19

19

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் மாவீரர் தின நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடையுத்தரவு !

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி இரு மாவட்ட நீதிமன்றங்களிலும் காவல்துறை இன்று விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பைக் கொண்டாடுவது அல்லது அதற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளைத் தனியாகவோ, குழுவாகவோ ஒழுங்கமைப்பதும், பங்கேற்பதும் சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

மாவீரர் நாள் என்பது, தமிழீழ விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளில் ஒன்று. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இத்தகைய நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது. அதேவேளை, கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கின்றபோது அதை மீறிப் பொது வெளியில் மக்கள் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்தவும் அனுமதிக்கப்படக்கூடாது” என வவுனியா, மன்னார் பொலிஸார் அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் சமர்ப்பித்துள்ள தடை உத்தரவு கோரிய மனுக்களில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காளி பூஜையில் கலந்து கொண்ட “ஷாகிப் அல் ஹசனை துண்டாக வெட்ட வேண்டும்“ என கொலை மிரட்டல் !

பங்களாதேஷ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டம் தொடர்பாக அவரை அணுகியதை மறைத்ததால் ஓராண்டு தடைபெற்றார். தற்போது அந்த தடை முடிந்ததால் வங்காளதேச அணிக்கு திரும்ப பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற காளி பூஜையில் கலந்து கொண்டார். அதன்பின் தன்னுடைய முகநூல் கணக்கில் நேரடி காணொளி மூலம் முஸ்லீம் உணர்வை புண்படுத்தியதாக மோசின் தலுக்தெர் என்பவர் ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஷாகிப் அல் ஹசனை துண்டாக வெட்ட வேண்டும் என அந்த நபர் கோபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பயிற்சி மேற்கொள்ளும் அவருக்கு வங்காள தேசம் கிரிக்கெட் சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. காளி பூஜைக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இது முஸ்லீம்களின் உணர்வை புண்படுத்துவதாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“பாடசாலை செல்லும் மாணவர்களின் கழுத்தில் இடப்பட்ட சயனைட் குப்பியை அகற்றியவர் மகிந்தராஜபக்ஷ ” – அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன  பாராட்டு !

“நல்லாட்சி அரசை ஆட்சிக்கு கொண்டுவர தமிழ் மக்கள் பெருமளவில் பங்களித்தாலும் அவர்களுக்கு என்ன கிடைத்தது? ” என அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கொவிட்-19,யுத்தம்,எரிபொருள் பிரச்சினை எதுவுமின்றிய நிலையில் தான் 2015 இல் நாட்டை நல்லாட்சி அரசுக்கு மஹிந்த ராஜபக்ஷ கையளித்தார். ஆனால் ஆகஸ்டில் நடந்த தேர்தலில் 104 எம்.பிகள் தான் அவர்களுக்கு கிடைத்தது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத் தேர்தலை வென்றார். அப்படியானால் யார் தோற்றது? நாமா அவர்களா? இன்னும் சில ஆண்டுகளில் உலகில் முன்னேற்றகரமான நாடாக எமது நாடு அபிவிருத்தி காணும்.

1,000 ரூபா சம்பள உயர்வு குறித்து வேலுகுமார் பேசினார். 2015 தேர்தலில் தமிழ் மக்கள் 80-, 90 வீதம் சில பகுதிகளில் அதனையும் விட அதிக வாக்குகள் அளிக்கப்பட்டன. நல்லாட்சி அரசினால் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சலுகையை கூறமுடியுமா? 05 வருடத்தில் என்ன கிடைத்தது? நல்லாட்சியை உருவாக்க பங்களித்ததால் என்ன கிடைத்தது? என்று காட்டுங்கள். ஒரு தொழிலாவது வழங்கப்பட்டதா?

தமிழ் மக்களுக்கு நாம் செய்த அபிவிருத்தியை ஒருபக்கம் வைத்தாலும் பாடசாலை செல்லும் மாணவர்களில் கழுத்தில் இடப்பட்ட சயனைட் குப்பியை அகற்றியது யார்?. யுத்த அச்சமின்றி நிம்மதியாக வாழும் சூழலை யார் ஏற்படுத்தினார்கள்? என்றும் அவர் தெரிவித்தார்.

“எங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை தொடர்பான கொள்கை தோல்வி அடைந்து விட்டது” – ஈரான்

“எங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை தொடர்பான கொள்கை தோல்வி அடைந்து விட்டது” என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ”ஈரான் மீதான பொருளாதாரத் தடை தொடர்பான கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்து வரும் வாரங்களில்  ஈரான் மீது பொருளாதாரத் தடை தொடரும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கு  ஈரான் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதுகுறித்து  ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் விரக்தியை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்கள் மீதான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை குறித்த கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துள்ளார். ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்பு, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகளையும் ட்ரம்ப் விதித்து வந்தார். மேலும், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானை அமெரிக்கப் படைகளை வைத்து ட்ரம்ப் கொன்றார். இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ளது.

முன்னதாக, சமீபத்தில் நடந்த அமெரிக்க ஜனபதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின்  வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் தங்கள் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் அதிரடி வான்வெளி தாக்குதல் !

சிரியாவுக்கும், இஸ்ரேலும் அயல் நாடுகளாக காணப்படுவதுடன் இரு நாடுகளிடையேயும்  பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள்கள் மற்றும் ஈரான் புரட்சிப்படை பிரிவினர் பலர் பதுங்கியுள்ளனர்.
இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் இராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு. இதற்கிடையில், இஸ்ரேலின் கோலன் பகுதியில் ராணுவ நிலைக்கு அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.  இஸ்ரேல் இராணுவத்தை தாக்க திட்டமிட்டு வைக்கப்பட்ட இந்த வெடிகுண்டுகள் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களால் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எல்லையோரம் அமைந்துள்ள சிரியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 சிரிய ராணுவ வீரர்கள், ஈரான் புரட்சிப்படையினர், ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

“ஈழம் என்பதற்கு நான் ஒருபோதும் எதிர்ப்பு கிடையாது. சிங்கள இலங்கைகே நான் எதிர்ப்பு” – மஹிந்த தேசபிரிய .

“ஈழம் என்பதற்கு நான் ஒருபோதும் எதிர்ப்பு கிடையாது , தமிழீழத்திற்கே நான் எதிர்ப்பு. அதேபோன்று, இலங்கைக்கு தான் எதிர்ப்பு கிடையாது எனவும், ஆனால் சிங்கள இலங்கைக்கு நான் எதிர்ப்பு” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சலகுண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த நிகழ்வில் ஈழம் என்ற பெயர் பிரிவினைவாதத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது என ஊடகவியலாளர் வினவிய போது அதற்கு பதிலளிக்கும் போதே மஹிந்த தேசபிரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் பேசிய அவர்,

ஈழம் என்பதும் இலங்கை என்பதும் நாம் வாழும் இந்த முழுத் தீவுக்கும் உரித்தான பண்டைய தூய தமிழ்ப் பெயர்கள்தான். சங்ககாலத்திலேயே ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதென்றால், ஈழம் தூய தமிழ்ச் சொல் தான் என்பதற்கு அதைவிட வேறு என்ன ஆதாரம் தேவையற்றது எனலாம்.

ஈழம் என்ற சொல்லுக்கு எந்தவிதத்திலும் தவறு கிடையாது

ஈழம் என்றால் இலங்கை என்பதை அனைவரும் அறிவார்கள். தேசிய கீதத்தின் தமிழாக்கத்தில் ஈழம் என்ற வசம் பயன்படுத்தப்பட்டுள்ளது. “ஈழ சிரோமணி” என இலங்கை தேசிய கீதத்தின் தமிழாக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு தமிழில் கூறப்படும் பெயர்களில் ஒன்றே ஈழம் ஆகும்.

லங்கா என சிங்களத்தில் பயன்படுத்தப்படும் பெயருக்கு ரத்ததீப என்ற பெயரும் சிங்களத்தில் பயன்படுத்தப்படுவது போன்றே தமிழில் ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.

பிரபாகரன் ஈழத்திற்காக போராட்டத்தை நடத்தவில்லை .தமிழீழத்திற்காகவே போராட்டங்களை அவர் நடத்தினார். ஈழம் என பயன்படுத்தப்படுவது, மிக மிக சரியான ஒன்று . ஈழம் என்ற வசனத்தை பயன்படுத்துவதில் எந்தவொரு தவறும் கிடையாது.

ஈழம் என்பதற்கு நான் ஒருபோதும் எதிர்ப்பு கிடையாது , தமிழீழத்திற்கே நான் எதிர்ப்பு. அதேபோன்று, இலங்கைக்கு நான் எதிர்ப்பு கிடையாது எனவும், ஆனால் சிங்கள இலங்கைக்கு தான் எதிர்ப்பு.

ஈழம் என்ற நாட்டை பிளவுப்படுத்தும் ஒரு பெயர் கிடையாது . ஈழம் என்ற பெயரை தவறாக வெளிப்படுத்தி, அதனை சமூகமயப்படுத்த முயற்சிக்க வேண்டாம் எனவும் கூறினார் மஹிந்த தேசபிரிய.

இதன் போது அப்துல் கலாம் கூறிய ஒரு விடயத்தையும் அவர் இதன்போது நினைவூட்டினார் மஹிந்த தேசபிரிய. “முதலாவதாக நான் இந்திய பிரஜை. பின்னரே  நான் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்” என அப்துல் கலாம் கூறியதையும் அவர் நினைவூட்டினார். ஈழம் என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களானால், இலங்கை என்ற பெயருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டும்” என மஹிந்த தேசபிரிய கூறினார்.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியது தொடர்ந்தும் கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது” – ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டு !

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியுள்ளமை இன்னமும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது” என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனிய தூதரகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொவிட்-19 தொடர்ந்தும் பல சவால்களை உருவாக்கிவரும் நிலையில் நாங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். இந்த சந்திப்பின்போது இலங்கையின் நம்பகதன்மை மிக்க சகாக்கள் என்ற அடிப்படையில் இலங்கைக்கான எங்கள் நீண்ட கால ஆதரவை வெளியிட்டோம்” என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் இலங்கை ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகங்களின் மீதும் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பிராந்தியத்தின் பொருளாதார தளமாக மாறும் இலங்கையின் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இலங்கையின் ஏற்றுமதியிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நீடித்த இறக்குமதி தடை சர்வதேச வர்த்தக அமைப்பின் விதிமுறைகளிற்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியது தொடர்ந்தும் கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது” என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிப்பது எப்போது..? – உத்தியோக பூர்வ திகதியை வெளியிட்டது கல்வி அமைச்சு !

பாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 6ஆம் ஆண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரையான வகுப்புக்களே இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டிகளிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகல் !

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். முன்னதாகவே இந்தப்போட்டிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட இப்போட்டிகள் இம்மாதம் 27 ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் LPL போட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். கண்டி டஸ்கர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கெயில், சொந்தக் காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற IPL போட்டியில் பங்கேற்ற கெயில், பஞ்சாப் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடி 288 ஓட்டங்களை எடுத்தார்.

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி !

உலகக் கிண்ணக்  காற்பந்து தகுதிச்  சுற்று போட்டிகளில் பிரேஸில், ஆர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன. 22ஆவது உலகக் கிண்ணக் காற்பந்துப்  போட்டி கத்தாரில் 2022ஆம் ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5ஆவது இடம் பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்று மூலம் வாய்ப்பை பெற முடியும்.

இந் நிலையில் உருகுவே தலைநகர் மோன்ட் வீடியோவில் நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சம்பியனான பிரேஸில் அணி, 2 தடவை சம்பியனான உருகுவேயை எதிர்கொண்டது.குறித்த போட்டியில் பிரேஸில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.

மற்றொரு போட்டியில்  முன்னாள் சம்பியனான ஆர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை சாய்த்தது.