21

21

கப்டன் பண்டிதரின் திருவுருவ படத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி !

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரி வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் பொலிஸார்  மனுத்தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு வழங்கியுள்ளது. சில நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் மாவீரர் நினைவு வாரத்தின் ஆரம்ப நாளாகும். அதனை முன்னிட்டு, கப்டன் பண்டிதரின் திருவுருவ படத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

கம்பர் மலையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் பண்டிதரின் தாயாருடன் இணைந்து அஞ்சலி செலுத்தினர்

தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினரான வல்வெட்டித்துறை கம்பர் மலையை சேர்ந்த கப்டன் பண்டிதர் என அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்தார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பண்டிதரின் தாயாரான சின்னத்துரை மகேஸ்வரி தலையிட்டு, நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“மத்ரஸா பாடசாலைகள் குறித்து நாம் அடிக்கடி கவனம் செலுத்தி வருகின்றோம்” – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீீரிஸ்

மத்ரஸா பாடசாலைகளில் கற்பிப்பதற்காக விசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும். அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸா பாடசாலைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பாடசாலைகளுக்கான ஆட்சேர்ப்பு, மாணவர் அனுமதி போன்ற நடைமுறைகளை சீராக்க பொறிமுறையொன்று அமுலாக்கப்பட்டதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் நேற்று (20.11.2020) தெரிவித்தார்.

இந்த நடைமுறையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், புலனாய்வு அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெறுவது அத்தியாசியமானதெனவும் அவர் கூறினார்.

மத்ரஸா பாடசாலைகள் குறித்து தாம் அடிக்கடி கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

“சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன்” – ஜோபைடன் 

கடந்த 3ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் சீனா-அமெரிக்கா இடையிலான உறவு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் அமெரிக்கா-சீனா இடையிலான வலுவான உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் அமையும் என சீன வல்லுனர்கள் கருதினர்.
அதே போல் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி மாதம் பதவியேற்கிறார்.
இந்த நிலையில் ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சீனாவுடனான உறவு குறித்தும் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணையுமா என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜோ பைடன் பதில் அளித்து பேசியதாவது:-
சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன். இதன் நோக்கம் சீனாவை தண்டிக்க வேண்டும் என்பது அல்ல. சர்வதேச சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை சீனா புரிந்து கொள்வதை உறுதி செய்வது ஆகும். இது ஒரு எளிய முன்மொழிவு ஆகும்.
அதேபோல் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவது உறுதி. நான் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் நாளில் மீண்டும் உலக சுகாதார அமைப்பில் சேர போகிறோம். அதேசமயம் அதில் சில சீர்திருத்தங்களும், ஒப்புதல்களும் தேவைப்படுகிறது. அதேபோல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலும் அமெரிக்கா மீண்டும் இணையும்” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு எமது மக்கள் கடந்த தேர்தலின் ஊடாக பதில்  வழங்கியுள்ளனர்” – வாசுதேவ நாணயக்கார

“ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு எமது மக்கள் கடந்த தேர்தலின் ஊடாக பதில்  வழங்கியுள்ளனர்” என அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.

நேற்று (20.12.2020) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, வாசுதேவ நாணயகார மேலும் கூறியுள்ளதாவது,

“ ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு எமது மக்கள் கடந்த தேர்தலின் ஊடாக பதில்  வழங்கியுள்ளனர். மக்கள் ஆணையுடன் நாம் இதற்கான பதிலை கூறியுள்ளோம். இதேமக்கள் ஆணையுடன், அமெரிக்கா கொண்டுவந்த ஜெனீவா தீர்மானத்திலிருந்து நிச்சயம் வெளியேறினோம்.

எமக்கு கிடைத்த மக்கள் ஆணையை கொண்டே நாம் அவ்வாறான தீர்மானம் எடுத்தோம். ஆகவே எமக்குள்ள ஆணையின் பிரகாரம் இந்த தீர்மானத்திலிருந்து வெளியேறவும், இந்த நாட்டின் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாம் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவை வைத்துக்கொள்வோம். ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவு வேண்டும் என்ற கோரிக்கையை நாம் நிராகரிக்கவில்லை. மேலும்,  இன்றுள்ள நெருக்கடியான நிலையில் 20 பில்லியன் ரூபாய் அதிகமான இறக்குமதிகளை செய்ய முடியாது என நாம் கூறுவதில் என்ன தவறுள்ளது. அவசியமான விடயங்களில் நாம் ஐரோப்பாவுடன் இணைந்து செயற்படுவோம்” எனவும் வாசுதேவ நாணயக்கார  குறிப்பிட்டுள்ளார்.

 

“உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” – அமைச்சர் நாமல்

கொரோனா வைரஸுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ loதெரிவித்தார்.

நேற்று (20.12.2020) பாராளுமன்றில் புதிய கொரோனா வைரஸை குணப்படுத்துவதில் 95% வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலர் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசாங்கம் ஒருபோதும் உலக சுகாதார அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்படாத தடுப்பூசிக்கு மக்களை கினிப் பன்றிகளாக பயன்படுத்தாது.

உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ அதிகரிகள், அரசு ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் எடுத்த முடிவுகளின்படி, தொற்றுநோயின் இரண்டாவது அலைகளையும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஐந்து மடங்கு வேகமான தடுப்பூசி தயார் –  வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு

கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அமெரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அவற்றை கொள்முதல் செய்வதற்காக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  அவசர தேவைக்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் வழங்கியவுடன், நாடு முழுவதும் தடுப்பூசியை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த டிரம்ப் நிர்வாகம் தயாராக உள்ளது என வெள்ளை மாளிகை கூறி உள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசியின் 40 மில்லியன் டோஸ்கள் கிடைக்கும் என்று நம்புவதாகவும், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஐந்து மடங்கு வேகமான தடுப்பூசி என்றும் வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு செயலாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி டிரம்பால் மட்டுமே இது சாத்தியமானதாகவும், இதன்மூலம் ஏராளமான அமெரிக்க உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வெள்ளை மாளிகை இந்த தகவலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னிலை வீரர்கள் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால் !

உலக டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் (Rafael Nadal) அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

உலகின் முன்னிலை வீரர்கள் 8 பேர் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகின்றது.

வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிக்‍கபட்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஒன்றில், உலக தரவரிசையில் 2ஆம் இடத்திலுள்ள ஸ்பெயின் ரஃபேல் நடால், கிரேக்‍க வீரர் Stefanos Tsitsipas-ஐ எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-4, 4-6, 6-2 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், ரஷ்ய வீரர் Daniil Medvedev-வை, ரஃபேல் நடால் எதிர்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

“இது பாராளுமன்றம். இராணுவ முகாம் அல்ல” – பொன்சேகாவை எச்சரித்த வாசுதேவ! 

அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவுக்கும்,  பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் நேற்றையதினம்  ஏற்பட்டது. “பாராளுமன்றம் இராணுவ முகாம் அல்ல” என வாசுதேவ நாயணக்கார கடும் வார்த்தைகளால் சரத் பொன்சேகாவை இதன் போது எச்சரித்தார்.

“இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போதைக்குத் தேவையில்லை” என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்ததையடுத்தே இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை எதிர்த்து சரத் பொன்சேகா உரையாற்றிய போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பமாகியது.

தன்னுடைய உரையின் போது சரத் பொன்சேகா குறக்கிடக்கூடாது என எச்சரித்த வாசுதேவ நாணயக்கார, “இது பாராளுமன்றம். இராணுவ முகாம் அல்ல” எனவும் தெரிவித்தார்.

“கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே என்னுடைய குறிக்கோள். அதற்காக எங்களுக்கு உதவுங்கள்” – சீன தூதுரிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) கடந்த 19.11.2020 அன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து சீனதூதுவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பரஸ்பர நன்மையுடன் கூடிய நிலையான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

குறிப்பாக பிரிவினைவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பிறகு இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு சீனா பெரிதும் உதவியது. கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவை அவற்றில் சிலவாகும். சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இந்த ஒத்துழைப்பை சிலர் விமர்சித்தனர். இந்த திட்டங்கள் பயனற்றவை என்பது அவர்களின் வாதம். உண்மை அதுவல்ல. சீனாவின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அதிக வருமானம் மற்றும் தொழில்வாய்ப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. எனது பதவிக்காலம் முடிவதற்குள் இந்த திட்டங்களின் மூலம் அதிகபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்வதே எனது நோக்கம் என்று ஜனாதிபதி கூறினார்.

இலங்கை அதன் அபிவிருத்தி முயற்சிகளில் மேலும் வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக முதலீட்டை ஈர்ப்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளது என்று ஜனாதிபதி  தெரிவித்தார்.

எமது நாட்டில் பரந்த முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. விவசாயம், தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அவற்றில் முக்கியமானவை.

இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 30 வீதமானவர்களின் வாழ்வாதாரம் கிராமிய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக சீனா அடைந்துள்ள கிராமிய அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தி கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது முக்கிய குறிக்கோள். அதைச் செய்ய எங்களுக்கு உதவுங்கள்” என்று ஜனாதிபதி புதிய சீன தூதுவரிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சீன தூதுவர் கியி சென்ஹோங், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி முயற்சிகளின் வெற்றிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க தனது அரசாங்கம் தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.

“ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கப்பட்டுள்ளது” – பாராளுமன்றில் இரா.சாணக்கியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராolgளுமன்றத்தில் நேற்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்து தன்னுடைய பாராளுமன்ற உரையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பிள்ளையான் சிறையிலிருந்து வருகை தந்து ஆணைக்குழுவுக்கு செல்கின்றார். பின்னர் கூட்டங்களில் கலந்துகொள்கின்றார். அதனைத் தொடர்ந்து காரியாலத்துக்கு செல்கின்றார். அங்கு மக்களை வருமாறு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடுகின்றார். இவ்வாறு சிறையிலுள்ள கைதிகளுக்கு செய்ய முடியுமா? ஏனைய குற்றங்கள் புரிந்த சிலரை அவர்களது பெற்றோரினால் கூட காண முடியாது. காரணம் கொரோனா அச்சுறுத்தலாகும்.

ஆனால், பிள்ளையான் மட்டக்களப்பு வருகின்றார், ஆலய வழிப்பாட்டுக்கு செல்கின்றார். நிகழ்வுகளில் பங்கேற்றுகின்றார். இதனை எவ்வாறு செய்ய முடியும். இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும்.

83 கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச் சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு வாழ்வதற்கு முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி, தோல்வியடைந்துள்ளார். தோல்வியடையவில்லை என பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை. ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4 வருடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஜனாதிபதி நிச்சயம் தோல்வியடைவார்.

மட்டக்களப்பில் உள்ள அமைச்சர் ஒருவர், மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளார். மஹிந்த அமரவீர மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது, அவரை சந்தித்து இதுபற்றி கூறினேன். மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தினேன்.

ஆனால் புதிதாக 32 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு அனுமதிக்கு 5 இலட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். அதாவது மாதம் ஒன்றுக்கு ஒரு அனுமதிக்கு 2 இலட்சம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு வருடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 22 கிலோ மீற்றர் உள்ள ஆற்றில் விரும்பிய எந்த பகுதியிலும் மணல் அகழ்வில் ஈடுபட முடியும்.மணல் அகழ்வில் ஈடுபடுவது பிரச்சினை இல்லை. குறித்த பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு உரித்தான பகுதி. இங்கு ஒருவருக்கு 2 இலட்சத்தை கொடுத்து அவரிடம் மண்ணினை பெறுவதற்கு என்ன அவசியம் இருக்கின்றது.

அதாவது வருடம் ஒன்றுக்கு 10 இலட்சத்தை பெறுவதற்காகவா இவர்கள் நாடாளுமன்றம் வருகின்றார்கள் என கேட்க விரும்புகின்றேன்.

அத்துடன், ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பில் 250 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு சிலரிடம் ஒரு இலட்சம் வரை பணத்தினைப் பெற்றுக் கொண்டே வேலையினை வழங்கியுள்ளனர்.

யார் இதனை கூறியுள்ளது என பார்த்தால் பிரதமரின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராகவுள்ள கருணா அம்மானே இதனைக் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை நன்றாக தேடிப்பாருங்கள். இத்தகையவர்களுடன் இணைந்து சேவையாற்ற வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.