23

23

“13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் ” – பாராளுமன்றில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா !

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

மாகாண சபை முறைமையானது எமக்குக் கிடைத்திருந்த காலந்தொட்டு, அதனை எமது மக்கள் நலன் சார்ந்து செயற்படுத்தியிருந்தால், இன்று எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்தவரையில் தீர்க்கப்பட்டிருக்கும் என்பதை நான் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றேன்.

எனினும், குறித்த அதிகாரத்தைப் பெற்றவர்களும், அபகரித்துக் கொண்டவர்களும் அதனை ஒழுங்குற செயற்படுத்தியிருக்கவில்லை.

மக்களது ஆணையை மதித்து இந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் குறைபாடுகள், அல்லது சேர்க்கைகள் இருப்பின் அதுகுறித்து ஆராய்ந்து அவற்றை சரி செய்து கொள்வதற்கு கால அவகாசம் இருக்கின்றது என்பதால், இது குறித்து எவரும் வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

”வன்னிக்கிராமங்களில் மலசலகூட வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னமும் உள்ளன” – வன்னி மக்களின் இடர் நீக்குமாறு அடைக்கலநாதன் பிரதமரிடம் வேண்டுகோள் !

”வன்னிக்கிராமங்களில் மலசலகூட வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னமும் உள்ளன- அம்மக்களின் வாழ்வாதாரத்துக்காக வழிசெய்ய வேண்டும்  என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று (23.09.2020) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன், வன்னியைத் தாண்டி வடக்கிற்குச் செல்லும் அமைச்சர்கள் முதலில் வன்னியில் எமது மக்களின் நிலைமைகளை அவதானிக்க வேண்டும். எமது மக்கள் அதிகளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர்.அங்கு மலசலகூடம் இல்லாத கிராமங்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால், பெண்கள் அதிக சிரமங்களைச் சந்திக்கின்றனர். இவ்விடயத்தில் பிரதமர், அமைச்சர்களுக்கு ஆணையிட்டு வன்னி மாவட்டத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எமது மக்கள் போருக்குப் பின்னர் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மீள்குடியேற்ற விடயங்களில் சொந்த நிலங்களில் அரசாங்க ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக, மகாவலி வலயம் என்பது மிக மோசமாக எமது மக்களைப் பாதிக்கின்றது. பறவைகள் சரணாலயம் எனக் கூறிக்கொண்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இவற்றை கவனத்திற்கொள்ளவில்லை என்றால் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கும்.

ஒவ்வொரு அபிவிருத்திக் கூட்டத்திலும் வன இலாகாவின் செயற்பாடுகளைக் கண்டித்து கருத்துக்களை முன்வைத்தோம். எனவே, ஒவ்வொரு மாவட்டக் குழுக் கூட்டத்திற்கும் முடிவெடுக்கும் அதிகாரிகள் வந்து கவனஞ்செலுத்த வேண்டும்.

மேலும், முல்லைத்தீவு ஐயங்கண் குளம் ஆலயத்திற்கு எதிர்வரும் 26ஆம் திகதி மக்களை வர வேண்டாம் என பொலிஸார் கூறியுள்ளனர். இது எமது மக்களின் மத உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடாகும். எனவே, இவற்றில் பொலிஸார் தலையிட வேண்டாம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது நிச்சயமாக தமிழர்களின் விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அமையும்” – எம்.ஏ.சுமந்திரனிடம் மஹிந்த ராஜபக்ஸ திட்டவட்டம் !

”புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது நிச்சயமாக தமிழர்களின் விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அமையும் என பிரதமர் மகிந்தராஜபக்ஸ – சுமந்திரன் இடையேயான கலந்துரையாடலின் போது பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு நேற்று (22.09.2020) கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, புதிய அரசியலமைப்பொன்று உருவாக்குவதாக இருந்தால், தமிழ் மக்களின் அனைத்துப்பிரச்சினைக்கான தீர்வினையும் உள்ளடக்கியதாகவே அது அமைய வேண்டும் என்பதில் தான் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் அதீத கரிசனை கொண்டிருப்பதாக சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ “புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் அதிக அக்கறை கொண்டிருக்கின்றோம். அத்துடன் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது நிச்சயமாக தமிழர்களின் விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அமையும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் தமிழ்த் தரப்பினது பங்களிப்பு தொடர்பிலும் தன்னிடமுள்ள எதிர்ப்பார்ப்புக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சுமந்திரனிடம் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

”அதாவுல்லாவின் ஆடையை பார்த்து அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ்., இஸ்லாமிய அடிப்படைவாதி” எனக் கூச்சலிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், அரசியல் நோக்கிலே செயற்பட்டுள்ளனர் ” – அஷாத் சாலி

அதாவுல்லாவின் ஆடையை பார்த்து பொறுத்துக்கொள்ளும் மனவளர்ச்சி சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு இல்லாமல் போனமை கவலையளிக்கின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்தார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி, ஆடையணிந்து வந்தார் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் மீது எதிர்க்கணைகள் தொடுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், சபாநாயகரின் அனுமதியுடன் மீண்டும் அதே உடுப்புடன் அதாவுல்லா நாடாளுமன்றம் வந்து அமர்ந்ததில், பல படிப்பினைகள் உள்ளதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தேசிய காங்கிரஸ் தலைவரின் ஆடையைப் பார்த்து “அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ்., இஸ்லாமிய அடிப்படைவாதி” எனக் கூச்சலிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், அரசியல் நோக்கிலே செயற்பட்டுள்ளனர். அதாவுல்லாவின் ஆடையில் அடிப்படைவாதம், பயங்கரவாதச் சாயல் இருந்திருந்தால், மீண்டும் அந்த ஆடையுடன் சபைக்கு வருவதற்கு சபாநாயகரின் அனுமதி கிடைத்திருக்காது. நடைமுறையில் சில தவறுகள் இருந்ததாலே அவர் வௌியேற்றப்பட்டு, மீண்டும் சபைக்குள் அனுமதிக்கப்பட்டார். இதைக் கூடப் பொறுத்துக்கொள்ளும் மனவளர்ச்சி சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு இல்லாமல் போனமை கவலையளிக்கின்றது.

ஒரு தவறைக் கண்டிப்பதற்கு எம்.பிக்களுக்கு உரிமை உள்ளதுதான். எனினும், எதிர்க்கட்சி எம்.பிக்கள், அதாவுல்லாவுக்கு எதிராகப் பிரயோகித்த சொற்கணைகள், வங்குரோத்து அரசியலுக்கு வயிறு வளர்க்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

சிறுபான்மைச் சமூகங்களைப் பெருந்தேசியத்தின் எதிரிகளாகக் காட்டி, ராஜபக்ஷக்கள் வெற்றியடைந்த வியூகத்தை, தற்போது வங்குரோத்திலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் கையிலெடுத்துள்ளது.

முஸ்லிம் தனித்துவ தலைமைகளும், எம்.பிக்களும் இணைந்து, பயங்கரவாதச் சாயலுக்கு பக்கவாத்தியம் ஊதியதுதான் இதிலுள்ள மிகப் பெரிய கவலை. ஒரு காலத்தில் இவர்களையும் ஒதுக்கிவிட்டு, ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற சஜித் தலைமையிலான அணி முயற்சிக்கலாம். மேலும், சந்தர்ப்பம் பார்த்து இத் தலைமைகளுக்கும் சஜித் அணி, பயங்கரவாதச் சாயம் பூசாது என்பதற்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. இதைத்தான் எதிர்க்கட்சியினரின் கூக்குரல்களும் குற்றச்சாட்டுக்களும் தௌிவுபடுத்துகின்றன.

எனவே, ஆளும் தரப்பால் ஒதுக்கி, தனிமைப்படுத்தப்படுள்ள முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள், இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கத்தைக் கைவிட்டு, சமூக நோக்கில் செயற்படுவதுதான், அரசியலுக்காக எமது சமூகத்தை ஒதுக்கும் தரங்கெட்ட அரசியலை இல்லாதொழிக்க வழிசமைக்கும்” – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பளை முகமாலையில் விடுதலைப் புலிகளின் முன்னரங்கு காவல் பகுதியிலிருந்து பெண் போராளிகளின் எச்சங்கள் மீட்பு !

பளை முகமாலையில் விடுதலைப் புலிகளின் முன்னரங்கு காவல் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் எலும்புக் கூடுகள் இருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பகுதியை தோண்டி ஆராய நீதிமன்ற அனுமதியை இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பெற்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி  த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நேற்று (22.09.2020) அகழ்வுபணிகளை ஆரம்பித்திருந்தனர்.

WhatsApp Image 2020 09 22 at 18.33.24 1

அகழ்வுப்பணியின் போது இரு  பெண் போராளிகளின் இலக்க தகடுகள், ஒரு தொகுதி எலும்புக்கூடுகள், மற்றும் சீருடைகள் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது .

இதற்கமைய நேற்று 3 மணியளவில் குறித்த பகுதிக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி  த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அகழ்வு பணி இடம்பெற்றது .

இதன் போது அங்கு இரு  பெண் போராளிகளின் இலக்க தகடுகள், ஒரு தொகுதி  எலும்புக்கூடுகள், மற்றும் மண்டைஓடு ஒன்றும்,  விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் இலக்கத்தடு, சைனட்(குப்பி) ஒன்று, பெண் போராளிகள் இடுப்பில் அணியும் பட்டி,   உரைப்பைகள் விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், பச்சை கலர் சிரூடைகள் பாட்டா ஒன்று, பற்றிகள் ,சம்போ போத்தல்கள், துப்பாக்கி ஒன்று, மகசீன் 8 , கைக்குண்டு இரண்டு , மூன்று கோல்சர் கவர் என்பன மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

WhatsApp Image 2020 09 22 at 18.33.33

இதில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் இலக்க தகடில் த.வி.பு ஞா 0302 மற்றும் த.வி.பு. ஞ 0188 எனவும், பி பிளஸ்  மற்றும் ஓ பிளஸ் ரத்த வைகையை சேர்ந்தவர்கள் எனவும் சோதியா படையணியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அகழ்வு பணியை தொடர்ந்து முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

WhatsApp Image 2020 09 22 at 18.33.27 1

 

”கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானதல்ல” – பாராளுமன்றில் சிறீதரன் !

கிளிநொச்சி நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் அனுமதியில்லாது இந்தக் கட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சுமத்தினார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்றுக் (22.09.2020) கூடிய நாடாளுமன்றஅமர்வில் கலந்துகொண்டு, வர்த்தக அமைச்சரிடம் வாய்மூல விடைக்கான வினாக்களை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் தொடர்பிலும், கரைச்சிப் பிரதேச சபையின் அனுமதியின்றி எவ்வாறு அந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது என்பது பற்றியும் சிறிதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இந்தக் கட்டடம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று இதன்போது பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, விரைவில் தான் கிளிநொச்சிக்கு விஜயன் மேற்கொள்ளவுள்ளமையால், அதன்போது கவனம் செலுத்துவார் எனவும் கூறினார்.

மேலும் கரைச்சி பிரதேச சபையினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கட்டடத்தைநிர்மாணிப்பதற்குத் தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது. மக்களுக்கு நன்மையளிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை கூட்டமைப்பு எதிர்த்து வருகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பந்துலவின் பதிலால் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் “பூசி முழுகாமல் நேராகப் பதிலைக் கூறுங்கள். போருக்குப் பின்னர் இந்தக் காணியை அடாத்தாக அரசு பிடித்துக்கொண்டுள்ளது.

கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானதல்ல. காட்டுச் சட்டத்தைக் கொண்டு அடாத்தாக இந்தக் கட்டடத்துக்கான காணி பிடிக்கப்பட்டுள்ளது. இது சரியா? என்பதே எனது கேள்வி. இதற்குப் பதிலளிக்காது பூசி முழுகுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

“மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார் “ – பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன்.

“மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார். அவர் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். அங்கே அவருடைய செயற்பாடுகள் தமிழர்களுடைய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கின்றன” என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் நேற்று (22.09.2020) தெரிவித்தார்.

தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பொலிஸ்! சபையில்  கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு - Tamilwin

நேற்றை அமர்வில் அவர் மேலும் பேசுகையில்…

“வடக்கு, கிழக்கிலே எங்கள் உரிமைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர முடியாது என்று நீதிமன்றம் ஒன்று கட்டளையிட்டிருக்கின்றது. அதேபோன்று வவுனியா வடக்கு நெடுங்கேணியிலே வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் திருவிழா நடத்துவதற்கு நிர்வாகம் முயன்றபோது பொலிஸார் வலிந்து சென்று அதனைத் தடை செய்யுமாறு வழக்குத் தாக்கல் செய்தார்கள்.

திருவிழாவை நடத்த முடியும் அதனைத் தடுக்கமுடியாது என்று அங்கே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், நீதிமன்றத்தின் கட்டளையை மீறி நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் திருவிழாவை நடத்தவிடாது குழப்பிக்கொண்டே இருக்கின்றார்கள்.

எங்களுடைய நினைவேந்தல் விடயத்திலே நீதிமன்றம் சொன்னதை அவ்வாறே கடைப்பிடித்து வீடுகளில் சாமிக்குக் கூடப் பூவைக்க முடியாத அளவுக்குப் பொலிஸாரின் கெடுபிடிகள் உச்ச அளவில் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலே பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் குணராசா குணசேகரனை அழைத்து, திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால் உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என்று அச்சுறுத்தியிருக்கின்றார்.

எங்களுடைய உரிமைகளுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்காக நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம். உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நினைவேந்தலுக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்போம்.

”மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார். அவர் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். அங்கே அவருடைய செயற்பாடுகள் தமிழர்களுடைய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கின்றன” எனவும் செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார் .

”உலக அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று” – உலக சுகாதார நிறுவனம்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 9 மாதங்களாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் தயாராகவில்லை என்பதால், வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாளுக்கு நாள் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, எனினும் இந்த வாரத்தில் சாவு எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. மேற்படி 7 நாட்களில் மொத்தம் 36 ஆயிரத்து 764 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்த 20 லட்ச பாதிப்பில் அதிகபட்சமாக 38 சதவீதத்துக்கும் அதிகமானோர் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். பலி எண்ணிக்கையை பொறுத்தவரை, ஐரோப்பா மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் ஐரோப்பாவில் 27 சதவீத சாவு எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ‘ஸ்புட்னிக்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று, மனிதர்களுக்கு தொடர்ந்து சவாலாகவே விளங்கி வருகிறது.

வீணானது பாப் டு பிளிஸ்சிஸியின் போராட்டம். – வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது ராஜஸ்தான் !

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் சார்ஜாவில் நேற்றிரவு  4-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக உடல்தகுதியுடன் இல்லாததால் முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ அம்பத்தி ராயுடுவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார்.நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை  அணித்தலைவர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும், புதுமுக வீரர் ஜெய்ஸ்வாலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஜெய்ஸ்வால் 06 ஓட்டங்களுடன் தீபக் சாஹரின்  பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து  சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித்துடன் கைகோர்த்தார்.

இருவரும் சென்னை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் சிக்சர் மழை பொழிந்தார். ஜடேஜாவின் ஒரு ஓவரில் 2  சிக்சர்கள் அடித்த அவர், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் 3 சிக்சர்களை விளாசி மிரள வைத்தார். அத்துடன் 19 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார்.

அணியின் ஓட்டம் 132 ஆக உயர்ந்த போது சஞ்சு சாம்சன் 74 ஓட்டங்களில் (32 பந்து, ஒரு பவுண்டரி, 9 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்த வந்த டேவிட் மில்லர் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார். 19-வது பந்துப்பறிமாற்றத்தின் போது ஸ்டீவன் ஸ்மித் 69 ஓட்டங்களில் (47 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு

20பந்துப்பறிமாற்ற முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் குவித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 27 ஓட்டங்ளுடனும் (8 பந்து, 4 சிக்சர்), டாம் கர்ரன் ஓட்டங்ளுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் சாம் கர்ரன் 3 இலக்குகளும், தீபக் சாஹர், நிகிடி, பியுஷ் சாவ்லா தலா ஒரு இலக்குமாக கைப்பற்றினர்.

அடுத்து 217 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. பவர்-பிளே வரை தாக்குப்பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 33 ஓட்டங்களிலும்(21 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), முரளிவிஜய் 21 ஓட்டங்களிலும் (21 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர்.

ஐபிஎல் கிரிக்கெட் : பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி
இமாலய ஸ்கோரை பார்த்து மலைத்து போன சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் கடுமையாக போராடினார். உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர் விரட்டியடித்தார். அவரது அதிரடியால் ரன்ரேட் கணிசமாக உயர்ந்தது. பிளிஸ்சிஸ் 72 ஓட்டங்களில் (37 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்) அவரும் ஆட்டமிழந்தார்.

அதே சமயம் தடுமாற்றத்துடன் ஆடிய கேப்டன் டோனி, டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 200 ரன்களே சேர்க்க முடிந்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

சீனாவுக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக அமெரிக்க காவல்துறை அதிகாரி கைது

அமெரிக்காவில் நியூயார்க் நகர காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவா் பய்மதாஜீ ஆங்வாங் (வயது 33). இவா் திபெத்தை பூா்விகமாக கொண்டவா். அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள இவா் அமெரிக்காவில் உள்ள திபெத் சுதந்திர இயக்க ஆதரவாளா்களை சீன அரசுக்காக உளவு பார்த்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து பய்மதாஜீயை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நியூயார்க் நகரில் திபெத் மக்களின் நடவடிக்கைகள் குறித்து சீன அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்து வந்துள்ளது தெரியவந்தது. நியூயார்க் நகர காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்த அவா், நியூயார்க்கில் உள்ள சீன துணைத் தூதரகத்தில் பணிபுரியும் 2 அதிகாரிகளுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அவா் தொடா்பில் இருந்து வந்துள்ளார்.

இதுதொடா்பாக அமெரிக்க அரசு தரப்பு வழக்கறினர் கூறிய போது, “சீனாவில் இருந்து கலாச்சார நுழைவு விசாவில் அமெரிக்கா வந்தவா் ஆங்வாங். தனது 2-ஆவது நுழைவு விசா காலம் முடிந்த பின்னும் இந்நாட்டில் தங்கிய அவா், தான் திபெத்தியா் என்பதால் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், இதனால் தனக்கு அமெரிக்காவில் புகலிடம் வேண்டும் எனவும் கூறி விண்ணப்பித்தார். அதன் பின்னா் அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.