11

11

யாழ்.தென்மராட்சியில் இயங்கி வந்த விபச்சார விடுதியும், கருக்கலைப்பு நிலையமும் பொலிஸாரால் முற்றுகை !

யாழ்.தென்மராட்சி கரம்பகம் – பாடசாலை வீதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியும், அதனோடு இணைந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸார் நேற்றிரவு(10) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த விபச்சார விடுதியும்,கருக்கலைப்பு நிலையமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரு பெண்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,கருக்கலைப்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசுவமடு மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நிலையத்திற்கு மருந்துப் பொருட்களை வழங்கி மந்திகை வைத்தியசாலை ஊழியர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதான மூவரும் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

“கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்து கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பதே எங்கள் நோக்கம்” – சிவநேசதுரை சந்திரகாந்தன்

“கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்து கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பதே எங்கள் நோக்கம்”  என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கான காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (12.11.2020) திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் ,   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்   சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது. தென் பின்  கடமைகளை பெறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். இந்த இடத்திற்கு வருவதற்கு பெரும் பங்காற்றிய எனது மக்களுக்கு நன்றி. தேர்தல் காலங்களில் மக்களிடம் அபிவருத்த்தி செய்து தருவாக வாக்குறுதியளித்து தான் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றோம்

தற்போது உலகலாவிய ரீதியில் சவாலாக இருக்கின்ற கொரோனா மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வந்திருக்கின்றது. இந்த விடயங்களை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அவர்களுடைய உற்பத்தியை அதிகரிக்க கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்திற்கு உழைக்கவேணடும் என்பது எனது எதிர்பார்ப்பு.

அந்த அடிப்படையில் கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்துக்கொண்டு அதனோடு எங்களுடைய கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பது எங்கள் நோக்கம் அந்த திட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன் . நீண்ட காலமாக நான் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத காரணத்தால் இன்று கடமைகளை பெறுப்பேற்ற உடன் நிலமைகளை அவதானித்துக் கொண்டு 13 ம் திகதி பெரும் விமர்சனத்தில் மத்தியில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தை நடாத்தவுள்ளோம்.

அந்த கூட்டத்தில் முடிந்த வரை 2021 ம் ஆண்டிற்கான செயற்பாடுகளையும் இப்போது இருக்கின்ற மக்களுக்கு உடனடி தேவையான விடயங்களை அவதானித்து அதனை முடித்து கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம் என தெரிவித்துள்ளார் .

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிப்பிள்ளை கருணாகரன் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் , சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் மற்றும் கட்சி முக்கிய உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்

“திருகோணமலை தென்னமரவாடி, திரியாய் காணிகளில் எந்தவித தலையீடுகளையும் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளக் கூடாது” – நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இடைக்கால தடையுத்தரவு !

திருகோணமலை தென்னமரவாடி, திரியாய் காணிகளில் காணி உரிமையாளர்கள் சுதந்திரமாக சென்று காணியை பராமாரிக்க எந்தத் தடையையும் தொல்லியல் திணைக்களம் ஏற்படுத்தக் கூடாது எனவும், அதில் எந்தவித தலையீடுகளையும் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளக் கூடாது எனவும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தவிட்டுள்ளார்.

இம் மனுமீது காலம் தாழ்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படுமாக இருந்தால் அது, மனுதாரரின் உரிமைகளில் ஏற்பட்ட சேதத்தை மீள பெற முடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என்ற சட்டத்தரணி கேசவன் சயந்தனின் சட்டவாதத்தை ஏற்று நீதிமன்றம் இவ் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

தென்னமரவாடி, திரியாய் ஆகிய பகுதிகளில் உள்ள தமது காணிகளுக்குள் தொல்பொருள் திணைக்களம் வர்த்தமானி பிரசுரம் மூலம் தலையீடு செய்துள்ளதாக திரியாய் பகுதி சார்பாக 17 மனுதாரர்களும், 3 தென்னமரவாடி மனுதாரர்களும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றில் அவசர மனுவாக வழக்கு தாக்கல் செய்தனர்.

இவ் வழக்கில் எதிர்மனுத்தாரர்களாக தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் முதல் எதிர்மனுத்தாரராகவும், உதவி காணி ஆணையாளர் மற்றும் காணி ஆணையாளர் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் எதிர்மனுத்தார்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மேலும் இவ் வழக்கானது அவசர மனுவாக நேற்று திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பாதிக்கப்பட்ட மனுத்தாரர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன், மேற்படி வழக்கானது அவசர மனுவாக எடுத்து இதற்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிக்கப்பட்ட காணிகள் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்டதாகும். அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளது.

மேலும் இம் மனுமீது காலம் தாழ்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படுமாக இருந்தால் அது, மனுத்தாரரின் உரிமைகளில் ஏற்பட்ட சேதத்தை மீள பெற முடியாத நிலையை ஏற்படுத்தி விடும். எனவே இவ் வழக்கில் தொல்லியல் திணைக்களம் குறித்த காணிகளுக்குள் தலையீடு செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்குமாறு மன்றை கேட்டுக்கொள்கிறேன் என தனது வாதத்தை முன்வைத்தார்.

மனுத்தாரர் தரப்பு வாதத்தை கவனித்த மன்று, அதில் காணப்பட்ட சட்டவாதத்தை ஏற்று இடைக்கால கட்டளையை வழங்கியது.

இதன்படி, குறித்த காணிகளுக்குள் 14 நாட்களுக்கு தொல்பொருள் திணைக்களம் சென்று எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என இடைக்கால தடையுத்தரவு விதிக்கிறது எனவும் அக் காணிகளில் காணி உரிமையாளர்கள் சுதந்திரமாக சென்று தமது காணிகளை பராமரிக்க எந்தவித தடையும் ஏற்படுத்தக் கூடாது எனவும் இந் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கிறது.

மேலும் இவ் வழக்கில் எதிர்மனுத்தாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளோர் எதிர்வரும் 23.11.2020 அன்று நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு ஆட்சேபனையை முன்வைக்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இலங்கையின் சமூக அபிவிருத்தித்திட்டத்துக்கான ரூபாய் 600 மில்லியன் பெறுமதியான இலங்கை-இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்திய நிதி உதவியின் கீழ் ரூபாய் 600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நேற்று(10.11.2020)புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

நிதி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இவ் ஒப்பந்தமானது 2005ஆம் ஆண்டு தற்போதைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் என்பதுடன் அது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் பங்கேற்புடன் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்திற்கு அமைவாக விசேட அபிவிருத்தி திட்டத்திற்கான செலவு ரூபாய் 300 மில்லியனுக்கும் அதிகமாவதுடன் அவசரகால அம்பியூலன்ஸ் சேவை, வீடமைப்பு திட்டம், புதிய யாழ். கலாசார மத்திய நிலைய செயற்பாடுகள் என்பன இதனூடாக செயற்படுத்தப்படும்.

சிறு அபிவிருத்தி திட்டத்திற்காக அதிகபட்சமாக ரூபாய் 300 மில்லியன் செலவிடப்படுவதுடன், மீள்குடியேற்றம், தங்குமிடம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, கலாசார நடவடிக்கை, விளையாட்டு, தொழிற்துறை மேம்பாடு, மருத்துவ நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வைத்திய உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் என்பனவும் இதன் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.

“சாக்குப்போக்குக் காரணங்களைத் கூறாது நாட்டை முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும்”  – சஜித் பிரேமதாஸ வலியுறுத்தல் !

“சாக்குப்போக்குக் காரணங்களைத் கூறாது நாட்டை முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும்”  என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கொரோனா வைரஸ் தொற்றின் பேராபத்து மையமாக மேல் மாகாணம் விளங்குகின்றது. இந்தநிலையில், இம்மாகாணத்தை 10 நாட்கள் மட்டும் முடக்கியிருந்த அரசு, அதை மீண்டும் திறந்துவிட்டுள்ளது.

இதனால் கொரோனாத் தொற்றுப் பரவல் நாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும். சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி வழங்க வேண்டும். அந்தக் காலப்பகுதிக்குள் நாடெங்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளையும் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வேகமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றமையை பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர். குறிப்பாக இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது தடவையாக ஐ.பி.எல் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது மும்பை – தொடரின் விருதுகள் பற்றிய முழுமையான விபரங்கள் இதோ !

ஐ.பி.எல்2020 இன் இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0), தவன் (15), ரகானே (2) சொற்ப ஓட்டங்ககளில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.  அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (65ஓட்டங்கள்), ரிஷ்ப் பண்ட் (56ஓட்டங்கள்) சிறப்பாக விளையாட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் அடித்தது.
மும்பை இந்தியன்ஸ்க்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
பின்னர் 157 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டி காக் 12 பந்தில 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4.1 பந்துப்பாரிமாற்றங்களில் 45 ஓட்டங்கள் விளாசியது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் 36 பந்தில் அரைசதம் விளாசி மறுமுனையில் சிறப்பாக விளையாடினார் ரோகித் சர்மா.
டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்அடுத்து வந்த இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி வெற்றியை நோக்கி சென்றது. 17.2ஆவது பந்துப்பரிமாற்றத்தில்  அன்ரிச் நோர்ஜே வீசிய பந்தில் ரோகித் சர்மா 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணிக்கு 22 பந்தில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பொல்லார்ட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.
ஆனால் 18-வது பந்துப்பரிமாற்றத்தில்  முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். ஸ்கோர் சமமான நிலையில் ஹர்திக் பாண்ட்யா 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணால் பாண்ட்யா ஒரு ஓட்டம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 18.4 பந்துப்பரிமாற்றத்தில் 5 இலக்குகள் இழப்பிற்கு 157  ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது மும்பை அணியின் டிரெண்ட் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்
இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் கோப்பையை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இஷான் கிஷன் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.
இந்த லீக் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் துடுப்பாட்ட வீரருக்கு செம்மஞ்சள் தொப்பியும், அதிக இலக்குகள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு ஊதா  தொப்பியும் வழங்கப்படும்.
அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 670 ஓட்டங்கள் குவித்து செம்மஞ்சள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
17 போட்டிகளில் 30 இலக்குகள் வீழ்த்திய ரபாடா ஊதா தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
மேலும் விருது பெற்றவர்கள்:
வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) – தேவ்தத் படிக்கல் (ஆர்.சி.பி)
ஃபேர் பிளே விருது – ரோகித் சர்மா (மும்பை)
கேம் சேஞ்சர் விருது – கேஎல் ராகுல் (பஞ்சாப்)
சூப்பர் ஸ்டிரைக்கர் விருது – பொல்லார்டு (மும்பை)
அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது – இஷான் கிஷண் – (மும்பை- 30 சிக்சர்)
பவர் பிளேயர் விருது – டிரெண்ட் போல்ட் (மும்பை)
மதிப்பு மிகுந்த வீரர் – ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)