுத்தல்

03. துமிந்த திசாநாயக்க – சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்டம்

04. தயாசிறி ஜயசேகர – பெட்டிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி

05. லசந்த அழகியவண்ண – கூட்டுறவு சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

06. சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு

07. அருந்திக பெர்ணான்டோ – தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த பல்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல்

08. நிமல் லன்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்

09. ஜயந்த சமரவீர – குத வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி

10. ரொஷான் ரணசிங்க – காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில் முயற்சி காணிகள் மற்றும் சொத்துகள் அபிவிருத்தி

11. கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர்திருத்துதல், தேயிலை தோட்டங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு

12. விதுர விக்ரமநாயக்க – தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாடு

13. ஜானக வக்கும்புர – கரும்பு, சோளம், மரமுந்திரி, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி

14. விஜித வேருகொட – அறநெறி பாடசாலைகள் மற்றும் பிக்குமார் கல்வி பௌத்த பல்கலைக்கழகம்

15. ஷெஹான் சேமசிங்க – சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுய தொழில் வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரசாங்க வளங்கள் அபிவிருத்தி

16. மொஹான் டி சில்வா – உர உற்பத்தி மற்றும் வழங்கல், இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினி பாவனை ஒழுங்குருத்துகை

17. லொஹான் ரத்வத்த – இரத்திணக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்

18. திலும் அமுனுகம – வாகன ஒழுங்குருத்துகை, பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில்

19. விமலவீர திசாநாயக்க – வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

21. தாரக பாலசூரிய – பிராந்திய உறவு நடவடிக்கைகள்

22. இந்திக அனுருத்த – கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில்

23. கான்சன விஜயசேகர – அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இரால்கள் வளர்த்தல், கடற்றொழில் துறைமுகள் அபிவிருத்தி மற்றும் பல நாள் கடற்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன் ஏற்றுமதி

24. சனத் நிஷாந்த – கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி

25. சிறிபால கமலத் – மகாவலி வலையங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்பு பொது உட்கட்டமைப்பு வசதிகள்

26. சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு!

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்வதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையைப் பெறுவார். இவரின் தாய் இந்தியர், பூர்வீகத்தில் தமிழகப் பெண் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் ஜோ பிடனுக்கு எதிராகக் கட்சிக்குள் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து  விலகினார். இந்த சூழலில் கமலா ஹாரிஸை ஜோ பிடனே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான நெருக்கடிகள், அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஆப்பிரிக்கவைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது கறுப்பின மக்களின் வாக்குகளைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும், சான் பிரான்ஸிக்கோவின் மாவட்ட அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும் கமலா ஹாரிஸின் பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக இனவெறித்தாக்குதல், போலீஸாரின் அடக்கு முறைக்கு எதிராக கமலா ஹாரிஸ் கடுமையாக குரல் கொடுத்தார்.

இது நாள்வரை அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாகவோ அல்லது துணை ஜனாதிபதியாகவோ எந்த அமெரிக்கப் பெண்ணும் இருந்ததில்லை. அதிலும் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றதில்லை. கடந்த 1984-ம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் சார்பில் ஜெரால்டைன் பெராரோ, 2008-ல் சாரா பாலின் இருவரும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

 

அமெரிக்காவின் ஒக்லாந்தின் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியப் பெண் அதிலும் குறிப்பாக தமிழரான ஷியாமளா கோபாலுக்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ் கடந்த 2003-ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்ஜெனரல் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றார்.

அதன்பின் 2010-ம் ஆண்டில் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு கலிபோர்னியா செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்வுசெய்யப்பட்டு அவரின் பேச்சும், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் குறித்த கேள்விகளும் அவரின் பக்கம் கவனத்தை ஈர்த்தன.

கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பூர்வீகத்தில் ஒரு தமிழ் பெண். கமலா ஹாரிஸின் தாய்வழித் தாத்தா பி.வி.கோபலன் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த ஜாம்பியாவுக்கு நிர்வாகப் பணிக்கு அனுப்பப்பட்டார்.

பி.வி. கோபாலின் மகள் ஷியாமளா கோபாலன். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஷியாமளா கோபாலன், நியூட்ரிசியன் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றினார்.

 

இல்லிநாய்ஸ், வி்ஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் மார்க்கப்புற்று நோய் ஆய்வாளராக ஷியாமளா கோபாலன் இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஷியாமளா கோபாலன் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டும்  ஐக்கிய நாடுகள் சபை !

பெய்ரூட் வெடி விபத்து காரணமாக லெபனானில் ஏற்படும் உணவு பற்றாகுறையை தவிர்க்கும் பொருட்டும் பல டன் மதிப்பிலான தானியங்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்ப உள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் விடுதிகள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். உலக நாடுகளையே இந்த பெய்ரூட் விபத்து அதிர்ச்சியடைய செய்தது.

இந்த நிலையில் பெய்ரூட் வெடி விபத்தில் அங்கிருந்த தானிய குவியல்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. எனவே லெபனானில் ஏற்படும் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்கும் பொருட்டு 50,000 டன் எடையையுடைய தானியங்களை ஐக்கிய நாடுகள் சபை வழங்க உள்ளது,

இதுகுறித்து ஐ.நா.வின் மற்றொரு அமைப்பான மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு கூறும்போது,” லெபனானுக்கு மூன்று மாதங்களுக்கு போதுமான 50,000 டன் எடை கொண்ட தனியங்களை அனுப்ப இருக்கிறோம். இதன் முதல் கட்டமாக 17,000 டன் எடைக் கொண்ட உணவு பொருட்கள் 10 நாட்களில் சென்றடைய உள்ளன” என்று இந்த அறிகடகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெய்ரூட் வெடி விபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் அரசு பதவி விலகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லெபனான் பொருளாதார பற்றாக்குறையை சந்தித்து வந்தது. இந்த நிலையில் பெய்ரூட்டில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் சரித்துள்ளது.

இலங்கையின் சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் ! – சுமந்திரன் காட்டம்.

இலங்கையில் இராணுவமயப்படுத்தல் பரவலடைய ஆரம்பித்துள்ளமை தொடர்பாக பலரும் தங்களுடைய அதிருப்தியயை வெளிப்படுத்தி வருகின்றனர்.இலங்கையில் இராணுவமயப்படுத்தலின் ஒரு பகுதியாக அண்மையில் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன.  இதனை கண்டித்து எம்.ஏ சுமந்திரன் அவர்கள் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

நாடு இராணுவ மயமாவதாக நான் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்தன. ஆனால் இப்போது மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என எம்.ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும்.

அதேவேளை சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டின் சிவில் நிர்வாகங்களுடனேயே சர்வதேச நாடுகள் தொடர்பினை பேண விரும்பும் நிலையில் அந்தநிலை தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிவில் நிர்வாகத்தினை ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அத்தனை தமிழ் அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

எந்த தீர்வும் இல்லாமல் நகரும் காணாமலாக்கப்பட்டோருக்கான உறவினர் போராட்டம் – மேலும் ஒரு தாய் மரணம்!

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் யுத்த காலத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படடவர்கள் என பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு மூன்றாம் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1250 வது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தாயார் நேற்று (10.08.2020) உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் ஜேசு மேரி எனும் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மாத்தளன் பகுதியில் தனது மகனான மைக்கல் ஜோசப் என்பவர் காணாமலாக்கப்பட்ட நிலையில் தன்னுடைய மகனை தேடி தொடர்ச்சியாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் நேற்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இந்த தாயாருடன் தமது உறவுகளை தேடிவந்த பல உறவுகள் உயிரிழந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.